
வரலாற்றில் இதுவரை பலவிதமான காதற்கல்வெட்டுக்களைக் கண்டிருக்கிறோம். அத்தகையதோரு கல்வெட்டொன்று பாதாமி சாளுக்யர்களின் சிற்பக் கலைப்படைப்பான மஹாகூடத்திலுள்ள மஹாகூடேச்வரர் கோயிலில் காணப்பெறுகிறது. இந்தக் கோயில் மேலைச்சாளுக்ய வேந்தன் மங்களேசனின் (பொயு 596-609) காலத்தியதாக கருதப்பெறுகிறது. மேற்கொண்டு செய்த ஆய்வுகள் இந்தக் கோயில் பொயு 625 இல் மீளமைக்கப்பெற்றதையும் பிற்காலத்திய சேர்க்கைகளையும் கொண்டு திகழ்வதையும் வெளிப்படுத்துகின்றன. இரண்டாம் புலகேசியின் கொள்பெயரனும் பொயு 696 முதல் 733 வரை ஆண்டவனுமான விஜயாதித்யனே இப்போதைய கதையின் நாயகன். அவனுடைய காலத்தில் வாழ்ந்த அவனுடைய…
தொடர்ந்து வாசிப்பு