எழுதுபடு பொருட்கள் – பனையோலை

turfan

     பண்டைய இந்தியாவில் எழுதப்பயன்படுத்தப்பெற்ற பொருட்களில் மிகப் பழமையான பொருளாக பனையோலையே அறியப்பெறுகிறது. பத்ரம் என்னும் சொல் தாளபத்ரம் எனப்பெறும் பனையோலையையே குறிப்பதாகவே அறிஞர் கருதுவர். பத்ரம் என்னும் சொல் பூர்ஜபத்ரம் என்னும் சொல்லில் பயன்பட்டு வந்தாலும் கூட பூர்ஜமரத்தின் பட்டையே பயன்படுத்தப் பெறுவதால் பனையோலைக்கே பழமையான பயன்பாடு இருப்பது தெரியவருகிறது. பௌத்தநூல்களும் பர்ணம் என்னும் இலையைக் குறிக்கும் சொல்லின் பாகத வடிவான பன்னம் என்னும் சொல்லையே பயன்படுத்தியுள்ளன. அதன் பிறகு பத்ரம் என்னும் சொல் மற்றைய…

தொடர்ந்து வாசிப்பு

ஸிம்ஹவிஷ்ணுவில் துவங்கும் பல்லவபரம்பரையின் காலவரையறை – மீளாய்வு

simhavishnu

     பல்லவர்தம் சாஸன காலம் தொடர்பாக பல்வேறுவிதமான கணக்கீடுகள்  இருப்பதை நாமறிவோம். பிராக்ருத செப்பேடுகளை வெளியிட்ட பல்லவர்களைக் காட்டிலும் ஸம்ஸ்க்ருத செப்பேடுகளை வெளியிட்ட பல்லவர் வழியைப்பற்றித்தான் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பெற்றுள்ளன. மூன்றாம் ஸிம்ஹவர்மன் மற்றும் ஸிம்ஹவிஷ்ணுவில் துவங்கும் மன்னர்தம் கொடிவழியைப் பற்றி பல்லவர் வரலாற்றை ஆராயும் எல்லா ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அறிஞர் பெருமக்களின் கருத்துக்கள் பின்னர் பட்டியலிடப்பெற்றுள்ளன. அரசன் பெயர் ஆர். கோபாலன் ஆர். ஸீவெல் டிஸி. ஸர்க்கார் கே.ஆர்.ஸ்ரீனிவாஸன் எஸ்.ஆர்.பாலஸுப்ரஹ்மண்யம் கே.ஏ.நீலகண்டசாஸ்த்ரி கே.வி.ஸுப்ரஹ்மண்ய ஐயர்…

தொடர்ந்து வாசிப்பு

செய்யாற்றின் பனைமரக்கல்வெட்டு

images

     பின்வரும் கல்வெட்டு செய்யாற்றிலுள்ள வேதபுரீச்வரர் கோயிலின் முதல் ப்ராகாரத்தின் தென்புறச்சுவரில் காணப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு 1900- ஆம் ஆண்டுக்கான இந்தியத் தொல்லியல் துறை அறிக்கையில் 86 ஆகக் கணக்கெடுக்கப்பெற்று தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி ஏழில் 95 ஆம் எண்ணோடு மூலம் மட்டுமாகப் பதிப்பிக்கப்பெற்றது.      செய்யாறு என்னும் புண்ணிய தலம் தேவாரப்பாடல்களில் திருவொத்தூர் (வேதபுரி) என்று அழைக்கப்பட்டதை நாமறிவோம். எந்தை அன்னைக்கு வேதங்களை இயம்பியதால் அப்பெயர் ஏற்பட்டது. இங்கேதான் திருஞானஸம்பந்தர் சமணர்களை வெல்வதற்காக பதிகம் பாடி…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள்

palm

     சுவடியியலைப் பயிலும்போது சுவடிகளை எழுதப்பயன்படும் பொருட்களும் கூட முக்கியமான இடத்தை வகிக்கின்றன. சுவடிகளுக்கான எழுதுபடுபொருட்களைத் தேர்ந்தெடுப்பது அதன் பயனைப் பொறுத்தே அமைகிறது. இன்றும் கூட நாம் தரமுயர்ந்த தாளில் தினசரிகளை அச்சிடுவதில்லை. தரமுயர்ந்த நூல்களை சாணித்தாள்களில் அச்சிடுவதுமில்லை. எழுதப்போகும் நூலுக்கான நோக்கமும் இயல்புமே சுவடிக்கான எழுதுபடு பொருளைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றன.      பண்டைய காலத்திலும் அவர்களுக்கு எளிமையாக கிடைத்த கையாளத்தக்கபடியான பொருட்களையே பயன்படுத்தினர். சிலநேரங்களில் அதிசயமாக நாம் எதிர்பாராத சில பொருட்களிலும் சுவடிகளுக்கான…

தொடர்ந்து வாசிப்பு

காஞ்சி காமாக்ஷி கோயிலிலிருந்து புதிய முக்கிய கல்வெட்டு

unnamed

ஏற்கனவே இதுவரை வெளிவராத ஸுந்தரபாண்டியனது இரு வடமொழிக்கல்வெட்டுக்களையும் முதலாம் பராந்தகனது துண்டு கல்வெட்டையும் கண்டோம். பின்வரும் துண்டுக் கல்வெட்டு ரிஷிகோபுரத்திற்கு அருகிலுள்ள வினாயகர் ஸன்னிதியின் அருகே கீழே கிடைத்தது. இதன் வரிகளைப் பார்த்து ஒரே பூரிப்பு. காரணம் விஜயநகரகாலத்திற்கு முன்பாக பெரிய நாச்சியார் என்னும் சொல்லாட்சிதான். இந்தக் கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்கன் (பொயு 1178-1218) காலத்தைச் சேர்ந்த்து என்பது (பாண்டியன்முடித்தலை)யுங் கொண்டருளின என்னும் சொற்றொடராலும் எழுத்தமைதியாலும் கிடைக்கிறது. இந்தக் கல்வெட்டு பசுக்களை தானமாக வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகிறது….

தொடர்ந்து வாசிப்பு

நந்திகேச்வரர் – கதைகளும் இலக்கணமும்

12033201_10153793858397176_2890527506264374538_n

     நாம் ஏற்கனவே எந்தையின் ஆலயத்தில் மூன்று நந்திகள் இருப்பதைக் கண்டோம். மஹாகாளனோடு சேர்ந்த த்வாரபாலகனான நந்தி அதிகார நந்தி காளை நந்தி நந்தி மற்றும் மஹாகாளனின் கதைகளையும் படிமங்களையும் பார்த்தோம். இப்போது அதிகார நந்தியின் கதைகளையும் இலக்கணத்தையும் பார்ப்போம். கதைகள் 1.1. முற்பிறவி      கைலாயத்துக் கணங்களில் முக்யமாகத் திகழ்ந்தவன் வீரகன். அவன் மிகவும் ஆற்றலோடு எந்தையுடன் பார்வதியுடனான திருமணத்திற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டான். திருமணத்திற்குப் பிறகு பார்வதி எந்தையிடம் பல்வேறு வடிவங்களையுடைய பூதங்களைப் பற்றிக் கேட்டாள்….

தொடர்ந்து வாசிப்பு

இசுலாமிய படையெடுப்பில் இடம்மாறிய ரங்கநாதர்

     இந்திய நாட்டின் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் எதிரிகளின் நாட்டைவென்று அவர்தம் உடமைகளை கைப்பற்றிய போதும் எதிரிகள் கட்டிய கோயில்களை ஏதும் செய்தாரில்லை. ஆனால் வெளிநாட்டாரின் ஆக்ரமிப்புக்கள் இந்த விதிகளைப் பின்பற்றவில்லை. மாலிக்காபூரின் படையெடுப்பின்போது தமிழகக் கோயில்கள் நிலைகுலைந்து நின்றன. ரங்கநாதர் கூட விடப்பெறவில்லை. அவர் முதலில் திருப்பதிக்கும் பிறகு செஞ்சிக்கும் கொண்டு செல்லப்பெற்றார். பின்வரும் கல்வெட்டு இந்தச் செய்தியை அளிக்கிறது. இந்தக் கல்வெட்டு கோபண்ணன் என்னும் மன்னன் முதலில் திருப்பதிக்கும் பிறகு தனது தலைநகரான செஞ்சிக்கும்…

தொடர்ந்து வாசிப்பு

பண்டைய பாரதத்தின் எழுத்தியல் – வெளிநாட்டார் குறிப்புகள்

     பாரதத்தின் எழுத்தியலின் பழமைக்கான சான்றுகளை வேத, வேதாங்க, இதிஹாஸ, புராண, தர்ம, அர்த்த, காம சாஸ்த்ரங்களினின்றும் வடமொழிக்காப்பியங்களிலிருந்தும் இதுகாறும் பார்த்தோம். பொதுயுகத்தின் முந்தைய நூற்றாண்டுகளிலிருந்து நம்நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டாரும் கூட தத்தம் குறிப்புக்களில் பண்டைய எழுத்தியலைப் பதிவு செய்துள்ளனர். அதுபற்றி காண்போம். கிரேக்க எழுத்தர்கள்      கிரேக்க எழுத்தர்களான நியர்கோஸ், மெகஸ்தனிஸ் மற்றும் கர்டியஸ் ஆகியோரின் குறிப்புக்கள் பொயுமு 326-லிருந்தே கிடைக்கின்றன. இந்த ஆவணங்கள் பண்டைய காலத்தில் பாரதத்தில் இருந்த நூல்களைப் பற்றியும் நூல்களை…

தொடர்ந்து வாசிப்பு

கல்லூரி – சொல்லாய்வு

     இன்று நமது வழக்கிலுள்ள பல சொற்களும் அவற்றின் துவக்க காலபயன்பாட்டிலிருந்து வேறாக வழங்கிவருவது நாமறிந்ததே. அத்தகையதோர் சொல் கல்லூரி என்பதாகும். தற்போது உயர்கல்விகூடத்திற்கு கல்லூரி என்னும் சொல் புழங்கி வருகிறது. ஆனால் இதன் துவக்ககால பயன்பாட்டையும் வடநூல் பயன்பாட்டையும் காண்போமா. தமிழ்நூல்களில் கல்லூரி      தமிழ்நூல்களைப் பொறுத்தவரை கல்லூரி என்னும் சொல் ஆயுதப்பயிற்சிகூடம் என்னும் பொருளில் பயன்பட்டு வந்ததைச் சீவகசிந்தாமணியின் குணமாலையார் இலம்பகம் உணர்த்திநிற்கின்றது. கலத்தற் காலங்கல் லூரிநற் கொட்டிலா முலைத்த டத்திடை மொய்யெருக் குப்பையா…

தொடர்ந்து வாசிப்பு

எல்லோராவின் கின்னர சிவன்

kinnara

     கீழ்க்கண்ட படத்தை ஸ்ரீ. அரவிந்த் வெங்கட்ராமன் அவர்களிடமிருந்து பெற்றேன். இந்தப் படம் எல்லோராவில் 21 ஆம் எண்ணிட்ட கல்மண்டகத்தில் அமைந்துள்ளது. ஈண்டு எந்தை மிகப் பயங்கரமானதோர் வடிவோடு அமைக்கப்பெற்றிருக்கிறார். அவர் அதிபங்க நிலையில் நான்கு கரங்களுடன் அமைக்கப்பெற்றிருக்கிறார். அவர் ஜடாமகுடம் பூண்டு அஞ்சத்தக்கப் பார்வையைக் கொண்டிருக்கிறார். அவர் தம் கோரைப் பற்களோடு புன்முறுவல் பூத்தபடியிருக்கிறார். அவர்தம் காதுகளைக் கர்ண குண்டலமும் பத்ர குண்டலமும் அலங்கரிக்கின்றன. அவர் கழுத்தில் துவங்கி வெறும் எலம்புக்கூடாகத்தான் அமைக்கப்பெற்றிருக்கிறார். அவர்தம் மேற்கரங்களில்…

தொடர்ந்து வாசிப்பு