காவாந்தண்டலத்து வடமொழிக் கல்வெட்டு

காவாந்தண்டலத்து வடமொழிக் கல்வெட்டு

     பின்வரும் கல்வெட்டு காஞ்சிக்கு அருகிலுள்ள காவாந்தண்டலத்திலுள்ள லக்ஷ்மீநாராயணர் கோயிலில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு கோயிலின் மேற்குச்சுவரில் செதுக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி ஏழில் 422-ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டை எழுத்தியல் ரீதியாக ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நிர்ணயிக்கவியல்கிறது. இந்தக் கல்வெட்டு மானஸர்ப்பன் என்பான் கோயிலை எடுப்பித்ததைக் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டின் வரிகளாவன.

Line 1 : स्वस्तिश्री नमो नारायणाय। महीसुरमहारत्नप्रसूतिप्रवराकरे। धात्रा वसुन्धरावासनिरतेनैव निर्म्मिते।। सहिता रमया यत्र भारती रमतेतराम्। अगोचरे चतुर्व्वेदिमङ्गले कलिकर्म्मणाम्।। अकरोद

Line 2 : रविन्दलोचनस्य स्वशरीरस्थजगत्त्रयस्य धाम स्थिरताजितवज्रशैलसारम् परमानन्दविधायि शोभया यत्।। भुजनिर्ज्जितकल्पकः कलानां सकलानां पतिरिन्दुवद्विवस्वानुदयाचलतुंगशृंगसंगी रिपुसेनातिमिरस्य मानसर्प्पः।

Line 3 : आत्रेयगोत्रतिलकाय लसद्गुणाय नारायणाय मुनये विदुषे तदादात्। अभ्यर्च्च्य भोक्तुमुरगाशनकेतनन्तं भूखण्डमन्यदपि यत्कृतमर्च्चनार्थम्।।

स्वस्तिश्री नमो नारायणाय।

ஸ்வஸ்திஸ்ரீ நமோ நாராயணாய|

மங்களம். நாராயணருக்கு வணக்கம்.

பாவகை – அனுஷ்டுப்

महीसुरमहारत्नप्रसूतिप्रवराकरे।

धात्रा वसुन्धरावासनिरतेनैव निर्म्मिते।।

सहिता रमया यत्र भारती रमतेतराम्।

अगोचरे चतुर्व्वेदिमङ्गले कलिकर्म्मणाम्।।

மஹீஸுரமஹாரத்னப்ரஸூதிப்ரவராகரே|

தா⁴த்ரா வஸுந்த⁴ராவாஸனிரதேனைவ நிர்ம்மிதே||

ஸஹிதா ரமயா யத்ர பா⁴ரதீ ரமதேதராம்|

அகோ³சரே சதுர்வ்வேதி³மங்க³லே கலிகர்ம்மணாம்||

அந்தணராகிய நன்மணிகளுக்குக் கடலைப் போன்றதும் நான்முகனால் புவியில் தான்வசிப்பதற்காக ஏற்படுத்தப்பெற்றதைப் போன்றதும், கலைமகள் அலைமகளோடு விளையாடுமிடமாகவும் பாவச்செயல்புரிந்தோரால் அண்டவொண்ணாததுமான சதுர்வேதி மங்கலத்தில்

பாவகை – ஆர்யா

अकरोदरविन्दलोचनस्य स्वशरीरस्थजगत्त्रयस्य

धाम स्थिरताजितवज्रशैलसारम् परमानन्दविधायि शोभया यत्।।

भुजनिर्ज्जितकल्पकः कलानां सकलानां पतिरिन्दुव

द्विवस्वानुदयाचलतुंगशृंगसंगी रिपुसेनातिमिरस्य मानसर्प्पः।

அகரோத³ரவிந்த³லோசனஸ்ய ஸ்வஸ²ரீரஸ்த²ஜக³த்த்ரயஸ்ய

தா⁴ம ஸ்தி²ரதாஜிதவஜ்ரஸை²லஸாரம் பரமானந்த³விதா⁴யி ஸோ²ப⁴யா யத்||

பு⁴ஜனிர்ஜ்ஜிதகல்பக​: கலானாம்ʼ ஸகலானாம்ʼ பதிரிந்து³வ

த்³விவஸ்வானுத³யாசலதுங்க³ஸ்²ருʼங்க³ஸங்கீ³ ரிபுஸேனாதிமிரஸ்ய மானஸர்ப்ப​:|

தன் தோளால் கற்பகத்தை வென்றவனும் சந்திரனைப் போல எல்லா கலைகளுக்கும் தலைவனானவனும் எதிரிகளின் படையாகிய இருளுக்கு உதய மலையின் உச்சியைத் தழுவும் கதிரவனையொத்தவனும் மானஸர்ப்பன் என்பான் தன்னுடலில் மூவுலகையும் தனக்குள் இருத்தியவரும் தாமரைக் கண்ணனுமான திருமாலுக்கு தன்னுறுதியால் வைரமலையை வென்றதும் தன்னழகால் இறும்பூதெய்தச் செய்வதுமான ஒரு தளியை எடுப்பித்தான்.

பாவகை – வஸந்த திலகா

आत्रेयगोत्रतिलकाय लसद्गुणाय नारायणाय मुनये विदुषे तदादात्।

अभ्यर्च्च्य भोक्तुमुरगाशनकेतनन्तं भूखण्डमन्यदपि यत्कृतमर्च्चनार्थम्।।

ஆத்ரேயகோ³த்ரதிலகாய லஸத்³கு³ணாய நாராயணாய முனயே விது³ஷே ததா³தா³த்|

அப்⁴யர்ச்ச்ய போ⁴க்துமுரகா³ஸ²னகேதனந்தம்ʼ பூ⁴க²ண்ட³மன்யத³பி யத்க்ருʼதமர்ச்சனார்த²ம்||

          அந்தக் கோயிலில் கருடக்கொடியோனுக்கு வழிபாடு தொடரவேண்டி ஆத்ரேய கோத்திரத்திற்கே திலகத்தைப் போன்றவரும் குணங்கள் திகழ்பவரும் அறிஞருமான நாராயணமுனி என்பவருக்கு அந்தச் சதுர்வேதிமங்கலத்தை அளித்தான். அதே காரணத்திற்காக மேலுமொரு நிலப்பகுதியும் தானமாக வழங்கப்பெற்றது.

          மானஸர்ப்பன் என்பான் கம்பவர்மனுக்கு அடங்கிய சிற்றரசனாதல் வேண்டும் என்பது இந்தக் கோயிலுக்கு கம்பவர்மன் அளித்த கொடைகளைக் கொண்டு அறியவியல்கிறது. ஆனால் தற்போது  கோயிலின் அமைப்பு அதிஷ்டானத்தையும் முகமண்டபத்திலுள்ள இரு தூண்களையும் தவிர முழுமையாகப் புதுப்பிக்கப்பெற்றதாகக் காணப்பெறுகிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *