பத்ம மாளிகை

kanchipuram

விமானத்தைச் சுற்றியமையும் பிராகாரம் போன்ற கட்டிட அமைப்பே மாளிகை(வடமொழியில் மாலிகா) அல்லது திருச்சுற்று மாளிகை என்று நூல்களில் குறிப்பிடப்பெற்றிருக்கிறது. காமிகாமம் மாளிகை என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது.      शालायामपि शालाङ्गा निष्क्रान्ताननशोभिता। सा शाला मालिका ज्ञेया शास्त्रेस्मिन् कामिकाह्वये।। சாலைக்கு அங்கமாக அமைந்து முற்பகுதியில் நீட்சி பெற்றமையும் அமைப்பே மாளிகை என்று காமிகத்தில் அழைக்கப் பெறுகிறது. இவ்விதம் மாளிகையின் விளக்கம் ஆகமத்தில் கிடைக்கிறது. மாளிகையை ஸபைகளில் ஒன்றாகவும் கருதலாம். மாளிகையை அதன் இடத்தைப் பொறுத்து ப்ராஸாதமாளிகை,…

தொடர்ந்து வாசிப்பு

நிருபதுங்கவர்மனின் சிற்றூர் செப்பேட்டின் வடமொழிப்பகுதி

DSC04248

அரசர்களின் சாஸனங்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பிருந்தே கிடைத்து வருகின்றன. இவற்றுள் வடமொழிச் சாசனங்களைப் பொறுத்தவரை அயோத்தியில் கிடைத்த கல்வெட்டுச்சாசனமும் கோசுண்டிசாசனமும்  ஹாதிபாடா சாசனமும் மிகப் பழமையானவையாகக் கருதப்பெறுகின்றன (Indian Epigraphy by Rechord Solomon, Page 86). இந்தக் கல்வெட்டுக்கள் கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று எழுத்தமைதியைக் கொண்டும் மற்றைய காரணிகளாலும் நிர்ணயிக்கப்பெற்றிருக்கின்றன. அதன் பிறகு கிபி 1-2 நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் மதுரா முதலிய இடங்களில் கிடைத்துள்ளன. தென்னகத்தைப் பொறுத்தவரை நாகார்ஜுனகொண்டாவில் கிடைத்த கிபி மூன்றாம்…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுது படு பொருட்கள் – பூர்ஜபத்ரம்

kharosthi_script

இதுவரை சுவடிகளுக்கான எழுதுபடு பொருளாக பனையோலை பயன்பட்டதைப் பார்த்தோம். இரண்டாவது முக்கியமான எழுதுபடுபொருள் பூர்ஜபத்ரமாகும். இது ஆங்கிலத்தில் Birch bark என்று வழங்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Baetula utiles அல்லது Baetula bhoj-patra. இந்த மரம் ஹிமாலயச்சாரலில் 30000 அடி உயரத்தில் வளரும். இந்த மரம் வடநாட்டில் லேகன் என்றும் வழங்கப்பெறுகிறது. தயாரிப்பு முறை      இந்த மரப்பட்டையின் உட்பகுதி பலவிதமான ஏடுகளைக் கொண்டிருக்கும், அத்தகைய வெண்மை அல்லது செந்நிறமுள்ள ஏடுகள் தனித்தனியாகக் கவனமாகப் பிரித்து…

தொடர்ந்து வாசிப்பு

முதலாம் பராந்தகனின் இறுதி ஆட்சியாண்டு

     விஜயாலயனில் துவங்கிய முற்காலசோழர்வரிசையில் முதலாம் பராந்தகனே அதிக ஆட்சியாண்டுகளைக் கொண்டவன். (முதலாம் குலோத்துங்கன் சாளுக்ய வழியைச் சேர்ந்தவன்.) அவனுடைய ஆட்சியின் துவக்க ஆண்டை திரு. ஸேதுராமன் அவர்கள் 906 டிஸம்பர் 27 இலிருந்து 907 ஏப்ரல் 3க்குள்ளாக நிர்ணயித்திருக்கிறார். (Early cholas, pg pg 7). அவனுடைய இறுதி ஆட்சியாண்டு சர்ச்சைக்குரியதாகிறது. அவனுடைய கல்வெட்டுக்கள் 46 ஆம் ஆட்சியாண்டோடு திருக்கண்டியூர் (SII V, No570), திருச்சோற்றுத்துறை (Ins 135 of 1931) ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன….

தொடர்ந்து வாசிப்பு

பாண்டியரின் அதிகாரியான பல்லவர் வழித்தோன்றல்

ஆதித்ய சோழனால் வீழ்த்தப்பட்ட அபராஜித பல்லவனுக்குப் பிறகு பல்லவ குலம் தன் பெருமையிழந்து பின்வந்த அரசர்களுக்கு அதிகாரிகளாகவும் அடங்கியும் கிடக்கும் நிலையெய்தியது. ஆதித்ய சோழன் பல்லவர் குலத்தோன்றலாகிய த்ரிபுவனமாதேவியை மணந்திருந்தான். கரந்தைச் செப்பேடும் முதலாம் பராந்தகன் ஒரு பல்லவனோடு போரிட்டதைக் குறிப்பிடுகிறது. சுந்தர சோழனின் காலத்தில் பார்த்திவேந்த்ராதிவர்மன் என்பான் தொண்டைமண்டலத்தின் தலைவனாக நியமிக்கப்பெற்றிருந்தான். இவனுக்குப் பல்லவர் குலத்தோடான தொடர்புக்கு தெளிவான சான்றுகள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் கோப்பெருஞ்சிங்கன் என்பான் மீண்டும் பல்லவகுலத்தை நிறுவினான். அவனுக்குப் பிறகு மீண்டும் பல்லவர்…

தொடர்ந்து வாசிப்பு