முதலாம் மஹேந்த்ர பல்லவரின் சேஜர்லா கல்வெட்டு

     இந்த வடமொழிக் கல்வெட்டு அறிஞர்களால் மிக அரிதாகவே எடுத்தாளப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு ஆந்திரமாநிலம் குண்டூர் மாவட்டம் நரஸராவ் தாலுகாவிலுள்ள சாஸர்லாவிலுள்ள ஸ்ரீகபோதேச்வரர் கோயிலில் முன்னுள்ள நந்தி மண்டபத்தில் உள்ள கற்பலகையில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு பெரும்பாலும் அழிந்திருந்தாலும் சிறு சிறு பகுதிகளோ படிக்கவும் புரிந்து கொள்ளவும்  இயலும் வகையில் அமைந்திருந்தாலும் கூட இந்தக் கல்வெட்டு முக்கியமானதாகும். காரணம் இந்தக் கல்வெட்டு அமைந்திருப்பதால் இந்தப் பகுதியில் பல்லவர்களின் அரசு கோலோச்சியது என்பதை உய்த்துணரவியல்கிறது. ஆகவே இந்தப் பகுதியை இரண்டாம் புலகேசி ஆனந்தர்கள் அல்லது விஷ்ணுகுண்டிகளிடமிருந்தில்லாமல் பல்லவர்களிடமிருந்தே கைப்பற்றியிருக்கவேண்டுமென்கிற கருத்து உறுதிப்படுகிறது. இந்தக் கல்வெட்டில் அவனிபாஜனன், வேகவதீ ஸனாதன், மஹேந்த்ர விக்ரம வர்மன் என்று அரசனின் பெயர் குறிப்பிடப்பெற்றிருப்பதால் இந்தக் கல்வெட்டு முதலாம் மஹேந்த்ர வர்மனுடையதாக அடையாளம் காட்டப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு ஸ்ரீகபோதேச்வரரின் திருக்கோயிலை எடுப்பித்தமையையும் அங்கு பன்னிரண்டு தேவகர்ம்மிகளை நியமித்ததையும் கூறாநிற்கிறது. இந்தக் கல்வெட்டு தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி ஆறில் 595 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு வடமொழியிலானது. ஏழாம் நூற்றாண்டு தெலுகு வரிவடிவத்தில் செதுக்கப்பெற்றுள்ளது.

Amvar_Chejerla_Kapoteswara_temple_in_guntur_districtAmvar_Chejerla_Kapoteswara_temple_in_guntur_district_1

Amvar_Chejerla_Kapoteswara_temple_in_guntur_district_2 Amvar_Chejerla_Kapoteswara_temple_in_guntur_district_3

வரி 1-5: Damaged
வரி 6 : … चरणविमलकमलयुगळवहन……तिभृ
வரி 7: ……… नस्तकरः शिखरकरपरि…… (नदी)
வரி 8: …. भाजः ….. लोकपालपालित….लोकपालप..
வரி 9: ….न्द्याम …लेश्वरमस्य पुनरपि द्वार….सुर
வரி 10: …………………………… परमजनप्रकथितगुणगण…..त…वामनिकर
வரி 11: ….लिनाग…प्रता…..जटाकलापावसक्तावशिष्टगंगातरंगमा
வரி 12: लान्धकारि…… भक्तिवृत्तिना योगाभ्यासवशिना शशिना
வரி 13: ………………… स्थानमधिवसतः…. कपोतस्य कपोतवृत्तेर्महाप्र
வரி 14: …………………. भिहितनामधेयभवनं भुवनत्रय….
வரி 15: …विश्रुतेस्य ….कपोतेश्वर……..रकरः कारणान्तरैरस्तमित
வரி 16: …………………………… गंग…… दण्डकामित्र….शिष्टमत….
வரி 17: ………………………….. सादितस्तत्प्रसादपूर्व्वकं स
வரி 18: …………. श्वरे श्री………….श्वर इदानीमेतदवस्थान….
வரி 19: …………………. (कृ)ताभिसन्धिसहायस्य..
வரி 20: ……………. चरणविमलकमल…
வரி 21: भारद्वाजसगोत्राणां…… परिवृद्धवल्लभानां
வரி 22: ………… मललोल विमल………………रगुणगण
வரி 23: ……….. स्वतेजोवि……………………………………..
வரி 24: …………………नय…………………………………..
வரி 25: ………….. रितटीदेव……………..त……….लमार्य्य
வரி 26: …………. नयनहरिशरीरप्रादुर्भावादति………………..
வரி 27: …………… वीतनदवनिभाजनजय………………
வரி 28: …………….भट्टारक पादानुध्यातैर्म्म……………
வரி 29: …………..  महेन्द्रविक्रममहाराज…………………
வரி 30: ………… वृ………ग्धविलासिनी…………………
வரி 31: …………….. वेगवतीसनाथकम……………..
வரி 32: ………… गुरुपरम्पर…………….
வரி 33: …………….. राजभुक्तिभा………..
வரி 34: ……….व…………मा…………..
வரி 35: ……… जलधर…………
வரி 36: …………………………………..
வரி 37: ……………………………
வரி 38: श्रीकपोतीस्वराध्यक्षद्वादशदेवकर्म्मिभ्यः
வரி 39: ………………………… गत(वेश्या.) हे सदा
வரி 40: ………….. भरदत्त……… इदमाचार्य्यभु……….. ज
வரி 41: ………. र्य्यस्य शासनं रक्षत्वाचन्द्रतारकम्।

… சரணவிமலகமலயுக³ளவஹன……திப்⁴ருʼ……… நஸ்தகர​: ஸி²க²ரகரபரி…… (நதீ³)…. பா⁴ஜ​: ….. லோகபாலபாலித….லோகபாலப……ந்த்³யாம … லேஸ்²வரமஸ்ய புனரபி த்³வார….ஸுர…………………………… பரமஜனப்ரகதி²த கு³ணக³ண…..த…வாமனிகர….லினாக³…ப்ரதா…..ஜடாகலாபாவஸக்தாவஸி²ஷ்டக³ங்கா³தரங்க³மாலாந்த⁴காரி…… ப⁴க்திவ்ருʼத்தினா யோகா³ப்⁴யாஸ வஸி²னா ஸ²ஸி²னா………………… ஸ்தா²னமதி⁴வஸத​:…. கபோதஸ்ய கபோத வ்ருʼத்தேர்மஹாப்ர…………………. பி⁴ஹிதனாமதே⁴யப⁴வனம்ʼ பு⁴வனத்ரய……. விஸ்²ருதேஸ்ய ….கபோதேஸ்²வர……..ரகர​: காரணாந்தரைரஸ்தமித …………………………… க³ங்க³…… த³ண்ட³காமித்ர….ஸி²ஷ்டமத …………………….. ஸாதி³தஸ்தத்ப்ரஸாத³பூர்வ்வகம்ʼ ஸ…………. ஸ்²வரே ஸ்ரீ………….ஸ்²வர இதா³னீமேதத³வஸ்தா²ன…………………….. (க்ருʼ)தாபி⁴ஸந்தி⁴ ஸஹாயஸ்ய ……………… சரணவிமலகமல… பா⁴ரத்³வாஜஸகோ³த்ராணாம்ʼ…… பரிவ்ருʼத்³த⁴வல்லபா⁴னாம்ʼ ………… மலலோல விமல………………ரகு³ணக³ண……….. ஸ்வதேஜோவி………………………………………………….. நய………………………………………………. ரிதடீதே³வ……………..த……….லமார்ய்ய…………. நயனஹரிஸ²ரீரப்ராது³ர்பா⁴வாத³தி…………………………. வீதனத³வனிபா⁴ஜனஜய ………………ப⁴ட்டாரக பாதா³னுத்⁴யாதைர்ம்ம……….மஹேந்த்³ரவிக்ரமமஹாராஜ …………….. வ்ருʼ………க்³த⁴விலாஸினீ……………………………….. வேக³வதீஸனாத²கம ……………………….. கு³ருபரம்பர…………………………… ராஜபு⁴க்திபா⁴……….. ……….வ…………மா………………….. ஜலத⁴ர…………………. ஸ்ரீகபோதீஸ்வராத்⁴யக்ஷ த்³வாத³ஸ²தே³வகர்ம்மிப்⁴ய​: ………………………… க³த(வேஸ்²யா.) ஹே ஸதா³………….. ப⁴ரத³த்த……… இத³மாசார்ய்யபு⁴……….. ஜ………. ர்ய்யஸ்ய ஸா²ஸனம்ʼ ரக்ஷத்வாசந்த்³ரதாரகம்|

….தூய திருவடித்தாமரைகளைத் தாங்கும்…. முதலிய …  சிகரத்தின் அருகில்…. ஆறு… உடையவர்…. திசைக்காவலர்களால் காக்கப்பெற்ற… திசைக்காவலர்…. … மீண்டுமிந்த கதவு… தேவர்…… நல்லோரால் புகழப்பெற்ற நற்பண்புகளை…… குழுவான….. தனது ஜடைத்தொகுதியிலிருந்து வழிந்தோடும் கங்கையின் அலைகளால் இருட்டின் மாலையைத் தோற்றுவிக்கும்……. பக்திபூண்டொழுகும் யோகப்பயிற்சியினால் தன்னடக்கமுடைய… சந்திரனால்…. இடத்தில் உறையும்….. புறாவையொத்த கபோதேசருக்கு …என்னும் பெயருடைய கோயில் மூவுலகிலும்….. புகழப்பெற்ற …. கபோதேச்வரர் ……….. பிற காரணங்களால் அஸ்தமித்த. ….. தண்டகாமித்ர…. நல்லோர்களால் ஒப்புக்கொள்ளப்பெற்ற …. அளிக்கப்பெற்றது. அவர் அருளோடு கூட…… ஸ்ரீ…. ச்வரத்தில் இப்போது நிலையான …. உடன்படிக்கைசெய்ய உதவிசெய்த …  தூய அடித்தாமரை … பாரத்வாஜஸ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களும் … வல்லபர்கள் பெருகவும்…. அலையும் தூய ………. நற்பண்புகளின் தொகுதி …. தன் வலிமையால் வென்ற ……….. நீதி …… கரையில் ……….. ஆர்ய்ய …. திருமாலின் உடலிலிருந்து தோன்றிய  ……… அவனிபாஜன ஜய ……..பட்டாரகரின் பாதத்தில்  த்யானம் செய்பவர்களும் ………… மஹேந்த்ர விக்ரம மஹாராஜர் ……….. செழித்த அழகிகள் ……… வேகவதியையுடையவர் ……….. குரு பரம்பரை……….. கோக்கொள்ளத்தக்க…. மேகம்……….. ஸ்ரீகபோதீச்வரருக்கு தலைமை அதிகாரியும் பன்னிரண்டு தேவகர்மிகளும் ………… தேவதாஸி….. எப்போதும்………. இந்த ஆசார்ய போகம்………… இந்த சாஸனத்தை சந்திரனும் விண்மீன்களும் உள்ளவரையில் காக்கட்டும்.

     இதன் துவக்கப்பகுதி கபோதேச்வரத்தில் உறையும் சிவபெருமானைப் போற்றுகிறது. அவர் கங்கையைத் தாங்கியவர். சிறந்த யோகி என்றெல்லாம் கூறுகிறது. மீதிப் பகுதிகள் அரசன் கபோதேச்வரத்தை எடுப்பித்து அதற்கு அதிகாரிகளை நியமித்தமையைக் கூறுகிறது.

     இதிலிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளும் இன்றியமையாதவை. இந்தக் கல்வெட்டு பொயு 600-ஐச் சேர்ந்ததென்று அறிஞர்கள் கருதுகின்றன. ஆனால் இந்தக் கல்வெட்டு வல்லபர்கள்(சாளுக்யர்கள்) வளர்ந்து வருவதைக் குறிக்கிறது. இதில் குறிப்பிடப்பெற்றிருக்கும் வல்லபர்கள் சாளுக்யர்களே என்பது உண்மையானால் இந்தக் கல்வெட்டு இரண்டாம் புலகேசி பட்டமேற்ற பொயு 610-க்குப் பிறகானதாக இருக்கவேண்டும். காரணம் இரண்டாம் புலகேசிக்கு முன்னாண்ட மங்களேசன் வடபுலத்தின் மீதே பார்வை கொண்டிருந்தான். ஆகவே வளர்ந்து வரும் வல்லபர்கள் என்று பல்லவர்கள் குறித்த சாளுக்யன் இரண்டாம் புலகேசியே ஆகவேண்டும் என்பதால் இது 610க்குப் பிறகானதாகவே கொள்ளவேண்டும்.

     மஹேந்த்ர பல்லவன் ஒரு கோயில் எடுப்பித்தமைக்கு இந்தக் கல்வெட்டு ஆவணமாக உள்ளது. ஆயினும் இந்தக் கல்வெட்டு செங்கற்களாலோ அல்லது வேறு பொருளாலோ எடுப்பிக்கப்பெற்றிருக்க வேண்டும். காரணம் இப்போதுள்ள அமைப்பு பிற்காலத்தில் புதுப்பிக்கப்பெற்றதேயாகும். ஆகவே மஹேந்த்ர பல்லவன் குடவரைகளை எடுப்பித்தபோதே கட்டுமானக் கோயில்களையும் எடுப்பித்தான் என்பது இந்தக் கல்வெட்டின் மூலம் அறியக்கிடக்கிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *