இசுலாமிய படையெடுப்பில் இடம்மாறிய ரங்கநாதர்

     இந்திய நாட்டின் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் எதிரிகளின் நாட்டைவென்று அவர்தம் உடமைகளை கைப்பற்றிய போதும் எதிரிகள் கட்டிய கோயில்களை ஏதும் செய்தாரில்லை. ஆனால் வெளிநாட்டாரின் ஆக்ரமிப்புக்கள் இந்த விதிகளைப் பின்பற்றவில்லை. மாலிக்காபூரின் படையெடுப்பின்போது தமிழகக் கோயில்கள் நிலைகுலைந்து நின்றன. ரங்கநாதர் கூட விடப்பெறவில்லை. அவர் முதலில் திருப்பதிக்கும் பிறகு செஞ்சிக்கும் கொண்டு செல்லப்பெற்றார். பின்வரும் கல்வெட்டு இந்தச் செய்தியை அளிக்கிறது. இந்தக் கல்வெட்டு கோபண்ணன் என்னும் மன்னன் முதலில் திருப்பதிக்கும் பிறகு தனது தலைநகரான செஞ்சிக்கும் ரங்கநாதரைக் கொண்டு சென்று இசுலாமியர்களைத் தோற்கடித்த பிறகு ஸ்ரீரங்கத்திலேயே ஸ்ரீதேவியுடனும் பூதேவியுடனும் மீண்டும் நிறுவினான் என்று கூறுகிறது. இந்தக் கல்வெட்டின் காலம் பூடகமாக பந்துப்ரிய என்னும் சொல்லால் தரப்பெற்றுள்ளது. இந்தச் சொல்லை ஆய்ந்தால் ய-1, ப்ரி-2, து-9, ப-3 என்று சக ஆண்டு 1293-ஐத் தருகிறது. இதற்கு இணையான பொதுயுக ஆண்டு 1371 ஆகும். இந்தக் கல்வெட்டு ரங்கநாதர் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தின் கீழைச்சுவரில் செதுக்கப்பெற்றுள்ளது.

Line 1: स्वस्तिश्रीः। बन्धुप्रिये शकाब्दे। आनीयानीलशृंगद्युतिरचितजगद्रञ्जनादञ्जनाद्रेश्चेञ्च्यामाराध्य कञ्चित् समयमथ निहत्योद्धनुष्कांस्तुलुष्कान्। लक्ष्मीक्ष्माभ्यामुभाभ्यां सह निजनगरे स्थापयन्

Line 2: रंगनाथं सम्यग्वर्य्यां सपर्य्यां पुनरकृत यशोदर्प्पणो गोप्पणार्यः। विश्वेशं रंगराजं वृषभगिरितटात् गोपणः क्षोणिदेवो नीत्वा स्वां राजधानीन्निजबलनिहतोत्सिक्ततौलुष्कसैन्यैः। कृत्वा

Line 3: श्रीरंगभूमिम्। कृतयुगसहितान्तन्तु लक्ष्मीमहीभ्य़ाम् संस्थाप्यां सरोजोद्भव इव कुरुते साधुचर्य्यां सपर्य्याम्।

स्वस्तिश्रीः। बन्धुप्रिये शकाब्दे।

மங்கலம். பந்துப்ரியன் என்னும் சகரையாண்டில் (1293)

பாவகை – ஸ்ரக்தரா

आनीयानीलशृंगद्युतिरचितजगद्रञ्जनादञ्जनाद्रे

श्चेञ्च्यामाराध्य कञ्चित् समयमथ निहत्योद्धनुष्कांस्तुलुष्कान्।

लक्ष्मीक्ष्माभ्यामुभाभ्यां सह निजनगरे स्थापयन् रंगनाथं

सम्यग्वर्य्यां सपर्य्यां पुनरकृत यशोदर्प्पणो गोप्पणार्यः।

          புகழுக்குக் கண்ணாடியானவரும் மேலானவருமான கோபண்ணன் அஞ்ஜனாத்ரியான திருப்பதியிலிருந்து ரங்கநாதரை எடுத்துக் கொண்டு தனது தலைநகரான செஞ்சிக்குக் கொண்டுசென்றார். அந்த அஞ்ஜனாத்ரி தனது நீலநிறமான சிகரத்தால் உலகை மகிழ்விப்பது. செஞ்சியில் சிலகாலம் வைத்து ஆராதனைகளைச் செய்தபின்னர் வில்லாளிகளான துலுக்கர்களை வீழ்த்திய பிறகு ரங்கநாதரை திருமகளோடும் நிலமகளோடும் அவருடைய சொந்தநகரத்தில் – ஸ்ரீரங்கத்தில் நிறுவி மிகச்சிறப்பான வகையில் ஆராதனைகள் நிகழ ஏற்பாடு செய்தான்.

பாவகை – ஸ்ரக்தரா

विश्वेशं रंगराजं वृषभगिरितटात् गोपणः क्षोणिदेवो

नीत्वा स्वां राजधानीन्निजबलनिहतोत्सिक्ततौलुष्कसैन्यैः।

कृत्वा श्रीरंगभूमिं कृतयुगसहितान्तन्तु लक्ष्मीमहीभ्य़ाम्

संस्थाप्यां सरोजोद्भव इव कुरुते साधुचर्य्यां सपर्य्याम्।

          கோபண்ணன் என்னும் மன்னன் உலகுக்கே ஈசனான ரங்கராஜரை வ்ருஷபகிரியான திருப்பதியிலிருந்து கொண்டு சென்று தனது தலைநகரில் வைத்தான். பிறகு தனது வலிமையால் செருக்குற்ற துலுக்கப் படையை வீழ்த்திய பிறகு நான்முகனைப் போல ரங்கநாதரை தேவியரோடு நிறுவி மீண்டும் க்ருதயுகத்தைத் துவக்கினான். அங்கு நல்லோருக்குத் தகுந்த ஆராதனைமுறைகளையும் ஏற்பாடு செய்தான்.

இவ்விதம் இந்தக் கல்வெட்டு இசுலாமியர் படையெடுப்பால் இடம்பெயர்ந்த ரங்கநாதனைக் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் திருப்பதியின் இருமலைகளான வ்ருஷபாத்ரி மற்றும் அஞ்ஜனாத்ரியைக் குறிப்பிடுகிறது.

Please follow and like us:

2 thoughts on “இசுலாமிய படையெடுப்பில் இடம்மாறிய ரங்கநாதர்

  1. காஞ்சி ஏகாம்பரநாதர்,வரதராசப்பெருமாள் சிலைகளை இசுலாமியரிடமிருந்து காக்க எங்கள்உறவுமுறைகளாகிய உடையார்பாளையம் சமீனில் வைத்து பூசைகள் செய்ததாக உவேசா தம் நல்லுரைக்கோவையில் கூறியுள்ளார்.

    1. That’s really great. How did they conceal the fact? I’m interested to know.
      best,
      krishna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *