நந்தி மஹாகாளர்களின் கதை

நாம் ஒரு சிவாலயத்தில் நுழைந்தால் அங்கே மூன்று நந்திகளைக் காணவியலும்.

 1. சிலாதரின் மகனான அதிகார நந்தி
 2. காளை வடிவிலான வாஹன நந்தி மற்றும்
 3. மஹாகாளரோடு காட்சியளிக்கும் த்வாரபாலகரான நந்தி

முதலிருவரைப் பற்றிய பதிவைப் பிறகு காண்போம். இப்போது த்வாரபாலகர்களான நந்தியைப் பற்றிக் காண்போம். நந்தி மற்றும் மஹாகாளர்கள் மனிதர்களாகப் பிறந்து எந்தை மீது கொண்ட ஒப்புயர்வற்ற பக்தியினால் உயர்நிலை பெற்றவர்கள். அவர்களின் கதையைக் காண்போமா..

இந்தக் கதை ஸ்காந்த புராணத்தில் அமைந்துள்ளது. அந்த புராணத்தின் மாஹேச்வர கண்டத்திலுள்ள கேதாரகண்டத்தில் இந்தச் செய்தி அமைந்துள்ளது. அந்தக் கண்டத்தின் ஐந்தாவது அத்யாயம் இந்தத் தகவலைத் தருகிறது. லோமேசர் எனப்பெறும் பெரும் முனிவர் சிவபக்தியின் மஹிமையைக் குறிக்க இந்தக் கதையைக் குறிப்பிடுகிறார். இந்தக் கதை முழுவதுமாக கண்ணப்ப நாயனாரின் கதையையொத்து அமைந்துள்ளது.

முன்னர் அவந்திபுரத்தில் நந்தி என்னும் வணிகன் இருந்தான். அவன் ஒப்பரிய பக்தியுடன் அவன் எப்போதும் எந்தையை த்யானிப்பதிலும் பூஜிப்பதிலும் ஈடுபட்டு வந்தான். அவன் தபோவனத்தில் ஒரு சிவலிங்கத்தைப் பூஜித்து வந்தான். அவன் வேத வேதாங்களில் தேர்ந்த அந்தணர்களைக் கொண்டு பஞ்சாம்ருதத்தால் அபிஷேகம் செய்தான். விலைமதிப்பற்ற மாணிக்யங்களைக் கொண்டும் மலர்களைக் கொண்டும் எந்தையை அர்ச்சனை செய்தான். இவ்விதம் அவன் எந்தையை பல வருடங்களாக அர்ச்சித்து வந்தான். அவன் வணங்கிய அந்த சிவலிங்கம் ஆளரவம் அற்ற இடத்தில் இருந்தது.

எப்போதும் விலங்குகளை வேட்டையாடுபவனும் இழிசெயல்களிலேயே ஈடுபடும் குணமுடையவனான ஒரு வேடன் அந்த லிங்கமிருக்கும் இடத்திற்குச் சென்றான். அந்த லிங்கத்தைக் கண்டவுடன் சொல்லமுடியாத உணர்ச்சி பொங்கி ப்ரவஹித்தது. அருகிலிருந்த குளத்தில் நீராடினான். தன் வாயில் கொப்பளிப்பதைப் போன்று நீரை எடுத்துக் கொண்டான். லிங்கத்தின் அருகில் சென்று நந்தி வைத்து விட்டுப் போன மாணிக்யங்களையும் பூக்களையும் அகற்றினான். தனது வாய்நீரால் நீராட்டினான். ஒரு கையால் வில்வ இலைகளையும் மறுகையால் தான் வேட்டையாடிய மான் இறைச்சியையும் வைத்துப் படைத்தான்.  பிறகு நெடுங்கிடையாக வீழ்ந்து வணங்கினான். தலைவா, உனக்கு எப்போதும் பூஜை செய்வேன், உனக்கே நான் ஆளாவேன் என்று மனமார உறுதிபூண்டான்.

மறுநாள் அங்கே நந்தி வந்தான். அங்கே இருந்த இறைச்சி முதலிய பொருட்களைக் கண்டு மிகவும் வருந்தினான். அவற்றைத் தூய்மை செய்து விட்டு மீண்டும் தனது வீட்டிற்குச் சென்றான். அவனுடைய புரோஹிதர் வாட்டமுற்றிருக்கும் அவன் முகத்தைப் பார்த்துக் காரணம் கேட்டார். அவன் தான் பூஜை செய்யும் இடத்தை எவரோ களங்கப்படுத்திய செய்தியைக் கூறினான். அவரோ, இவ்விதம் செய்தவன் முட்டாளாய் இருப்பான். நாம் நாளை சென்று அவற்றைப் புனிதம் செய்யலாம். நீ கவலைப்படாதேயென்றார். அவனும் நிம்மதியோடு உறங்கச் சென்றான். மறுநாள் அவர்கள் மறையில் தேர்ந்த அந்தணர்களை அழைத்துக் கொண்டு அங்கு சென்றனர். சாஸ்த்ரங்களில் கூறியபடி அந்த இடத்தைப் புனிதம் செய்தனர்.

அவர்கள் தூய்மை செய்து முடிக்கும் தறுவாயில் மஹாகாளன் என்னும் அந்த வேடன் கூற்றுவனையொத்த தோற்றத்தோடு அங்கு வந்தான். அவன் கையில் வில்லையேந்தியிருந்தான். அவனைக் கண்டவுடன் நந்தி மருண்டான். புரோஹிதரும் அந்தணர்களும் சிதறியோடினர். மஹாகாளன் வழக்கம் போல தனது பூஜையை மேற்கொண்டான். வாய் நீரால் நீராட்டி, இறைச்சியைப் படைத்தான். வீழ்ந்து வணங்கினான். பிறகு தனதிடம் சென்றான்.

அரண்டு போன நந்தி அந்தணர்களிடம் உபாயம் கேட்டான். அந்தணர்கள் அந்த வேடனைத் தடுக்க முடியாது, ஆகவே அந்த லிங்கத்தைப் பெயர்த்தெடுத்துப் போய் வீட்டில் வைத்துக் கொள்ளும்படி உபாயம் கூறினர். மகிழ்ந்த நந்தி லிங்கத்தைப் பெயர்த்தெடுத்து வீட்டிற்குக் கொண்டு சென்று தங்கமும் வைரமும் பதித்த பீடத்தில் அமைத்து பூஜித்தான். வழக்கம்போல தனது அர்ச்சனைகளையும் மேற்கொண்டான்.

இதற்கிடையில் பூஜிக்க வந்த மஹாகாளன் அங்கு எந்தையுருவம் இல்லாததைப் பார்த்து அதிர்ந்தான். கதறினான், அழுதான். எந்தையைத் தோன்றும்படி வேண்டினான். இறுதியாகத் தன்னுடைய வயிற்றைக் கிழித்து உள்ளிருக்கும் குடல் முதலிய அவயவங்களை எடுத்து லிங்கமிருந்த குழியில் போட்டு லிங்க வடிவாக்கினான். அதற்கு பூஜைகளைச் செய்து த்யானத்தில் ஈடுபட்டான்.

எந்தைத் தம்முடைய கணங்களோடு அவன் முன்னே தோன்றினார். தனது கையை அவனிடம் அளித்து அவனை ஸமாதானம் செய்தார். அவன் வேண்டுவனவெல்லாம் வழங்குவதாகவும் கூறினார். அவனோ தனக்கு வரமேதும் வேண்டாமெனவும் பிறவிகள் நேருமானால் அவற்றிலெல்லாம் எந்தையை மறவாமை வேண்டுமெனக் கோரினான். அவனது தூய்மையான மனத்தைக் கண்டு இறும்பூதெய்திய எந்தை அவனுக்குக் கணங்களின் ஒரு பகுதிக்குத் தலைமைப் பொறுப்பையும் த்வாரபாலகனாக இருக்கும் பதவியையும் அளித்தார். அப்போது, எக்காளம் பறை முதலிய வாத்யங்கள் முழங்கின. இந்தவொலியைக் கேட்ட நந்தி தபோவனத்திற்குச் சென்றான். அங்கே எந்தை மஹாகாளனைத் தழுவுவதையும் பார்த்தான். அவன் வேடனிடம் சென்று தன்னை எந்தைக்கு அறிமுகப்படுத்தும் படி கோரினான். மஹாகாளனும் எந்தையிடம் நந்தியை அறிமுகப்படுத்தினான். இறைவனோ நமுட்டுச் சிரிப்போடு, எனக்கு உன்னைத்தான் தெரியும், இது யாரென்றே தெரியவில்லையே என்றார். ஆயினும் உனக்கு நண்பனானால் இவனையும் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். பிறகு மஹாகாளனின் பரிவுரையால் நந்தியையும் த்வாரபாலகனாக ஏற்றுக் கொண்டார் எந்தை. இருவரும் எந்தையின் ஸாரூப்யம் பெற்றனர். இருவரையும் அழைத்துக் கொண்டு கைலாஸத்திற்குச் சென்றார் எந்தை. அங்கு பார்வதி ஹாரதி எடுத்து இருவரையும் வரவேற்றாள். அங்கு சென்றபிறகு இருவரும் தாங்கள் த்வாரபாலகர்களாக வாயிலிலேயே நிற்பதாக வேண்டினார்கள். எந்தை அதை ஒப்புக் கொண்டு ஒருவிரலைக் காட்டி பேசினார். அதைப் பார்த்த இருவரும் கூட தத்தம் விரல்களை ஸூசியாக நீட்டியபடி வாயிலில் நின்றனர். இந்தக் கதையைத் தமக்கு சிலாதரின் மகனான அதிகாரந்நதியே கூறியதாக லோமேசர் குறிப்பிடுகிறார்.

எல்லா சிவாலயங்களிலும் கங்கை யமுனையோடு இவ்விருவரும் வாயிலில் அமைக்கப் பெறுவர்.

இப்போது சிவாகமங்களில் இருவரின் இலக்கணங்களைப் பார்ப்போம்.

 1. காமிகாகமம்

காமிகாக³ம​: அர்சனாவிதி⁴படல​:

நந்தி³னம்ʼ பூர்வதி³க்³பா⁴கே³ பத்³மராக³ஸமப்ரப⁴ம்|

த்ரினேத்ரம்ʼ ஸூ²லஹஸ்தஞ்ச ஸௌம்யம்ʼ நாகோ³பவீதினம்||

ஹரிதாப⁴ம்ʼ மஹாகாலம்ʼ ஸூ²லஹஸ்தம்ʼ த்ரிலோசனம்|

நோக³பவீதினம்ʼ ரௌத்³ரம்ʼ ஆக்³னேய்யாம்ʼ தி³ஸி² பூஜயேத்||

கிழக்கில் நந்தியைப் பூஜிக்கவேண்டும். அவர் மூன்று கண்களையும் சூலத்தையும் கொண்டவர். மிகவும் சாந்தமாகவும் நாகத்தையே உபவீதமாகக் கொண்டும் இருப்பவர். அவர் பத்மராகத்தின் வண்ணத்தவர்.

     மஹாகாளர் பச்சை வண்ணத்தவர். மூன்று கண்களையும் சூலத்தையும் கொண்டவர். அவரும் நாகத்தினாலான உபவீதத்தைக் கொண்டவர்.

 1. யோகஜாகமம்

காமிகாக³ம​: அர்சனாவிதி⁴படல​:

நந்தி³னம்ʼ பூர்வதி³க்³பா⁴கே³ பத்³மராக³ஸமப்ரப⁴ம்|

த்ரினேத்ரம்ʼ ஸூ²லஹஸ்தஞ்ச ஸௌம்யம்ʼ நாகோ³பவீதினம்||

ஹரிதாப⁴ம்ʼ மஹாகாலம்ʼ ஸூ²லஹஸ்தம்ʼ த்ரிலோசனம்|

நோக³பவீதினம்ʼ ரௌத்³ரம்ʼ ஆக்³னேய்யாம்ʼ தி³ஸி² பூஜயேத்||

த்வாரபாலகர்களான நந்தியும் மஹாகாளர்களும் வலது மற்றும் இடது புறத்தில் பூஜிக்கத் தகுந்தவர்கள். நந்தி வலக்கரங்களில் ஸூசியையும் அஞ்ஜலியையும் உடையவர். இடக்கரங்கள் தண்டத்தையும் நாகத்தையும் கொண்டிருக்கும். மஹாகாளரின் வலக்கரங்கள் கலப்பையையும் தாமரையையும் கொண்டவை. இடக்கரங்களில் தண்டமும் உலக்கையும் இருக்கும். இருவரது இடதுகால்களும் சற்றே குஞ்சிதமாக தண்டத்தின் மீது வைத்திருப்பர். வலது கால் த்ரிபங்கியாக இருக்கும்.

இவர்களின் மற்றொரு இலக்கணமாவது, நந்தி சாம்பல் வண்ணத்தவர். இரு கரங்களுடையவர். இடக்கையில் மழுவும் வலக்கையில் பிரம்பும் கொண்டவர். நந்தியும் மஹாகாளரும் கீழை வாயிலில் இடம்பெறுவர். அனந்தனும் பசுபதியும் தென்வாயிலில் இடம்பெறுவர். அனந்தன் செந்நிறத்தோடும் வஜ்ராயுதத்தையும் கொண்டவர். பசுபதி நீலவண்ணத்தையும் சக்தியையும் கொண்டவன். தண்டியும் முண்டியும் மேலைவாயிலில் இருப்பர். தண்டு வானவில் நிறத்தில் வாளேந்தியிருப்பார். முண்டி வெண்மைநிறத்தோடு பிண்டிபாலம் தரித்தவர். விஜயனும் ப்ருங்கியும் வடவாயிலில் இருப்பவர். விஜயன் வெண்மையாக சூலமேந்தியிருப்பார். ப்ருங்கி கருமையாக கத்தியோடிருப்பார். எல்லா த்வார பாலகர்களும் அச்சமூட்டும் தோற்றத்தோடு த்ரிபங்கியிலிருப்பர்.

 1. அஜிதாகமம்

அஜிதாக³ம​: ஷட்த்ரிம்ʼஸ²​: படல​:

த்³வாரே நந்தி³மஹாகாலௌ த்³விபு⁴ஜௌ ச சதுஷ்கரௌ|

கர்தவ்யௌ த³ண்ட³ஹஸ்தௌ ச ப்ரத்யாலீடே⁴ன ஸம்ʼஸ்தி²தௌ|| 346

த³ம்ʼஷ்ட்ராகராலவத³னௌ ப்⁴ருகுடீகுடிலானனௌ|

தர்ஜயந்தௌ த்³விஷ​: க்ருத்³தௌ⁴ த்ரிணேத்ரௌ லோகபீ⁴திதௌ³||  347

நந்தி மற்றும் மஹாகாளர்களை இரு கரத்தோடு நான்கு கரங்களோடோ வைக்கலாம். அவர்கள் தண்டமேந்தி ப்ரத்யாலீடத்தில் நின்றிருப்பர். அவர்களுக்குக் கோரைப்பல்லும் வளைந்த புருவமும் இருக்கும். அவர்கள் முக்கண்களோடு எதிரிகளை மிரட்டுபவர்களாக இருப்பர்.

 1. அசிந்த்யாகமம்

அசிந்த்யாக³ம​:

த்³வாரஸ்ய த³க்ஷிணே நந்தீ³ம்ʼ க³ங்கா³ம்ʼ ச தஸ்ய த³க்ஷிணே||

வாமபார்ஸ்²வே மஹாகாலம்ʼ யமுனாந்தஸ்ய வாமகே|

ரக்தஸ்²யாமத்³விவர்ணாபௌ⁴ த³ண்ட³ஹஸ்தௌ மஹாப³லௌ|| 10

ஸுஸ்தி²தௌ சைகபாதௌ³ ச த³ண்டா³ர்தா⁴ஸ்²ரிதான்யகௌ|

உக்³ரத³ம்ʼஷ்ட்ரஸமாயுக்தௌ ஸூசிவிஸ்மயஹஸ்தகௌ||  11

ஸர்வாப⁴ரணஸம்ʼயுக்தௌ நாக³யஜ்ஞோபவீதகௌ|

நந்த³காலாவிதி க்²யாதௌ மஹாக்ரூராவக்³ரனேத்ரகௌ|| 12

க³ங்கா³ம்ʼ ச யமுனாம்ʼ சைவ ஸு²க்லஸ்²யாமலஸுரானிபௌ⁴|

த்³விபு⁴ஜே ச த்³வினேத்ரே ச கரண்ட³மகுடான்விதே||  13

ஸர்வாப⁴ரணஸம்ʼயுக்தே ஹ்ருʼத³யே சாஞ்ஜலியுதே|

     நந்தி வலப்புறமும் அவருக்கு வலப்புறத்தில் கங்கையுமிருப்பர். மஹாகாளர் இடப்புறமும் அவருக்கு இடப்புறத்தில் யமுனையும் இருப்பர். இருவரும் செந்நிறத்திலும் சாம்பல் வண்ணத்திலும் இருந்து கையில் தண்டமேந்தியிருப்பர். அவர்களின் ஒரு பாதம் ஸமமாகவும் மற்றொரு பாதம் தண்டத்தில் வைத்தபடியுமிருக்கும். அவர்கள் கோரைப்பல்லும் ஸூசி மற்றும் விஸ்மய முத்ரைகளை உடையவர்கள். அவர்கள் முழுவதும் அலங்கரிக்கப்பெற்றவர்களாக நாக உபவீதம் உடையவர்களாக இருப்பர். அவர்களே நந்தி மற்றும் மஹாகாளர்களாவர். கங்கையும் யமுனையும் கரண்டமகுடத்தோடு இரு கரங்களோடும் இருப்பர். அவர்கள் முழுவதும் அலங்கரிக்கப்பெற்று அஞ்ஜலி ஹஸ்தத்தோடிருப்பர்.

 1. பூர்வகாரணாகமம்

     த³க்ஷிணே து பு⁴வங்க³ஸ்ய நந்தி³னம்ʼ ரக்தவர்ணகம்|

த்ர்யக்ஷம்ʼ சதுர்பு⁴ஜோபேதம்ʼ அப⁴யம்ʼ வரதா³ன்விதம்||

உக்³ரதோமரஸூ²லஞ்சாப்யக்ஷமாலாஸமன்விதம்|

தஸ்யைவ வாமபார்ஸ்²வே து த்³வினேத்ராம்ʼ த்³விபு⁴ஜாந்ததா²||

க³ங்கா³யா​: ஸு²க்லவர்ணந்து மகராஸனஸம்ʼஸ்தி²தாம்|

நீலோத்பலம்ʼ ஸவ்யஹஸ்தே பூர்ணகும்ப⁴ம்ʼ து வாமகே||

சித்ரவஸ்த்ரஸமாயுக்தாம்ʼ ஸர்வாப⁴ரணபூ⁴ஷிதாம்|

த்³வாரஸ்ய த³க்ஷிணே க³ங்கா³ம்ʼ நந்தி³னம்ʼ பூஜயேத்³பு³தி⁴​:||

பு⁴வங்க³வாமபார்ஸ்²வே து மஹாகாலம்ʼ க⁴னத்³யுதிம்|

சதுர்பு⁴ஜம்ʼ த்ரிணேத்ரஞ்ச கபாலம்ʼ ஸூ²லமேவ ச||

த³க்ஷிணேப⁴யடங்கஞ்ச வாமே பாஸ²மாவஹன்|

ஜடாமகுடஸம்ʼயுக்தம்ʼ நாக³யஜ்ஞோபவீதகம்||

தஸ்யைவ த³க்ஷிணே பார்ஸ்²வே யமுனாஞ்சைவ கல்பயேத்|

த்³விபு⁴ஜாஞ்ச த்³வினேத்ராஞ்ச ஸ்²யாமவர்ணஸமன்விதாம்||

கூர்மாஸனஸமாரூடா⁴ம்ʼ ஸர்வாப⁴ரணபூ⁴ஷிதாம்|

பூர்ணகும்ப⁴ம்ʼ து வாமே து உத்பலம்ʼ ஸவ்யஹஸ்தகே||

யமுனாயா​: ஸ்வரூபந்து ஸர்வாவயவஸம்ʼயுதாம்|

     நந்தி புவங்கத்தின் வலப்புறம் செந்நிறத்தில் அமைந்திருப்பார். அவர் மூன்று கண்களோடும் நான்கு கரங்களோடுமிருப்பார். அவர் அபயம், வரதம், தோமரம், சூலம் மற்றும் அக்ஷமாலை ஆகியவற்றைக் கையில் ஏந்தியிருப்பார். இவருக்கு இடமாக வெண்ணிற கங்கை மகராஸனத்தில் இரு கரங்களோடும் இருப்பாள். அவள் நீலோத்பலத்தையும் பூர்ணகும்பத்தையும் கையில் ஏந்தியிருப்பாள். அவள் பலவகையான ஆடைகளை அணிந்து எல்லா ஆபரணங்களையும் பூண்டிருப்பாள்.

     மஹாகாளரை புவங்கத்தின் இடப்புறம் பூஜிக்க வேண்டும். அவர் நான்கு கரங்களோடு கருமை நிறத்திலிருப்பார். அவருக்கு வலப்புறத்தில் யமுனையை அமைக்க வேண்டும். அவள் ஆமையில் அமர்ந்த படி உத்பலத்தையும் பூர்ணகும்பத்தையும் ஏந்தியிருப்பாள்.

 1. உத்தரகாரணாகமம்

     மற்றைய ஆகமங்களை நோக்கும் போது இந்த ஆகமம் வேறானதோர் காட்சியைத் தருகிறது.

க³ர்ப⁴க்³ருʼஹஸ்ய த்³வாரே ச பி⁴ண்டி³முண்ட்³யாக்²யமீரிதம்|

த்³விபு⁴ஜௌ ச த்ரிணேத்ரௌ ச ஜடாமகுடஸோ²பி⁴தௌ||

க²ட்க³கே²டத⁴ரம்ʼ பீ⁴மம்ʼ நாக³யஜ்ஞோபவீதினம்|

கராளவத³னம்ʼ பீ⁴மம்ʼ பத்³மபீடோ²பரி ஸ்தி²தம்||

அர்த⁴மண்ட³பமத்⁴யே து மஹாகாலஞ்ச நந்தி³னம்|

த்ர்யக்ஷஞ்ச த்³விபு⁴ஜம்ʼ பீ⁴மம்ʼ ப்⁴ருகுடீமுக²பீ⁴ஷணம்||

த³க்ஷிணே த³ண்ட³ஹஸ்தஞ்ச த³ண்டா³க்³ரே மணிப³ந்த⁴கம்|

ஸ்வஸ்திகம்ʼ வாமபாத³ஞ்ச த³ண்ட³மத்⁴யேபி குண்டி³கே||

வாமபாத³தலன்ன்யஸ்ய வாமபாதோ³ர்த்⁴வதே³ஸ²கே|

ஸிம்ʼஹபுச்சா²க்ருʼதிம்ʼ ஹஸ்தம்ʼ க⁴ண்டாமாலாபி⁴பூ⁴ஷிதம்||

கராலவத³னம்ʼ கோ⁴ரம்ʼ த³க்ஷிணே ச தத​: ஸ்²ருணு|

த்³விபாத³ம்ʼ ரக்தவர்ணஞ்ச கராலவத³னான்விதம்||

ஜடாமகுடஸம்ʼயுக்தம்ʼ நாக³யஜ்ஞோபவீதினம்|

மணிமாலாவிபூ⁴ஷ்யஞ்ச வாமே த³ண்ட³த⁴ரந்ததா²||

ஸவ்யஞ்ச ஸ்வஸ்திகம்ʼ பாத³ம்ʼ த³ண்ட³மத்⁴யே பத³ம்ʼ ந்யஸேத்|

ஸவ்யஹஸ்தம்ʼ ப்ரஸார்யாத² து தலம்ʼ ந்யஸேத்||

ஸிம்ʼஹபுச்சா²க்ருʼதிம்ʼ வாமம்ʼ ஊர்த்⁴வஹஸ்தந்து பூர்வவத்|

மஹாமண்ட³பபார்ஸ்²வே து நந்தி³குண்டோ³த³ரௌ ததா²||

சதுர்பு⁴ஜம்ʼ த்ரிணேத்ரஞ்ச ஜடாமகுடமண்டி³தம்|

த³ம்ʼஷ்ட்ராகராலவத³னம்ʼ ப்⁴ருகுடீமுக²பீ⁴ஷணம்||

கர்ணபத்ரஸமாயுக்தம்ʼ க⁴ண்டாமாலாவிபூ⁴ஷிதம்|

ஸி²ரோமாலாவிபூ⁴ஷ்யஞ்ச அஷ்டனாகை³ரலங்க்ருʼதம்|

த³க்ஷிணே ஸூசிஹஸ்தம்ʼ ஸ்யாத் அன்யம்ʼ தாடி³தஹஸ்தகம்||

வாமே சோர்த்⁴வபதாகஞ்ச அன்யத்³த³ண்ட³த⁴ரம்ʼ ததா²|

மணிப³ந்தே⁴ து த³ண்டா³க்³ரம்ʼ ஸ்வஸ்திகம்ʼ வாமபாத³கம்||

த³ண்ட³மத்⁴யே ந்யஸேச்சைவ பாத³ம்ʼ ஸ்²யாமஸமாயுதம்|

வாமே து ரக்தவர்ணம்ʼ ஸ்யாத் ஸ்வஸ்திகம்ʼ வாமபாத³கம்||

த³ண்ட³மத்⁴யே ந்யஸேத்பாத³ம்ʼ ப்ரஸார்யம்ʼ வாமபாணினா|

மணிப³ந்த⁴ம்ʼ ந்யஸேத்³த³ண்டே³ அன்யம்ʼ வை தாடி³தம்ʼ கரம்||

ஸவ்யே து ஸூசிஹஸ்தம்ʼ ஸ்யாத் அப⁴யம்ʼ பீ⁴ஷணோன்னதம்|

மணிமாலாவிபூ⁴ஷ்யஞ்ச கர்ணபத்ரஸமாயுதம்||

த³ம்ʼஷ்ட்ராகராலவத³னம்ʼ ஸர்வாப⁴ரணபூ⁴ஷிதம்|

ஏவம்ʼ ஸங்கல்பயேச்சைவ ந்ருʼத்தமண்ட³பபார்ஸ்²வயோ​:||

விகடம்ʼ பீ⁴மமித்யுக்தம்ʼ த்ர்யக்ஷம்ʼ த்³விபு⁴ஜந்ததா²|

வ்ருʼத்தம்ʼ பிங்க³ஜடாம்ʼ சைவ துந்தி³லம்ʼ த³ம்ʼஷ்ட்ரிணம்ʼ ப⁴வேத்||

நாக³யஜ்ஞோபவீதஞ்ச வாமே த³ண்ட³த⁴ரந்ததா²|

ஸவ்யே து ஸூசிஹஸ்தம்ʼ ஸ்யாத் ரக்தவர்ணந்ததை²வ ச||

வாமே பீ⁴மம்ʼ த்ரிணேத்ரஞ்ச வ்ருʼத்தம்ʼ பிங்க³ஜடாத⁴ரம்|

ஸவ்யே ச ஸூசிஹஸ்தம்ʼ ஸ்யாத் வாமே த³ண்ட³த⁴ரம்ʼ ததா²|

த³ம்ʼஷ்ட்ராகராலவத³னம்ʼ மணிமாலாவிபூ⁴ஷிதம்|

ஏவம்ʼ வை கல்பயேத் பஸ்²சாத் கோ³புரத்³வாரபார்ஸ்²வயோ​:||

ஜயஞ்ச விஜயஞ்சைவ த்³விபு⁴ஜம்ʼ ரக்தவர்ணகம்|

அக்ஷமாலாம்ʼ த்ரிஸூ²லஞ்ச தா⁴ரிணம்ʼ ஜடிலந்ததா²||

ஜடாமகுடஸோ²பா⁴ட்⁴யம்ʼ வாமே சைவ தத​: ஸ்²ருணு|

க்ருʼஷ்ணவர்ணம்ʼ த்ரிணேத்ரஞ்ச ஜடாமகுடமண்டி³தம்||

கபாலஞ்ச த்ரிஸூ²லஞ்ச த³தா⁴னம்ʼ ப்⁴ருகுடிமேவ வா|

கர்பக்ருஹத்தின் வாயிலில் பிண்டியையும் முண்டியையும் அமைக்க வேண்டும். இருவரும் இருகரங்களையும் மூன்று கண்களையும் ஜடாமகுடத்தையும் கொண்டிருப்பர். இருவரும் கையில் வாளும் கேடயமும் ஏந்தியிருப்பர்.

அர்த்த மண்டபத்தின் வாயிலில் நந்தியும் மஹாகாளரும் இருப்பர். இருவரும் மூன்று விழிகளோடும் இரு கரங்களையும் கொண்டிருப்பர். அவர்கள் ஏந்திய தண்டத்தில் அவர்தம் மணிக்கட்டு நிலைகொண்டிருக்கும். மற்றொரு கரம் ஸிம்ஹபுச்சமாக அமைந்திருக்கும். அவர்கள் மணியாலான மாலை அணிந்திருப்பர். இடதுபுறம் மஹாகாளர் ஜடாமகுடத்தோடும் நாக உபவீதத்துடனும் இருப்பார். அவர் மணிமாலை அணிந்திருப்பார். வலதுகரம் ஸமநிலையிலும் இடதுகரம் ஸிம்ஹபுச்சமாகவும் அமைந்திருக்கும்.

மஹாமண்டபவாயிலில் நந்தியும் குண்டோதரனும் அமைந்திருப்பர். இருவரும் நான்கு கரங்களோடும் மூன்று விழிகளோடும் ஜடாமகுடத்தைக் கொண்டிருப்பர். அவர்கள் மணிகளாலான மாலையையும் தலையோட்டு மாலையையும் அணிந்திருப்பர். தண்டத்தின் முனை மணிக்கட்டில் நிலைகொள்ளும். இடக்கால் ஸ்வஸ்திகத்திலும் வலக்கால் தண்டத்தின் மீதும் அமைந்திருக்கும். இடப்புறம் செந்நிறமுள்ள மஹாகாளர் தாடிதம், ஸூசி மற்றும் அபய ஹஸ்தங்களைக் கொண்டிருப்பார்.

ந்ருத்த மண்டப வாயிலில் விகடனையும் பீமனையும் அமைக்க வேண்டும். விகடன் மூன்று கண்களையும் செஞ்சடையையும் கொண்டிருப்பார். சிறிது தொப்பையும் நாக உபவீதமும் அமைந்திருக்கும். பீமனும் இதே இலக்கணத்தைக் கொண்டிருப்பார்.

கோபுர வாயிலில் ஜயனும் விஜயனும் இருப்பர். இவர்கள் ஜடாமுடியோடு அக்ஷமாலையும் சூலமும் கொண்டிருப்பர்.

 1. ஆனந்தகந்தம்

     இந்த தந்த்ர நூலானது சிவபூஜையை வர்ணிக்கும்போது த்வாரபாலர்களைப் பற்றிய குறிப்பைத் தருகிறது.

நந்தி³னம்ʼ ச மஹாகாலம்ʼ ப்⁴ருʼங்கி³ம்ʼ ரிடிம்ʼ மஹாப³லம் |

கும்ப⁴கர்ணம்ʼ ச ஸுக்³ரீவம்ʼ ப்⁴ருʼங்க³கம்ʼ ச த்³ருʼடா⁴யுத⁴ம் ||

சதுர்த்³வாரே து வின்யஸ்ய த்³வௌ த்³வௌ ப்ராகா³தி³பூஜிதௌ 1,2.117 ||

நந்தி, மஹாகாளர், ப்ருங்கி, ரிடி, மஹாபலர், கும்பகர்ணர், ஸுக்ரீவர் மற்றும் ப்ருங்ககர் ஆகியோர் நான்கு வாயில்களிலும் இடம்பெறுவர்.

 1. சிவார்ச்சன சந்த்ரிகை

     ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர்களால் எழுதப்பெற்ற இந்த நூலின் த்வாரபாலார்ச்சனம் என்னும் பகுதி த்வாரபாலர்களைப் பற்றிய விவரங்களைத் தருகிறது.

ஹாம்ʼ நந்தி³னேனம​: |  அருணஜடாமகுடத⁴ரம்ʼ த்ரிஸூ²லாக்ஷமாலாதர்ஜனீமுத்³க³ரதா⁴ருணம்ʼ ஸ்தூ²லதே³ஹம்ʼ நந்தி³னம்ʼ பூஜயாமி |  ஹாம்ʼ க³ங்கா³யை நம​: |  த⁴வளவர்ணாம்ʼ மகரவாஹனாமம்ருʼதகலஸ²சாமரதா⁴ரிணீம்ʼ க³ங்கா³ம்ʼ பூஜயாமி |  ஹாம்ʼ மஹாகாளாயனம​: |  கஷ்ணவர்ணம்ʼ த³ம்ʼஷ்ட்ராகராளப்⁴ருகுடீபீ⁴ஷணஸ்தூ²லதே³ஹம்ʼ ஸூ²லகபாலமுத்³க³ரதர்ஜனீமுத்³ராதா⁴ரிணம்ʼ மஹகாளம்ʼ பூஜயாமி |  ஹாம்ʼ யமுனாயைனம​: |  ஸ்²யாமவர்ணாம்ʼ கூர்மவாஹனாம்ʼ சாமராம்ருʼதகலஸ²தா⁴ரிணீம்ʼ யுமுனாம்ʼ பூஜயாமி |  தத்தத்ஸ்தா²னேஷு புஜயேத் |  ஸர்வ ஏதே த்³வாரபாலா​: க³ங்கா³யமுனே வினா த்ரிணேத்ரா​: ஸர்வே சைதே த்³வாரஸமானமுகா²​: |

     நந்தி செஞ்சடையோடு சூலம், அக்ஷமாலை, தர்ஜனி மற்றும் உலக்கை ஆகியவற்றைக் கொண்டிருப்பார். கங்கை வெண்ணிறத்தோடு மகரத்தின் மீது வீற்றிருப்பாள். அவள் அமுத கலசத்தையும் சாமரத்தையும் கொண்டிருப்பாள். மஹாகாளர் கருநிறத்தோடு சூலம், கபாலம், உலக்கை மற்றும் தர்ஜனி ஆகியவற்றைக் கொண்டிருப்பார். யமுனை சாம்பல் நிறத்தோடு ஆமை மீது அமர்ந்திருப்பாள். அவளும் அமுத கலசத்தையும் சாமரத்தையும் கொண்டிருப்பாள்.

     ஆவரண பூஜையின் விளக்கத்தில் குண்டலி மற்றும் பத்மினி ஆகியோரை நந்தி மற்றும் மஹாகாளர்களின் மனைவியராகவும் இந்த நூல் குறிப்பிடுகிறது.

 1. ரௌரவாகமம்

     இந்த ஆகமத்தின் முப்பத்திரண்டாம் படலம் த்வாரபாலகர்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறது.,

நந்தி³காலௌ து பூர்வே து த³க்ஷிணேத³க்ஷிணே ஸ்தி²தௌ|

            த³ண்டீ³ முண்டீ³ அவாச்யாந்து விஜயோ ப்⁴ருʼங்கி³ரேவ ச||

            வாருணே ரக்ஷகாவேதௌ கோ³பத்யனந்தகாவிமௌ|

            உத்தரத்³வாரரக்ஷார்த²ம்ʼ த³க்ஷிணேத³க்ஷிணே ந்யஸேத்|

            ஸ்²யாமாப⁴குங்குமாபௌ⁴ ச நந்தி³காலௌ க்ரமாத்ஸ்தி²தௌ||

            இந்த்³ரகோ³பனிபௌ⁴ சைவ மயூரஸ்யேவ கந்த⁴ரம்|

            அவாச்யாம்ʼ த்³வாரிகௌ பா⁴ஸா பத்³மராகா³ப⁴னீலகௌ||

            வாருணே த்³வாரபாலௌ து ஸிதகாலாபா⁴வுத்தரே|

            த³ண்ட³ம்ʼ க³தா³ ச க²ட்³க³ம்ʼ ச த்ரிஸூ²லம்ʼ பி⁴ந்த³பாலக​:||

வேத்ரம்ʼ க³தா³ ச வஜ்ரம்ʼ ச நந்த்³யாதீ³னாம்ʼ து சிஹ்னகம்|

த்ரிணேத்ரா​: சதுர்பு⁴ஜாஸ்ஸர்வே த்வதிரௌத்³ரா​: ஸத³ம்ʼஷ்ட்ரகா​:||

ஜடாமகுடயுக்தாஸ்²ச கரண்ட³ம்ʼ வா கிரீடகம்|

நந்தியும் மஹாகாளரும் இடது மற்றும் வலதுபுறங்களில் அமைக்கப்பெறுவர். தண்டியும் முண்டியும் தென்புற வாயிலில் அமைவர். விஜயனும் ப்ருங்கியும் மேலைவாயிலிலும் அனந்தனும் கோபதியும் வடவாயிலிலும் அமைவர். நந்தி மஹாகாளர் வெண்மை மற்றும் செம்மை நிறத்தைக் கொண்டவர்கள். தென்புறக்காவலர்கள் பத்மராகம் மற்றும் நீலநிறத்தைக் கொண்டவர்கள். மேலை வாயிற் காவலர்கள் வெண்மையும் கருமையும் பெற்றவர்கள். மேற்கண்ட காவலர்கள் தண்டம், கதை, வாள், சூலம், பிண்டிபாலம், பிரம்பு, கதை மற்றும் வஜ்ரம் ஆகியவற்றைக் கொண்டிருப்பர். அனைவரும் மூன்று விழிகளையும் நான்கு கரங்களையும் கொணடிருப்பர். அனைவரும் ஜடாமகுடத்தையோ அல்லது கரண்ட மகுடத்தையோ அல்லது கிரீட மகுடத்தையோ கொண்டிருப்பர்.

 1. தீப்தாகமம்

     பூர்வத்³வாராதி⁴பௌ ஜ்ஞேயௌ நந்தி³காலாவுபௌ⁴ ததா²|

            த³ண்டீ³ முண்டீ³ மஹாவீர்யோ த³க்ஷிணத்³வாரபாலகௌ||

            ப்⁴ருʼங்கீ³ ச விஜயஸ்²சைவ பஸ்²சிமத்³வாரபாலகௌ|

அனந்த​: பஸு²பதிஸ்²சைவ உத்தரத்³வாரபாலகௌ||

நந்தீ³ஸோ² த³ண்ட³ஹஸ்த​: ஸ்யாத் கால​: பாஸ²தா⁴ரக​:|

த³ண்டீ³ஸோ² த³ண்ட³ஹஸ்த​: ஸ்யான்முண்டீ³ வை பி⁴ண்டி³பாலத்⁴ருʼத்|

ப்⁴ருʼங்கீ³ வை க²ட்³க³ஹஸ்த​: ஸ்யாத் விஜய​: ஸூ²லதா⁴ரக​:||

அனந்தோ வஜ்ரஹஸ்த​: ஸ்யாத் பஸு²பதி​: பாஸ²தா⁴ரக​:|

நந்தீ³ஸ²​: ஸ்²யாமவர்ண​: ஸ்யாத் காலௌ வை தூ⁴ம்ரவர்ணக​:||

இந்த்³ரனீலனிபோ⁴ த³ண்டீ³ முண்டீ³ வை ஸ்²வேதவர்ணக​:|

ப்⁴ருʼங்கீ³ மயூரக்³ரீவாபோ⁴ விஜயோ ரக்தவர்ணக​:||

அனந்த​: காலவர்ணஸ்யாத் பஸு²பதி​: நீல ஏவ ச|

த்ரிணேத்ரா​: சதுர்பு⁴ஜாஸ்ஸர்வே ஸர்வாப⁴ரணபூ⁴ஷிதா​:||

கிஞ்சித் த்ரிப⁴ங்கி³கம்ʼ கார்யம்ʼ வாமபாத³ம்ʼ து குஞ்சிதம்|

நந்தியும் மஹாகாளர்களும் கீழை வாயிலில் அமைவர். தண்டியும் முண்டியும் தென்வாயிலில் அமைவர். விஜயனும் ப்ருங்கியும் மேலைவாயிலிலும் அனந்தனும் கோபதியும் வடவாயிலிலும் அமைவர். நந்தியும் மஹாகாளரும் தண்டமும் பாசமும் பெற்றிருப்பர். தண்டியும் முண்டியும் தண்டமும் பிண்டிபாலமும் கொண்டிருப்பர். ப்ருங்கி வாளும் விஜயன் சூலமும் பெற்றிருப்பர். அனந்தன் வஜ்ரமும் பசுபதி பாசமும் கொண்டிருப்பர். நந்தி சாம்பல் நிறத்திலும் மஹாகாளர் புகை நிறத்தையும் கொண்டிருப்பர். தண்டி இந்த்ர நீல மணி நிறத்திலும் முண்டி வெண்மையாகவும் இருப்பர். ப்ருங்கி மயிலின் கழுத்துநிறத்திலும் விஜயன் செந்நிறமாகவும் இருப்பர். அனந்தன் கருமையாகவும் பசுபதி நீலநிறத்திலும் இருப்பர். அனைவரும் முன்று கண்களையும் நான்கு கரங்களையும் கொண்டிருப்பர்.

 1. ரூபமண்டனம் மற்றும் அபராஜித ப்ருச்சை

     இவ்விரு நூல்களும் ஒரேமாதிரியான இலக்கணத்தைத் தருகின்றன.

மாதுலுங்க³ஞ்ச நாகே³ந்த்³ரம்ʼ ட³மரும்ʼ சாக்ஷஸூத்ரகம்|

நந்தீ³ முகுடஸோ²பா⁴ட்⁴ய​: ஸர்வாப⁴ரணபூ⁴ஷித​:||

க²ட்³வாங்க³ஞ்ச கபாலஞ்ச ட³மரும்ʼ பீ³ஜபூரகம்|

த³ம்ʼஷ்ட்ராகராலவத³னம்ʼ மஹாகாலந்து த³க்ஷிணே||

இதி பூர்வப்ரதீஹாரௌ

     நந்தியும் மஹாகாளரும் கீழைவாயில் காப்போராவர். நந்தி மாதுளை, உடுக்கை, அக்ஷமாலை, நாகம் ஆகியவற்றைக் கொண்டிருப்பார். மஹாகாளர் கட்வாங்கம், கபாலம், உடுக்கை மற்றும் மாதுளை ஆகியவற்றைக் கொண்டிருப்பார்.

தர்ஜனீ ச த்ரிஸூ²லஞ்ச ட³மரும்ʼ க³ஜமேவ ச|

ஹேரம்போ³ வாமபா⁴கே³ ஸ்யாத் ப்⁴ருʼங்கீ³ த³க்ஷிணத​: ஸ்²ருணு||

க³ஜம்ʼ ட³மருக²ட்³வாங்க³ம்ʼ தர்ஜனீவாமஹஸ்தக​:|

உபௌ⁴ ச த³க்ஷிணே த்³வாரே ப்⁴ருʼங்கீ³ த³க்ஷிணத​: ஸு²ப⁴​:||

இதி த³க்ஷிணப்ரதீஹாரௌ

     ஹேரம்பனும் ப்ருங்கியும் தென்வாயில் காவலராவர். ஹேரம்பன் தர்ஜனி சூலம், உடுக்கை கஜஹஸ்தம் ஆகியவற்றைக் கொண்டிருப்பார். ப்ருங்கி கஜஹஸ்தம், உடுக்கை கட்வாங்கம் மற்றும் தர்ஜனி ஆகியவற்றைக் கொண்டிருப்பார்.

த்ரிஸூ²லம்ʼ ட³மருஞ்சைவ க²ட்வாங்க³ஞ்ச கபாலகம்|

பஸ்²சிமே து³ர்முகோ² வாமே தத்³வக்த்ரம்ʼ கோ³முகா²க்ருʼதி|

ட³மருஞ்ச ததா² த³ண்ட³ம்ʼ பீ³ஜபூரம்ʼ ததை²வ ச||

த்³வாரே பஸ்²சிமகே கார்ய​: பாண்டு³ரோ வாமத³க்ஷிணே||

இதி பஸ்²சிமப்ரதீஹாரௌ

     துர்முகனும் பாண்டுரனும் மேலைக்காவலராவர். துர்முகன் இடப்புறத்தில் சூலம், உடுக்கை, கட்வாங்கம் மற்றும் கபாலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பார். அவர் மாட்டின் முகத்தையும் கொண்டிருப்பார். பாண்டுரன் வலப்புறம் உடுக்கை, தண்டம் மற்றும் மாதுளை ஆகியவற்றைக் கொண்டிருப்பார்.

மாதுலுங்க³ம்ʼ ம்ருʼணாலஞ்ச க²ட்வாங்க³ம்ʼ பத்³மத³ண்ட³கம்|

ஸிதஸ்²சைவோத்தரே க²ட்வாங்க³ம்ʼ ம்ருʼணாலம்ʼ பீ³ஜபூரகம்||

அஸிதோ த³க்ஷிணே பா⁴கே³ உத்தரே த்³வார ஏவ ச||

இத்யுத்தரப்ரதீஹாரௌ|

     ஸிதன் மற்றும் அஸிதன் ஆகியோர் வடவாயில் காவலராவர். ஸிதன் இடப்புறம் மாதுளை, தாமரைத்தண்டு, கட்வாங்கம் மற்றும் தண்டம் ஆகியவற்றைக் கொண்டிருப்பார். அஸிதன் வலப்புறம் கட்வாங்கம், தாமரைத்தண்டு மற்றும் மாதுளையைக் கொண்டிருப்பார்.

இவ்விதம் பலநூல்களும் நந்தி மஹாகாளர் முதலிய பல த்வாரபாலர்களின் இலக்கணங்களைத் தருகின்றன.

ஒரு ஒப்பீடு கீழே தரப்பட்டுள்ளது.

ஆகமம் கிழக்கு ஆயுதம் வண்ணம் தெற்கு ஆயுதம் வண்ணம் மேற்கு ஆயுதம் வண்ணம் வடக்கு ஆயுதம் வண்ணம்
காமிகம் நந்தி சூலம் பத்மராகம்                  
மஹாகாளர் சூலம் பச்சை                  
யோகஜம் நந்தி தண்டம், நாகம், அலபத்மம், அஞ்ஜலி சிவப்பு அனந்தன் வஜ்ரம் சிவப்பு தண்டி வாள் வானவில் விஜயன் சூலம் இந்த்ரகோபம்
பரசு, பிரம்பு சாம்பல்                  
மஹாகாளர் தண்டம், உலக்கை சிவப்பு பசுபதி சக்தி நீலம் முண்டி பிண்டிபாலம் வெண்மை ப்ருங்கி கத்தி கருமை
அஜிதம் நந்தி தண்டம்                    
மஹாகாளர் தண்டம்                    
அசிந்த்யம் நந்தி தண்டம், ஸூசி, விஸ்மயம் சிவப்பு                  
மஹாகாளர் தண்டம் ஸூசி விஸ்மயம் சாம்பல்                  
பூர்வகாரணம் நந்தி அபயம் வரதம் தோமரம் ஸூசி சிவப்பு                  
மஹாகாளர் கபாலம் சூலம் அபயம் மழு பாசம் கருமை                  
உத்தர காரணம் பிண்டி வாள் கேடயம்                    
முண்டி                    
ஆனந்த கந்தம் நந்தி     ப்ருங்கி     மஹாபலர்     ஸுக்ரீவர்    
மஹாகாளர்     ரிடி     கும்பகர்ணர்     ப்ருங்ககர்    
சிவார்ச்சன சந்த்ரிகை நந்தி த்ரிசூலம் அக்ஷமாலை தர்ஜனி உலக்கை சிவப்பு                  
மஹாகாளர் சூலம், கபாலம், உலக்கை, தர்ஜனி கருமை                  
ரௌரவம் நந்தி தண்டம் சாமபல் தண்டி வாள் இந்த்ரகோபம் விஜயன் பிண்டிபாலம் பத்மராகம் கோபதி கதை வெண்மை
மஹாகாளர் கதை சிவப்பு முண்டி சூலம் மயில் ப்ருங்கி பிரம்பு நீலம் அனந்தன் வஜ்ரம் கருமை
தீப்தம் நந்தி தண்டம் சாம்பல் தண்டி தண்டம் இந்த்ரநீலம் ப்ருங்கி வாள் மயில் அனந்தன் வஜ்ரம் கருமை
மஹாகாளர் பாசம் புகை முண்டி பிண்டிபாலம் வெண்மை விஜயன் சூலம் சிவப்பு பசுபதி பாசம் நீலம்
ரூபமண்டனம் நந்தி மாதுளை நாகம் அக்ஷமாலை, சூலம்   ஹேரம்பன் தர்ஜனி சூலம் உடுக்கை கஜஹஸ்தம்   துர்முகன் சூலம் உடுக்கை டமருகம் கபாலம்   ஸிதன் மாதுளை, தாமரைத்தண்டு, அக்ஷமாலை  
மஹாகாளர் கட்வாங்கம், உடுக்கை, பீஜபூரம், கபாலம்   ப்ருங்கி கஜம், உடுக்கை, தர்ஜனி கட்வாங்கம்   பாண்டுரன் டமரு, தண்டம், மாதுளை   அஸிதன் கட்வாங்கம், தாமரைத்தண்டு, மாதுளை  
                         

 

இப்போது சில த்வாரபாலர்களைக் காண்போம்.

     வல்லம், திருமெய்யம் மற்றும் குன்னாண்டார் கோயில் ஆகிய ஊர்களில் உள்ள குடைவரைக் கோயில்களிலும் கைலாயநாதர், மதங்கேச்வரர் ஆகிய கட்டுமான கோயில்களிலுள்ள த்வாரபாலர்களும் தலையிலும் ஜடாமகுடத்திலும் சூலமும் பரசுவும் கொண்டிருக்கின்றனர். இதைக் கொண்டு சில அறிஞர்கள் இவர்களை சூலதேவர் எனவும் பரசுபுருஷர் எனவும் அடையாளம் காண்கின்றனர். ஸ்காந்தத்தில் உள்ள ஒரு செய்தி இதற்கு வலு சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது. அந்தச் செய்தி எந்தை பவனி வருவதை வர்ணிக்கிறது. அப்போது, அவரைப் பலரும் பின்தொடர்ந்த செய்தியையும் கூறுகிறது. அப்போது அவரை விஜயன் என்னும் பெயருடைய சூலமும் மானிட வடிவோடு பின் தொடர்ந்தார். அவரை தேவர்கள் பூஜித்தனர். அதைப் போலவே பட்டிசம் என்னும் பரசுவும் பின் தொடர்ந்தது. அதனை எல்லா ஆயுதங்களும் பூஜித்தன என்னும் செய்தி புராணத்தில் காணப்பெறுகிறது. இந்தச் செய்தி இங்கே குறிப்பிடத்தக்கது.

     ஆனால் இதற்கான கேள்வி இதனோடு முற்றுப்பெறுவதில்லை. எந்த நூலிலும் சூலத்தையும் பரசுவையும் வாயிலில் நிறுத்த எந்தச் சான்றும் காணப்பெறவில்லை. மேலும் தஞ்சாவூர் பெரிய கோயிலுள்ள த்வாரபாலர்களை அணுகி ஆராயந்தால் அவர்கள் அனைவரின் தலையிலும் சூலம் வடிக்கப்பெற்றிருப்பதைக் காணலாம். தலையில் சூலம் இருப்பதைக் கொண்டு குடைவரை த்வாரபாலர்களை சூலதேவராகக் கொண்டால் தஞ்சாவூர் கோயிலின் எல்லா த்வாரபாலகர்களையும் சூலதேவர்களாகவே கொள்ளவேண்டும். ஆனால் இது ஏற்கமுடியாதது. ஆகவே அவர்களையும் நந்தி மஹாகாளர்களாவே கொள்ளவேண்டும். இதற்குச் சான்றாக மேற்கண்ட நூல்களும் பின்னாளைய த்வாரபாலர்களின் வளர்ச்சியும் அமைந்துள்ளன. அவர்தம் தலையில் சூலமும் பரசுவும் செதுக்கப்பெற்றதற்கான காரணத்தை இப்போதுள்ள நூல்களைக்கொண்டு விளக்கமுடியாவிடினும் வெளிவராத ஆகமங்களில் அதற்கான காரணம் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

dvarapalakas _thirumayyam

. The right side dvarpala is standing in tribhanga posture, with one hand on his waist and another over his club. Standing with one leg slightly bent, his club is resting on his left side. The club is entwined by a serpent, whose hood is towards the thigh of this dvarpala.

சீயமங்கலம்

 

vallam

 

     எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகுள்ள கோயில்களில் ஆகமப்படியான த்வாரபாலர்களைக் காணமுடியும். தக்கோலத்திலுள்ள த்வாரபாலர்கள் தண்டம் ஸூசி மற்றும் விஸ்மயங்களைக் கொண்டவர்களாய் அசிந்த்யாகமத்திலுள்ள இலக்கணத்தைத் தொடர்வதைக் காணவியலும்.

Thakkolam, Gangadeswarar Templ

தக்கோலம்

Thakkolam, Gangadeswarar Templ

தக்கோலம்

நார்த்தாமலையிலுள்ள த்வாரபாலர்கள் அஜிதாகமத்தையும் ஆலந்துறை த்வாரபாலர்கள் ரௌரவாகமத்தையும் பின்பற்றுவதைக் காணவியலும்.

நார்த்தாமலை

நார்த்தாமலை

தஞ்சாவூர் பெரியகோயிலிலுள்ள த்வாரபாலர்கள் ஓரளவிற்கு யோகஜாமத்தைப் பின்பற்றி அமைக்கப்பெற்றுள்ளனர்.

இவ்விதம் நந்தி மற்றும் மஹாகாளர்களைப் பற்றிய ஆகம புராணச் செய்திகள் கோயில்களில் பின்பற்றப்பட்டதைக் காணவியல்கிறது.

Please follow and like us:

One thought on “நந்தி மஹாகாளர்களின் கதை

 1. இதை முழுவதுமாக நான் படிக்கவில்லை,ஆனால்ஒன்று புரிகிறது,.நம் பாரதம் பக்தியில் மட்டுமின்றி கட்டிடக்கலை,சிலாவிக்ரக ஆகமங்களிலும் எவ்வளவு பெரிய அறிவை வைத்திருந்தது என்று நினைத்தால் பெருமிதம் தருகிறது.எனக்குள்ள கவலையெல்லாம்.இந்த கட்டிடக்கலை(கோவில்கலை)இன்றும் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்படவேண்டும் என்பதுதான்,நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *