இரண்டாம் புலகேசியின் ஐஹோளெ கல்வெட்டு

       மிகப்புகழ்பெற்ற இந்தக் கல்வெட்டு பிஜபுர் மாவட்டத்திலுள்ள ஐஹோளெயில் அமைந்துள்ள மேகுடி என்னும் ஆலயத்தில் அமைந்துள்ளது. ஆலயத்தின் கிழக்குச் சுவரில் இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டை திரு. எஃப்.கீல்ஹார்ன் அவர்கள் எபிக்ராஃபியா இண்டிகாவின் ஆறாந்தொகுதியில் பதிப்பித்தார்.

            இந்தக் கல்வெட்டு 19 வரிகளைக் கொண்டது. இந்தக் கல்வெட்டு நான்கடி ஒன்பதரை அங்குல நீளமும் இரண்டரை அடி அகலமும் கொண்டது.  கல்வெட்டு வடமொழியில் அமைந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டைய தெலுகு-கன்னட வரிவடிவத்தில் எழுதப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு இரண்டாம் புலகேசியின் ஆட்சியில் இருந்த ரவிகீர்த்தி என்னும் பெருங்கவியினால் எழுதப்பெற்றது. இந்தக் கல்வெட்டில் அந்தக் கவிஞன் தனது புரவலனான புலகேசி ஜினேந்த்ரனுக்குக் கோயில் எடுப்பித்ததைக் குறிப்பிடுகிறான். கவித்துவம் பொங்கும் இந்தக் கவிதைக் கல்வெட்டில் தன்னைக் காளிதாஸனுக்கும் பாரவிக்கும் ஒப்புமை செய்கிறான்.

Chalukyan_inscription_Aihole

031 copy

வரி 1. जयति भगवाञ्जिनेन्द्रो वीतजरामरणजन्मनो यस्य(।) ज्ञानसमुद्रान्तर्ग्गतमखिल ञ्जगदन्तरीपमिव(।।1) तदनु चिरमपरिमेयश्चालुक्यकुलविपुलजलनिधिर्ज्जयति। पृथ्वीमौलिललाम्नां यः प्रभावः पुरुषरत्नानाम्।। (2) शूरे विदुषि च विभजन्दानं मानञ्च युगपदेकत्र।
வரி 2. अविहितयथासंख्यो जयति च सत्याश्रयस्सुचिरम्।। (3) पृथ्वीवल्लभशब्दो येषामन्वर्त्थताञ्चिरञ्जातः। तद्वंशेषु जिगीषिषु तेषु बहुष्वप्यतीतेषु।। (4) नानाहेतिशताभिघात पतितभ्रान्ताश्वपत्तिद्विपे नृत्यद्भीमकबन्धखड्गकिरणज्वालासहस्रे रणे।
வரி 3. लक्ष्मीर्भविता चपलापि च कृता शौर्य्येण येनात्मसाद्राजासीत् जयसिंहवल्लभ इति ख्यातश्चलुक्यान्वयः।। (5) तदात्मजोभूद्रणरागनामा दिव्यानुभावो जगदेकनाथः। अमानुषत्वं किल यस्य लोकस्सुप्तस्य जानाति वपुःप्रकर्षात्।। (6) तस्याभवत्तनुजः पॊलेकेशी यः श्रितेन्दुकान्तिरपि
வரி 4. श्रीवल्लभोप्यासीद् वातापीपुरीवधूवरताम्।(7) यत्त्रिवर्ग्गपदवीमलं क्षितौ नानुगन्तुमधुनापि राजकम्। भूश्च येन हयमेधयाजिना प्रापितावभृथमज्जना बभौ।। (8) नळमौर्य्यकदम्बकाळरात्रिस्तनयस्तस्य बभूव कीर्त्तिवर्म्मा। परदारनिवृत्तचित्तवृत्तेरपि धीर्यस्य रिपुश्रि
வரி 5. यानुकृष्टा।। (9) रणपराक्रमलब्धजयश्रिया सपदि येन विरुग्णमशेषतः। नृपतिगन्धगजेन महौजसा पृथुकदम्बकदम्बकदम्बकम्।। (10) तस्मिन् सुरेश्वरविभूतिगताभिलाषे राजाभवत्तदनुजः किल मङ्गलेशः। यः पूर्वपश्चिमसमुद्रतटोषिताश्वसेनाराजः पटविनिर्मितदिग्वितानः।।(11) स्फुरन्मयूखैरसिदीपिकाशतैः
வரி 6. व्युदास्य मातङ्गतमिस्रसञ्चयम्। अवाप्तवान्यो रणरङ्गमन्दिरे कटच्चूरिश्रीललनापरिग्रहम्।। (12) पुनरपि च जिग्भृक्षोस्सैन्यमाक्रान्तसालं रुचिरबहुपताकं रेवतीद्वीपमाशु। सपदि महदुदन्वत्तोयसङ्क्रान्तबिम्बं वरुणबलमिवाभूदागतं यस्य वाचा।य (13) तस्याग्रजस्य तनये नहुषानुभावे लक्ष्म्या किलाभि
வரி 7. लषिते पॊलेकिशिनाम्नि। सासूयमात्मनि भवन्तमतः पितृव्यं ज्ञात्वापरुद्धचरितव्यवसायबुद्धौ।। (14) स यदुपचितमन्त्रोत्साहशक्तिप्रयोगक्षपितबलविशेषो मङ्गलेशस्समन्तात्। स्वतनयगतराज्यारम्भयत्नेन सार्द्धं निजमतनु च राज्यञ्जीवितञ्चोज्जहाति स्म।। (15) तावत्तच्छत्रभङ्गे जगदखिलमरात्यन्धकरोपरुद्धं
வரி 8. यस्याशयप्रतापद्युतिततिभिरिवाक्रान्तमासीत्प्रभातम्। नृत्यद्विद्युत्पताकैः प्रजविनि मरुति क्षुण्णपर्य्यन्तभागैर्ग्गर्ज्जद्भिर्व्वारिवासैरलिकुलमलिनं व्योम यातं कदा वा।। (16) लब्ध्वा कालं भुवमुपगते जेतुमप्पायिकाख्ये गोविन्दे च द्विरदनिकरैरुत्तरं भीमरथ्याः। यस्यानेकैर्युधि भयरसज्ञत्वमेकः प्रयातस्तत्रावावाप्तं फलमुपकृतस्या
வரி 9. परेणापि सद्यः।।(17) वरदातुङ्गतरङ्गरङ्गविलसद्घंसावलीमेखलां वनवासीमवमृद्नतस्सुरपुरप्रस्पर्द्धिनीं सम्पदा(।) महता यस्य बलार्ण्णवेन परितस्सञ्छादितोर्व्वीतलम्। स्थलदुर्ग्गञ्जलदुर्ग्गतामिव गतं तत्तत्क्षणे पश्यताम्।(18) गङ्गालुपेन्द्रा व्यसनानि सप्त हित्वा पुरोपार्ज्जितसम्पदोपि। यस्यानुभवोपनतस्सदासन्ना
வரி 10. सन्नसेवामृतपानशौण्डः।।(19) कोङ्कणेषु यदादिष्टछन्ददण्डाम्बुवीचिभिः। उदस्तास्तरसा मौर्य्यपल्वलाम्बुसमृद्धयः।। (20) अपरजलधेर्लक्ष्मीं यस्मिन् पुरीं पुरभित्प्रभे मदगजघटाकारैर्न्नावं शतैरवमृद्नति। जलदपटलानीकाकीर्ण्णन्नवोत्पलमेचकञ्जलनिधिरिव व्योम व्योम्नस्स
வரி 11. मोभवदम्बुधिः।। (21) प्रतापोपनता यस्य लाटमालवगुर्ज्जराः। दण्डोपनतसामन्तचार्य्याचार्य्याः इवाभवन्।। (22) अपरिमितविभूतिस्फीतसामन्तसेनामकुट मणिमयूखाक्रान्तपादारविन्दः। युधि पतितगजेन्द्रानेकबीभत्सभूतो भयविगलितहर्षो येन चाकारि हर्षः।। (23) भुवमुरुभिरनीकैश्शा
வரி 12. सतो यस्य रेवा विविधपुलिनशोभावन्द्यविन्ध्योपकान्तः। अधिकतरमराजत्स्वेन तेजोमहिम्ना शिखरिभिरिभवर्ज्यो वर्ष्मणा स्पर्धयेव।। (24) विधिवदुपचिताभिश्शक्तिभिश्शक्र कल्पस्तिसृभिरपि गुणौघैस्स्वैश्च माहाकुलाद्यैः। अगमदधिपतित्वं यो महाराष्ट्रकाणां नवनवतिसहस्रग्रामभाजां त्रयाणाम्।। (25) गृहिणां स्व
வரி 13. स्वगुणैस्त्रिवर्ग्गतुङ्गा विहितान्यक्षितिपालमानभङ्गाः। अभवन्नुपजातभितिलिङ्गा यदनीकेन सकोशलः कलिङ्गः।। (26) पिष्टं पिष्टपुरं येन जातं दुर्ग्गमदुर्ग्गमञ्चित्रं यस्य कलेर्वृत्तं जातं दुर्ग्गमदुर्ग्गमम्।। (27) सन्नद्धवारणघटास्थगितान्तरालं नानायुधक्षतनरक्षतजाङ्गरागम्। आसीज्जलं यदवमर्द्दितमभ्रगर्भं कौणालम
வரி 14. म्बरमिवोजितसान्ध्यरागम्।। (28) उद्धूतामलचामरध्वजशतच्छत्रान्धकारैर्ब्बलैः शौर्य्योत्साहरसोद्धतारिमथनैर्म्मौलादिभिष्षड्विधैः। आक्रान्तात्मबलोन्नतिं बलरजस्सञ्छन्नकाञ्चीपुरप्राकान्तरितप्रतापमकरोद्यः पल्लवानां पतिम्।। (29) कावेरी दृतशफरीविलेलनेत्रा चोलानां सपदि जयोद्यतस्य यस्य(।) प्रश्च्योतन्मदगजसे
வரி 15. तुरुद्धनीरा संस्पर्शं परिहरति स्म रत्नराशेः।। (30) चेलकेरलपाण्ड्यानां योभूत्तत्र महर्द्धये। पल्लवानीकनीहारतुहिनेतरदीधितिः।। (31) उत्साहप्रभुमन्त्रशक्तिसहिते यस्मिन् समस्ता दिशो जित्वा भूमिपतीन्विसृज्य महितानाराध्य देवद्विजान्। वातापीन्नगरीं प्रविश्य नगरीमेकामिवोर्व्वीमिमां चञ्चन्नीरधिनीलनीरपरिखां
வரி 16. सत्याश्रये शासति(32) त्रिंशत्सु त्रिसहस्रेषु भारतादाहवादितः(।) सप्ताब्दशतयुक्तेषु गतेष्वब्देषु पञ्चसु।। (33) पञ्चाशत्सु कलौ काले षट्सु पञ्चशतेषु च(।) समासुसमतीतासु शकानामपि भूभुजाम्।। (34) तस्याम्बुधित्रयनिवारितशासनस्य
வரி 17. सत्याश्रयस्य परमाप्तवता प्रसादम्। शैलञ्जिनेन्द्रभवनं भवनं महिम्नान्निर्मापितम्मतिमता रविकीर्त्तिनेदम्।। (35) प्रशस्तेर्व्वसतेश्चाशयाः जिनस्य त्रिजगद्गुरोः कर्त्ता कारयिता चापि रविकीर्त्तिः कृती स्वयम्।। (36) येनायोजि नवेश्म स्थिरमर्त्थविधौ विवेकिना जिनवेश्म। स विजयतां रविकीर्त्तिः कविता
வரி 18. श्रितकालिदासभारविकीर्त्तिः।। (37)õ मूलवल्लिवॆळ्मऴतिकवादमच्चनूर्ग्गङ्गवूक् पुळिगॆऱॆगण्डवग्राम इति अस्य भुक्तिः। गिरिरेतत् पश्चिमाभिगत निमूवारिर्य्यावत् महापथान्तपुरस्य सीमा उत्तरतः दक्षिणतो
வரி 19. ……… ग………न õ

ஜயதி ப⁴க³வாஞ்ஜினேந்த்³ரோ வீதஜராமரணஜன்மனோ யஸ்ய(| )

ஜ்ஞானஸமுத்³ராந்தர்க்³க³தமகி²ல ஞ்ஜக³த³ந்தரீபமிவ(|| 1)

        இறைவனான ஜினேந்த்ரர் வெல்கிறார். அவர் பிறப்பிறப்புக்கள் வென்றவர். அவருடைய ஜ்ஞானமாகிய கடலில் எல்லா உலகும் தீவுகளைப் போலத் திகழ்கின்றன.

தத³னு சிரமபரிமேயஶ்சாலுக்யகுலவிபுலஜலனிதி⁴ர்ஜ்ஜயதி|

ப்ருʼத்²வீமௌலிலலாம்னாம்ʼ ய​: ப்ரபா⁴வ​: புருஷரத்னானாம்||  (2)

        அதன் பிறகு அளந்தறியவொண்ணாத சாளுக்யர்களின் குலமாகிய பெருங்கடல் வெல்கிறது. உலகிற்கு மகுடம் போன்ற ஆண் ரத்னங்களின் இருப்பிடமாகத் திகழ்வது இந்தப் பெருங்கடல்.

ஶூரே விது³ஷி ச விப⁴ஜந்தா³னம்ʼ மானஞ்ச யுக³பதே³கத்ர|

அவிஹிதயதா²ஸங்க்²யோ ஜயதி ச ஸத்யாஶ்ரயஸ்ஸுசிரம்||  (3

            ஸத்யாச்ரயன் வெகுகாலம் வெல்கிறான். அவன் வீரர்களுக்கும் அறிஞர்களுக்கும் தானத்தையும் ஸன்மானத்தையும் புரிந்தவன். போர்களில் வெல்லவியலாதவன்.

 ப்ருʼத்²வீவல்லப⁴ஶப்³தோ³ யேஷாமன்வர்த்த²தாஞ்சிரஞ்ஜாத​:|

தத்³வம்ʼஶேஷு ஜிகீ³ஷிஷு தேஷு ப³ஹுஷ்வப்யதீதேஷு||  (4)

       புவிக்குத் தலைவன் என்னும் பொருளுள்ள ப்ருத்வீ வல்லபன் என்னும் சொல் எவருக்கு பொருந்திய பொருளுள்ளுதாக ஆகுமோ அத்தகைய பரம்பரையில் வெல்லும் ஆவலுடைய பல அரசர்களும் கடந்த பின்னர்

நானாஹேதிஶதாபி⁴கா⁴தபதிதப்⁴ராந்தாஶ்வபத்தித்³விபே

ந்ருʼத்யத்³பீ⁴மகப³ந்த⁴க²ட்³க³கிரணஜ்வாலாஸஹஸ்ரே ரணே|

லக்ஷ்மீர்ப⁴விதா சபலாபி ச க்ருʼதா ஶௌர்ய்யேண யேனாத்மஸா

த்³ராஜாஸீத் ஜயஸிம்ʼஹவல்லப⁴ இதி க்²யாதஶ்சலுக்யான்வய​:||  (5)

        ஜயஸிம்ஹ வல்லபன் என்னும் புகழ்பெற்ற சாளுக்ய பரம்பரையின் அரசன் வாழ்ந்தனன். அவன் பலவிதமான படைக்கலங்கள் நூற்றுக்கணக்கில் தாக்குவதால் கலங்கும் குதிரைகளையும் காலாளையும் உடையதும் ஆடும் தலையில்லா முண்டங்கள் அச்சம் தரும் விதத்தில் திகழ வாட்களின் கிரணங்களின் சுடர்கள் ஆயிரமாகத் திகழும் போரில் அலையும் இயல்பு கொண்ட திருமகளும் வீரத்தின் தன்னுடையவளாக்கிக் கொண்டான்.

ததா³த்மஜோபூ⁴த்³ரணராக³னாமா தி³வ்யானுபா⁴வோ ஜக³தே³கனாத²​:|

அமானுஷத்வம்ʼ கில யஸ்ய லோகஸ்ஸுப்தஸ்ய ஜானாதி வபு​:ப்ரகர்ஷாத்||  (6)

        அவனுடைய மகனாக ரணராகன் என்பவன் இருந்தான். தெய்வத்தன்மையுடையவன். உலகின் ஒரே தலைவன். அவன் உறங்கும்போது கூட மக்கள் உடலின் ஒரு அமானுஷத் தன்மையை உணர்ந்தனர். இது அவனுடைய வடிவத்தின் சிறப்பேயாகும்.

தஸ்யாப⁴வத்தனுஜ​: பொலேகேஶீ ய​: ஶ்ரிதேந்து³காந்திரபி

ஶ்ரீவல்லபோ⁴ப்யாஸீத்³ வாதாபீபுரீவதூ⁴வரதாம்| (7)

       அவனுடைய மகன் பொலேகேசி என்பவன் இருந்தான். அவன் சந்திரனையொத்த தனது ஒளியினால் வாதாபியென்னும் நகரமாகிய மணமகளுக்கு வல்லபனாக-கணவனாகத் திகழ்ந்தான்.

யத்த்ரிவர்க்³க³பத³வீமலம்ʼ க்ஷிதௌ நானுக³ந்துமது⁴னாபி ராஜகம்|

பூ⁴ஶ்ச யேன ஹயமேத⁴யாஜினா ப்ராபிதாவப்⁴ருʼத²மஜ்ஜனா ப³பௌ⁴||  (8)

       அவனையொத்து முப்பொருளை அடைய இப்போதும் கூட புவியில் அரசர்கள் இல்லை. நிலமகளும் அச்வமேதம் புரிந்த அவனால் புனிதநீராடியவளாய் ஆனாள்.

நளமௌர்ய்யகத³ம்ப³காளராத்ரிஸ்தனயஸ்தஸ்ய ப³பூ⁴வ கீர்த்திவர்ம்மா|

பரதா³ரனிவ்ருʼத்தசித்தவ்ருʼத்தேரபி தீ⁴ர்யஸ்ய ரிபுஶ்ரியானுக்ருʼஷ்டா||  (9)

       அவனுக்குக் கீர்த்திவர்மன் மகனாகத் தோன்றினான். அவன் நள, மௌர்ய, கதம்ப வம்சத்தவர்களுக்கு கொடும் இரவாகத் திகழ்ந்தான். பிறன்மனை விழையாததாயினும் கூட அவனுடைய மனம் எதிரிகளின் திருமகளை நாடத்தான் செய்தது.

ரணபராக்ரமலப்³த⁴ஜயஶ்ரியா ஸபதி³ யேன விருக்³ணமஶேஷத​:|

ந்ருʼபதிக³ந்த⁴க³ஜேன மஹௌஜஸா ப்ருʼது²கத³ம்ப³கத³ம்ப³கத³ம்ப³கம்||  (10)

            போரில் வலிமையை அடைந்த வெற்றித் திருமகளோடு இயைந்தவன். அரசர்களில் பெருயானையைப் போன்ற வலிமைகொண்ட அவனால் வலிமைகொண்ட கதம்பவம்சத்தவராகிய கடம்ப மரங்கள் சாய்க்கப்பெற்றன.

தஸ்மின் ஸுரேஶ்வரவிபூ⁴திக³தாபி⁴லாஷே ராஜாப⁴வத்தத³னுஜ​: கில மங்க³லேஶ​:|

ய​: பூர்வபஶ்சிமஸமுத்³ரதடோஷிதாஶ்வஸேனாராஜ​: படவினிர்மிததி³க்³விதான​:|| (11)

       அந்த அரசன் இந்த்ரனின் செல்வத்தை அடைய எண்ணம் கொண்ட பின்னர் மங்களேசன் அரசனானான். அவன் கீழை மற்றும் மேலைகடல்களில் தன்னுடைய குதிரைப் படைகளை நிறுத்தியவன். திசைகளையே விதானமாக ஆக்கியவன்.

ஸ்பு²ரன்மயூகை²ரஸிதீ³பிகாஶதை​: வ்யுதா³ஸ்ய மாதங்க³தமிஸ்ரஸஞ்சயம்|

அவாப்தவான்யோ ரணரங்க³மந்தி³ரே கடச்சூரிஶ்ரீலலனாபரிக்³ரஹம்||  (12)

அவன் போராகிய மேடையில் கட(ல)ச்சூரி திருமகளின் கணவனான். எதிரிகளின் யானைகளாகிய இருளை ஒளிரும் கிரணங்களைக் கொண்ட வாட்களாகிய தீபங்களைக் கொண்டு போக்கியவன்.

புனரபி ச ஜிக்³ப்⁴ருʼக்ஷோஸ்ஸைன்யமாக்ராந்தஸாலம்ʼ

ருசிரப³ஹுபதாகம்ʼ ரேவதீத்³வீபமாஶு|

ஸபதி³ மஹது³த³ன்வத்தோயஸங்க்ராந்தபி³ம்ப³ம்ʼ

வருணப³லமிவாபூ⁴தா³க³தம்ʼ யஸ்ய வாசா|  (13)

       ரேவதீ என்னும் தீவு வெல்லும் திறனுடைய அவனால் வெல்லப்பட்டது. அப்போது அவன் சொல்லினால் வந்த படையானது மதிலை ஆக்ரமித்தது. அழகிய பல கொடிகளை உடையது. உடனேயே பெருங்கடலின் நீரில் எதிரொளிக்கும் வடிவத்தை உடையது. வருணனின் படையைப் போலத் திகழ்வது.

தஸ்யாக்³ரஜஸ்ய தனயே நஹுஷானுபா⁴வே

லக்ஷ்ம்யா கிலாபி⁴லஷிதே பொலேகிஶினாம்னி|

ஸாஸூயமாத்மனி ப⁴வந்தமத​: பித்ருʼவ்யம்ʼ

ஜ்ஞாத்வாபருத்³த⁴சரிதவ்யவஸாயபு³த்³தௌ⁴||  (14)

       அவனுடைய தமையனின் மகனும் நஹுஷனையொத்த சீர்மை கொண்டவனும் அரசத்திருமகளை விழைபவனுமான பொலேகேசியை சிறிய தகப்பனாக இருந்த அவனே வீட்டுக் காவலைப் போல பொறாமையால் நிறுத்திவைக்க முற்பட்டான்.

ஸ யது³பசிதமந்த்ரோத்ஸாஹஶக்திப்ரயோக³

க்ஷபிதப³லவிஶேஷோ மங்க³லேஶஸ்ஸமந்தாத்|

ஸ்வதனயக³தராஜ்யாரம்ப⁴யத்னேன ஸார்த்³த⁴ம்ʼ

நிஜமதனு ச ராஜ்யஞ்ஜீவிதஞ்சோஜ்ஜஹாதி ஸ்ம||  (15)

       புலகேசி மந்த்ராலோசனை, படையெழுச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தியபோது மங்களேசன் தனது மகனுக்காக அரசைப் பெறுவதற்கு முயற்சி செய்யும்போது அந்த முயற்சியையும் தன்னுடைய உயிரையும் அரசையும் இழக்கவேண்டியதாயிற்று.

தாவத்தச்ச²த்ரப⁴ங்கே³ ஜக³த³கி²லமராத்யந்த⁴கரோபருத்³த⁴ம்ʼ

யஸ்யாஶயப்ரதாபத்³யுதிததிபி⁴ரிவாக்ராந்தமாஸீத்ப்ரபா⁴தம்|

ந்ருʼத்யத்³வித்³யுத்பதாகை​: ப்ரஜவினி மருதி க்ஷுண்ணபர்ய்யந்தபா⁴கை³ர்க்³

க³ர்ஜ்ஜத்³பி⁴ர்வ்வாரிவாஸைரலிகுலமலினம்ʼ வ்யோம யாதம்ʼ கதா³ வா||  (16)

       அப்போது அந்த வெண்கொற்றக்குடை சற்றே ஓய்ந்திருந்தபோது உலகெலாம் எதிரியாகளால் சூழப்பெற்றிருந்தது. அவனுடைய எண்ணமாகிய வீரவொளியினால் காலைப்போழ்து சூழப்பெற்றிருந்தது. ஆனால் வானமோ ஆடும் மின்னலைப் போன்ற கொடிகளாலும் வேகமான காற்றாலும்  கர்ஜிக்கும் மேகங்களாலும் போல எதிரிகளாகிய வண்டுகளால் சூழப்பெற்றிருந்தது.

லப்³த்⁴வா காலம்ʼ பு⁴வமுபக³தே ஜேதுமப்பாயிகாக்²யே

கோ³விந்தே³ ச த்³விரத³னிகரைருத்தரம்ʼ பீ⁴மரத்²யா​:|

யஸ்யானேகைர்யுதி⁴ ப⁴யரஸஜ்ஞத்வமேக​: ப்ரயாதஸ்

தத்ராவாவாப்தம்ʼ ப²லமுபக்ருʼதஸ்யாபரேணாபி ஸத்³ய​:|| (17)

       அதைக் கனிந்த காலமாகக் கொண்டு அப்பாயிகன் மற்றும் கோவிந்தன் ஆகிய இருவரும் நாட்டை நெருங்கினர். அவர்கள் யானைத்தொகுதியோடு பீமரதியின் வடகரை வந்தனர். இவர்களில் ஒருவன் போரில் அச்ச சுவையை உணர்ந்தான். மற்றொருவனோ புலகேசிக்கு உதவி அதன் பலனை அடைந்தான்.

வரதா³துங்க³தரங்க³ரங்க³விலஸத்³க⁴ம்ʼஸாவலீமேக²லாம்ʼ

வனவாஸீமவம்ருʼத்³னதஸ்ஸுரபுரப்ரஸ்பர்த்³தி⁴னீம்ʼ ஸம்பதா³(| )

மஹதா யஸ்ய ப³லார்ண்ணவேன பரிதஸ்ஸஞ்சா²தி³தோர்வ்வீதலம்

ஸ்த²லது³ர்க்³க³ஞ்ஜலது³ர்க்³க³தாமிவ க³தம்ʼ தத்தத்க்ஷணே பஶ்யதாம்| (18)

அவன் அதன் பிறகு வனவாஸியை முற்றுகையிட்டான். அது வரதா நதியின் உயர்ந்த அலைகளாகிய மேடையில் விளையாடும் அன்னங்களின் தொகுதியை உடையது. தேவலோகத்தோடு செல்வத்தினால் போட்டியிடுவது. அவனுடைய படையாகிய கடலால் உலகையெல்லாம் சூழும்போது வனவாஸியிலுள்ள நிலக்கோட்டை நீர்கோட்டையைப் போலானது.

க³ங்கா³லுபேந்த்³ரா வ்யஸனானி ஸப்த ஹித்வா புரோபார்ஜ்ஜிதஸம்பதோ³பி|

யஸ்யானுப⁴வோபனதஸ்ஸதா³ஸன்னாஸன்னஸேவாம்ருʼதபானஶௌண்ட³​:|| (19)

ஏழுவிதமான குற்றங்களை நீக்கி முன்பே செல்வத்தை அடைந்தவர்களாயினும் கங்க வேந்தனும் ஆலுபவேந்தனும் அவனுடைய அனுபவத்தால் அவனை அண்டியவராய் அருகிலிருந்து பணிவிடைசெய்து அமுதத்தைப் பருகுவதில் திறனுடையோரானார்கள்.

கோங்கணேஷு யதா³தி³ஷ்டச²ந்த³த³ண்டா³ம்பு³வீசிபி⁴​:|

உத³ஸ்தாஸ்தரஸா மௌர்ய்யபல்வலாம்பு³ஸம்ருʼத்³த⁴ய​:||  (20)

       கொங்கண தேசத்தில் அவனால் ஆணையிடப்பெற்ற படையாகிய கடலலைகளால் மௌர்யராகிய குட்டைகளின் வலிமைகள் நிராகரிக்கப்பெற்றன.

அபரஜலதே⁴ர்லக்ஷ்மீம்ʼ யஸ்மின் புரீம்ʼ புரபி⁴த்ப்ரபே⁴

மத³க³ஜக⁴டாகாரைர்ன்னாவம்ʼ ஶதைரவம்ருʼத்³னதி|

ஜலத³படலானீகாகீர்ண்ணன்னவோத்பலமேசகஞ்

ஜலனிதி⁴ரிவ வ்யோம வ்யோம்னஸ்ஸமோப⁴வத³ம்பு³தி⁴​:||  (21)

       புரமெரித்த பரமனையொத்த அவன் மேலைக்கடலின் திருவைப் போன்ற புரியை மதயானைகளின் தொகுதிகள் நிறைந்த நூற்றுக்கணக்கான கப்பல்களோடு முற்றுகையிட்டான். அப்போது அந்தக் கடல் மேகங்களின் தொகுதிகள் நிறைந்த ஆகாயத்தைப் போலத் திகழ்ந்தது. ஆகாயமோ புதிய குவளை மலர்கள் நிறைந்த கடலைப் போன்று காட்சியளித்தது.

ப்ரதாபோபனதா யஸ்ய லாடமாலவகு³ர்ஜ்ஜரா​:|

த³ண்டோ³பனதஸாமந்தசர்ய்யாசார்ய்யா​: இவாப⁴வன்||  (22)

அவனுடைய வலிமையினால் வணங்கிய லாடர்களும் மாளவர்களும் குர்ஜரர்களும் படையினால் வெல்லப்பட்ட சிற்றரசர்களின் செயல்பாடுகளுக்கு ஆசிரியர்களைப் போலானார்கள்.

அபரிமிதவிபூ⁴திஸ்பீ²தஸாமந்தஸேனாமகுட மணிமயூகா²க்ராந்தபாதா³ரவிந்த³​:|

யுதி⁴ பதிதக³ஜேந்த்³ரானேகபீ³ப⁴த்ஸபூ⁴தோ ப⁴யவிக³லிதஹர்ஷோ யேன சாகாரி ஹர்ஷ​:(23)

       அளவற்ற செல்வமுடையவனும் செழித்த சிற்றரசர்களின் தொகுதியின் மகுடத்தின் மணியின் ஒளியால் நிறைந்த அடித்தாமரையை உடையவனும் போரில் வீழ்ந்த யானைகளால் நிலை தாழ்ந்தவனும் அச்சத்தால் ஹர்ஷத்தை – மகிழ்வை இழந்தவனுமாக ஹர்ஷ வர்த்தனன் ஆனான்.

பு⁴வமுருபி⁴ரனீகைஶ்ஶாஸதோ யஸ்ய ரேவா

விவித⁴புலினஶோபா⁴வந்த்³யவிந்த்⁴யோபகாந்த​:|

அதி⁴கதரமராஜத்ஸ்வேன தேஜோமஹிம்னா

ஶிக²ரிபி⁴ரிப⁴வர்ஜ்யோ வர்ஷ்மணா ஸ்பர்த⁴யேவ||  (24)

       உலகை வலிமையான படையால் அவன் ஆளும் போது ரேவா-நர்மதை விந்த்யத்தின் அருகே பலவிதமான மணல் திட்டுக்களின் அழகால் திகழும் அடிவாரத்தை உடைத்தும் தன்னுடைய வலிமையின் பெருமையாலும் உடலினாலும் விளங்கினாள். அங்கு அவனுடைய யானைகள் செல்லவில்லை. காரணம் விந்தியமலைக்கு அவை போட்டியாக விளங்கும் என்பதனால்.

விதி⁴வது³பசிதாபி⁴ஶ்ஶக்திபி⁴ஶ்ஶக்ர கல்ப

ஸ்திஸ்ருʼபி⁴ரபி கு³ணௌகை⁴ஸ்ஸ்வைஶ்ச மாஹாகுலாத்³யை​:|

அக³மத³தி⁴பதித்வம்ʼ யோ மஹாராஷ்ட்ரகாணாம்ʼ

நவனவதிஸஹஸ்ரக்³ராமபா⁴ஜாம்ʼ த்ரயாணாம்||  (25)

            இந்த்ரனையொத்த அவன் விதிப்படி மூவகை சக்திகளையும் உடையவனாய் பெருங்குலத் தோற்றம் முதலிய மூவகைக் குணங்களோடும்  அவன் தொண்ணூற்றொன்பதாயிரம் சிற்றூர்களை உடைய மூன்று மஹாராஷ்ட்ர பகுதிகளின் தலைவனாக ஆனான்.

க்³ருʼஹிணாம்ʼ ஸ்வஸ்வகு³ணைஸ்த்ரிவர்க்³க³துங்கா³ விஹிதான்யக்ஷிதிபாலமானப⁴ங்கா³​:|

அப⁴வன்னுபஜாதபீ⁴திலிங்கா³ யத³னீகேன ஸகோஶல​: கலிங்க³​:||  (26)

       கோசல நாடும் கலிங்க நாடும் முப்பொருளினால் உயர்ந்து விளங்கும் இல்லறத்தார்களையுடையவை. பிற அரசர்களின் பெருமையைச் சிதைத்தவை. ஆயினும் அவை அவனுடைய படையால் அச்சத்திற்குக் காரணமாய் ஆயின.

பிஷ்டம்ʼ பிஷ்டபுரம்ʼ யேன ஜாதம்ʼ து³ர்க்³க³மது³ர்க்³க³மஞ்சித்ரம்ʼ

யஸ்ய கலேர்வ்ருʼத்தம்ʼ ஜாதம்ʼ து³ர்க்³க³மது³ர்க்³க³மம்||  (27)

       அவனால் பிஷ்டபுரம் அரைக்கப்பெற்றது. கோட்டை செல்வதற்கு எளிதானதாக ஆக்கப்பெற்றது. ஆனால் கலிகாலத்தின் நடவடிக்கை மட்டும் செல்லவியலாத கோட்டையானது.

ஸன்னத்³த⁴வாரணக⁴டாஸ்த²கி³தாந்தராலம்ʼ நானாயுத⁴க்ஷதனரக்ஷதஜாங்க³ராக³ம்|

ஆஸீஜ்ஜலம்ʼ யத³வமர்த்³தி³தமப்⁴ரக³ர்ப⁴ம்ʼ கௌணாலமம்ப³ரமிவோஜிதஸாந்த்⁴யராக³ம்|(28)

குணாலமெனும் நீர்நிலையின் நீர் தயாராக நின்ற யானைகளின் தொகுதிகளாகிய மேகங்கள் நிறைந்ததும் பலவிதமான ஆயுதங்களால் வெட்டுண்ட குருதியின் நீரைப் பெற்றதுமாக மாலநேரத்து ஆகாயத்தைப் போலானது.

உத்³தூ⁴தாமலசாமரத்⁴வஜஶதச்ச²த்ராந்த⁴காரைர்ப்³ப³லை​: ஶௌர்ய்யோத்ஸாஹரஸோத்³த⁴தாரிமத²னைர்ம்மௌலாதி³பி⁴ஷ்ஷட்³விதை⁴​:|

ஆக்ராந்தாத்மப³லோன்னதிம்ʼ ப³லரஜஸ்ஸஞ்ச²ன்னகாஞ்சீபுர

ப்ராகாந்தரிதப்ரதாபமகரோத்³ய​: பல்லவானாம்ʼ பதிம்||  (29)

       அவன் பல்லவர்களின் தலைவனைக் காஞ்சியின் மதிலுக்குள் ஒளிந்தவனாக ஆக்கினான். அதற்கான அவனுடைய படை தூய்மையான சாமரங்களையும் கொடிகளையும் குடைகளையும் உடையது. தன்னுடைய வீரத்தின் உற்சாகத்தினால் மூலப்படை முதலிய ஆறுவிதமான படைகளால் எதிரிகளின் மதத்தை ஒழிப்பது. தன்னுடைய வலிமையான எழுச்சியாலும் படையின் தூளியாலும் பல்லவனை ஒளியவைத்தது.

காவேரீ த்³ருʼதஶப²ரீவிலேலனேத்ரா சோலானாம்ʼ ஸபதி³ ஜயோத்³யதஸ்ய யஸ்ய(| )

ப்ரஶ்ச்யோதன்மத³க³ஜஸேதுருத்³த⁴னீரா ஸம்ʼஸ்பர்ஶம்ʼ பரிஹரதி ஸ்ம ரத்னராஶே​:||  (30)

வெற்றியை விழையும் அவனுடைய படையினால் மீன்களையே கண்களாக உடைய சோழர்களின் காவேரியின் நீர் தடுக்கப்பெற்றாள். அவனுடைய யானைகளாகிய அணையினால் தடுக்கப்பெற்றவளான அவள் கடலோடு தொடர்பற்றுப் போனாள்.

சோலகேரலபாண்ட்³யானாம்ʼ யோபூ⁴த்தத்ர மஹர்த்³த⁴யே|

பல்லவானீகனீஹாரதுஹினேதரதீ³தி⁴தி​:||  (31)

       அவன் சோழர்கள். சேரர்கள், பாண்டியர்களின் செழுமைக்கும் பல்லவர் படைகளாகிய பனிக்கும் கதிரவனாய் ஆனான்.

உத்ஸாஹப்ரபு⁴மந்த்ரஶக்திஸஹிதே யஸ்மின் ஸமஸ்தா தி³ஶோ

ஜித்வா பூ⁴மிபதீன்விஸ்ருʼஜ்ய மஹிதானாராத்⁴ய தே³வத்³விஜான்|

வாதாபீன்னக³ரீம்ʼ ப்ரவிஶ்ய நக³ரீமேகாமிவோர்வ்வீமிமாம்ʼ

சஞ்சன்னீரதி⁴னீலனீரபரிகா²ம்ʼ ஸத்யாஶ்ரயே ஶாஸதி(32)

       அத்தகைய ஸத்யாச்ரயனான மன்னன், எழுச்சி, வலிமை, ஆலோசனை ஆகிய மூன்றுவித சக்திகளோடும் கூடியவனாய் எல்லாத் திசைகளையும் வென்றவனாய் வென்ற அரசர்களை விடுத்தவனாய் தெய்வம், அந்தணர் ஆகியோரைப் போற்றியவனாய் வாதாபி நகரில் நுழைந்து நீலக்கடலின் நீரையே அகழியாகக் கொண்ட உலகையெலாம் ஒரு நகரைப் போல பாதுகாக்கிறான்.

த்ரிம்ʼஶத்ஸு த்ரிஸஹஸ்ரேஷு பா⁴ரதாதா³ஹவாதி³த​:(| )

ஸப்தாப்³த³ஶதயுக்தேஷு க³தேஷ்வப்³தே³ஷு பஞ்சஸு||  (33)

       மஹாபாரதயுத்தம் நிகழ்ந்து மூன்றாயிரத்து எழுநூற்று முப்பத்தைந்து வருடங்கள் கடந்த பின்னர்

பஞ்சாஶத்ஸு கலௌ காலே ஷட்ஸு பஞ்சஶதேஷு ச(| )

ஸமாஸுஸமதீதாஸு ஶகானாமபி பூ⁴பு⁴ஜாம்||  (34)

       கலி காலம் தோன்றி சகவருடம் ஐந்நூற்று ஐம்பத்தாறு ஆண்டுகள் கடந்த பின்னர்..

தஸ்யாம்பு³தி⁴த்ரயனிவாரிதஶாஸனஸ்யஸத்யாஶ்ரயஸ்ய பரமாப்தவதா ப்ரஸாத³ம்|

ஶைலஞ்ஜினேந்த்³ரப⁴வனம்ʼ ப⁴வனம்ʼ மஹிம்னான்னிர்மாபிதம்மதிமதா ரவிகீர்த்தினேத³ம்35

மூன்று கடல் வரை பரந்த ஆணையுடைய ஸத்யாச்ரயன் அருளைப் பெற்றவனான ரவிகீர்த்தி என்பவரால் ஜினேந்த்ரனுக்கு மலையை ஒத்த தளி எடுப்பிக்கப் பெற்றது.

ப்ரஶஸ்தேர்வ்வஸதேஶ்சாஶயா​: ஜினஸ்ய த்ரிஜக³த்³கு³ரோ​:

கர்த்தா காரயிதா சாபி ரவிகீர்த்தி​: க்ருʼதீ ஸ்வயம்||  (36)

       மூவுலகிற்கும் குருவான ஜினருக்கு இத்தகைய ப்ரசஸ்தியைச் செய்தவனும் செய்வித்தவனும் அறிஞனான ரவிகீர்த்தியே ஆவான்.

யேனாயோஜி நவேஶ்ம ஸ்தி²ரமர்த்த²விதௌ⁴ விவேகினா ஜினவேஶ்ம|

ஸ விஜயதாம்ʼ ரவிகீர்த்தி​: கவிதாஶ்ரிதகாலிதா³ஸபா⁴ரவிகீர்த்தி​:||  (37)

அந்த ரவிகீர்த்தி ஜினருக்கு தளியை திடமாக எடுப்பித்தான். காளிதாஸனுக்கும் பாரவிக்குமான புகழையுடைய அந்த ரவிகீர்த்தி வெல்லட்டும்.

                இந்தக் கல்வெட்டு பலவிதங்களில் இன்றியமையாததாகத் திகழ்கிறது. புலகேசியின் தந்தையான கீர்த்தி வர்மன் நளமௌர்ய கதம்பர்களை வென்றமையையும் மங்களேசன் கலச்சூரி அரசை வென்றமையையும் ரேவதித் தீவை கைக்கொண்டமையும் இந்தக் கல்வெட்டால் அறியக்கிடக்கிறது. மங்களேசன் தனது மகனுக்காக புலகேசியோடு பகைத்து அவனை வீட்டுச்சிறை வைக்க முற்பட்டமை அதிலிருந்து மீண்ட புலகேசி படை பெருக்கி போரிட்டு மங்களேசனைக் கொன்று அரசை மீட்டமை இந்தக் கல்வெட்டின் மூலமே அறியக்கிடக்கிறது என்பதும் சிறப்பான செய்தி. அத்தகைய நேரத்தில் அப்பாயிகன் கோவிந்தன் ஆகியோர் ஊடுருவ முற்பட்டதையும் இருவரையும் பிரித்து புலகேசி கைக்கொண்ட தன்மையும் இதன் மூலம் தெளிவாகிறது. வனவாஸியை வென்று கொங்கணம், மஹாராஷ்ட்ரம் ஆகியவற்றைத் தன்னடி செய்து ஹர்ஷவர்தனனையும் தடுத்து நிறுத்திய தன்மை இந்தக் கல்வெட்டின் மூலம் தெளிவாகிறது. கோசல கலிங்க நாடுகளை வென்று ஆந்திரத்தின் பிஷ்டபுரத்தையும் வென்றவன் புலகேசி. அதன் பிறகு காஞ்சியை வெல்ல முயன்று பல்லவரை கோட்டையினுள் ஒளிய வைத்தவன். சோழநாடு வரை போந்து காவேரியைத் தன் யானைகளையே பாலமாக நிறுத்தி கடந்து சென்றமையும் இந்தக் கல்வெட்டால் அறியக்கிடக்கிறது. தமிழ்வேந்தர் மூவரும் செழுமையடையும் வண்ணம் பல்லவரைத் தோற்கடித்தான் என்னும் கூற்றிலிருந்து புலகேசி தமிழ் வேந்தருடன் கூட்டணி அமைத்திருக்கலாம் என்னும் கருத்தை சில ஆய்வறிஞர்கள் முன்வைக்கின்றனர்.

            மேலும் இந்தக் கல்வெட்டின் காலம் பொயு 634 என்பதால் காஞ்சியைக் கைப்பற்ற புலகேசி போரிலீடுபட்ட காலம் 630- ஒட்டி அமையலாம் என்பதால் இதனைக் கொண்டே மஹேந்த்ர பல்லவனின் இறுதிக்காலமும் தீர்மானிக்கப் பெற்றுள்ளது.

            இந்தக் கல்வெட்டே காளிதாஸனைக் குறிப்பிடும் கல்வெட்டு என்பதால் காளிதாஸனின் காலத்தை நிர்ணயிக்க இந்தக் கல்வெட்டு காளிதாஸனின் காலத்தின் இறுதியெல்லையாக அமைகிறது. இதனை யாத்த ரவிகீர்த்தி தன்னைக் காளிதாஸனுக்கும் பாரவிக்கும் உவமானமாகக் கூறிக் கொள்கிறான்.

புகைப்பட உதவி – ஸ்ரீ. ரவிசங்கர் அவர்கள்

Please follow and like us:

3 thoughts on “இரண்டாம் புலகேசியின் ஐஹோளெ கல்வெட்டு

  1. Good research. Keep it up sir. We need more such informations to filup many gaps in Chola’s history.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *