ஆந்திரக் கல்வெட்டில் அகஸ்த்யரின் அவதாரம்

பின்வரும் கல்வெட்டு ஆந்திர மாநிலத்திலுள்ள அனந்தபூர் ஜில்லா பெனுகொண்டாவில் உள்ள அவிமுக்தேச்வரர் கோயிலிலுள்ள இரு கற்றூண்களில் காணப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டின் காலம் இந்தக் கல்வெட்டிலேயே பூத ஸங்க்யை எனப்பெறும் முறைப்படி கிரி-அக்ஷி-வஹ்னி-ஸுதாமரீசி என்னும் மறைபொருளாகத் தரப்பெற்றுள்ளது. ஆண்டின் பெயர் பார்த்திவ என்றும் சுக்ல பக்ஷ தசமி ஞாயிற்றுக் கிழமை என்றும் தரப்பெற்றுள்ளது. இந்தக் குறிப்புக்களைக் கொண்டு இந்தக் கல்வெட்டின் காலம் பொயு 1405 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 என்று தீர்மானிக்க முடிகிறது. இந்தக் கல்வெட்டு அந்தப் பகுதியை ப்ரஹ்மபுரம் எனவும் மலையை கனகிரி எனவும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டிலுள்ள புராணச்செய்தியானது எந்தை கும்பத்தில் தோன்றிய அகஸ்த்யருக்கு ப்ரஹ்ம ஸரஸ்ஸின் கரையில் அவிமுக்தேச்வரர் என்னும் பெயரோடு அருள்மழை பொழிந்ததைக் குறிப்பிடுகிறது. அகஸ்த்யரின் தவத்தால் மகிழ்ந்த எந்தை ஒரு துறவியின் வடிவுகொண்டு அங்கே அருள் பொழிந்ததையும் குறிப்பிடுகிறது. மேலும் அவர் மூன்று இடங்களில் மூன்று லிங்கங்களாகக் குடிகொண்டதையும் குறிப்பிடுகிறது. அகஸ்த்யர் அதன் பிறகு வாமனேந்த்ரர் என்னும் பெயரில் அவதாரமெடுத்து எந்தைக்கு அவிமுக்தேச்வரர் என்னும் கோயில் எடுப்பித்த செய்தியையும் குறிப்பிடுகிறது.

Line 1 : श्रीशुभमस्तु। श्रीमत्या सह गङ्गया निजगणैर्युक्तोविमुक्तेश्वरो विंध्यस्तम्भनभाजि कुम्भतनये स्पष्टीकृतानुग्रहः। काशीक्षेत्रनिकेतनाद्विचलितः प्राप्तो दिशं दक्षिणां साक्षाद्ब्रह्मुपरं निवासम

Line 2 : करोद्ब्राह्मे सरस्युज्ज्वले।। तत्रोपासनया विचित्रतरया तेनर्षिणा हर्षितस्तस्य प्रार्थनया यतीन्द्रपदवीमास्थाय भूस्थां जनान्। मूर्त्या स्फूर्तिजुषा दयारसमयैर्नेत्राञ्चलैरञ्चितैर्वाक्यैर्जीवपरैक्यबोधनपरैर्व्यर्थान्कृ

Line 3 : तार्थान्व्यधात्। एतस्याद्भुतचेष्टितस्य यमिनस्तस्याविमुक्तेप्रभोर्धत्ते पादनमस्क्रिया तनुभृतां प्राज्याधिराज्यश्रियम्। सन्धत्ते गुणवर्णनापरिमलं वाक्येसुधामाधुरीं चाधत्ते स्मरणं पुमर्थजननीमन्तः परां संविदम्।।

Line 4 : तेनागस्त्यमुनीश्वरेण तपसा प्राशस्त्यभाजा पुनः स्तोत्रैश्चित्रपदैरुपास्य स शिवो नानार्थदः प्रार्थितः। ख्याते ब्रह्मसरस्तटे घनगिरौ श्रीहेमकूटाचले स्थानेषु त्रिषु च स्थितिं चिरमगान्मङ्गल्यलिङ्गातत्मना।। ता

Line 5 : पानां त्रितयं त्रयं च वपुषां नॄणामवस्थात्रयं दौस्थ्यं नेतुमिवाचिरेण भगवान्मन्येऽविमुक्तेश्वरः। त्रिस्थानीप्रतिरूपमाश्रयदिह स्थानत्रयं वैभवैः कांतं कीर्जितदायकैरविरलैः सर्वार्त्तिनिर्वासनैः। भक्ताभीप्सित

இரண்டாம் கற்பலகை

Line 1 : दाननिर्जरतरोरस्याविमुक्तेशितुः प्रेयान् कुम्भभवोऽवतीर्य स भुवि श्रीवामनेन्द्रात्मना। रत्नस्वर्णमयैर्नवोपकरणै राजोपचारोचितैर्ध्यानैश्चागमचोदितैरपचितीरन्तर्बहिश्चाचरन्। गिर्यक्षिवह्निसुधामरीचिग

Line 2 : णिते शाके नृपे पार्थिवे वर्षे फाल्गुननाम्नि मासि धवले पक्षे दशम्यां तिथौ। वारे भानुमतो ग्रहैरनुगुणैरङ्गीकृतं मङ्गलं भक्त्या भव्यमचीकरद्धनगिरावेतच्छिलामन्दिरम्। एतेन प्रथि

Line 3 : तेन कुम्भजनुषो लीलावतारात्मना श्रीमद्वामनयोगिना विरचितं शैवं शिलामन्दिरम्। आकल्पं भुवि कल्पतां घनरणद्घण्टामृदङ्गावलीभेरीडिण्डिमशंखकाहलमहामंगल्यनादान्वितम्।

Line 4 : दुस्थत्वमस्य जगतो निखिलस्य हंतुं सुस्थत्वमारचयितुं कलितं प्रयत्नात्। शैवं शिलालयमिमं परिपालयन्तु लोकद्वयीगुणपराः सुजनाः विधिज्ञाः। विधत्तामविमुक्तेशो धर्म्यस्यैतस्य कर्मणः। क

Line 5 : र्तुः कारयितुश्चानुमन्तुः पालयितुं सुखम्। मंगलं महाश्रीश्रीश्री

श्रीशुभमस्तु।

ஸ்ரீஸு²ப⁴மஸ்து|

மங்களம் உண்டாகட்டும்.

பாவகை – சார்தூலவிக்ரீடிதம்

श्रीमत्या सह गङ्गया निजगणैर्युक्तोविमुक्तेश्वरो

विंध्यस्तम्भनभाजि कुम्भतनये स्पष्टीकृतानुग्रहः।

काशीक्षेत्रनिकेतनाद्विचलितः प्राप्तो दिशं दक्षिणां

साक्षाद्ब्रह्मुपरं निवासमकरोद्ब्राह्मे सरस्युज्ज्वले।।

ஸ்ரீமத்யா ஸஹ க³ங்க³யா நிஜக³ணைர்யுக்தோவிமுக்தேஸ்²வரோ

விந்த்⁴யஸ்தம்ப⁴னபா⁴ஜி கும்ப⁴தனயே ஸ்பஷ்டீக்ருʼதானுக்³ரஹ​:|

காஸீ²க்ஷேத்ரனிகேதனாத்³விசலித​: ப்ராப்தோ தி³ஸ²ம்ʼ த³க்ஷிணாம்ʼ

ஸாக்ஷாத்³ப்³ரஹ்முபரம்ʼ நிவாஸமகரோத்³ப்³ராஹ்மே ஸரஸ்யுஜ்ஜ்வலே||

          திருவுடைய கங்கையோடும் தன் ஈச்வர குணங்களோடும் இயைந்தவரான அவிமுக்தேச்வரர் விந்த்யமலையைத் திகைக்க வைத்த அகஸத்யருக்கு அருளைத் தெளிவாக்கினார். காசிக்ஷேத்ரத்திலிருந்து நீங்கி தென் திசையை அடைந்த அவர் ப்ரஹ்மபுரத்தை அடைந்து ப்ரஹ்மஸரஸ்ஸின் கரையைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டார்.

பாவகை – சார்தூலவிக்ரீடிதம்

तत्रोपासनया विचित्रतरया तेनर्षिणा हर्षित

स्तस्य प्रार्थनया यतीन्द्रपदवीमास्थाय भूस्थां जनान्।

मूर्त्या स्फूर्तिजुषा दयारसमयैर्नेत्राञ्चलैरञ्चितै

र्वाक्यैर्जीवपरैक्यबोधनपरैर्व्यर्थान्कृतार्थान्व्यधात्।

தத்ரோபாஸனயா விசித்ரதரயா தேனர்ஷிணா ஹர்ஷித

ஸ்தஸ்ய ப்ரார்த²னயா யதீந்த்³ரபத³வீமாஸ்தா²ய பூ⁴ஸ்தா²ம்ʼ ஜனான்|

மூர்த்யா ஸ்பூ²ர்திஜுஷா த³யாரஸமயைர்னேத்ராஞ்சலைரஞ்சிதை

ர்வாக்யைர்ஜீவபரைக்யபோ³த⁴னபரைர்வ்யர்தா²ன்க்ருʼதார்தா²ன்வ்யதா⁴த்|

          அங்கே அந்த ரிஷியின் பலவகையான உபாஸனையினால் மகிழ்ந்த எந்தை ஒரு துறவியின் ஒளிபொங்கும் வடிவெடுத்து பூமியிலுள்ள மக்களை தனது கருணைரஸம் ததும்பியதும் கண்ணோட்டமியைந்ததும் ஜீவ ப்ரஹ்ம ஐக்யத்தைப் போதிப்பதுமான உபதேசங்களால் வீணாய்த் திரிந்தவரையும்        உய்வித்தார்.

பாவகை – சார்தூலவிக்ரீடிதம்

एतस्याद्भुतचेष्टितस्य यमिनस्तस्याविमुक्तेप्रभो

र्धत्ते पादनमस्क्रिया तनुभृतां प्राज्याधिराज्यश्रियम्।

सन्धत्ते गुणवर्णनापरिमलं वाक्ये सुधामाधुरीं

चाधत्ते स्मरणं पुमर्थजननीमन्तः परां संविदम्।।

ஏதஸ்யாத்³பு⁴தசேஷ்டிதஸ்ய யமினஸ்தஸ்யாவிமுக்தேப்ரபோ⁴

ர்த⁴த்தே பாத³னமஸ்க்ரியா தனுப்⁴ருʼதாம்ʼ ப்ராஜ்யாதி⁴ராஜ்யஸ்²ரியம்|

ஸந்த⁴த்தே கு³ணவர்ணனாபரிமலம்ʼ வாக்யே ஸுதா⁴மாது⁴ரீம்ʼ

சாத⁴த்தே ஸ்மரணம்ʼ புமர்த²ஜனனீமந்த​: பராம்ʼ ஸம்ʼவித³ம்||

          இத்தகைய அற்புதமான செயலுடைய அவிமுக்தேச்வரரின் அவதாரமான துறவியின் திருவடிவணக்கம் மக்களுக்கு மிகப்பெரும் அரச செல்வத்தைப் பெற்றுத்தரும். அவரைப் புகழும் துதிகள் சொல்லில் அமுதத்தையொத்த இனிமையை வழங்கும். அவரை நினைந்தாலே எல்லா புருஷார்த்தங்களையும் வழங்கும் பெரும் ஞானத்தை உள்ளே வழங்கும்.

பாவகை – சார்தூலவிக்ரீடிதம்

तेनागस्त्यमुनीश्वरेण तपसा प्राशस्त्यभाजा पुनः

स्तोत्रैश्चित्रपदैरुपास्य स शिवो नानार्थदः प्रार्थितः।

ख्याते ब्रह्मसरस्तटे घनगिरौ श्रीहेमकूटाचले

स्थानेषु त्रिषु च स्थितिं चिरमगान्मङ्गल्यलिङ्गातत्मना।।

தேனாக³ஸ்த்யமுனீஸ்²வரேண தபஸா ப்ராஸ²ஸ்த்யபா⁴ஜா புன​:

ஸ்தோத்ரைஸ்²சித்ரபதை³ருபாஸ்ய ஸ ஸி²வோ நானார்த²த³​: ப்ரார்தி²த​:|

க்²யாதே ப்³ரஹ்மஸரஸ்தடே க⁴னகி³ரௌ ஸ்ரீஹேமகூடாசலே

ஸ்தா²னேஷு த்ரிஷு ச ஸ்தி²திம்ʼ சிரமகா³ன்மங்க³ல்யலிங்கா³தத்மனா||

          அந்த பெருமைகொண்ட அகஸ்த்ய முனியின் தவத்தினாலும் பலவிதமான சொற்களைக் கொண்ட ஸ்தோத்ரங்களாலும் பல்வகை வளங்களையும் தரும் எந்தை வேண்டப்பெற்றார். புகழ்பெற்ற ப்ரஹ்மஸரஸ்ஸின் கரையிலும் கனகிரியிலும் ஸ்ரீஹேமகூட மலையிலுமாக மூன்று இடங்களிலும் மங்களமான லிங்கவடிவாக எந்தை தோன்றினார்.

பாவகை – சார்தூலவிக்ரீடிதம்

तापानां त्रितयं त्रयं च वपुषां नॄणामवस्थात्रयं

दौस्थ्यं नेतुमिवाचिरेण भगवान्मन्येऽविमुक्तेश्वरः।

त्रिस्थानीप्रतिरूपमाश्रयदिह स्थानत्रयं वैभवैः

कांतं कीर्जितदायकैरविरलैः सर्वार्त्तिनिर्वासनैः।

தாபானாம்ʼ த்ரிதயம்ʼ த்ரயம்ʼ ச வபுஷாம்ʼ ந்ரூʼணாமவஸ்தா²த்ரயம்ʼ

தௌ³ஸ்த்²யம்ʼ நேதுமிவாசிரேண ப⁴க³வான்மன்யே(அ)விமுக்தேஸ்²வர​:|

த்ரிஸ்தா²னீப்ரதிரூபமாஸ்²ரயதி³ஹ ஸ்தா²னத்ரயம்ʼ வைப⁴வை​:

காந்தம்ʼ கீர்ஜிததா³யகைரவிரலை​: ஸர்வார்த்தினிர்வாஸனை​:|

          மூன்று தாபங்களையும் நீக்கவும், உடலின் மூவிதமான உபாதைகளை அகற்றவும் மனிதர்களின் மூன்று நிலைகளிலும் தீயநிலையை விரைவாக நீக்கவும் அவிமுக்தேச்வரரான இறைவன் மூன்று இடங்களில் புகழைத் தரக்கூடியதும் எல்லா துயரங்களை நீக்கக் கூடியதுமான மூன்று வடிவங்களை தமது சக்தியால் அடைந்தார் என நான் (கவி) நினைக்கிறேன்.

பாவகை – சார்தூலவிக்ரீடிதம்

भक्ताभीप्सितदाननिर्जरतरोरस्याविमुक्तेशितुः

प्रेयान् कुम्भभवोऽवतीर्य स भुवि श्रीवामनेन्द्रात्मना।

रत्नस्वर्णमयैर्नवोपकरणै राजोपचारोचितै

र्ध्यानैश्चागमचोदितैरपचितीरन्तर्बहिश्चाचरन्।

ப⁴க்தாபீ⁴ப்ஸிததா³னனிர்ஜரதரோரஸ்யாவிமுக்தேஸி²து​:

ப்ரேயான் கும்ப⁴ப⁴வோ(அ)வதீர்ய ஸ பு⁴வி ஸ்ரீவாமனேந்த்³ராத்மனா|

ரத்னஸ்வர்ணமயைர்னவோபகரணை ராஜோபசாரோசிதை

ர்த்⁴யானைஸ்²சாக³மசோதி³தைரபசிதீரந்தர்ப³ஹிஸ்²சாசரன்|

          பக்தர்களின் விருப்பங்களை வழங்குவதில் கற்பகத்தையொத்த அவிமுக்தேச்வரரின் அன்புக்கு பாத்திரரான கும்பத்தில் தோன்றிய அகஸ்த்யர் பூமியில் ஸ்ரீவாமனேந்த்ரர் என்னும் வடிவோடு அவதரித்து இரத்தினங்களும் தங்கங்களும் பதிக்கப்பெற்ற பல உபகரணங்களையும் அரச உபசாரங்களோடும் வேதங்களில் கூறப்பெற்ற த்யானத்தாலும் உள்ளும் புறமும் எந்தையை வழிபட்டார்.

பாவகை – சார்தூலவிக்ரீடிதம்

गिर्यक्षिवह्निसुधामरीचिगणिते शाके नृपे पार्थिवे

वर्षे फाल्गुननाम्नि मासि धवले पक्षे दशम्यां तिथौ।

वारे भानुमतो ग्रहैरनुगुणैरङ्गीकृतं मङ्गलं

भक्त्या भव्यमचीकरद्धनगिरावेतच्छिलामन्दिरम्।

கி³ர்யக்ஷிவஹ்னிஸுதா⁴மரீசிக³ணிதே ஸா²கே ந்ருʼபே பார்தி²வே

வர்ஷே பா²ல்கு³னனாம்னி மாஸி த⁴வலே பக்ஷே த³ஸ²ம்யாம்ʼ திதௌ²|

வாரே பா⁴னுமதோ க்³ரஹைரனுகு³ணைரங்கீ³க்ருʼதம்ʼ மங்க³லம்ʼ

ப⁴க்த்யா ப⁴வ்யமசீகரத்³த⁴னகி³ராவேதச்சி²லாமந்தி³ரம்|

          சகவருடம் கிரி-அக்ஷி-வஹ்னி-ஸுதாமரீசி என்ற கணக்குடைய பார்த்திவ ஆண்டில் பால்குன மாதத்தில் சுக்ல பக்ஷ  தசமி திதியோடு கூடிய ஞாயிற்றுக் கிழமை க்ரஹங்கள் எல்லாம் அனுகூலமாக இயைந்து வந்த போது பக்தியோடு இந்தக் கற்றளிக்கு கடவுண்மங்கலம் செய்யப்பெற்றது.

பாவகை – சார்தூலவிக்ரீடிதம்

एतेन प्रथितेन कुम्भजनुषो लीलावतारात्मना

श्रीमद्वामनयोगिना विरचितं शैवं शिलामन्दिरम्।

आकल्पं भुवि कल्पतां घनरणद्घण्टामृदङ्गावली

भेरीडिण्डिमशंखकाहलमहामंगल्यनादान्वितम्।

ஏதேன ப்ரதி²தேன கும்ப⁴ஜனுஷோ லீலாவதாராத்மனா

ஸ்ரீமத்³வாமனயோகி³னா விரசிதம்ʼ ஸை²வம்ʼ ஸி²லாமந்தி³ரம்|

ஆகல்பம்ʼ பு⁴வி கல்பதாம்ʼ க⁴னரணத்³க⁴ண்டாம்ருʼத³ங்கா³வலீ

பே⁴ரீடி³ண்டி³மஸ²ங்க²காஹலமஹாமங்க³ல்யனாதா³ன்விதம்|

          இவ்வாறு புகழ்பெற்றதும் அகஸ்த்யரின் லீலையாலெடுத்த அவதாரமான ஸ்ரீ வாமன யோகியினால் இந்த சிவனுக்கான கற்றளி எடுப்பிக்கப்பெற்றது. இந்தக் கற்றளியானது கற்பகாலம் வரையில் மணி, ம்ருதங்கம், பறை, சிறுபறை, சங்கு, எக்காளம் ஆகியவற்றின் பெரும் மங்கல ஒலியோடு எப்போதும் சிறந்து விளங்கட்டும்.

பாவகை – வஸந்த திலகா

दुस्थत्वमस्य जगतो निखिलस्य हंतुं

सुस्थत्वमारचयितुं कलितं प्रयत्नात्।

शैवं शिलालयमिमं परिपालयन्तु

लोकद्वयीगुणपराः सुजनाः विधिज्ञाः।

து³ஸ்த²த்வமஸ்ய ஜக³தோ நிகி²லஸ்ய ஹந்தும்ʼ

ஸுஸ்த²த்வமாரசயிதும்ʼ கலிதம்ʼ ப்ரயத்னாத்|

ஸை²வம்ʼ ஸி²லாலயமிமம்ʼ பரிபாலயந்து

லோகத்³வயீகு³ணபரா​: ஸுஜனா​: விதி⁴ஜ்ஞா​:|

          உலகோரின் தீயநிலமையை அகற்றவும் நன்னிலையை நிலைநிறுத்தவும் எடுப்பிக்கப்பெற்ற இந்த ஆலயத்தை இம்மையிலும் மறுமையிலும் நற்குணமுடையோரும் விதியை அறிந்தோருமான நல்லோர் பாதுகாக்கட்டும்.

பாவகை – அனுஷ்டுப்

विधत्तामविमुक्तेशो धर्म्यस्यैतस्य कर्मणः।

कर्तुः कारयितुश्चानुमन्तुः पालयितुं सुखम्।

வித⁴த்தாமவிமுக்தேஸோ² த⁴ர்ம்யஸ்யைதஸ்ய கர்மண​:|

கர்து​: காரயிதுஸ்²சானுமந்து​: பாலயிதும்ʼ ஸுக²ம்|

          அவிமுக்தேச்வரர் தர்மம் நிறைந்த இந்தத் திருப்பணியைச் செய்தாருக்கும், செய்வித்தாருக்கும், பாதுகாப்போருக்கும் நலனை வாரி வழங்கட்டும்.

मंगलं महाश्रीश्रीश्री

மங்க³லம்ʼ மஹாஸ்ரீஸ்ரீஸ்ரீ

மங்களம், பெருஞ்செல்வம்.

இவ்விதமாக இந்தக் கல்வெட்டு அகஸ்த்யரின் மறுபிறவியாக ஒரு யோகியைக் குறிப்பிடுகிறது.

Please follow and like us:

One thought on “ஆந்திரக் கல்வெட்டில் அகஸ்த்யரின் அவதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *