தாதாபுரத்தின் கபோதபஞ்ஜரம்

காமிகாகமம் பஞ்ஜரங்களின் வகைகளை விளக்கும்போது கீழ்க்கண்டவற்றை விளக்குகிறது.

तस्यादौ सिंहसंज्ञकम्

सार्धपञ्जरमन्यत्स्यात्तृतीयं पञ्जरं मतम्  १३२

     निर्यूहपञ्जरं पश्चात्पञ्चमं लम्बनासिकम्

सिंहश्रोत्रं तु षष्ठं स्यात्खण्डनिर्यूहकं ततः  १३३

झषपञ्जरमन्यत्स्यात्तासां लक्षणमुच्यते

பஞ்ஜரங்கள் எண்வகைப்படும், அவை ஸிம்ஹ பஞ்ஜரம், ஸார்தபஞ்ஜரம், பஞ்ஜரம், நிர்வ்யூஹபஞ்ஜரம், லம்பநாஸிகம், ஸிம்ஹச்ரோத்ரம், கண்டநிர்வ்யூஹகம் மற்றும் ஜஷபஞ்ஜரம் ஆகியவையாம்.

இவற்றின் இலக்கணங்களை வரையறுத்த பின்னர் ஒன்பதாவதாக கபோத பஞ்ஜரம் என்னும் பஞ்ஜர வகையை வரையறுக்கிறது இந்த ஆகமம்.

पञ्जाराकृतिसंयुक्तं कपोतात्तु विनिर्गतम्  १५२

यथाशोभं यथायुक्ति तथा शक्तिध्वजान्वितम्

कपोतपञ्जरं ह्येतत्प्रासादे सार्वदेशिके  १५३

பஞ்ஜரத்திற்கான இலக்கணங்களைப் பெற்று அது கபோதபாலி வரையிலும் நீண்டு இறுதியில் சக்தி த்வஜத்தைப் பெற்றிருந்தால் அது கபோத பஞ்ஜரம் எனப்பெறும். இதை ஸார்வதேசிக விமானங்களில் பயன்படுத்தலாம்.

இத்தகையதோர் பஞ்ஜரத்தை ராஜராஜப்பெருந்தகையின் தமக்கையாரான ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் அவனுடைய 21 ஆம் ஆட்சியாண்டில் எடுப்பித்த ரவிகுலமாணிக்கேச்வரத்தில் காணவியல்கிறது. இது பொயு 1006 இல் முடிவடைந்த விமானமாகும்.

இந்தப் பஞ்ஜரம் ஷட்வர்கங்களையுடையது. இது பத்மபுஷ்கல அதிஷ்டானத்தையும் அதன் மேல் வேதிகையையும் கொண்டது. இதன் மேல் ருத்ரகாந்த வகையான நகுலபாதங்கள் சுண்டுபாதத்தின் மீதமைந்துள்ளது. அதன் மேல் வழக்கமான அணியுறுப்புக்களுக்கு மேல் நன்கு செதுக்கப்பெற்ற நாஸிகளையுடைய ஒரு கபோத அமைப்பும் செதுக்கப்பெற்றுள்ளது. கபோதத்தின் மீது ஒரு யாளிவரியும் வேதிகையும் அமைந்துள்ளன. க்ரீவா பகுதி வீரனையும் குரங்கையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு கபோத பஞ்ஜரத்தில் நந்திகளும் செதுக்கப்பெற்றிருக்கின்றன. அதற்கு மேல் ஒரு மஹாநாஸிகை ஸிம்ஹவக்த்ரத்தைப் பெற்றுள்ளது. முகபட்டிகள் வல்லிமண்டலங்களால் அலங்கரிக்கப்பெற்றுள்ளன. அவற்றின் காடப்பகுதி சிறுவிமான மாதிரியைக் கொண்டுள்ளன. ஒரு கபோத பஞ்ஜரத்தின் காடத்தில் மூஷிகத்தின் மீதமர்ந்த விநாயகர் காட்டப்பெற்றுள்ளார்.

kapota2 kapota1 kapota1

இத்தகைய கபோத பஞ்ஜரம் வேறெங்கும் கிடைக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

காச்யப சில்பசாஸ்த்ரமும் த்ராவிட விமானத்தை வர்ணிக்கும் போது கபோதபஞ்ஜரத்தைச் சுட்டுகிறது.

कपोतपञ्जराढ्यं वा सान्तरप्रस्तरान्वितम्  २२

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *