வடமொழிக்கல்வெட்டில் தேவாரமூவர்

     அப்பர், ஸம்பந்தர் மற்றும் ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆகிய மூவரும் தேவாரமென்னும் தீந்தமிழ்ப் பனுவல்களை இயற்றியதால் அவர்கள் தேவாரமூவரென்று அழைக்கப்பெறுகின்றனர். அவர்கள் அறுபத்துமூன்று நாயன்மார்களில் முக்யமானவர்களாகக் கருதப்பெறுகின்றனர். மாணிக்யவாசகரோடு இம்மூவரின் விக்ரஹங்களும் தமிழகத்தின் பெரும்பாலான சிவன் கோயில்களில் வீற்றிருக்கும். திருவாரூரிலுள்ள ஒரு வடமொழிக்கல்வெட்டு இந்த மூவரையும் ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் தாயாரான இசைஞானியாரையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக எழுத்தியலின் அடிப்படையிலும் அனபாயன் என்ற மன்னனின் பெயராலும் நிர்ணயிக்கப்பெற்றிருக்கிறது.

     இந்தக் கல்வெட்டு 1890 ஆம் ஆண்டு தொல்லியல் துறையின் ஆண்டறிக்கையில் 73 ஆம் எண்ணோடு குறிப்பிடப்பெற்றிருந்தது. பிறகு தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி நான்கில் 397 ஆம் எண்ணோடு மூலம் மட்டுமாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு ஆரூர் த்யாகராஜர் கோயிலில் இரண்டாம் திருச்சுற்றுச் சுவரில் செதுக்கப்பெற்றுள்ளது,

Line 1 : श्रीमत् ब्रह्मपुरीशवागधिपति(श्री)स्स्वामिमित्राश्च ये तेभ्यो

Line 2 : हेमसभाधिनाथचरणन्यासोल्लसन्मस्तकः। प्रादात् भूमिहिरण्यकं सर

Line 3 : जतानन्यान्धनान् सोत्तमान्। श्रियारूरधिपस्य मूलवसतौ देवोनपायो नृपः। लक्ष्म्यालये रचितधर्म्मपरानुपाल

Line 4 : शीलान्नृपाङ्घ्रिकमलान् शिरसा नमामि। व्याघ्राग्रहारवरहेमसभानटेशपादारविन्दमधुपो ह्यनपायनामा। ஆளுடைநம்பி மாதாக்கள் இசைஞானியார்। जननि भवतो ज्ञानशिवाचार्यकुलेभवत्।

Line 5 : शैवे गौतमगोत्रेस्मिन् ज्ञान्याख्या कमलापुरे

பாவகை – சார்தூலவிக்ரீடிதம்

श्रीमत् ब्रह्मपुरीशवागधिपति(श्री)स्स्वामिमित्राश्च ये।

तेभ्यो हेमसभाधिनाथचरणन्यासोल्लसन्मस्तकः

प्रादात् भूमिहिरण्यकं सरजतानन्यान्धनान् सोत्तमान्।

श्रियारूरधिपस्य मूलवसतौ देवोनपायो नृपः।

ஸ்ரீமத் ப்³ரஹ்மபுரீஸ²வாக³தி⁴பதி(ஸ்ரீ)ஸ்ஸ்வாமிமித்ராஸ்²ச யே|

தேப்⁴யோ ஹேமஸபா⁴தி⁴னாத²சரணன்யாஸோல்லஸன்மஸ்தக​:

ப்ராதா³த் பூ⁴மிஹிரண்யகம்ʼ ஸரஜதானன்யாந்த⁴னான் ஸோத்தமான்|

ஸ்²ரியாரூரதி⁴பஸ்ய மூலவஸதௌ தே³வோனபாயோ ந்ருʼப​:|

     பொன்னம்பலமாடும் இறைவனின் அடிமலரைத் தலைகொண்ட அனபாயன் என்னும் அரசன் ஆரூரில் மூலஸ்தானத்தில் நிலைகொண்ட திருவுடைய ப்ரஹ்மபுரீசர் (ஞானஸம்பந்தர்), வாகதிபதி (நாவுக்கரசர்) மற்றும் ஸ்வாமி மித்ரர் (தம்பிரான் தோழர்) ஆகியோருக்கு தங்கம், வெள்ளி, நிலங்கள் மற்றும் உயர்வான செல்வங்களை வழங்கினான்.

பாவகை – ஆர்யாகீதி

लक्ष्म्यालये रचितधर्म्मपरानुपालशीलान्नृपाङ्घ्रिकमलान् शिरसा नमामि। व्याघ्राग्रहारवरहेमसभानटेशपादारविन्दमधुपो ह्यनपायनामा।

லக்ஷ்ம்யாலயே ரசிதத⁴ர்ம்மபரானுபாலஸீ²லான்ன்ருʼபாங்க்⁴ரிகமலான் ஸி²ரஸா நமாமி|

வ்யாக்⁴ராக்³ரஹாரவரஹேமஸபா⁴னடேஸ²பாதா³ரவிந்த³மது⁴போ ஹ்யனபாயனாமா|

     வ்யாக்ராக்ரஹாரம் எனப்பெறும் சிதம்பரத்தின் பொன்னம்பலமாடும் இறைவனின் அடிமலரில் வண்டான அனபாயன் என்னும் மன்னன், கமலாலயமான ஆரூரில் அறச்செயல்களை மேற்கொள்ளும் மன்னர்களின் அடித்தாமரையைத் தலையால் வணங்குகிறான்.

ஆளுடைநம்பி மாதாக்கள் இசைஞானியார்।

ஆளூடைநம்பிகளின் தாயாரான இசைஞானியார்

பாவகை – அனுஷ்டுப்

जननी भवतो ज्ञानशिवाचार्यकुलेभवत्।

शैवे गौतमगोत्रेस्मिन् ज्ञान्याख्या कमलापुरे।।

ஜனனீ ப⁴வதோ ஜ்ஞானஸி²வாசார்யகுலேப⁴வத்|

ஸை²வே கௌ³தமகோ³த்ரேஸ்மின் ஜ்ஞான்யாக்²யா கமலாபுரே||

          தாயாரான ஞானி என்னும் பெயருடையவர், கமலாபுரம் எனப்பெறும் ஆரூரில் ஜ்ஞானசிவாசார்ய குலத்தில் சைவவழியான கௌதமகோத்ரத்தில் தோன்றினார்.

     இந்தக் கல்வெட்டில் தேவார மூவரின் பெயர்களும் வடமொழியாக்கப்பெற்றிருக்கும் விதம் குறிப்பிடத்தகுந்ததாகும். ஸம்பந்தர் அவர் பிறந்த ஊரால் ப்ரஹ்மபுரீசர் என்றும் அப்பர் நாவுக்கு அரசர் என்னும் பொருள்படும் வாகதிபதி என்றும் ஸுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் தம்பிரான் தோழர் எனப்பொருள்படும் ஸ்வாமி மித்ரர் என்னும் பெயராலும் சுட்டப்பெற்றிருக்கின்றனர்.

     இசைஞானியாரின் கோத்ரமும் பிறந்த ஊரும் குலமும் இந்தக் கல்வெட்டினாலேயே அறியமுடிகிறது என்பது மற்றொரு குறிப்பிடத்தகுந்த தகவல். இந்தத் தகவல் பெரியபுராணத்தில் இல்லை.

Please follow and like us:

One thought on “வடமொழிக்கல்வெட்டில் தேவாரமூவர்

  1. சேக்கிழார் கல்வெட்டுகள்,செவிவழிக்கதைகள் சுந்தரரின் திருத்தொண்டத்தொகை,நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியமூலங்கள் வழி பெரியபுராணம் படைத்தார் என்பர். சுந்தரர் சிவாச்சாரியார் மரபு என்பது நாம் அறிந்ததே!இருப்பினும் இசைஞானியாரின் கோத்திரம்,பிறந்தவூர் அறிய இக்கல்வெட்டு உதவுவது அருமை.பரவையின் ஊரே திருவாரூர் என இருந்தேன்,நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *