ஆந்திரமாநிலம் குண்டூர் மாவட்டத்திலுள்ள மஞ்சிக்கல்லு என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டே பல்லவர்களின் மிகப்பழமையான கல்வெட்டாகக் கருதப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு ஐந்து வரிகளைக் கொண்டது. இதன் சில பகுதிகள் சிதைந்திருக்கின்றன. இதில் தெலுகு – கன்னட வரிவடிவத்திற்கு மூலமான தென்னிந்திய ப்ராஹ்மியில் எழுத்துக்கள் அமைந்துள்ளன. ப்ராக்ருத மொழியில் இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு பல்லவர்குலத்தின் மிக மூத்த மன்னவனான ஸிம்ஹவர்மனின் காலத்தியது. இந்தக் கல்வெட்டின் காலம் பொயு 320 என நிர்ணயிக்கப்பெற்றுள்ளது.
இந்தக் கல்வெட்டின் நோக்கம் ஜீவசிவஸ்வாமியின் கோயிலில் இருந்தோர்களுக்கு விரிப்புக்கள், உணவு மற்றைய தேவைகளையும் ஸிம்ஹவர்மன் வழங்கியதேயாகும்.
Line 1: | सिद्धम्। भारदायसगोत्तेन ……….. (ध)रेण पल्लवाणं सिह |
Line 2: | वर्म्मण अप्पणो वैजयिके … (लव)र्द्धन्तिके संतिसथि |
Line 3: | यायणं कातूण भगव(तो)……. (जीवशि)वसामिस तेथिक |
Line 4: | न कुर्त्तकोपाहारकादि कातम्। किहदेवकुलस भट्टा………. |
Line 5: | ……………….. (स) पाद(मूले)………………. |
सिद्धम्। भारदायसगोत्तेन ……….. (ध)रेण पल्लवाणं सिहवर्म्मण अप्पणो वैजयिके … (लव)र्द्धन्तिके संतिसथियायणं कातूण भगव(तो)……. (जीवशि)वसामिस तेथिकन कुर्त्तकोपाहारकादि कातम्। किहदेवकुलस भट्टा………………………… (स) पाद(मूले)……………….
வடமொழியாக்கம்.
ஸித்³த⁴ம்| பா⁴ரத்³வாஜஸகோ³த்ரேண … த⁴ரேண பல்லவானாம்ʼ ஸிம்ʼஹவர்ம்மணா ஆத்மன: வைஜயிகம்ʼ த⁴ர்மப³லவார்த⁴னிகம்ʼ ஸா²ந்திஸ்வஸ்த்யயம்ʼ க்ருʼத்வா ப⁴க³வத:. … ஜீவஸி²வஸ்வாமின: தைர்தி²கேப்⁴ய: குர்தகோபஹாரகாதி³ க்ருʼதம்|
கிஹத்தி²தே³வகுலஸ்ய ப⁴ட்டாரக…. ஸ்ய பாத³மூலே|
சிறக்கட்டும். பாரத்வாஜஸ கோத்ரத்தைச் சேர்ந்தவனும் …. தரித்தவனுமான பல்லவர் குலத்தின் ஸிம்ஹவர்மனால் தன்னுடைய வெற்றியாட்சியாண்டில் அறம், வலிமை, வளர்ச்சி ஆகியவற்றைப் பெருக்கும் நோக்கோடு சாந்தி மற்றும் ஸ்வஸ்தி கர்மாக்களைச் செய்து இறைவனான ஜீவசிவஸ்வாமியின் தீர்த்தத்தில் இருப்போருக்கு விரிப்பு, உணவு மற்றும் மற்றைய தேவைகளை வழங்க் பெற்றது.
கிஹத்தியிலுள்ள கோயிலின் பட்டாரகரின் பாதமூலத்தில் ………..
இந்தக் கல்வெட்டே பல்லவர் குலத்தின் முதற்கல்வெட்டாகக் கருதப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டின் இரு முக்கிய கூறுகள் பல்லவர்களின் துவக்க ஆட்சிப் பகுதியை அடையாளம் காட்டுவதும் இந்தக் கல்வெட்டின் காலத்தில் சிவபெருமானுக்கான கோயில் இருந்ததுமேயாகும். ஜீவசிவஸ்வாமி என்னும் பெயர் சிவபெருமானுக்கான கோயிலையே குறிப்பதாகக் கொள்ளவேண்டும். ஆகவே பல்லவர்கள் துவக்க காலத்திலிருந்தே சைவ மதத்தவர்கள் என்பது தெளிவாகிறது. இதே கருத்து அவர்கள் பரமமாஹேச்வரர்கள் என்று குறித்துக் கொள்வதாலும் உறுதியாகிறது.
மகேந்திரவர்மன் அப்பரைக் கொடுமைப்படுத்தினார் என்றும் சமணராக இருந்த அவரை அப்பரே சைவராக்கினார் என்றும் பெரியபுராணவழிக் கூறப்படுகிறது.ஆனால் அவர் கபாலிகத்தை எதிர்த்ததாக மகேந்திரனின் மத்தவிலாச பிரகசனம் வழி அறிகிறோம்.மகேந்திரன் சமணத்துக்கு மாறியிருப்பானோ?