ஏகபாதமூர்த்தியும் பல்லவர் குடவரைகளும்

ekapadamurthy

     இருபத்தைந்து மாஹேச்வர மூர்த்தங்களில் ஏகபாதமூர்த்தியும் ஒன்றாகக் கருதப்பெற்றுள்ளது. உலகனைத்தயும் ஒடுக்குங்காலை நான்முகனையும் மாலையும் தம்முள் ஒடுக்கும்போது காட்டிய வடிவமிது. இந்த வடிவத்தின் இலக்கணமாவது. ரக்தவர்ண​: த்ரிணேத்ரஸ்²ச வரதா³ப⁴யஹஸ்தக​:| க்ருʼஷ்ணாபரஸு²ஸம்ʼயுக்தோ ஜடாமகுடமண்டி³த​:|| ருʼஜ்வாக³தஸ்ததை²கேன பாதே³னாபி ஸமன்வித​:| த³க்ஷிணோத்தரயோஸ்²சைவ பார்ஸ்²வயோருப⁴யோரபி|| கடிப்ரதே³ஸா²தூ³ர்த்⁴வந்து ப்³ரஹ்மவிஷ்ணவர்த⁴காயயுக்| க்ருʼதாஞ்ஜலிபுடௌ ஏகபாத³யுக்தௌ ச வா மதௌ| (உத்தர காமிகாகமம்)      இந்த வடிவம் செந்நிறம் கொண்டு மூன்று விழிகளுடன் இருக்கும். வரதம், அபயம், மான் மழு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியிருப்பார். நேராக நின்றபடி ஒரே…

தொடர்ந்து வாசிப்பு

காமாக்ஷி அம்மன் கோயிலில் முதலாம் பராந்தகனின் புதிய கல்வெட்டு

     பின்வரும் கல்வெட்டு காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயிலில் சாஸ்தா ஸன்னிதியின் முன்பு தரையில் அமைந்துள்ளது. இது துண்டு கல்வெட்டாக இருந்தாலும் கூட கோயிலின் வரலாற்றுக்கு இன்றியமையாததாகிறது. இதுவரை இந்தக் கோயிலில் கிடைத்த கல்வெட்டுக்களில் முதலாம் ராஜராஜனின் துண்டுக் கல்வெட்டுக்களே பழமையானதாகக் கருதப்பெற்றிருந்தது. பின்னாளைய ப்ரதியான இராஜஸிம்ஹனின் கல்வெட்டு வேறோதோ புத்தர் கோயிலைக் குறித்தலின் இக்கோயில் தொடர்பான கல்வெட்டுக்களில் ராஜராஜனின் கல்வெட்டே பழையானதாகக் கருதப்பெற்றிருக்கிறது. இப்போது இந்தத் துண்டு கல்வெட்டை அதைக்காட்டிலும் பழமையானதாகக் கருதலாம்.      இந்தக்…

தொடர்ந்து வாசிப்பு

வடமொழி செய்யுட் காவியங்களில் சுவடியியற் குறிப்புகள்

                வடமொழியில் செய்யுட் காவ்யங்கள் பொதுவாக செய்யுட் காவியங்கள், உரைநடைக் காவியங்கள் இரண்டும் கலந்த சம்பூ காவ்யங்கள் என்னு மூவகைப்படும். குறிப்பிட்ட வரையறைகளின்படி பாவகைகளுடன் இயற்றப்பட்ட காவியங்களே செய்யுட் காவியங்கள். இவ்வகைக் காவியங்கள் காளிதாசன் முதலிய பல கவிமணிகளால் இயற்றப் பட்டவையாம். இவ்வகைக் காவியங்களிலும் சுவடியியற்குறிப்புக்கள் காணப்படுகின்றன. ரகுவம்ச மஹாகாவ்யத்தில் லிபேர்யதா²வத்³க்³ரஹணேன வாங்மயம்ʼ நதீ³முகே²னேவ ஸமுத்³ரமாவிஸ²த்|                 என்று குறிப்பிடுகிறார். இதன் பொருளாவது                  நதியின் மூலமாக கடலை அடைவது போல் எழுத்துக்களின் உள்ளபடி அறிவதன் மூலமே…

தொடர்ந்து வாசிப்பு

சிந்து சமவெளி முத்திரைகளில் வேதக் கதைகள்

seal111

     எனது மானஸிக குருவும் இணையற்ற அறிஞருமான முனைவர். எஸ். சங்கரநாராயண சாஸ்த்ரிகள் மொஹஞ்சதாரோவில் கிடைத்த சிந்து சமவெளி முத்திரையொன்றை மிகவும் அற்புதமாக அடையாளம் கண்டார். அவருடைய அடையாளம் “An Indua Seal with Soma sacrificial theme” என்னும் தலைப்பில் வெளியானது. அந்த முத்திரையில் கொம்புள்ள தாய்த்தவதை அல்லது ஒரு மர தேவதை வழக்கமான முறையிலன்றி பொறிக்கப்பெற்றுள்ளார். அவரை மற்றொரு பெண்தெய்வம் வணங்குவதைப் போலுள்ளது. அந்த தெய்வம் முழங்காலிட்டு மற்றொரு ஆடும் மாடும் கலந்ததைப் போன்றதும்…

தொடர்ந்து வாசிப்பு

காவாந்தண்டலத்து வடமொழிக் கல்வெட்டு

காவாந்தண்டலத்து வடமொழிக் கல்வெட்டு      பின்வரும் கல்வெட்டு காஞ்சிக்கு அருகிலுள்ள காவாந்தண்டலத்திலுள்ள லக்ஷ்மீநாராயணர் கோயிலில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு கோயிலின் மேற்குச்சுவரில் செதுக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி ஏழில் 422-ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டை எழுத்தியல் ரீதியாக ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நிர்ணயிக்கவியல்கிறது. இந்தக் கல்வெட்டு மானஸர்ப்பன் என்பான் கோயிலை எடுப்பித்ததைக் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டின் வரிகளாவன. Line 1 : स्वस्तिश्री नमो नारायणाय। महीसुरमहारत्नप्रसूतिप्रवराकरे। धात्रा वसुन्धरावासनिरतेनैव निर्म्मिते।। सहिता…

தொடர்ந்து வாசிப்பு

வைஷ்ணவ ஆகமங்களில் லிங்க வழிபாடு

linga

     லிங்க வழிபாடு என்பது சைவத்துடன் தொடர்புடையது என்பதை நாமறிவோம். லிங்கம் என்னும் சொல் அடையாளம் என்னும் பொருளைத் தருவது. சிவலிங்கம் என்பது எந்தையின் அடையாளம் என்னும் பொருளைக் குறிக்கும். பொதுவாக லிங்கத்தை ஆராயும் ஆய்வாளர்கள் லிங்க வடிவத்தை ஆண்குறியோடு தொடர்புபடுத்தியே ஆராய்வது வழக்கமாக உள்ளது. இத்தகையதோர் ஒரு கருதுகோள் சில இலக்கிய ஆதாரங்களிலிருந்தும் குடிமல்லத்தில் கிடைத்த லிங்கத்தை வைத்தும் உருவாகியிருக்கிறது. ஆனால் லிங்கம் என்னும் வடிவம் வேதவேள்விகளின் அக்னியிலிருந்து உருவானதாகவே தோன்றுகிறது. அக்னி எரியும்போது மூடிய…

தொடர்ந்து வாசிப்பு

அர்த்த, காம மற்றும் நாட்ய சாஸ்த்ரங்களில் இடம்பெற்ற எழுத்தியல் குறிப்புக்கள்

                அர்த்தம் என்றால் தொழில். வாழும் முறை. அதற்கு பயன் படும் பூமி, பணம், தானியங்கள், விலங்குகள் முதலியன அர்த்தம் எனப்படும். இவற்றைப் பெறுதலுக்கும் பாதுகாத்தலுக்குமான நெறிநூல் அர்த்தசாஸ்த்ரம் எனப்படும். அத்தகைய அர்த்த சாஸ்த்ரம் முறையே எந்தையில் தொடங்கி, ப்ருஹஸ்பதி, சுக்ராசார்யார், நாரதர் தொடங்கி பல்வேறு அறிஞர்களாலும் இயற்றப்பட்டுள்ளது. இவற்றில் தற்போது முழுமையாகக் கிடைப்பதும் அனைவராலும் கொண்டாடப்படுவதும் கௌடில்யர் எனப்படும் சாணக்யரால் எழுதப்பட்ட அர்த்தசாஸ்த்ரநூலேயாம். அந்நூலிலும் அவர் பத்து முன்னாசிரியர்களைக் குறிப்பிடுதலின் அவர்க்கு முன்பே அர்த்த சாஸ்த்ரங்களை…

தொடர்ந்து வாசிப்பு

நந்தி மஹாகாளர்களின் கதை

தஞ்சை

நாம் ஒரு சிவாலயத்தில் நுழைந்தால் அங்கே மூன்று நந்திகளைக் காணவியலும். சிலாதரின் மகனான அதிகார நந்தி காளை வடிவிலான வாஹன நந்தி மற்றும் மஹாகாளரோடு காட்சியளிக்கும் த்வாரபாலகரான நந்தி முதலிருவரைப் பற்றிய பதிவைப் பிறகு காண்போம். இப்போது த்வாரபாலகர்களான நந்தியைப் பற்றிக் காண்போம். நந்தி மற்றும் மஹாகாளர்கள் மனிதர்களாகப் பிறந்து எந்தை மீது கொண்ட ஒப்புயர்வற்ற பக்தியினால் உயர்நிலை பெற்றவர்கள். அவர்களின் கதையைக் காண்போமா.. இந்தக் கதை ஸ்காந்த புராணத்தில் அமைந்துள்ளது. அந்த புராணத்தின் மாஹேச்வர கண்டத்திலுள்ள…

தொடர்ந்து வாசிப்பு

தர்ம சாஸ்த்ர நூல்களில் சுவடியியற் குறிப்புகள்

ஸ்ம்ருதி நூல்கள் வேதம் கூறும் நெறிமுறைகளுக்கே தர்மமென்று பெயர். அன்றாட வாழ்வில் அப்படி கடைப் பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆசாரம் எனப்படும். இவை தவிர நெறிகளை மீறும்போது எழும் வழக்குகளுக்கு வ்யவஹாரம் என்று பெயர். இத்தகைய சூழ்நிலைகளில் நடக்க வேண்டிய நெறிகளை விளக்கும் நூல்களே ஸ்ம்ருதி நூல்கள் எனப்படுகின்றன. இவற்றை ரிஷிகளும் தேவர்களும் எழுதியதாக நம்பப்படுகின்றன. இவற்றுள் முக்கியமாக 20 ஸ்ம்ருதி நூல்கள் முக்கியவையாகக் கருதப்படுகின்றன இவற்றுள் பெரும்பாலும் வழக்குகளைக் குறிக்கும் வ்யவஹாராத்யாயத்தில் பெரும்பாலும் எழுத்தியல் குறிப்புகள்…

தொடர்ந்து வாசிப்பு

ஆந்திரக் கல்வெட்டில் அகஸ்த்யரின் அவதாரம்

பின்வரும் கல்வெட்டு ஆந்திர மாநிலத்திலுள்ள அனந்தபூர் ஜில்லா பெனுகொண்டாவில் உள்ள அவிமுக்தேச்வரர் கோயிலிலுள்ள இரு கற்றூண்களில் காணப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டின் காலம் இந்தக் கல்வெட்டிலேயே பூத ஸங்க்யை எனப்பெறும் முறைப்படி கிரி-அக்ஷி-வஹ்னி-ஸுதாமரீசி என்னும் மறைபொருளாகத் தரப்பெற்றுள்ளது. ஆண்டின் பெயர் பார்த்திவ என்றும் சுக்ல பக்ஷ தசமி ஞாயிற்றுக் கிழமை என்றும் தரப்பெற்றுள்ளது. இந்தக் குறிப்புக்களைக் கொண்டு இந்தக் கல்வெட்டின் காலம் பொயு 1405 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 என்று தீர்மானிக்க முடிகிறது. இந்தக் கல்வெட்டு அந்தப்…

தொடர்ந்து வாசிப்பு