இதுவரை தங்கம் மற்றும் தாமிரத்தை எழுதுபடுபொருளாகப் பயன்படுத்தவதைப் பார்த்தோம். வெள்ளி தங்கத்தை விட விலைகுறைவானதாயினும் என்ன காரணத்தாலோ வெள்ளியில் எழுதப்பெற்ற பொ ருட்கள் அரிதாகவே உள்ளன. இதுவரை சில எழுதப்பெற்ற பொருட்களே கிடைத்துள்ளன. சில நாணயங்களும் வெள்ளி ஆவணங்களும் பட்டிப்ரோலு மற்றும் தக்ஷசீலத்தில் கிடைத்த ஸ்தூபங்களில் கிடைத்துள்ளன. தாந்த்ரிக யந்த்ரங்களும் சில சக்ரங்களும் வெள்ளியில் எழுதப்பெற்றுள்ளன. ஜைனர்களும் கூட புனிதமான யந்த்ரங்களை எழுத வெள்ளியைப் பயன்படுத்தியுள்ளனர்.
பித்தளை
இந்த உலோஹம் மிகவும் உருகுந்தன்மையுடையது. ஆகவே இது தாமிரத்தைப் போல எழுதப்பயன்படுத்தப்பெறவில்லை. ஆனாலும் சில உருவச்சிலைகளிலும் பாத்திரங்களிலும் பொறிப்புக்களோடு பயன்படுத்தப்பெற்றுள்ளது.
சிக்கண்ண கெம்பனின் கங்கஸந்த்ர ஏடு 1290 ஐச் சேர்ந்தது. இது பித்தளையிலானது.
அஃகானிஸ்தானிலுள்ள வெர்தக் ஸ்தூபத்தில் கிடைத்த பித்தளை ஜாடியிலுள்ள எழுத்துப் பொறிப்பு பொயுமு நான்காம் நூற்றாண்டினதாகக் கணக்கிடப்பெற்றுள்ளது.
மைசூரிலுள்ள ஜகன்மோஹன மாளிகையில் மூன்றாம் க்ருஷ்ணராஜ உடையாரின் பித்தளையிலான ஒரு தாமரை உள்ளது. இதில் அரசர்களின் பெயர்களும் அவர்தம் உறவினர் பெயர்களும் எழுதப்பெற்றுள்ளன.
ஸக்ரேபட்ணத்திலுள்ள ரங்கநாதர் ஆலயத்திலுள்ள கருடகம்பத்தில் அதே அரசனின் எழுத்துப் பொறிப்புக்கள் காணப்படுகின்றன.