பாரதத்தில் பயன்படுத்தப்பெற்ற சுவடிகளுக்கான மூன்றாவது முக்கியமான எழுதுபடு பொருள் காகிதமாகும். பொதுவாகக் காகிதத்தைச் சீனத்தைச் சேர்ந்த சாய் லுன் என்பவர் பொயு 105 இல் கண்டறிந்ததாகவும் அதன் பிறகு முகலாய அரசர்களால் இந்தியாவில் அறிமுகப் படுத்தப் பெற்றதாகவும் கருத்துண்டு. ஆனால் காகிதம் இந்தியாவிலேயே கண்டு பிடிக்கப்பெற்றதென்று கருதவும் சில சான்றுகள் உள்ளன.
- அலெக்ஸாண்டரின் தளபதியான நியர்கோஸ் தனது குறிப்பில் இந்தியர்கள் எழுதுவதற்காக பஞ்சினாலான காகிதத்தைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளான். இந்தக் குறிப்பு சரியாயின் சீனர்களுக்கு முன்னமேயே இந்தியர்கள் காகிதத்தைக் கண்டுபிடித்ததாகக் கொள்ளவியலும்.
- பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த போஜன் எழுதிய ப்ரசஸ்தி ப்ரகாசிகை என்னும் நூல் சுவடிக்கான ஏட்டில் எழுதும் முறைகளைக் குறிப்பிடுகிறது. இடது பக்கத்திலிருந்து விடவேண்டிய இடம், மடிக்கும் முறை, முதல் பக்கத்தைத் தங்கத்தால் அலங்கரிப்பது முதலிய குறிப்புக்கள் காகிதத்திற்கே பொருந்திவருமேயன்றி ஓலைச் சுவடிக்கோ அல்லது பூர்ஜ பத்ரத்திற்கோ பொருந்தி வராது.
- வ்யாஸ ஸம்ஹிதை என்னும் நூல் பின்வரும் குறிப்பைத் தருகிறது.
पाण्डुलेखेन फलके भूमौ वा प्रथमं लिखेत्।
न्यूनाधिकं तु संशोध्य पश्चात्पत्रे निवेशयेत्।।
எழுதுவதற்கு முன்னர் அதற்கான முன்மாதிரியை பலகையிலேயோ அல்லது பூமியிலேயோ எழுதிப் பார்க்க வேண்டும். திருத்தங்களைச் செய்த பிறகு பத்ரத்தில் எழுதவேண்டும். இங்கு பத்ரம் என்னும் சொல் காகிதத்தையே குறித்தாதல் வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். காரணம் ஓலைச்சுவடி, பூர்ஜ பத்ரம் ஆகியவை கிடைத்தற்கெளியவை. அவற்றில் எழுதுதற்கு இத்தகைய சரிபார்த்து எழுதும் வழக்கம் தேவையில்லை. ஆகவே இந்த பத்ரம் காகிதத்தையே குறிக்கும் என்று கருதுகின்றனர்.
பிற சில அறிஞர்களும் காகிதம் இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பெற்றதாகக் கருதுகின்றனர்.
ஆனால் எட்டாம் நூற்றாண்டு வரை காகிதத்தைக் குறிக்கும் சொல் வடமொழியிலில்லை. எட்டாம் நூற்றாண்டில்தான் சயபத்ரம் என்னும் சொல் கிடைக்கிறது. காகலம், காகஜம், காகதம் ஆகிய சொற்களும் காகிதத்தைக் குறிக்கப் பயன்பட்டுள்ளன.
பிஹாரில் உள்ள காகஜிபுரம் ஆகிய சிற்றூர்கள் காகிதம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் என்று கருதுகின்றனர்.
சில முக்கிய காகித சுவடிகள்
காகிதச் சுவடிகளில் மிகப்பழமையான சுவடி பாட்னாவில் உள்ள குதாபக்ஷ் கீழை நூலகத்திலுள்ளது. கஜல் பாடல்கள் எழுதப்பெற்றுள்ள இந்தச் சுவடி பொயு 816 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக நிர்ணயிக்கப்பெற்றுள்ளது.
ராஜஸ்தான் கீழைச் சுவடியகத்தில் உள்ள த்வன்யாலோக லோசனம் என்னும் ப்ரவரையப்பெற்ற படங்களோடும் உள்ளன. தஞ்சாவூர் ஸரஸ்வதி மஹாலிலுள்ள பகவத் கீதையின் சுவடியொன்று 5க்கு 3.8 செ.மீ என்னும் குறுகிய அளவில் அமைந்துள்ளது.