பல்லவர் வரலாற்றில் பப்ப பட்டாரகர்

பல்லவர் செப்பேடுகளில் பப்ப பட்டாரகர் என்னும் பெயரை பலமுறை கண்டிருக்கலாம். சிவஸ்கந்தவர்மனின் ஹிரஹடகல்லி செப்பேட்டில் துவங்கி பெரும்பாலும் எல்லா செப்பேடுகளுமே இந்தச் சொல்லைக் கொண்டுள்ளன. எல்லாச் செப்பேடுகளும் அரசனை “பப்ப பட்டாரக-பாதானுத்யாத” என்றே குறிப்பிடுகின்றன. பப்ப பட்டாரகரின் திருவடிகளை த்யானிக்கும் என்பது இதன் பொருள். மிகப்பழமையான செப்பேடான ஹிரஹடகல்லி செப்பேடு பப்ப ஸ்வாமி என்பவருக்கு மஹாராஜர் என்னும் அடைமொழியையும் தருகிறது. மற்றைய செப்பேடுகளின் குறிப்பாவன. விஷ்ணுகோபவர்மனின் உறுவப்பள்ளி செப்பேடு –     பப்ப பட்டாரக மஹாராஜ பாதபக்த இரண்டாம்…

தொடர்ந்து வாசிப்பு

கருடன் கொண்ட யானையும் ஆமையும்

Garuḍa holds Vibhāvasu and Supratīka

கச்யப ப்ரஜாபதியான மஹர்ஷிக்கு பதின்மூன்று மனைவியர். அவர்கள் தக்ஷனின்  புதல்வர்கள். வினதா மற்றும் கத்ரூ ஆகிய இருவரும் அவர்களில் இருவர். இவர்களுள் கத்ரூ நாகங்களைப் பெற்றெடுத்தாள். வினதை தன் கணவரிடம் கத்ருவின் புதல்வர்களை விட வலிமை கொண்ட புதல்வர்கள் வேண்டுமெனக் கேட்டாள். அவளுக்கு இரு முட்டைகள் பிறந்தன. ஆர்வத்தின் காரணமாக ஒரு முட்டையை அவள் உடைத்துப் பார்த்தாள். கால்களும் தொடையுமில்லாமல் அருணன் அந்த முட்டையிலிருந்து பிறந்தான். தன்னை அப்படி பிறப்பித்ததனால் தன் தாயை அவள் யாரோடு போட்டியிட்டாளோ…

தொடர்ந்து வாசிப்பு

கல்வெட்டியில் சிற்பியின் இலக்கணம்

     பின்வரும் கல்வெட்டு அதன் இயல்பினால் மிகவும் முக்யமானதும் அரிதானதுமானது. இந்தக் கல்வெட்டு திருவாரூர் தியாகேசப்பெருமானின் திருக்கோயிலில் முதற் ப்ராகாரத்தில் வடபுறச்சுவரில் செதுக்கப் பெற்றுள்ளது. இது இருமொழிக்கல்வெட்டாகும். இதன் வடமொழிப்பகுதி க்ரந்த எழுத்துக்களிலும் தமிழ்ப்பகுதி தமிழ் எழுத்துக்களிலுமானவை. இந்தக் கல்வெட்டு விச்வகர்மகுலத்தைப் பற்றிய நீண்ட நெடிய விளக்கமான அலசலைத்தருகிறது. பாண்டிகுலாந்தகச்சதுர்வேதி மங்கலத்தைச்சேர்ந்த சில அந்தணர்கள் ஆகம, புராண, சிற்ப நூல்களை ஆராய்ந்து விச்வகர்ம குலத்தினரின் ஸமூஹ நிலை, கடமை மற்றும் உரிமைகளைப் பற்றிய நீண்ட நெடிய விளக்கத்தை…

தொடர்ந்து வாசிப்பு