இரண்டாம் புலகேசியின் ஐஹோளெ கல்வெட்டு

Chalukyan_inscription_Aihole

       மிகப்புகழ்பெற்ற இந்தக் கல்வெட்டு பிஜபுர் மாவட்டத்திலுள்ள ஐஹோளெயில் அமைந்துள்ள மேகுடி என்னும் ஆலயத்தில் அமைந்துள்ளது. ஆலயத்தின் கிழக்குச் சுவரில் இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டை திரு. எஃப்.கீல்ஹார்ன் அவர்கள் எபிக்ராஃபியா இண்டிகாவின் ஆறாந்தொகுதியில் பதிப்பித்தார்.             இந்தக் கல்வெட்டு 19 வரிகளைக் கொண்டது. இந்தக் கல்வெட்டு நான்கடி ஒன்பதரை அங்குல நீளமும் இரண்டரை அடி அகலமும் கொண்டது.  கல்வெட்டு வடமொழியில் அமைந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டைய தெலுகு-கன்னட வரிவடிவத்தில் எழுதப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு இரண்டாம் புலகேசியின்…

தொடர்ந்து வாசிப்பு

முதலாம் நரஸிம்ஹ வர்மனின் வாதாபிக் கல்வெட்டு

high res

     சாளுக்ய மன்னன் இரண்டாம் புலகேசி இரண்டாம் முறை படையெடுத்து வந்தபோது அவனை எதிர்த்தபடியே முதலாம் நரஸிம்ஹவர்மன் வாதாபி வரைப் போந்ததும் அதனைக் கைப்பற்றியமையும் நாமறிவோம். மணிமங்கலம், சூரமாரம் மற்றும் பரியளம் ஆகிய இடங்களில் நிகழ்ந்த போர்களில் பல்லவர்களின் கை மேலோங்கியிருந்தது. பல்லவர் படை சாளுக்ய நாட்டின் இதயமாகத் திகழ்ந்த வாதாபியில் ஊடுருவி நின்றது. இதன் சாளுக்ய ஆட்சியே முன்காணாவிதமாக நிலைகுலைந்தது. ஈடில்லாப் பேரரசனான இரண்டாம் புலகேசி இறந்து பட்டனன். சீன யாத்ரிகனான ஹ்வான் ஸாங் சாளுக்ய…

தொடர்ந்து வாசிப்பு

கோப்பெருஞ்சிங்கனின் மற்றொரு ஏரிக்கல்வெட்டு

     நாம் ஏற்கனவே கோப்பெருஞ்சிங்கன் ஏரியைப் பழுதுபார்த்த கல்வெட்டைப் பார்த்தோம். அந்த ஏரி பாண்டிச்சேரிக்கருகிலுள்ள த்ரிபுவனையில் அமைந்தது. மற்றொரு கல்வெட்டு அதனைப் போன்ற ஏரி பழுதுபார்த்தலைக் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு திருவக்கரையிலுள்ள சந்த்ரமௌளீச்வரர் கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்தின் தென்புற அடியில் அமைந்துள்ளது.      இந்தக் கல்வெட்டு அரசனைக் காடவன், அவனியாளப்பிறந்தான், ஸர்வஜ்ஞன், கட்கமல்லன் மற்றும் க்ருபாணமல்லன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு ஒழுகறையில் அமைந்த ஏரிக்கு மதகும் கட்டுவித்து அதை நிரப்ப வாயக்காலும் கல்லுவித்த செய்தியைத் தருகிறது….

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – கல்

bhoja_ins

கல் எழுதுபடு பொருளாக மிகப்பழங்காலத்திலிருந்தே பயன்பட்டுவருகிறது. சில கல்வெட்டுக்கள் இலக்கிய சுவை பொங்கும் வண்ணமாக அமைந்துள்ளன. ஆனால் சுவடியியற்பார்வையிலிருந்து பார்த்தால் அவற்றுள் ஒரு சில கல்வெட்டுக்கள் மட்டுமே இலக்கியப் படைப்புக்களைக் கொண்டிருக்கின்றன. அசோகனின் கல்வெட்டுக்கள், தாள்ளகுண்டா தூண் கல்வெட்டு, ஹாதிகும்பா கல்வெட்டு மற்றும் கன்யாகுமரி கல்வெட்டு ஆகியவை இலக்கியச்சுவைக்காகப் பெயர் பெற்றவை. ஆயினும் அவை கூட தானமளிக்கப்பெற்றவற்றிற்கு ஆவணமாகவே திகழ்கின்றன. இலக்கியப்படைப்புக்களாகத் திகழும் கல்வெட்டுக்களாவன. குடுமியாமலையிலுள்ள பல்லவ க்ரந்த லிபியில் அமைந்த இசைக்கல்வெட்டு. 2.குவாலியரிலுள்ள பத்மநாதர் கோயிலில்…

தொடர்ந்து வாசிப்பு

வஜ்ரமும் சக்தியும்

ed4261a93ed77fa9858a5899cbb9f51e

இந்திய படிமவியலில் இறைவனின் திருவுருவங்களின் கைகளை அலங்கரிக்கும் ஆயுதங்கள் அந்தந்த இறையுருவத்தின் குணத்தின் அடையாளமே என்பதை அறிவோம். அவ்விதம் குமரக்கடவுளுக்கும் இந்த்ரனுக்கும் அமைக்கப்படும் இரு ஆயுதங்கள் வஜ்ரமும் சக்தியும். இவ்விரு ஆயுதங்களின் வடிவத்தைப் பொறுத்தவரை சிறு குழப்பம் காணப்பெறுகிறது. சக்தி என்னும் சொல்லைக் கேட்டவுடன் நம் மனது சூலத்தைப் போன்ற ஆயுதத்தை உருவகம் செய்கிறது. வஜ்ரம் என்னும் சொல்லைக் கேட்டவுடன் தண்டாயுதத்தைப் போன்ற கற்பனை எழுகிறது. ஆனால் நூல்களும் கிடைக்கும் படிமங்களும் மேற்கண்ட கற்பனைக்கு முற்றிலும் மாறுபாடாக…

தொடர்ந்து வாசிப்பு

ஏரியைப் பழுதுபார்த்த இகல்வேந்தன் கோப்பெருஞ்சிங்கன்

lake

ஏரிகளையும் குளங்களையும் பாதுகாத்து அவற்றைப் பராமரித்து கரைகளைப் பழுதுபார்க்க வேண்டும். அப்போதுதான் நீரைச் சேகரிக்கவும் மழைக்காலங்களில் வெள்ளபாதிப்பின்றி மக்களைக் காக்கவும் முடியும். இத்தகையதோர் பழுதுபார்ப்பு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவனான கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இந்தக் கல்வெட்டு பாண்டிச்சேரியை அடுத்த த்ரிபுவனியிலுள்ள வரதராஜ பெருமாள் ஆலயத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு பதிமூன்றாம் நூற்றாண்டின் இரண்டாம் காற்பகுதியைச் சேர்ந்த அவனி ஆளப்பிறந்தானான கோப்பெருஞ்சிங்கனின் காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு அரசனை கர்ணாடக ஆந்த்ர மன்னர்களை…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – வெண்கலம், இரும்பு மற்றும் ஈயம்

pillar1

இதுகாறும் தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் பித்தளை ஆகிய உலோஹங்கள் எழுதுபடு பொருட்களாக எவ்வாறு பயன்பட்டனவென்று கண்டோம். இனி மீதமிருக்கும் உலோஹங்கள் வெண்கலம், இரும்பு மற்றும் ஈயமாகும்.   வெண்கலம் மணி தயாரிக்கப் பயன்படும் இந்த உலோஹம் அரிதாக கருவிகள் செய்யவும் பயன்படுகிறது. இதனால் உருவாக்கப்பெற்ற மணிகளில் சில அதைக் கொடுத்தவரின் பெயரோடு காணப்பெறுகின்றன. பெஷாவரில் கிடைத்த வெண்கலத்தாலான மனிதத் தலையில் சுற்றிலும் எழுத்துக்கள் காணப்பெறுகின்றன.   இரும்பு இந்த உலோஹம் பொதுப்பயன்பாட்டிலும் விலைகுறைவாகவும் இருந்தாலும் கூட…

தொடர்ந்து வாசிப்பு

இரண்டாம் ராஜாதிராஜனின் காலத்தில் போரில் வெல்ல அகோரபூஜை

     ஸனாதன தர்மத்தில் ஸமூஹ மேம்பாட்டிற்காகப் பலவகையான சடங்குகள் கூறப்பெற்றிருக்கின்றன என்பதை நாமறிவோம். போரில் வெல்லவும் பலவகையான சடங்குகள் கூறப்பெற்றிருக்கின்றன. நம்முடைய முன்னோர்கள் இத்தகைய சடங்குகளைத் தம் வெற்றிக்காகவும் நன்மைக்காகவும் மேற்கொண்டனர். அத்தகையதோர் சடங்கு காஞ்சியை அடுத்துள்ள ஆர்ப்பாக்க கல்வெட்டால் அறியக்கிடக்கிறது.      இந்தக் கல்வெட்டு பொயு 1166 முதல் 1178 வரையாண்ட இரண்டாம் ராஜாதிராஜ சோழனின் காலத்தைச் சேர்ந்தது. அவனுடைய ஆட்சியில் இலங்கையிலிருந்து படை தமிழகத்தில் புகுந்து பல கோயில்களையும் அழித்தது. மக்களுக்கும் சொல்லொணாத் துயரை…

தொடர்ந்து வாசிப்பு

எதிரெதிர் பேரரசுகளின் இரு அந்தணத் தளபதிகள்

பதினோராம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தக்காணத்தில் கோலோச்சிய இரு பெரும் பேரரசுகள் கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த சோழர்களும் கல்யாணியைக் கொண்ட சாளுக்யர்களுமேயாம். மற்றைய அரசர்கள் இவ்விரு பேரரசுகளின் பின்னரே அணிவகுத்து நின்றனர். இவ்விரு அரசுகளுக்குமான மோதலைத் துவக்கி வைத்தது ராஜராஜப் பெருந்தகையேயாம். முதலாம் ராஜராஜன் கல்யாணி சாளுக்யர்களின் வேந்தனான ஸத்யாச்ரயனை (997-1007 CE) வென்கண்டான். அவனைத் தொடர்ந்து வந்த அரசர்களில் முதலாம் ராஜேந்த்ரன் துவங்கி வீரராஜேந்த்ரன் வரையில் வந்த மன்னர்கள் மேலைச் சாளுக்யர்களோடு மோதினர். இந்தப் போர்வரிசை முதலாம்…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடுபொருட்கள் – வெள்ளி மற்றும் பித்தளை

இதுவரை தங்கம் மற்றும் தாமிரத்தை எழுதுபடுபொருளாகப் பயன்படுத்தவதைப் பார்த்தோம். வெள்ளி தங்கத்தை விட விலைகுறைவானதாயினும் என்ன காரணத்தாலோ வெள்ளியில் எழுதப்பெற்ற பொ   ருட்கள் அரிதாகவே உள்ளன. இதுவரை சில எழுதப்பெற்ற பொருட்களே கிடைத்துள்ளன. சில நாணயங்களும் வெள்ளி ஆவணங்களும் பட்டிப்ரோலு மற்றும் தக்ஷசீலத்தில் கிடைத்த ஸ்தூபங்களில் கிடைத்துள்ளன. தாந்த்ரிக யந்த்ரங்களும் சில சக்ரங்களும் வெள்ளியில் எழுதப்பெற்றுள்ளன. ஜைனர்களும் கூட புனிதமான யந்த்ரங்களை எழுத வெள்ளியைப் பயன்படுத்தியுள்ளனர். பித்தளை      இந்த உலோஹம் மிகவும் உருகுந்தன்மையுடையது. ஆகவே இது…

தொடர்ந்து வாசிப்பு