செய்யாற்றின் பனைமரக்கல்வெட்டு

     பின்வரும் கல்வெட்டு செய்யாற்றிலுள்ள வேதபுரீச்வரர் கோயிலின் முதல் ப்ராகாரத்தின் தென்புறச்சுவரில் காணப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு 1900- ஆம் ஆண்டுக்கான இந்தியத் தொல்லியல் துறை அறிக்கையில் 86 ஆகக் கணக்கெடுக்கப்பெற்று தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி ஏழில் 95 ஆம் எண்ணோடு மூலம் மட்டுமாகப் பதிப்பிக்கப்பெற்றது.

     செய்யாறு என்னும் புண்ணிய தலம் தேவாரப்பாடல்களில் திருவொத்தூர் (வேதபுரி) என்று அழைக்கப்பட்டதை நாமறிவோம். எந்தை அன்னைக்கு வேதங்களை இயம்பியதால் அப்பெயர் ஏற்பட்டது. இங்கேதான் திருஞானஸம்பந்தர் சமணர்களை வெல்வதற்காக பதிகம் பாடி ஆண்பனையைப் பெண்பனையாக மாற்றினார் என்னும் செய்தி பெரியபுராணத்தினின்று கிடைக்கிறது. இந்த ஸ்தலத்தின் ஸ்தலவ்ருக்ஷம் பனையாகும். அந்தப் பனையின் பெருமைதான் இந்தக் கல்வெட்டில் போற்றப்பெற்றிருக்கிறது.

வரி 1: स्वेच्छाचारविनोदिने श्रुतिपुरीवासाय

வரி 2: कामद्रुहे वामश्यामलिमाभिराममहसे क

வரி 3: स्मैचिदस्मै नमः। स्वात्मीकारचमत्क्रियापरि

வரி 4: मलं यस्योपकण्ठे वसन्नद्धस्त्रैणमनो

வரி 5: हरेण वपुषा पुष्णाति तालः पुमान्।।

பாவகை – சார்தூலவிக்ரீடிதம்

स्वेच्छाचारविनोदिने श्रुतिपुरीवासाय कामद्रुहे

वामश्यामलिमाभिराममहसे कस्मैचिदस्मै नमः।

स्वात्मीकारचमत्क्रियापरिमलं यस्योपकण्ठे वस

न्नद्धस्त्रैणमनोहरेण वपुषा पुष्णाति तालः पुमान्।।

ஸ்வேச்சா²சாரவினோதி³னே ஸ்²ருதிபுரீவாஸாய காமத்³ருஹே

வாமஸ்²யாமலிமாபி⁴ராமமஹஸே கஸ்மைசித³ஸ்மை நம​:|

ஸ்வாத்மீகாரசமத்க்ரியாபரிமலம்ʼ யஸ்யோபகண்டே² வஸ

ந்னத்³த⁴ஸ்த்ரைணமனோஹரேண வபுஷா புஷ்ணாதி தால​: புமான்||

     ச்ருதிபுரியில்(வேதபுரி) வஸிப்பதும் தன் விருப்ப்பபடி செயல்படுவதில் மகிழ்ச்சிகொண்டதும், இடப்புற சாம்பல்நிறத்தால் ஒளிரும் அழகுள்ளதுமான பேரொளிக்கு நமஸ்காரம். அத்தகைய பேரொளியைத் தன்மயமாக்கி அதனருகில் வீற்றிருந்து முன்பிருந்த பெண்மையின் எழிலோடு தெய்வீக மணம்பரப்பும் ஆண்பனையும் திகழ்கிறது.

     ஈண்டு பனையின் சிறப்பும், ஆண்பனையை மாற்றிய செழுமையும் பனைமரமே எந்தையின் வடிவமாகத் திகழும் பெற்றியும் வண்ணமுற விளக்கப்பெற்றிருக்கிறது. கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதன் காலத்தை 12-13 ஆம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.

Please follow and like us:

4 thoughts on “செய்யாற்றின் பனைமரக்கல்வெட்டு

  1. நான் செய்யாற்றில் வசிக்கிறேன்.அக்கோயிலுக்கு வாராவாரம் வாரத்தால் சென்றுள்ளேன்.கல்வெட்டுக்களைக்கண்டுள்ளேன்.படிக்கக் கற்றேன் இல்லை,நன்றி,கவிஅமைதி மிக அழகு கல்வெட்டில்!

  2. I served as Collector of the large North Arcot Dt. from 1969 to 1972. Visited Cheyyar many times. Did not know these details then.

  3. Served as Collector of the large North Arcot Dt from 1969 to 1972. Went to Cheyyar many times, but did not know these details then.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *