சங்க இலக்கியத்தில் சூத, மாகத, வேதாளிகர் – சொல்விளக்கம்

     சங்க இலக்கியங்களில் பலவகையான சொற்கள் பயன்பட்டுள்ளன. அவற்றுள் சில சொற்கள் உரையாசிரியர்தம் உரைகொண்டே அறியற்பாலன. அத்தகையதோர் சொல்லாட்சி வேதாளிகர் என்பதாகும். மதுரைக்காஞ்சி பின்வருமாறு வேதாளிகரைக் குறிப்பிடுகிறது. சூதர் வாழ்த்த மாகதர் நுவல வேதாளிகரொடு நாழிகை இசைப்ப இமிழ்முரசு இரங்க ஏறுமாறு சிலைப்ப (மதுரைக்காஞ்சி : 671-672)      சூதர் வாழ்த்துக்களைக் கூறவும் மாகதர் பாடவும் வேதாளிகரும் நாழிகைக் கணக்கர் எழுப்பவும் பள்ளியெழுப்பும் முரசுகள் ஒலியெழுப்பவும் ஏறுகள் முழங்கவும் காலைப்பொழுது திகழ்ந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.      இங்கு…

தொடர்ந்து வாசிப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் தசாவதாரக் கல்வெட்டு

பின்வரும் கல்வெட்டு பகல்பத்து மண்டபத்தின் மேற்குச் சுவரில் செதுக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி இருபத்து நான்கில் 488 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு சிதைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு திருமாலின் பத்து அவதாரங்களை வர்ணித்துப் பிறகு கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்களைக் குறிப்பிடுகிறது. இந்த தானங்கள் ரங்கநாதர், திருமகள், ஸேனைமுதலி மற்றும் கருடாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு விளக்கெரிப்பதற்காகவும் மற்றைய திருவிழாக்களுக்குமாக சின்னசெவ்வன்-மூர்த்யம்பா தம்பதியரின் மகனான குமார அச்யுதனால் வழங்கப்பெற்றவை. இந்தக் கல்வெட்டின் காலமான சக…

தொடர்ந்து வாசிப்பு

ராஜஸிம்ஹனின் கண்டஹர்ம்யங்கள்

khanda_3 copy

     ஒப்புவமையற்ற வேந்தனான ராஜஸிம்ஹனென்னும் புரவலனால் புரக்கப்பெற்ற சிற்பிகள் கல்லில் கலைவண்ணம் கண்டனர். காஞ்சி கைலாஸநாதர் கோயிலும் பனமலையிலுள்ள தாளகிரீச்வரர் கோயிலும் இத்தகைய கற்கோயில் வண்ணத்தின் ஈடற்ற எடுத்துக்காட்டுக்களாய்த் திகழ்கின்றன. இந்தக் கோயில்களில் காணப்பெறும கண்டஹர்ம்யம் என்னும் சிற்பக்கலைக்கூறு வேறு கோயில்களிலும் காணப்பெறாத ஒப்புவமையற்ற ஒன்றாகும்.      காஞ்சிக் கைலாஸநாதர் கோயில் மிச்ர விஷ்ணு சந்த அமைப்பில் அமைந்த நான்கு தளக் கோயிலாகும். இந்த விமானத்தின் நான்கு புறமும் நான்கு பத்ரசாலைகளும் மூலைகளில் நான்கு கர்ணசாலைகளும் இடம்…

தொடர்ந்து வாசிப்பு

வடமொழிக்கல்வெட்டில் தேவாரமூவர்

     அப்பர், ஸம்பந்தர் மற்றும் ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆகிய மூவரும் தேவாரமென்னும் தீந்தமிழ்ப் பனுவல்களை இயற்றியதால் அவர்கள் தேவாரமூவரென்று அழைக்கப்பெறுகின்றனர். அவர்கள் அறுபத்துமூன்று நாயன்மார்களில் முக்யமானவர்களாகக் கருதப்பெறுகின்றனர். மாணிக்யவாசகரோடு இம்மூவரின் விக்ரஹங்களும் தமிழகத்தின் பெரும்பாலான சிவன் கோயில்களில் வீற்றிருக்கும். திருவாரூரிலுள்ள ஒரு வடமொழிக்கல்வெட்டு இந்த மூவரையும் ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் தாயாரான இசைஞானியாரையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக எழுத்தியலின் அடிப்படையிலும் அனபாயன் என்ற மன்னனின் பெயராலும் நிர்ணயிக்கப்பெற்றிருக்கிறது.      இந்தக் கல்வெட்டு 1890…

தொடர்ந்து வாசிப்பு

லால்குடி மஹாகாள மூர்த்தி

Mahakala Siva

பின்வரும் அரிய சிற்பத்தை இணையத்தில் காணநேர்ந்தது. இந்தச் சிற்பம் லால்குடி ஸப்தரிஷீச்வரர் கோயிலில் அமைந்துள்ளது. இந்தச் சிற்பம் ஜடாபாரத்தைக் கொண்டுள்ளது. அதன் நடுவே ஒரு கபாலமும் அமைந்துள்ளது. தலையில் லலாடபட்டம் அழகுற அமைந்துள்ளது. சிறு கோரைப்பற்கள் அமைந்திருந்தாலும் கூட இதன் புன்னகை மயக்குகிறது. ஒரு சிறிய கண்டிகையும் அதனையொட்டி ருத்ராக்ஷமாலையும் மார்பை அலங்கரிக்கின்றன. முப்புரிநூல் உபவீதமாக குறுக்கே அமைந்துள்ளது. நெற்றிக்கண் அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் சந்தனத்தால் மறைந்துள்ளது. நாகவடிவிலான கேயூரம் புயங்களை அலங்கரிக்கிறது. மேலிரு கைகளிலும முத்தலைச்…

தொடர்ந்து வாசிப்பு

வடமொழி நாடகநூல்களில் சுவடியியற் குறிப்புகள்

        வடமொழியில் நாடக இலக்கியங்களுக்கென்று தனியிடம் உண்டு. அத்தகைய நூல்களிலும் சுவடியியற் குறிப்புகள் காணப்படுகின்றன. பாஸன் என்னும் கவிஞன் பொயுமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவனுடைய அவிமாரகம் என்னும் நாடகத்தில் புத்தகத்தைப் பற்றிய குறிப்புளது.  அந்நாடகத்தில் விதூஷகனின் வசனம் विदूषकः भवति, इदमक्षरं नाम पुस्तके नास्ति।         விதூஷக​: ப⁴வதி, இதமக்ஷரம்ʼ நாம புஸ்தகே நாஸ்தி         இவ்வசனத்தின் பொருள். சேடியே இந்த எழுத்து புத்தகத்தில் இல்லையே. என்பது. இதன் மூலம் புத்தகங்களைப் பற்றிய குறிப்பு…

தொடர்ந்து வாசிப்பு