கல் எழுதுபடு பொருளாக மிகப்பழங்காலத்திலிருந்தே பயன்பட்டுவருகிறது. சில கல்வெட்டுக்கள் இலக்கிய சுவை பொங்கும் வண்ணமாக அமைந்துள்ளன. ஆனால் சுவடியியற்பார்வையிலிருந்து பார்த்தால் அவற்றுள் ஒரு சில கல்வெட்டுக்கள் மட்டுமே இலக்கியப் படைப்புக்களைக் கொண்டிருக்கின்றன. அசோகனின் கல்வெட்டுக்கள், தாள்ளகுண்டா தூண் கல்வெட்டு, ஹாதிகும்பா கல்வெட்டு மற்றும் கன்யாகுமரி கல்வெட்டு ஆகியவை இலக்கியச்சுவைக்காகப் பெயர் பெற்றவை. ஆயினும் அவை கூட தானமளிக்கப்பெற்றவற்றிற்கு ஆவணமாகவே திகழ்கின்றன.
இலக்கியப்படைப்புக்களாகத் திகழும் கல்வெட்டுக்களாவன.
- குடுமியாமலையிலுள்ள பல்லவ க்ரந்த லிபியில் அமைந்த இசைக்கல்வெட்டு.
2.குவாலியரிலுள்ள பத்மநாதர் கோயிலில் அமைந்துள்ள கச்சவாஹ வம்சத்தின ப்ரசஸ்தி சதகம்.
3.நான்காம் விக்ரஹராஜனின் ஹரிகேளி நாடகமும் ஸோமதேவரின் லலிதவிக்ரஹராஜநாடகமும் ஆஜ்மீரில் பகுதி கல்வெட்டில் கிடைக்கின்றன.
4.ஜைன நூலான உன்னத சிகர புராணம் பிஜோலாவில் 1169 ஆம் ஆணடினதாக கிடைக்கிறது.
5.மத்ய ப்ரதேசத்திலுள்ள தாரில் மதனனின் பாரிஜாதமஞ்ஜரியும் போஜனின் கூர்மசதகமும் கிடைக்கின்றன.
6. தாரிலுள்ள கமால் மௌலா மஸ்ஜித்தில் தேவநாகரி லிபியில் ஆக்யாத ப்ரத்யயங்கள் எனப்பெறும் வடமொழியிலக்கண வினைமுற்றுக்கள் செதுக்கப்பெற்றுள்ளன.
7.ஆந்திரத்திலுள்ள ஹனுமகொண்டாவில் நிரோஷ்ட்ய காவ்யம் செதுக்கப்பெற்றுள்ளது.
8. ஸூர்ய சதகத்தின் சில பகுதிகள் காஞ்சிபுரம் கச்சபேச்வர ஆலயத்தில் செதுக்கப்பெற்றுள்ளன.
அண்மையிலும் கூட த்யாகராஜரின் கீர்த்தனைகள் அவருடைய ஸமாதியைச் சுற்றி செதுக்கப்பெற்றுள்ளன.
இவ்விதம் கல்லில் இலக்கியவளம் வாய்ந்த நூல்கள் கிடைக்கின்றன.