சோழர்தம் ராஜகுருமார்களும் அகோரசிவாசார்ய பத்ததியும்

rajaraja_guru

இந்திய வரலாற்றில் பலவிதமான ராஜகுருமார்களைப் பற்றிய தரவுகள் கிடைக்கின்றன. சைவமதத்தின் அடியவர்களான சோழவேந்தர்களும் தத்தமது அறச்செயல்களுக்கு வழிகாட்டியாக நியமித்தனர். அத்தகைய ராஜகுருமார்கள் அவர்தமது கல்வெட்டுக்களிலிருந்து வெளிச்சத்துக்கு வருகின்றனர். இத்தகைய ஆசார்யர்களது இலக்கணம் தர்ம மற்றும் அர்த்த சாஸ்த்ரங்களில் சிறப்பாக விளக்கப்பெற்றிருக்கிறது. பின்வரும் பட்டியல் சோழவரசர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்கள். மன்னர் ஆசார்யர் காலம் கல்வெட்டு ராஜராஜன் I ஈசான சிவர் பொயு 1000 தஞ்சாவூர் ராஜேந்த்ரன் I சர்வசிவர் பொயு 1020 தஞ்சாவூர் குலோத்துங்கன் I ஸ்ரீகண்டசிவர் பொயு…

தொடர்ந்து வாசிப்பு

அரங்கநாதருக்குக் கொடையளித்த கலைஞன்

                பின்வரும் வடமொழிச் செய்யுள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் இரண்டாம் ப்ராகாரத்தின் தென்புறச்சுவரில் கல்வெட்டாக அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு ஒரு தமிழ்க்கல்வெட்டை அடுத்து அதன் மொழிபெயர்ப்பாக அமைந்துள்ளது. தமிழ்ப்பகுதியிலுள்ள வானியற்குறிப்புக்களைக் கொண்டு இதன் காலமாக பொயு 1270 மார்ச் 24 எனத் தீர்மானிக்க இயல்கிறது.      இந்தக் கல்வெட்டு 1892 ஆமாண்டு தொல்லியல்துறை அறிக்கையில் 51 ஆம் எண்ணோடு தெரிவிக்கப் பெற்றுள்ளது. பிறகு தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி நான்கில் 499 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றது. இந்தக் கல்வெட்டு…

தொடர்ந்து வாசிப்பு

மேலைச் சாளுக்ய பேரரசின் பெண்ணரசி

vijaya

     முதலாம் நரஸிம்ஹ பல்லவன் மேலைச் சாளுக்யர் தம் கோநகராம் வாதாபியைத் தூளாக்கி எரிகொளுவிய செய்தியை நாமறிவோம். ஈடற்ற பேரரசனாகத் திகழ்ந்த இரண்டாம் புலகேசியும் கூட அவனது கரங்களால் மாண்டுபட்டான். இவ்விரு செய்திகளும் வாதாபியிலுள்ள பொயு 642 இல் பொறிக்கப்பெற்ற பல்லவ சாஸனத்தாலும் அவர்தம் குலச் செப்பேடுகளாலும் உய்த்துணரக் கிடக்கிறது. இரண்டாம் புலகேசியின் மரணத்திற்குப் பிறகு அவனுடைய மகன்களான ஆதித்யன், சந்த்ராதித்யன் மற்றும் முதலாம் விக்ரமாதித்யன் ஆகியோர் நெருக்கடியில் சிக்கித் தவித்தனர். விக்ரமாதித்யனின் ஹொன்னூர் செப்பேட்டில் இவர்களின்…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – தாமிரம்

copper2

     தாமிரம் செப்புப்பெருங்காலத்திலிருந்தே மனிதனின் பயன்பாட்டிலுள்ளது. ஆகவே இது எழுதுதற்கும் மிகப்பழங்காலத்திலிருந்தே பயன்பட்டு வந்திருக்கிறது. தாமிரத்தை அடித்துத் ஏடுகளாக்கி எழுத்துக்களைப் பொறிப்பர். பழங்காலத்துச் செப்பேடுகளில் குறிப்பாக தக்ஷசிலாவின் செப்பேடும் மேலைக்கங்கர்களின் செப்பேடுகளும் பனையோலைகளின் வடிவிலேயே அமைந்துள்ளன. வட இந்திய செப்பேடுகள் தென்னிந்திய செப்பேடுகளைக் காட்டிலும் அகலமாக அமைந்துள்ளன. செப்பேட்டாவணம் பல செப்பிதழ்களைக் கொண்டிருக்கும். இவற்றை ஒன்றிணைத்து அவற்றின் தலைப்பகுதியிலேயோ அல்லது இடப்புறத்திலேயே ஒரு துளையிட்டு அதன் வழியாக ஒரு பித்தளையிலான கம்பியைக் கொடுத்து  அந்தக் கம்பியின் முனைகளை…

தொடர்ந்து வாசிப்பு

கண்ணபிரானும் ஜல்லிக்கட்டும் – நப்பின்னை யார்

nila

ஏறுதழுவல் தமிழகத்தின் தொன்று தொட்ட வீரவிளையாட்டுக்களில் ஒன்றென்றும் இதில் வெற்றிபெறுபவருக்கு ஏறுடையார் பெண்ணை ஈந்தளிக்கும் வழக்கமுண்டு என்பதையும் நாமறிவோம். இந்த விளையாட்டு இந்நாளில் ஜல்லிக்கட்டு என வழங்கப்பெறுகிறது. இத்தகையதோர் வீரவிளையாட்டு கண்ணபிரானின் திவ்யசரிதையிலும காணப்பெறுகிறது. ஹரிவம்ச புராணமும் பாகவதபுராணமும் இந்தச் செய்தியைத் தருகின்றன. கும்பகன் என்பான் நந்தகோபனுடைய மைத்துனன். அவன் பெறும் ஆவின் செல்வத்தோடு மிதிலையில் வாழ்ந்து வந்தான். அவன் யசோதைக்கு இளைய தம்பி. அவனுடைய மனைவியின் பெயர் தர்மதா என்பதாகும். அவனுக்கு ஸ்ரீதாமன் என்னும் மகனும்…

தொடர்ந்து வாசிப்பு