பண்டைய பாரதத்தின் எழுத்தியல் – வேத வேதாங்க சான்றுகள்

              பண்டைய வரலாற்றை ஆராயும்போது அதற்கான இருமுகங்கள் தெரியவரும். அதன் ஒருமுகம் எல்லா சான்றுகளையும் ஆராய்ந்து அவற்றை வரிசைசெய்து அவற்றின் மூலம் உண்மையை வெளிக்கொணர்வதாகும். மற்றொரு முகம் கர்ண பரம்பரையாகவும் இலக்கிய ரீதியாகவும் உள்ள தரவுகளைக் கொண்டுவரும் நம்பிக்கையாகும். இவ்விரண்டிலிருந்தும் ஸமதொலைவிலிருந்து ஆய்வை மேற்கொள்வது ஆய்வாளர்களின் கடமையாகும்.  அவ்விதமான ஆய்வில் தர்க்கரீதியில் சரியான பழஞ்செய்திகளையும் ஆய்ந்து பிழிவான உண்மையை ஏற்பது நிகழும். இவ்வாறாக இலக்கிய தரவுகளும் வரலாற்றைப் புனரமைப்பதில்…

தொடர்ந்து வாசிப்பு

கச்சியேகம்பன் கோயிலில் இரு கரண சிற்பங்கள்

Daṇḍapāda Karaṇa

கரணங்கள் எனப்பெறும் ஆடலசைவுகள் பரதமுனிவர் இயற்றிய நாட்ய சாஸ்த்ரத்தின் நான்காம் இயலில் விளக்கப்பெற்றுள்ளன. தாண்டவலக்ஷணம் என்னும் பெயருடைய இந்த இயலில் ந்ருத்தம் மற்றும் வாக்யார்த்த அபியனத்தில் பயன்பெறும் 108 கரணங்கள் விளக்கப்பெற்றிருக்கின்றன. கரணத்தின் இலக்கணம் ஹஸ்தபாதஸமாயோக ந்ருத்தஸ்ய கரணம் பவேத் என்பதாகும். கைகள் மற்றும் கால்களின் ஒருங்கிணைந்த அசைவே கரணம் எனப்பெறும் என்பது இதன் விளக்கமாகும். தமிழகத்தில் கரணசிற்பங்கள் பல கிடைத்துள்ளன. அவற்றுள் சில வரிசையாகவும் சில தனித்தனியாகவும் செதுக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் வரிசையான தொகுதிகளுள் பழமையான சிற்பங்கள்…

தொடர்ந்து வாசிப்பு

பொயு 971-இல் உத்தமசோழன் இளவரசனா…

  மேதகு நந்திபுரி ஸுந்தர சோழன் அரசுகட்டிலேறிய காலம் பொயு 957 என்று நிறுவப்பெற்றிருக்கிறது. இந்த முடிவு அவனுடைய கல்வெட்டுக்களிலுள்ள வானியற் குறிப்புக்களைக் கொண்டு முடிவு செய்யப்பெற்றுள்ளது, அவனுடைய கல்வெட்டாவணங்கள் பதினேழாம் ஆட்சியாண்டு வரை கிடைத்துள்ளன. திருமால்புரம் (S.I.I III, 117 & 118), நெமலி (139 of 1942-43), அல்லூர் (377 of 1903) மற்றும் திருமழவாடியிலுள்ள (2 of 1920) கல்வெட்டுக்கள் அவருடைய பதினேழாம் ஆட்சியாண்டைக் கொண்டிருக்கின்றன. கோயில் தேவராயன் பேட்டையிலுள்ள கல்வெட்டு (230…

தொடர்ந்து வாசிப்பு

கல்வெட்டில் மறுஜென்ம கதை

pillar erected by Trikoṭi boyi

பின்வரும் கல்வெட்டு இயல்பில் மிகவும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியது. இந்தக் கல்வெட்டு ஆந்திர மாநிலம், பெஜவாடாவிலுள்ள இந்த்ர கீல மலையில் அமைந்துள்ளது. அங்கு நிறுவப்பெற்றுள்ள ஒரு தூணில் இந்தக் கல்வெட்டு செதுக்கப்பெற்றுள்ளது. அந்தத் தூணில் கிராத-அர்ஜுனர்களின் உருவமும் பொறிக்கப்பெற்றுள்ளது.  இந்தக் கல்வெட்டு 1915 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் ஆண்டறிக்கையில் 33-ஆம் எண்ணோடு பதிவு செய்யப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு அர்ஜுனன் தவமியற்றி பாசுபதாஸ்த்ரம் பெற்ற இடம் என்று அவ்விடத்தைக் குறிப்பிடுவதால் மிகவும் இன்றியமையாததாகிறது. இந்தக் கல்வெட்டை பெச்சவாடா கலியம போயி…

தொடர்ந்து வாசிப்பு

கதிரவனின் கணைப்போர்

கதிரவனின் கணைப்போர் ஒப்புவமையின்றி ஒளிவீசும் கலாச்சாரத்தைப் படைத்த நமது பாரதமண்ணில் எல்லாக் கூறுகளிலும் தெய்வத்தன்மையைக் கண்டு போற்றும் பண்பு இன்றளவும் எழில்வாய்ந்ததொன்றாக போற்றப்பெறுகிறது. சிற்பங்களும் கட்டிடக்கலையும் தெய்வீகத்தன்மையின் வெளிப்பாடுகளாக ஏற்றம் பெற்றுத் திகழ்கின்றன. அந்தச் சிற்பங்களிலும் வேத, புராணச் செய்திகளின் நுட்பமான வெளிப்பாடு இருபுலத்தையும் உணர்ந்தவர் மனதில் இறும்பூதெய்தச் செய்கிறது. பல்லவர் காலத்திய ஆலய சிற்பங்களில் வேதபுராணச் செய்திகள் திறம்பட எடுத்தாளப் பெற்றிருக்கின்றன. அதைத்தொடர்ந்து சோழர்கால சிற்பங்களிலும் வேதபுராணச் செய்திகள் திறனுற கையாளப்பெற்றிருப்பதைக் காணும்போது அவர்தம் அறிவுத்திறத்தை…

தொடர்ந்து வாசிப்பு

கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்

கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல் அர்த்தம் என்றால் வ்ருத்தி – தொழில் என்று பொருள். ஒரு மனிதன் வாழ்வதற்குத் தேவையான தொழிற்கருவிகளைப் பற்றிக் கூறுவதால் அர்த்த சாஸ்த்ரம் எனப்படுகிறது. அவற்றில் மிக முக்கியமானது பூமி. (मनुष्यवती पृथ्वी) மனுஷ்யவதி ப்ருத்வீ என்று மனிதர்களுக்கு மிக முக்கியமான கருவி பூமியே என்று கௌடல்யரே குறிப்பிடுகிறார். அர்த்த சாஸ்த்ரத்தின் துவக்கத்தில் பூமியை அடைவதற்கும் அதனைக் காப்பதற்கும் இதுவரை எழுதப் பெற்ற அனைத்து அர்த்தசாஸ்த்ரங்களையும் தொகுத்து இந்த ஒரு அர்த்தசாஸ்த்ரத்தை எழுதுகிறேன் என்றும்…

தொடர்ந்து வாசிப்பு

தசரூபகத்தில் நாட்டியம்

தசரூபகத்தில் நாட்டியம் விலங்கினத்தைக் காட்டிலும் பகுத்தறிவால் தனித்துச் சிறந்த மாந்தரினம் மனத்தின் வளமையால் கலை பல வளர்த்தது. எண்ணத்தை வெளிக்கொணர மொழியென்னும் ஊடகம் உருவாகிய பின்னர் அதனை ஆதாரமாகக் கொண்டு எத்துணையோ கலைப் பண்பாட்டுச் சின்னங்கள் உருவாயின. அத்தகைய கலைகளில் ஒன்றாகத் திகழ்வது கூத்துக் கலை. குறிப்பாக நமது நாட்டில் பண்டைய காலம் தொட்டே மிகச் சிறப்பான கலையாகத் திகழ்வது இக்கலை. பயன்பாடுகள் பிறந்த பின்னர் அவற்றிற்கான இலக்கணம் எழுதும் முறை பொதுவாக எல்லாத் துறைகளிலும் காணப்படுவதே….

தொடர்ந்து வாசிப்பு

தமிழ் நூல் விளக்கங்களில் வடமொழியின் பங்கு

தமிழ் நூல் விளக்கங்களில் வடமொழியின் பங்கு             பாரதபூமியில் தோற்றம் நிகழ்ந்ததென்றென்று அறியமுடியாது சிறந்து விளங்கும் மொழிகள் இரண்டு. ஒன்று வடமொழி, மற்றொன்று தென்மொழியாம் செந்தமிழ். இவ்விரு மொழிகளும் பண்டைநாள் முதல் வழங்கிவரும் பேறுடையவை. தரத்திலும் சுவையிலும் நிகரானவை. இரு மொழிகளும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டவை என்பது மரபுவழி வந்த நம்பிக்கை. வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியைக் குடமுனிக்கு வகுத்தருளும் கொல்லேற்றுப்பாகர் என்பது காஞ்சிபுராணச்செய்தி  இவ்விருமொழிகளிலும் கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்துள்ளது என்பது இருமொழியறிந்த நடுநிலையான அறிஞர்கள்…

தொடர்ந்து வாசிப்பு

மூலபுராணங்களில் முடியுடை மூவேந்தர்கள்

மூலபுராணங்களில் முடியுடை மூவேந்தர்கள்       இந்திய கலாச்சாரம் சார்ந்த இலக்கியங்களில் இதிகாஸங்களும் புராணங்களும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. வேதத்தின் கருத்துக்களை விளக்க நண்பனைப்  போலக்  கதைகளைக் கூறி கருத்துக்களை எடுத்துச் சொல்ல புராணங்கள் தோன்றின என்பர். இத்தகைய புராணங்களில் மூல புராணங்களாகப் பதினெண் புராணங்கள் கூறப் படுகின்றன. இவற்றை வேதவியாசரே இயற்றியதாக மரபு வழி சார்ந்த நம்பிக்கைகள் கூறுகின்றன. ஆயினும் ஆய்வியலார் இவை பல காலகட்டங்களில் இயற்றப் பட்டக் கதைகளின் தொகுப்பு என்று கருதுகின்றனர். கி.மு…

தொடர்ந்து வாசிப்பு

ஆசார்ய சுந்தரபாண்டியன்

ஆசார்ய சுந்தரபாண்டியன்   ஆசார்ய என்று ஒரு பாண்டிய மன்னனுக்குப் பட்டம் கொடுத்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்தப் பட்டம் நான் கொடுத்ததில்லை. ஒரு வேதாந்த நூலுக்கு கல்பதரு என்னும் உரையெழுதும் போது அமலானந்தர் என்னும் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவி கொடுத்த பட்டமிது. வேதாந்தத் துறவி பாண்டிய மன்னனை ஆசார்யர் என்று குறிப்பிடுவதற்கு என்ன காரணம்?  இதனை ஆய்வதற்கு முன்பு ஆதிசங்கரர் இயற்றிய பிரம்ம சூத்திர உரையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். வேதங்களின் இறுதிப்பகுதியாகத்…

தொடர்ந்து வாசிப்பு