பின்வரும் கல்வெட்டு அதன் இயல்பினால் மிகவும் முக்யமானதும் அரிதானதுமானது. இந்தக் கல்வெட்டு திருவாரூர் தியாகேசப்பெருமானின் திருக்கோயிலில் முதற் ப்ராகாரத்தில் வடபுறச்சுவரில் செதுக்கப் பெற்றுள்ளது. இது இருமொழிக்கல்வெட்டாகும். இதன் வடமொழிப்பகுதி க்ரந்த எழுத்துக்களிலும் தமிழ்ப்பகுதி தமிழ் எழுத்துக்களிலுமானவை. இந்தக் கல்வெட்டு விச்வகர்மகுலத்தைப் பற்றிய நீண்ட நெடிய விளக்கமான அலசலைத்தருகிறது. பாண்டிகுலாந்தகச்சதுர்வேதி மங்கலத்தைச்சேர்ந்த சில அந்தணர்கள் ஆகம, புராண, சிற்ப நூல்களை ஆராய்ந்து விச்வகர்ம குலத்தினரின் ஸமூஹ நிலை, கடமை மற்றும் உரிமைகளைப் பற்றிய நீண்ட நெடிய விளக்கத்தை அளித்துள்ளனர். இந்தக் கல்வெட்டு தனது முக்கிய நோக்கமாக சிற்பியின் தகுதிகளை விவரமாகத் தருகிறது. இந்தக் கல்வெட்டு பல்வேறு நூல்களிலிருந்து மேற்கோள்களைக் கையாள்கிறது. அந்த நூல்களில் பல இன்று கிடைக்கவில்லை. இந்தக் கல்வெட்டு தென்னிந்தியகல்வெட்டுத் தொகுதி 17 இல் 603 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டில் அரசனோ ஆண்டோ குறிப்பிடப்பெறாவிடினும் இதன் எழுத்தமைதியைக் கொண்டு இதன் காலத்தை 11-12 ஆம் நூற்றாண்டாகக் கொள்ளவியல்கிறது. இக்கல்வெட்டின் வரிகளைப் பார்ப்போம்.
Line 1: ஹர ஸ்வஸ்திஸ்ரீ. ரத²காரனாயுள்ள கண்மாளனுக்கு வ்ருʼதிவிதா⁴னஞ்சொல்லுகிற ஸ்ம்ருதிகளில் கௌ³தமவாசகத்தாலும் நாரத³வசனத்தாலும் யாஜ்ஞவல்க்யவசனத்தாலும் ….ல்லவ்ருʼத்திவசனத்தாலும் ப்³ராஹ்மபுராணவசனத்தாலும் க்ஷத்ரியவைஸ்²யானுலோமாந்தரஜோத்பன்னோ ரதா²கார: அனுலோமனேன இதனுக்கு வசனம் வைஸ்²யதஸ்²ஸூ²த்³ரகன்யாயாம்ʼ ஸஞ்ஜாத: கரணஸ்த்ரியாம்| அஸ்மாத³ம்ப³ஷ்ட²தோ ஜாதோ ரத²கார இதி ஸ்ம்ருʼத:| அத்ர யாஜ்ஞவல்க்யவசனம்| மாஹிஷ்யேண கரண்யாந்து ரத²கார: ப்ரஜாயதே| நாஸ்யோபனயனன்னேஜ்யா நாதா⁴னஞ்ச நிஷித்⁴யதே| …. யத்து கல்பயேஸ்யேந்த³னஸ்ய ச| வித்³யயாதீ⁴தயா ஸ்வஸ்ய ஸ²ரீரம்ʼ வர்த்தயதே³யம்| அத்ர ஸ²ங்க²வசனம்| க்ஷத்ரியவைஸ்²யானுலோமானந்தரஜோத்பன்னோ ரத²கார: தஸ்யேஜ்யாதா⁴னோபனயனஸம்ʼஸ்காரக்ரியாஸ்²ச ப்ரதிஷித்³தா⁴ஸ்தஸ்யாஸ்²வரத²
Line 2: ஸூத்ரஸி²ல்பவாஸ்துவித்³யாத்³யத்⁴யயனக்ரம: வ்ருʼத்திதா சேதி அனுலோம்யோபனயனாம் ஸந்த்⁴யாயமப்யுபாஸனம்| நாதா⁴னம்ʼ ஸன்னிதா⁴னாக்³னிஹோத்ரன்னௌபாஸனந்ததா²| ந ச பஞ்சமஹாயஜ்ஞோ ந வேதா³த்⁴யயனந்ததா²| மந்த்ரேண ரஹிதா தேஷாமுபனீதிரபி ஸ்ம்ருʼதா| அத்த்ர கௌ³தமீயவிவரணம்ʼ குர்வ்வதா மஸ்கரபடி²தம்ʼ ஸ்ம்ருʼத்யந்தரவசனம்| அனுலோமானாமுபனய…. ந வேதா³த்⁴யயனன்ன பஞ்சமஹாயஜ்ஞா நௌபாஸனன்னாக்³னிஹோத்ரன்ன ஸமித்கார்யன்ன ஸந்த்⁴யோபாஸனமுபனயனமபி தூஷ்ணீமேவேதி| விஸ்²வகர்ம்மீயே| அம்ப³ஷ்டே²ன கரண்யாஞ்ச ரத²கார: ப்ரஜாயதே| .. ஜாய …. ஸமர்சித:| ந ஜாயதே விஸ்²வ…… ஸர்வத: ப்ரிய:| அனுலோமேஷு ஸர்வேஷு தூஷ்ணீமுபனயக்ரியா| ஸவர்ணாம்ப³ஷ்ட²யோரேவ ஸாபி தத் ஸவிதீ⁴யதே| ரத²காராதி³ஜா
Line 3: தீனாமுபனீதிரமந்த்ரகம்| ந யஜ்ஞோ நாபி ஸந்த்⁴யாதி³ கிஞ்சான்யத்து வைதி³கம்| ஆதா⁴னமாத்ரம்ʼ குர்வீத ரத²காரஸ்து விஸ்²வக்ருʼத்| வாஸ்துஸி²ல்பகவித்³யாப்⁴யாம்ʼ வர்த்தயேதே³ஷ நித்யஸ²:| தே³வதாப்ரதிமாஞ்சாபி குர்யாச்சித்ரந்ததை²வ ச| யஜ்ஞானாமபி பாத்ராணி ப்ரதிபூர்வ்வம்ʼ ப்ரகல்பயேத்| ஸுவர்ண்ணாப⁴ரணானாஞ்ச காஞ்சாவ்யயஸ்க்ரியா| தே³வதாதி³தனூனாஞ்ச கரணம்ʼ ஸி²ல்பஜீவிகா| ஸௌவர்ண்ணவஸ்துனிர்ம்மாணம்ʼ ஸ்வர்ண்ணகார இதீஷ்யதே| அயஸ்கர்ம்மண்யயஸ்காரஸ்தக்ஷா தக்ஷககர்ம்மணி| தனூனாம்ʼ கரணம்ʼ த்வஷ்டா ஸ ஏவ ரத²க்ருʼத் ப⁴வேத்| ப்ராஸாத³ம்ʼ தே³வதாதீ³னாம்ʼ ஸ்தா²பனாத் ஸ்த²பதி: ஸ்ம்ருʼத:| ஸ்த²பதிர்வ்விஸ்²வக்ருʼத் தக்ஷா த்வஷ்டா ச ரத²காரக:| காஷ்டி²கோ வர்த்³த⁴கிஸ்²சேதி ஸி²ல்பிபர்யாயவாசகா:| இப்படி சைவாகமங்களிலும் பஞ்சராத்ரஸம்ஹிதைகளிலும் வைகாநஸக்³ரந்த²ங்களிலும் விஸ்²வகர்ம்மீயம் ஆக³ஸ்த்யாதி³ஸா²ஸ்த்ரங்களிலும் உத்பத்திவ்ருʼத்திவிதா⁴னஞ்சொல்லுதலாலும் இவநே க்³ராமாதி³
Line 4: வாஸ்துக்களையும் ப்ராஸாதா³தி³வாஸ்துக்களையும் பஞ்சாயுதா⁴த்³யாயுத⁴ங்களையும் ப்³ரஹ்மஸ்ருʼஷ்ட்யாதி³…..தி³கர்ம்மங்களையும் செய்ய விதா⁴னமுண்டாதலால் இவ்வரிஷ்டோ²மாபத்தியையுடைய ரத²காரானுலோமனாகிய கர்ம்மாரநே இவையெல்லாஞ் செய்வானெந்று கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்க வெந்று சொந்நோம் ஸ்ரீபாண்டிகுலாந்தகச் சதுர்வேதிமங்கலத்து கோ³மட³த்து யஜ்ஞாதப⁴ட்டஸோமயாஜியேந் யஜ்ஞாத்மப⁴ட்டஸோமயாஜின:| இப்படி சொந்நேந் கொம்மக்கை புருஷோத்தமப⁴ட்டநேந் ஸி²ரியசிங்க³ப⁴ட்டஸோமயாஜின:| …ப்ரதிஹாஸ: ஸ²ங்கரனாராயணப⁴ட்டஸோமயாஜின:| சக்ரபாணிப⁴ட்டஸ்ய| இப்படி சொந்நேந் செந்திறத்து …… தே³வப⁴ட்ட அக்³னிசித³திராத்ரயாஜியேந் அக்³னிசித³திராத்ரயாஜின:| காஞ்சிக்குறி கேசவந் ஸோமயாஜினோப்யேவம்|
Line 5: சதுரக்³ரஹாரபு⁴க்த்யா மது⁴ராஜாதப⁴ட்டஸ்யாப்யேவம் ப்ரதிபா⁴ஸனரஸிம்ʼஹஸ்ய ஹ்ருʼஷீகேஸ²ப⁴ட்டஸோமயாஜினோப்யேவம் ப்ரதிபா⁴ஸ:| குளவி திருவயாற்றடிகள் த³ஸ²ப்ரியப⁴ட்டந் மகந் திருவியலூரடிகள் ப⁴ட்டஸ்யாப்யேவம்| காரம்பிச்செட்டு தூம்பில் ப⁴ட்டஸோமயாஜின:| …. ந்னகமூர்த்தி த³க்ஷிணாமூர்த்திப⁴ட்டவஸந்தயாஜின:| ஸ்ரீராஜாதி⁴ராஜசதுர்வேதி³மங்க³லத்து முப்புரர் ப⁴வஸ்கந்த³…. ஸோமயாஜியேன் ப⁴வஸ்கந்த³….. க்ஷத்ரியவைஸ்²யஜாதனாயுள்ள ஸூ²த்³ரஜாதியாயுள்ள
Line 6: ஆக³மம் … தி³த்த வசனம்| ஸ்த²பதிஸா²ஸ்த்ரகர்ம்மஜ்ஞஸ்²ஸு²பா⁴ஸு²ப⁴விபா⁴க³வித்| பூ⁴பரீக்ஷா ச யா வித்³யா வாஸ்துவித்³யா ச யா பரா| த… ஸஹிதௌ கார்ய்யமாசரேத்| தாவேவ ஸஹிதௌ… ஸர்வ்வஸம்பத்கரம்ʼ ந்ருʼணாம்| பீ⁴மஸம்ʼஹிதாயாம் ஸுலேக²ஸ்ஸுகு³ணஸ்²ஸி²ல்பஸா²ஸ்த்ரஜ்ஞ: கர்ம்மயோக்³யக:| மானாதி³ஸமானஜ்ஞஸ்²ஸ²ல்யோத்³தா⁴ரவிஸா²ரத³:| வாஸ்துவித்³யாக்ருʼதாப்⁴யாஸஸ்²ஸ²ல்யோத்³தா⁴ரவிஸா²ரத³:| யோக³ஜே| ஸ்த²பதிர்வ்வாஸ்துதந்த்ரஜ்ஞஸ்ஸர்வஸா²ஸ்த்ரவிஸா²ரத³:| மஹாதே³ஸ²ஸ்த²ஸங்கீர்ன்னோத்பன்னஜன்மா குலாத⁴ம:| ஸ்தா²பகோ தே³வதே³வஸ்யாத்³யஜமானோ ஜனார்த³ன:| விதா⁴தா ஸ்த²பதிஸ்ஸாக்ஷாதே³தைர்த⁴ர்ம்மஸ்தி²திஸ்த்ரிபி⁴:| ஸுப்ரபே⁴தே³| ஆசார்யமுக்தபாட²ஸ்²சைவ பூர்வ்வோக்தான் ஸம்ப்ரக்³ருʼஹ்ய ச|
Line 7: ஸ்யான்வேஷயேத் தத்³வத் ஸி²ல்பினம்ʼ ஸுகுலோத்³ப⁴வம்| ஸ்த²பதிஸ்ஸூத்ரக்³ராஹீ ச வர்த்³த⁴கிஸ்தக்ஷகஸ்ததா²| தனூகரண……………………. ஸ்த²பதிஸூத்ரக்³ராஹிப்⁴யாம்ʼ ப்ராஸாத³ப்ரதிமாம்ʼஸ்ததா²| அக்ஷிமோக்ஷாதி³கம்ʼ ஸர்வம்ʼ காரயேத் தக்ஷகோத்தம:| ஸ்த²பதிஸ்²ஸா²ஸ்த்ரகர்ம்மஜ்ஞ: க்ருʼதகர்ம்மாபி⁴ஜாதவான்| ஈத்³ருʼஸ²ம்ʼ ஸி²ல்பினம்ʼ க்³ருʼஹ்ய ப்ராரபே⁴த் ஸர்வ்வகர்ம்மகம்| ப்ரபஞ்சோத்தரே வித்³யாஸூத்ரே| ஸுலேக²ஸ்ஸுகு³ணோ தீ⁴மான் ஸா²ஸ்த்ரஜ்ஞ: கர்ம்மயோக்³யக:| வாஸ்துவித்³யாக்ருʼதாப்⁴யாஸஸ்²ஸ²ல்யோத்³தா⁴ரவிஸா²ரத³:| லக்ஷணப்ரமாணே| ஸர்வ்வலக்ஷணஸம்பன்னோ நீரோக³: கோபவர்ஜ்ஜித:| உபாயஜ்ஞ: ஸுஸீ²லஜ்ஞ: க்ருʼதஹஸ்தோ விசக்ஷண:| தக்ஷகஸ்²ஸா²ஸ்த்ரஸம்பன்னோ வினீதோ வாஸ்துவித்ஸதா³| போஸ்தகம்ʼ ஹஸ்ததா⁴ரீ ச க்ருʼதக்ருʼத்யஸ்ஸுஜாதக:| ப்ரபஞ்சதந்த்ரே லக்ஷணப்ரமாணே ப்ரஸித்³த⁴தே³ஸே² ஸங்கீர்ன்னஜாதிஜோபீ⁴ஷ்டல….
Line 8: ண: வாஸ்துவித்³யாவிதா⁴னஜ்ஞஸ்தூஹாபோஹஸமன்வித:| நிமித்தஸ²குனஜ்யோதிர்ஜ்ஞானே ஸம்யக் ப்ரபோ³த⁴க:| வேத³வித்³த⁴ர்ம்மவித்³தீ⁴மானாசார்ய: ப்ரோக்ஷித: ஸுதீ⁴:| ப்ராஸாத³லிங்க³கார்யேஷு மானோ ஸுரகாயகர்ம்மபி⁴: ப்³ரஹ்மைவ ஸ்த²பதிஸ்ஸாக்ஷாத் யஜமானஸ்து கேஸ²வ:| கு³ருஸ்ஸர்வஸ்ய கார்ய்யஸ்ய மஹாதே³வஸ்ஸ காரணம்| ஸ்ரீபஞ்சராத்ரம் காபிஞ்ஜலம் பு⁴வம்ʼ கா²த்வா ஸி²லாம்ʼ பஸ்²யேதா³சார்ய்யஸ்²ஸி²ல்பிபி⁴ஸ்ஸஹ| ஸி²ல்பினம்ʼ பூஜயேத் காலே த⁴னதா⁴ன்யக³ஜாதி³பி⁴:| பரமபுருஷஸம்ʼஹிதாயாம்| ………… ஸாரேண காரயேத்| .. ஸ்ரீவைகா²னஸமஹாஸ்தவே ஸி²ல்பஸா²ஸ்த்ரோக்தவிதி⁴னா ஸி²ல்பினஸ்ஸம்யகா³சரேத்| தஸ்மாத்ஸர்வப்ரயத்னேன ஆசார்ய்ய: ஸி²ல்பிபி⁴ஸ்ஸஹ| அத்ரிப்ரோக்தே விதி⁴வத்ஸ்தா²பயித்வைவம்ʼ ஸி²ல்பிபி⁴: ஸா²ஸ்த்ரகோவிதை³:| ஆக³ஸ்த்யவாஸ்துஸா²ஸ்த்ரே ஸ்வதந்த்ர: பரதந்த்ரஜ்ஞ: க்ருʼதக்ருʼத்யஸ்ஸுமானஸ:|
Line 9: த⁴ர்ம்மஜ்ஞ: ஸத்யஸம்பன்ன: ஸர்வ்வேந்த்³ரியஜிதேந்த்³ரிய:| இதிஹாஸபுராணஜ்ஞ: ஸ்ம்ருʼதிவித் வாஸ்துவித்ஸுதீ⁴:| அத… த⁴ ப⁴க்தஸ்²ச அலுப்³த⁴ஸ்²சாமலாத்மக:| நிமித்தானாம்ʼ க்ரமஜ்ஞஸ்²ச சித்ரகர்ம்மவிஸா²ரத³:| ஸர்வ்வாயவனிஷ்பன்னே விமானே சோத்தராயணே| ப்ரஸ²ஸ்தபக்ஷனக்ஷத்ரே யஜமானோ ஜனார்த்³த³ன:| …….. பதிஸ்²ச மஹாத்மன: …. ஸ²ரீராங்க³ம்ʼ வாசே பௌ⁴திகஸஞ்ஜ்ஞிதம்| விமானம்ʼ விதி⁴னா ஸம்யக் ஜலஸம்ப்ரோக்ஷணஞ்சரேத்| வாஸ்துவித்³யாயாம்| விஸ்²வகர்ம்மா ச ஆசார்யோ கு³ருத்வாத் விஸ்²வகர்ம்மணாம்| ஸ்த²பதி: ஸ்தா²பனம்ʼ குர்வன் இதி ஸி²ல்பீ…… ஸ்த²பதிஸ்ஸத்யஸா²ஸ்த்ரகர்ம்மவிசக்ஷண: க்ருʼதக்ருʼத்ய: குலீனஸ்²ச அஹீனாதி⁴கக்ஷண:| தா⁴ர்ம்மிக: ஸத்யவாதீ³ ச க³ணிதஜ்ஞ: புராணவித்| சித்ரவித் ஸர்வ்வதே³ஸ²ஜ்ஞ: ஸுனாமாயமனாமய:| த்³ருʼடோ⁴ யோனஸூ…
Line 10: யோனலஸோப⁴ய: லுப்³தோ⁴ஸ²னதோ³தீ³னோப்ரமாதீ³ ச ஜிதேந்த்³ரிய:| ஸப்தவ்யஸனஜித்³தீ⁴மான் ஊஹாபோஹவிசக்ஷண:| ஸாரஸ்வதீயே| விஸ்²வகர்ம்மா ருʼஷேர்னாம்னா கு³ருத்வாத் விஸ்²வகர்ம்மண:| ஸ்த²பதி: ஸ்தா²பனம்ʼ குர்வ்வன் இதி ஸி²ல்பிர்வ்விதீ⁴யதே| தத்த்வஜ்ஞ: ஸ்த²பதிஸ்ஸர்வஸா²ஸ்த்ராணாஞ்ச விஸே²ஷத:| தா⁴ர்ம்மிகஸ்ஸத்யவாதீ³ ச க்ருʼதக்ருʼத்ய: குலோத்³ப⁴வ:|
Line 11: நாராயணப⁴ட்டஸோமயாஜின: ஸ்ரீராஜாதி⁴ராஜசதுர்வ்வேதி³மங்க³லத்து நம்பூர் கட்டுக்கே ஸ்ரீரங்க³னாத²ப⁴ட்டவாஜபேயயாஜியேந் ஸ்ரீரங்க³னாத²ப⁴ட்டநேந்
இந்தக் கல்வெட்டின் துவக்கத்தில் மேற்கோள்காட்டப் பெற்ற நூல்களாவன
- கௌதமதர்மசாஸ்த்ரம்
- நாரத தர்மசாஸ்த்ரம்
- யாஜ்ஞவல்க்ய தர்மசாஸ்த்ரம்
- ப்ரஹ்மபுராணம்
- …ல்ல என்பவரின் வ்ருத்தி
- கௌதமீயத்திற்கு மஸ்கரரின் உரை
- விச்வகர்மீயம்
- சங்க தர்மசாஸ்த்ரம்
துவக்கத்தில் விச்வகர்ம வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கோயில் கட்ட தகுதி படைத்தவர்கள் என்று குறிப்பிடுகிறது. அவர்களுள் பொற்கொல்லர்கள் ஸ்வர்ணகாரர் எனவும் இரும்புகொல்லர் அயஸ்காரர் எனவும் தச்சர் தக்ஷர் எனவும் தெய்வச்சிலைகளைச்செய்பவர் த்வஷ்டா எனவும் கோயிலைக் கட்டுபவர் ஸ்தபதி எனவும் வழங்கப்பெறுவர். ஸ்தபதி, விச்வகர்மா, த்வஷ்டா, ரதகாரர், காஷ்டிகர், வர்த்தகி என்பவை சிற்பியின் வேறு பெயர்களாம்.
இத்தகைய ஸ்தபதிகளின் கடமைகள் சைவாகமங்கள், பாஞ்சராத்ரம், வைகானஸம் மற்றும் சிற்பநூல்களான விச்வகர்மீயம் மற்றும் ஆகஸ்த்யம் ஆகியவற்றிலிருந்து விளக்கப்பெற்றிருக்கின்றன. அவர்கள் க்ராமாதி வாஸ்து கோயில்களைக் கட்டும் ப்ராஸாத வாஸ்து பஞ்சாயுதங்கள் முதலிய ஆயுதங்கள் மற்றும் ப்ரஹ்மஸ்ருஷ்டி முதலிய வேலைகளைச் செய்ய தகுதி படைத்தவர்கள். இந்தக் கடமைகளைக் கல்லிலும் செப்பேட்டிலும் வெட்டி வைத்துக் கொள்ளவும் அனுமதி உண்டு. இதற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டவர்கள்
- பாண்டிய குலாந்தகச் சதுர்வேதி மங்கலத்து கோமடத்து யஜ்ஞாத்மபட்ட ஸோமயாஜி
- சங்கரநாராயணபட்ட ஸோமயாஜி
- சக்ரபாணி பட்டன்
- தேவபட்ட அக்னிசித் அதிராத்ரயாஜி
- காஞ்சிக்குறியின் கேசவன் ஸோமயாஜி
- நான்கு அக்ரஹாரங்களையுடைய மதுராஜாத்மபட்டன்
- நரஸிம்ஹன்
- ஹ்ருஷீகேச பட்ட ஸோமயாஜி
- குளவி திருவியாற்றடிகள் தசப்ரிய பட்டனின் மகனான திருவியலூரடி பட்டன்
- காரம்பிச்செட்டு தூம்பில் பட்டஸோமயாஜி
- ஸ்ரீராஜாதிராஜச்சதுர்வேதிமங்கலத்து முப்புர பவஸ்கந்த ஸோமயாஜி
இரண்டாம் பகுதி ஸ்தபதிகளின் தகுதிகளை விரிவாகத் தருகிறது. பல்வேறு நூல்கள் இந்தப் பகுதியில் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளன.
- (பெயரழிந்து விட்டது)ஆகமம்
சாஸ்த்ரங்களில் சொல்லப்பெற்ற பொருட்களை நன்கு அறிந்தவரும் மங்களம் மற்றும் மங்களமற்ற செயல்களை அறிந்தவரும் பூபரீக்ஷை, வாஸ்து வித்யா ஆகியவற்றை அறிந்தவரும் ஸ்தபதி எனப்பெறுவார். சிவாசார்யார் அந்த ஸ்தபதியுடன் இணைந்து கோயிலைக் கட்ட வேண்டும். இப்படிக் கட்டப்பெற்ற ஆலயம் பல்வேறு செல்வங்களை வழங்கும்.
- பீமஸம்ஹிதை
அழகிய கையெழுத்துடையவரும், நல்ல குணங்களையுடையவரும் சிற்சாஸ்த்ரங்களை அறிந்தவரும் கோயிலைக் கட்டத் தகுதி படைத்தவரும், அளவீடுகளில் ஒப்பற்றவரும், இடையூறுகளை நீக்கத் திறமைப் படைத்தவரும், வாஸ்து நூல்களில் அனுபவமுடையவரும் ஸ்தபதி எனப்பெறுவார்.
- காரணாகமம்
அழகிய கையெழுத்துடையவரும், நல்ல குணங்களையுடையவரும் சிற்சாஸ்த்ரங்களை அறிந்தவரும் கோயிலைக் கட்டத் தகுதி படைத்தவரும், அளவீடுகளில் ஒப்பற்றவரும், இடையூறுகளை நீக்கத் திறமைப் படைத்தவரும், வாஸ்து நூல்களில் அனுபவமுடையவரும் ஸ்தபதி எனப்பெறுவார்.
- யோகஜாகமம்
வாஸ்து தந்த்ரத்தின் நுட்பங்களை அறிந்தவரும் எல்லா சாஸ்த்ரங்களிலும் தேர்ந்தவரும் செழித்த பூமியில் பிறந்தவரும் சிறந்த ஸ்தபதியாவார். சிவாசார்யார் சிவனின் வடிவமாவார். கட்டிடத்தின் யஜமானர் விஷ்ணுவாவார். ஸ்தபதி ப்ரஹ்மாவாவார். இம்மும்மூர்த்திகளாலும்தான் தர்மம் நிலைநிறுத்தப்பெறுகிறது.
- ஸுப்ரபேதாகமம்
ஆசார்யர் மேற்கூறிய இலக்கணங்களோடு கூடிய ஸ்தபதியைத் தேர்ந்தெடுக்கவேண்டும். நல்ல குலத்தில் தோன்றிய ஸ்தபதியைத் தேடித் தேர்ந்தெடுக்க வேண்டும். ஸ்தபதி, ஸூத்ரக்ராஹீ, வர்த்தகி, தக்ஷகர் மற்றும் தெய்வச்சிலைகளைச் செய்பவர் ஆகியோர் …… ஆசார்யர் ஸ்தபதி மற்றும் ஸூத்ரக்ராஹியை வைத்து கோயிலைக் கட்ட வேண்டும். தக்ஷகர் சிலையின் கண்ணைத் திறந்து வைக்க வேண்டும். சாஸ்த்ரங்களை அறிந்தவரும், நல்ல அனுபவம் உடையவரும் நற்குலத்தில் பிறந்தவரும் சிறந்த ஸ்தபதியாவார். அத்தகைய ஸ்தபதியைத் தேர்ந்தெடுத்த பின்னர் ஆசார்யர் கோயில் வேலையைத் துவங்க வேண்டும்.
- ப்ரபஞ்சோத்தரத்தின் வித்யாஸூத்ரம்
அழகிய கையெழுத்துடையவரும், நல்ல குணங்களையுடையவரும் சிற்சாஸ்த்ரங்களை அறிந்தவரும் கோயிலைக் கட்டத் தகுதி படைத்தவரும், அளவீடுகளில் ஒப்பற்றவரும், இடையூறுகளை நீக்கத் திறமைப் படைத்தவரும், வாஸ்து நூல்களில் அனுபவமுடையவரும் ஸ்தபதி எனப்பெறுவார்.
- லக்ஷணப்ரமாணம்
செழித்த பூமியில் பிறந்தவர், வாஸ்து வித்யையின் நுட்பத்தை அறிந்தவர் கொள்ளத்தக்கதும் தள்ளத்தக்கதுமானவற்றை அறிந்தவர், நிமித்தம், சகுனம் மற்றும் ஜோதிஷம் ஆகியவற்றில் தேர்ந்தவர், வேதம், தர்மம் ஆகியவற்றை அறிந்தவரே ஆசார்யராவார். கோயிலைக் கட்டுவதிலும் லிங்கத்திருமேனியைச் செய்வதிலும் தேர்ந்தவரும் அளவீடுகளில் சிறந்தவருமானவர் சிறந்த ஸ்தபதியாவார். ஸ்தபதியே ப்ரஹ்மாவாவார். யஜமானர் கேசவரும் ஆசார்யர் சிவனேயாவார்.
- பாஞ்சராத்ரத்தின் காபிஞ்ஜலம்
ஆசார்யன் பூமியைத் தோண்டியும் செதுக்கியும் விக்ரஹங்களைச் செய்ய ஸ்தபதியைத் துணைக்கோடல் வேண்டும். அத்தகைய ஸ்தபதிக்கு செல்வம், தான்யம் மற்றும் யானை முதலியவற்றை அளிக்க வேண்டும்.
- பரமபுருஷ ஸம்ஹிதை
… ஸ்தபதியைக் கொண்டு செய்ய வேண்டும்.
- ஸ்ரீவைகானஸ மஹாஸ்தவம்
ஸ்தபதிகள் சிற்பசாஸ்த்ரத்தை அனுஸரித்து கோயிலைக் கட்ட வேண்டும். ஆகவே ஆசார்யன் தனது முழு முயற்சியோடும் ஸ்தபதியோடிணைந்து பணியாற்ற வேண்டும்.
- அத்ரியின் நூல்
ஆசார்யன் ஸ்தபதியோடிணைந்து கோயிலைக் கட்ட வேண்டும்.
- அகஸ்த்ய வாஸ்து சாஸ்த்ரம்
ஸ்வதந்த்ரமானவரும் பிறர் தந்த்ரத்தை அறிந்தவரும் நற்செயல்களைப் புரிபவரும் நல்ல மனமுடையவரும் தர்மத்தை அறிந்தவரும் உண்மையைப் பேசுபவரும் எல்லாப் புலன்களையும் வென்றவரும் இதிஹாஸங்களையும் புராணங்களையும் அறிந்தவரும் தர்ம சாஸ்த்ரம் வாஸ்து சாஸ்த்ரம் ஆகியவற்றை அறிந்தவரும் அறிவாளியும் பக்தியுடையவரும் பேராசையற்றவரும் தூயவரும் நிமித்தங்களை அறிந்தவரும் ஓவியத்தில் தேர்ந்தவரும், நல்ல ஸ்தபதியாவார். கோயில் வேலைகள் முழுமையாக முடிந்த பின்னர் உத்தராயணத்தில் நல்ல நக்ஷத்ரமும் பக்ஷமும் பார்த்து ஸம்ப்ரோக்ஷணத்தைச் செய்ய வேண்டும். யஜமானர் விஷ்ணுவாவார். விமானத்தின் அங்கங்கள்……. பௌதிகம் எனப்பெறும். ஸம்ப்ரோக்ஷணம் விதிப்படி செய்யப்பெற வேண்டும்.
- வாஸ்து வித்யா
விச்வகர்மா குலத்தின் குருவானதால் அவர்தான் ஆசார்யர். ஸ்தாபனம் செய்பவரே ஸ்தபதியாவார். ஸ்தபதியானவர் சாஸ்த்ரங்களில் தேர்ந்தவராகவும் கட்டிடத்திலும் ஸத்யத்திலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் நற்செயல்களைச் செய்பவராகவும் நற்குலத்தைச் சேர்ந்தவராகவும் தகுதியுடையவராகவும் அறமுடையவராகவும் உண்மையைப் பேசுபவராகவும் கணிதம் புராணங்கள் ஓவியம் ஆகியவற்றை அறிந்தவராகவும் எல்லாப் பகுதிகளையும் அறிந்தவராகவும் நற்பெயருடையவராகவும் ஆரோக்யமுள்ளவராகவும் இருக்கவேண்டும். அவர் திண்மையுடையவராகவும் பேராசையற்றவராகவும் சோம்பல், பயம் இவையற்றவராகவும் இருத்தல் வேண்டும். அவர் நல்லிதயம் படைத்தவராகவும் கவனமாகவும் இருத்தல் வேண்டும். அவர் புலன்களை வென்றவராதல் வேண்டும். அவர் மது, மாது முதலிய ஏழு குற்றங்களிலிருந்து விலகியவராதல் வேண்டும். அவர் அறிவாளியாகவும் கொள்ள-தள்ளத்தக்க பகுதிகளை அறிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
- ஸாரஸ்வதீயம்
குருவான விச்வகர்மாவின் பெயரால் அந்தக் குலத்தைச் சேர்ந்தோரும் விச்வகர்மாவென்றே அழைக்கப்பெறுவர். கோயில்களைக் கட்டுபவர் ஸ்தபதியாவார். ஸ்தபதியானவர் சிற்பநூல்களின் உட்பொருளை அறிந்தவராதல் வேண்டும். அவர் தர்மவானாகவும் உண்மை பேசுபவராகவும் நற்குலத்தில் பிறந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
இவ்வாறு சிற்பிக்கான தகுதிகள் சிறப்பாக விளக்கப்பெற்றிருக்கின்றன. இத்தகைய நீண்ட நெடிய அலசல் ஒரு கல்வெட்டில் செய்யப்பெற்றிருப்பது மிகுந்த ஆச்சர்யத்தைத் தருகிறது. இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் மேற்கோள் காட்டப்பெற்றுள்ளன.
பின்வரும் நூல்கள் தற்போது கிடைக்கவில்லை
- அகஸ்த்ய சிற்ப சாஸ்த்ரம் (ஸகலாதிகாரம்?)
- ப்ரமாண லக்ஷணம்
- ஸாரஸ்வதீயம்
- பீம ஸம்ஹிதை
- ப்ரபஞ்சோத்தரம்
- பரமபுருஷ ஸம்ஹிதை
- மஸ்கரரின் உரை
- யோகஜாகமம் (சுவடியாக உள்ளது. பதிப்பிக்கப்பெறவில்லை)
இப்படி ஆகமங்கள் மற்றும் சிற்பநூல்களை விரிவாக அலசும் இந்தக் கல்வெட்டு மிகவும் அரிதானது. இது சிற்பிகளின் தகுதியை நன்கு விளக்குகிறது.
Nice article
Dear Sri.S.N,
Namasthe. Really great work. It is rare among rarest article about architect-sculptors community “Viswakarmas”.Brilliant analysis. Thanks.
with regards,
KP Umapathy Acharya
thanq sir
thank u sir nice article
gautama smriti,yagnavalkiya smriti and narada smriti are highlighted as the bibliographic texts here but not manu smriti i dont know why people are speaking about manu smriti now when it was not even taken into account at that time.there are some smritis for some reason and seasons its ridiculous to quote it even now.