பண்டைய பாரதத்தின் எழுத்தியலைப் பற்றி வேத வேதாங்கங்களில் உள்ள இலக்கிய சான்றுகளை முன்பு பார்த்தோம். தற்போது பண்டைய தார்மிக இலக்கியங்களான இதிஹாஸ புராணங்களில் உள்ள சான்றுகளைப் பற்றி காண்போம். ராமாயணமும் மஹாபாரதமும் நமது நாட்டின் மிக இன்றியமையாத இரு இதிஹாஸங்கள். இவ்விரு இதிஹாஸங்களிலும் பண்டைய பாரதத்தின் எழுத்தியலைப் பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன.
- இதிஹாஸங்கள்
1.1. ராமாயணம்
இந்த பழமை வாய்ந்த இதிஹாஸம் ஆதிகாவ்யம் என்று புகழ்பெற்றது. இந்த இதிஹாஸத்தில் லிக, லேகக, லேகன என்னும் சொற்கள் இடம் பெற்றுள்ளன. இவை லிக என்னும் வேர்ச்சொல்லிருந்து உருவான சொற்கள். இந்த வேர்ச்சொல்லின் பொருள் எழுதுதல் என்பதாகும். இதைத் தவிர மிக சுவை வாயந்த ஒரு குறிப்பும் ஸ்ரீமத் ராமாயணத்தில் காணப்பெறுகிறது. அன்னையைக் காண இலங்கை சென்ற ஹனுமான் அன்னையிடம் இராமபிரான் அளித்த கணையாழியைக் காட்டுகிறான். அப்போது அந்தக் கணையாழியில் ராம என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பெற்றிருப்பதைக் காணச்சொல்கிறான்.
रामनामाङ्कितं चैव पश्य देवि अङ्गुलीयकम् (सुन्दरकाण्डम् – 36.2)
ராமனாமாங்கிதம்ʼ சைவ பஸ்²ய தே³வி அங்கு³லீயகம் (ஸுந்த³ரகாண்ட³ம் – 36.2)
ராமாயணத்தின் இந்த ச்லோகம் ராமாயண இதிஹாஸம் இயற்றப் பெற்ற காலத்தில் எழுத்தியல் இருந்திருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக பல ஆய்வாளர்களால் மேற்கோள் காட்டப்பெற்றதாகும்.
1.2. மஹாபாரதம்
இந்த இதிஹாஸத்திலும் மேற்கூறியவாறு லிக என்னும் வேர்ச்சொல்லோடு தொடர்புடைய சொற்கள் பயன்படுத்தப்பெற்றுள்ளன. இந்த இதிஹாஸத்தின் துவக்கமான ஆதி பர்வத்தில் முழு இதிஹாஸத்தையும் கணேசர் எழுதியதை இதிஹாஸம் குறிப்பிடுகிறது.
श्रुत्वैतत् प्राह विघ्नेशो यदि मे लेखनं क्षणम्।
लिखतो वावतिष्ठेत तथास्यां लेखको ह्यहम्।।
व्यासोप्युवाच तं देवं अबुद्ध्वा मा लिख क्वचित्।
ओमित्युक्त्वा गणेशोपि बभूव किल लेखकः।।
ஸ்²ருத்வைதத் ப்ராஹ விக்⁴னேஸோ² யதி³ மே லேக²னம்ʼ க்ஷணம்|
லிக²தோ வாவதிஷ்டே²த ததா²ஸ்யாம்ʼ லேக²கோ ஹ்யஹம்||
வ்யாஸோப்யுவாச தம்ʼ தே³வம்ʼ அபு³த்³த்⁴வா மா லிக² க்வசித்|
ஓமித்யுக்த்வா க³ணேஸோ²பி ப³பூ⁴வ கில லேக²க:||
விநாயகர் நான் எழுதவேண்டுமென்றால் நீங்கள் நிறுத்தாமல் கூற வேண்டுமென்று குறிப்பிட்டார். அதற்கு வ்யாஸரும் சரியென்று கூறி ஆனால் பொருளை புரிந்து கொள்ளாமல் எழுதக்கூடாதென்று கேட்டார். இக்குறிப்பின் மூலம் மஹாபாரதகாலத்தில் எழுத்தியலின் பயன்பாடு விளங்கும்.
- புராணங்கள்
புராணங்களும் பண்டைய எழுத்தியலின் சான்றுகளைக் கொண்டுள்ளன. விஷ்ணு புராணம் தானமளித்த செய்தியைச் செப்பேட்டில் எழுதி வைக்கும் முறையைக் குறிப்பிடுகிறது.
மத்ஸ்ய புராணத்திலும் எழுத்தரின் இலக்கணம் விளக்கப்பட்டிருக்கிறது. வடமொழியில் எழுத்தருக்கு லேககனென்று பெயர். அவனது இலக்கணமாவது
सर्वदेशाक्षराभिज्ञः सर्वशास्त्रविशारदः।
लेखकः कथितो राज्ञः सर्वाधिकरणेषु वै।।
शीर्षोपेतान् सुसम्पूर्णान् समश्रेणिगतान् समान्।
अक्षरान् वै लिखेद्यस्तु लेखकः स वरः स्मृतः।।
उपायवाक्यकुशलः सर्वशास्त्रविशारदः।
बह्वर्थवक्ता च अल्पेन लेखकः स्याद् भृगूत्तम।।
वाक्याभिप्रायतत्त्वज्ञः देशकालविभागवित्।।
अनाहार्यो नृपे भक्तः लेखकः स्याद् भृगूत्तम।
ஸர்வதே³ஸா²க்ஷராபி⁴ஜ்ஞ: ஸர்வஸா²ஸ்த்ரவிஸா²ரத³:|
லேக²க: கதி²தோ ராஜ்ஞ: ஸர்வாதி⁴கரணேஷு வை||
ஸீ²ர்ஷோபேதான் ஸுஸம்பூர்ணான் ஸமஸ்²ரேணிக³தான் ஸமான்|
அக்ஷரான் வை லிகே²த்³யஸ்து லேக²க: ஸ வர: ஸ்ம்ருʼத:||
உபாயவாக்யகுஸ²ல: ஸர்வஸா²ஸ்த்ரவிஸா²ரத³:|
ப³ஹ்வர்த²வக்தா ச அல்பேன லேக²க: ஸ்யாத்³ ப்⁴ருʼகூ³த்தம||
வாக்யாபி⁴ப்ராயதத்த்வஜ்ஞ: தே³ஸ²காலவிபா⁴க³வித்||
அனாஹார்யோ ந்ருʼபே ப⁴க்த: லேக²க: ஸ்யாத்³ ப்⁴ருʼகூ³த்தம|
இதன் பொருள்
எல்லா நாட்டின் எழுத்துக்களை அறிந்தவனும் எல்லா சாஸ்த்ரங்களிலும் தேர்ந்தவனுமானவன் எல்லா துறைகளிலும் அரச எழுத்தனாகக் கொள்ளத்தக்கவன். தகுந்த தலைப்புக்களோடும் முழுமையாகவும் சரியான நேர்கோட்டிலும் ஸமமாகவும் எழுத்துக்களை எழுதுபவன் சிறந்த எழுத்தனாகக் கருதப் படுவான். உபாயவாக்யங்களில் தேர்ந்தவனும் எல்லா சாஸ்த்ரங்களிலும் தேர்ந்தவனும் சிறியதைக் கொண்டே பல அர்த்தங்களைச் சொல்லக் கூடியதும் வாக்யத்தின் உண்மையைத் தெரிந்தவரும், இடம், காலம் இவற்றின் பிரிவை அறிந்தவனும் அரச பக்தியுடையவனும் எழுத்தன் எனப்படுவான்.
மேலும் தேவீபுராணத்திலும் ஓலைச்சுவடி தொடர்பான குறிப்புள்ளது.
सुताडपत्रके शस्ते समे पत्रसञ्चिते।
विचित्रकञ्चिकापार्श्वे चर्मणा सम्पुटीकृते।।
ஸுதாட³பத்ரகே ஸ²ஸ்தே ஸமே பத்ரஸஞ்சிதே|
விசித்ரகஞ்சிகாபார்ஸ்²வே சர்மணா ஸம்புடீக்ருʼதே||
இதன் பொருள்
நல்ல புகழப்பட்ட ஸமமான ஓலைகளால் தொகுக்கப்பட்ட பல்விதமான கறைகளுடன் கூடிய தோலினால் சுற்றப்பட்ட ஒலைச்சுவடியென்ற குறிப்பு சுவடிகளின் பயன்பாட்டை விளக்குகிறது.
இவற்றினின்று வேத, இதிஹாஸ மற்றும் புராண இலக்கியங்களில் உள்ள சுவடியியற் குறிப்புகள் அறியப்படுகின்றன.
நன்றி ஆனால் இந்தி அ மற்றோும் க ஆகியவை தமி
்போல்்றும் க ஆகியவை தமிழ்போல் உள்ளன,இந்தி எழுத்தாளர் ராகோுல்சாங்கிருத்யாயன் தென்பகுதியில் இருந்து வடிட இந்தியா வந்தது என்கிறாரே?