காமாக்ஷி அம்மன் கோயிலில் முதலாம் பராந்தகனின் புதிய கல்வெட்டு

     பின்வரும் கல்வெட்டு காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயிலில் சாஸ்தா ஸன்னிதியின் முன்பு தரையில் அமைந்துள்ளது. இது துண்டு கல்வெட்டாக இருந்தாலும் கூட கோயிலின் வரலாற்றுக்கு இன்றியமையாததாகிறது. இதுவரை இந்தக் கோயிலில் கிடைத்த கல்வெட்டுக்களில் முதலாம் ராஜராஜனின் துண்டுக் கல்வெட்டுக்களே பழமையானதாகக் கருதப்பெற்றிருந்தது. பின்னாளைய ப்ரதியான இராஜஸிம்ஹனின் கல்வெட்டு வேறோதோ புத்தர் கோயிலைக் குறித்தலின் இக்கோயில் தொடர்பான கல்வெட்டுக்களில் ராஜராஜனின் கல்வெட்டே பழையானதாகக் கருதப்பெற்றிருக்கிறது. இப்போது இந்தத் துண்டு கல்வெட்டை அதைக்காட்டிலும் பழமையானதாகக் கருதலாம்.

DSC03389

     இந்தக் கல்வெட்டு சோழர் பரம்பரையின் முதலாம் பராந்தகனின் (907-953 CE) காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு மதுரை கொண்ட கோ என்னும் சொற்றொடருடன் துவங்குகிறது. இந்தச் சொற்றொடரும் இதில் வரும் அதிகாரியான செம்பியன் மூவேந்த வேளானின் பெயரும் முதலாம் மற்றும் இரண்டாம் பராந்தகர்களின் காலத்தில் பொதுவானவை என்றாலும் கல்வெட்டின் எழுத்தியல் காலத்தை நிர்ணயிக்க உதவுகிறது. கல்வெட்டின் எழுத்தியலைக் கொண்டு இந்தக் கல்வெட்டு முதலாம் பராந்தகனின் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதி செய்ய முடிகிறது.

வரி 1: ஸ்வஸ்திஸ்ரீ மதிரைகொ

வரி 2: டாவது பெரியசோழப்போ

வரி 3: னயனாகிய செம்பியன் மூவேந்..

வரி 4: ம் ஒன்றினுக்குப் பொன்…
வரி 5: கிங்கச்சிப்பேட்டு ஸபையோம்…

வரி 6: பூவும்…

     இந்தக் கல்வெட்டு செம்பியன் மூவேந்தவேளானென்னும் அதிகாரி பொன்னைத் தானமாக அளித்ததைக் குறிப்பிடுகிறது. மேலும் கல்வெட்டு கச்சிப்பேட்டு ஸபையையும் குறிப்பிடுகிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *