ஒரு சாளுக்ய காதல் கல்வெட்டு

வரலாற்றில் இதுவரை பலவிதமான காதற்கல்வெட்டுக்களைக் கண்டிருக்கிறோம். அத்தகையதோரு கல்வெட்டொன்று பாதாமி சாளுக்யர்களின் சிற்பக் கலைப்படைப்பான மஹாகூடத்திலுள்ள மஹாகூடேச்வரர் கோயிலில் காணப்பெறுகிறது. இந்தக் கோயில் மேலைச்சாளுக்ய வேந்தன் மங்களேசனின் (பொயு 596-609) காலத்தியதாக கருதப்பெறுகிறது. மேற்கொண்டு செய்த ஆய்வுகள் இந்தக் கோயில் பொயு 625 இல் மீளமைக்கப்பெற்றதையும் பிற்காலத்திய சேர்க்கைகளையும் கொண்டு திகழ்வதையும் வெளிப்படுத்துகின்றன. இரண்டாம் புலகேசியின் கொள்பெயரனும் பொயு 696 முதல் 733 வரை ஆண்டவனுமான விஜயாதித்யனே இப்போதைய கதையின் நாயகன். அவனுடைய காலத்தில் வாழ்ந்த அவனுடைய ஆசைக்காதலியான வினாபோடி என்பவளே இதன் நாயகி. அவள் இந்தக் கோயிலுக்குத் தானங்களை வழங்கியிருக்கிறாள். இந்தக் கல்வெட்டு கோயிலின் முகமண்டபத்தில் கதவின் கீழ்த்திசையில் அமைந்துள்ளது. அந்தக் கல்வெட்டைப் பார்ப்போம்.

Line 1. ಸ್ವಸ್ತಿಶ್ರೀ ವಿಜಯಾದಿತ್ಯ ಸತ್ಯಾಶ್ರಯ ಶ್ರೀಪೃಥಿವೀ
Line 2. ವಲ್ಲಭ ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ಪರಮೇಶ್ವರ ಭಟಾ
Line 3. ರರಾ ಪ್ರಾಣವಲ್ಲಭೇ ವಿನಾಪೋಟಿಗಲೆನ್ವೋರ್ಸುಳೇ
Line 4. ಯರೆ|  ಇವರಾ ಮುದುತಾಯ್ವಿರೇವಮಂಚಲ್ಗಲಾವರಾ
Line 5. ಮಗಳ್ದಿರ್ ಕುಚಿಪೋಟಿಗಳವರಾ ಮಗಳು ವಿನಾಪೋ
Line 6. ಟಿಗಳಳ್ ಇಲ್ಲಿಯೇ ಹಿರಣ್ಯಗರ್ಭಮಿೞುದು ಎಲ್ಲಾ ದಾನ
Line 7. ಮುಂ ಗೊಟ್ಟು ದೇವನಾ ಪೀಠಮಾಂಕಿಸುವಿನೆ ಕಟ್ಟಿ ಬೆಳ್ಳಿಯಾ
Line 8. ಕೋದೇಯನೆಱಿಸೇಯೇ ಮಂಗಲುಳ್ಳೇ ಅಷ್ಟಶತಂ ಕ್ಷೇ
Line 9. ತ್ರಂ ಗೋಟ್ಟೋಳ್|  ಇದಾನಳಿದೋನ್ ಪಂಚಮಹಾಪಾತಕನಕ್ಕುಂ|

Line 1. ஸ்வஸ்திஸ்ரீ விஜயாதி³த்ய ஸத்யாஸ்²ரய ஸ்ரீப்ருʼதி²வீ
Line 2. வல்லப⁴ மஹாராஜாதி⁴ராஜ பரமேஸ்²வர ப⁴டா
Line 3. ரரா ப்ராணவல்லபே⁴ வினாபோடிக³லென்வோர்ஸுளே
Line 4. யரெ|   இவரா முது³தாய்விரேவமஞ்சல்க³லாவரா
Line 5. மக³ள்தி³ர் குசிபோடிக³ளவரா மக³ளு வினாபோ
Line 6. டிக³ளள் இல்லியே ஹிரண்யக³ர்ப⁴மிழுது³ எல்லா தா³ன
Line 7. மும்ʼ கொ³ட்டு தே³வனா பீட²மாங்கிஸுவினெ கட்டி பெ³ள்ளியா
Line 8. கோதே³யனெறிஸேயே மங்க³லுள்ளே அஷ்டஸ²தம்ʼ க்ஷே
Line 9. த்ரம்ʼ கோ³ட்டோள்|   இதா³னளிதோ³ன் பஞ்சமஹாபாதகனக்கும்ʼ|

இதன் பொருள்

மங்கலம், ஸத்யாச்ரயன் என்னும் பெயர் கொண்டவனும் புவியின் தலைவனும் பேரரசனும் ராஜபரமேச்வரனும் பட்டாரகனுமான விஜயாதித்யனின் உயிர்க்காதலியானவளும் ரேவமஞ்சளின் பெயர்த்தியும் குசிபோடி என்பவளின் மகளுமான வினாபோடி என்பவள் இவ்விடத்தில் ஹிரண்யகர்ப்பதானத்தைச் செய்து இறைவனுக்கு கெம்பினாலான பீடமும் வெள்ளியினாலான கொற்றக்குடையும் மங்களுள்ளே எண்ணூறு என்னும் பகுதியும் அளித்தனள். இந்த அறத்தை அழிப்பவன் பஞ்சமாபாதகத்திற்படுவான்.

ஈண்டு ரேவ மஞ்சளின் பெயர்த்தியும் குசிபோடியின் மகளுமான வினாபோடி தன்னை ப்ராணவல்லபே – உயிர்க்காதலி என்று குறிப்பிடுகிறாள். இத்தகைய சொல்லாட்சி இந்தக் கல்வெட்டின் காலத்தை முன்னதாக எடுத்து செல்ல அறிஞர்களைத் துண்டுகிறது. ஆசைநாயகியாக இருந்தாலும் அவளுடைய இறுதிக்காலத்தில் தன்னை உயிர்க்காதலி என்று அழைக்க நாணுவாள். ஆகவே வினாபோடி இந்தக் கல்வெட்டாவணத்தை அவளுடைய அரசன் பதவியேற்ற வருடமான 696 இலேயோ அல்லது அதை ஒட்டிய வருடங்களிலேயோ செய்திருக்க வேண்டுமென்று கருதுகின்றனர்.

இத்தகைய சொல்லாட்சி கல்வெட்டின் காலத்தைக் கணக்கிடவும் உதவுகிறது. இந்தக் கல்வெட்டு சாளுக்ய வேந்தனான விஜயாதித்யனுக்கும் வினாபோடிக்குமான காதலின் ஆவணமேயல்லவா..

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *