முதலாம் மஹேந்த்ர பல்லவனின் மாமண்டூர் கல்வெட்டு

ஏழாம் நூற்றாண்டின் இணையற்ற வேந்தர்களுள் ஒருவனான மஹேந்த்ர பல்லவன் பல்லவ தேசத்தை நாற்பது ஆண்டுகளேனும் ஆண்டிருக்க வேண்டும். அவனுடைய கல்வெட்டுக்கள் பல இடங்களிலும் கிடைத்துள்ளன. அவனால் கட்டப்பெற்ற குடவரைக் கோயில்களும் அவனுடைய கல்வெட்டுக்களைத் தாங்கியுள்ளன. அத்தகைய குடவரைகளுள் ஒன்று மாமண்டூரில் அமைந்துள்ளது. இது ருத்ரவாலீச்வரம் என்று சோழர் கால கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு முழுதும் தேய்ந்திருந்தாலும் கூட இது மஹேந்த்ரன் இயற்றிய நூல்களின் பெயர்களைத் தருவதால் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தக் கல்வெட்டு 1888 ஆமாண்டு தொல்லியல் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பெற்றது. தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி நான்கில் மூலம் மட்டுமாகப் பதிப்பிக்கப்பெற்றது. இந்தக் கல்வெட்டு வடமொழியிலும் க்ரந்த லிபியிலும் அமைந்துள்ளது.

mamandur

Line 1 : अविनीत असमृद्ध…….. वृत्तमस्य विज…………. गन्धर्वशास्त्रमखिल …….. खिल मुखोद्भूत…
Line 2 : ………… प्राजापत्य ताद्भावतागमनः पण्डुंगन्धाना… म्पाञ्चालनिर्मिमित
Line 3 : ख्य…….. ता….त्ता…….. (षिकेतुन)…. मनोभिराम…. मं … वाल्मीकिवर्ण्णित
Line 4 : भरतानायक………… सभा………… वस्त्रापहार . पूणां वज्रसायकः
Line 5 : . मकृत…..न्धतचेर…………………… मुदारार्थमुर्व्वशी सर्व्वशोभना………..
Line 6 : ………… वरीञ्च नाटकम्। व्यासकल्पस्य ………… भगवदज्जुक….. मत्तविलासादिपदम्प्रहसनोत्तमम्
Line 7 : …र्ण्णम्प्रभृत………… समुत्तेजित……….. तुष्टय……….. ज(यस्य)पत्युश्शत्रुमल्लमस्य भूभुजः
Line 8 : …….. यभ्रमरीवाप्तसम्मदाः। या कवीनाम्प्रकाश .. वत्त……………. (म्प)त्तिस्समबुद्धिरिव स्थिता।
Line 9 : ……………. गुरुस्वरवर्ण्णया पुरा तस्यां कविगिरजास्यार्त्थवतां …… आपुष्णुश्शिष्यत्वमेयुषः।
Line 10 : ……. प्रज्ञापतिसमन्विताम्। प्रा………..णोत…………….ज्याया स्वय…….
Line 11 : …. कल्पात्प्रविवर्ज्ज्यवृत्तिदक्षिणिचित्राख्य………. यित्वा यथाविधि
Line 12 : .. श्च विविधैः कृत्वा वर्ण्णचतुर्त्थ..। अप्राप्तपूर्व्वन्निर्वेष्टुवाद्यश्रवण……….. कृतवतीव….
Line 13 : श्रीकण्ठश्रुतिगुणावसाधारणसम्पदा। दृष्ट्वेवोत्कर्षेण न……… यिनी क्षेव…
Line 14 : ..यतो विसंवादं लक्ष्म्या मनोत्सुकतया।। यस्याश्शीलविशेष……… . यायत.. या दत्तमन्न
Line 15 : के… कान्ति यथार्त्थेन चन्द्रलेखेव या गता गात्रन्धह………. त….. शास्त्रेषु नित्याविहितबुध…
Line 16 : येषु परां प्रीतिं…. पञ्च .. (स्य) वपुषः। नित्यविनीतेन सत्यसं… स्य भक्त्यावर्ज्जितमौळिना
Line 17 : सहस्र… सम्पूर्णमेघश्यामस्य गर्जि………… क्षि… . पत वतया..

அவினீத அஸம்ருʼத்³த⁴…….. வ்ருʼத்தமஸ்ய விஜ…………. க³ந்த⁴ர்வஸா²ஸ்த்ரமகி²ல …….. கி²ல முகோ²த்³பூ⁴த…………… ப்ராஜாபத்ய தாத்³பா⁴வதாக³மன​: பண்டு³ங்க³ந்தா⁴னா… ம்பாஞ்சாலனிர்மிமித..க்²ய…….. தா….த்தா…….. (ஷிகேதுன)…. மனோபி⁴ராம…. மம்ʼ … வால்மீகிவர்ண்ணிதப⁴ரதானாயக………… ஸபா⁴………… வஸ்த்ராபஹார . பூணாம்ʼ வஜ்ரஸாயக​:. மக்ருʼத…..ந்த⁴தசேர…………………… முதா³ரார்த²முர்வ்வஸீ² ஸர்வ்வஸோ²ப⁴னா………………….. வரீஞ்ச நாடகம்|  வ்யாஸகல்பஸ்ய ………… ப⁴க³வத³ஜ்ஜுக….. மத்தவிலாஸாதி³பத³ம்ப்ரஹஸனோத்தமம் …ர்ண்ணம்ப்ரப்⁴ருʼத………… ஸமுத்தேஜித……….. துஷ்டய……….. ஜ(யஸ்ய)பத்யுஸ்²ஸ²த்ருமல்லமஸ்ய பூ⁴பு⁴ஜ​:…….. யப்⁴ரமரீவாப்தஸம்மதா³​:|  யா கவீனாம்ப்ரகாஸ² .. வத்த……………. (ம்ப)த்திஸ்ஸமபு³த்³தி⁴ரிவ ஸ்தி²தா|  ……………. கு³ருஸ்வரவர்ண்ணயா புரா தஸ்யாம்ʼ கவிகி³ரஜாஸ்யார்த்த²வதாம்ʼ …… ஆபுஷ்ணுஸ்²ஸி²ஷ்யத்வமேயுஷ​:| ……. ப்ரஜ்ஞாபதிஸமன்விதாம்|  ப்ரா………..ணோத…………….ஜ்யாயா ஸ்வய……. …. கல்பாத்ப்ரவிவர்ஜ்ஜ்யவ்ருʼத்தித³க்ஷிணிசித்ராக்²ய………. யித்வா யதா²விதி⁴.. ஸ்²ச விவிதை⁴​: க்ருʼத்வா வர்ண்ணசதுர்த்த²..|  அப்ராப்தபூர்வ்வன்னிர்வேஷ்டுவாத்³யஸ்²ரவண……….. க்ருʼதவதீவ….ஸ்ரீகண்ட²ஸ்²ருதிகு³ணாவஸாதா⁴ரணஸம்பதா³|  த்³ருʼஷ்ட்வேவோத்கர்ஷேண ந……… யினீ க்ஷேவ…..யதோ விஸம்ʼவாத³ம்ʼ லக்ஷ்ம்யா மனோத்ஸுகதயா||  யஸ்யாஸ்²ஸீ²லவிஸே²ஷ……… . யாயத.. யா த³த்தமன்னகே… காந்தி யதா²ர்த்தே²ன சந்த்³ரலேகே²வ யா க³தா கா³த்ரந்த⁴ஹ………. த….. ஸா²ஸ்த்ரேஷு நித்யாவிஹிதபு³த⁴…யேஷு பராம்ʼ ப்ரீதிம்ʼ…. பஞ்ச .. (ஸ்ய) வபுஷ​:|  நித்யவினீதேன ஸத்யஸம்ʼ… ஸ்ய ப⁴க்த்யாவர்ஜ்ஜிதமௌளினா ஸஹஸ்ர… ஸம்பூர்ணமேக⁴ஸ்²யாமஸ்ய க³ர்ஜி………… க்ஷி… . பத வதயா..

எவருக்கும் பணியாதவன், செழிப்பற்ற……….. இவனுடைய நடத்தை….. முழு கந்தர்வ சாஸ்த்ரத்தையும் ……….. முகத்தில் தோன்றிய ……… ப்ரஜாபதியினுடையதான அந்த பெற்றவனான …….. பாஞ்சாலனால் உருவாக்கப்பெற்ற……….. கொடியுடைய ……… அழகிய …….. வால்மீகி வர்ணித்ததைப் போல பரதனைத் தலைவனாகக் கொண்ட ……… அவையில் ………. ஆடைகளைக் களைந்த ……. இடியையொத்த அம்பையுடைய ………. செய்தான். …… பெருந்தன்மைக்காக அழகிய ஊர்வசி……… வரீ என்னும் நாடகத்தையும்……….. வ்யாஸரையொத்த ………. பகவதஜ்ஜுகம் ……. மத்தவிலாஸம் முதலிய சிறந்த நகைச்சுவை நாடகங்கள் …….. முதலிய ……. உயர்த்தப்பெற்ற ……… மகிழ்ச்சியினால் … வெற்றியின் தலைவனான சத்ருமல்லனாகிய அரசனின் ……….. பெண் வண்டுகளைப் போல மயக்கங்கொண்டு ……….. கவிகளின் ஒளியாகிய ……… போல …….. எங்கும் ஒன்று போல தோன்றுபவளாய் ……….. நிலைத்தாள். ……… உறுதியான உயிரெழுத்துக்களால் முன்பு அவளிடம் புலவர் சொல்லாகிய பொருளுடைய ……… சீடனாக அடைந்து போற்ற ……… அறிவின் தலைவனோடு இயைந்தவளாய்…. தானாக…. கல்ப வ்ருத்தியிலிருந்து பிரித்து …. தக்ஷிணசித்ரம் என்னும் ….. செய்து விதிப்படி…… பலவிதமாய் நான்காம் வர்ணத்தவர் ………. முன்பு காணாத வகையில் இசைக்கருவிகளைக் கேட்க ………. செய்ததைப் போல   ………. ஈசனின் செவியினில் வியக்கத்தக்க செல்வமாய் ……….. கண்டு பெருமையோடு …….. .. திருமகளோடு விவாதம் செய்ததாய்…………. எவருடைய நடத்தைகளைக் கண்டு ………… ஒளி பிறைநிலவைப் போல சென்றது. … சாஸ்த்ரங்களில் விதிக்கப்பெற்ற அறிஞர்…. இறுபூதெய்த …….. உடலையுடையவர்… எப்போதும் வணங்கியவனாய், ஸத்யஸந்தனாய் ……… பக்தியினால் வணங்கிய முடியுடையவனாய் .. ஆயிரம் …….. முழுதும் முகில் வண்ணமுடையதாய் ………. .

இந்தக் கல்வெட்டிலிருந்து அறியக்கூடிய பொருளாய் அமைந்தது மஹேந்த்ர வர்மன்  ஆடல் பாடல்களையுடைய கந்தர்வ சாஸ்த்ரத்தில் தேர்ந்திருந்தான் என்பதும் மத்தவிலாஸம் மற்றும் பகவதஜ்ஜுகம் முதலிய நகைநாடகங்கள் துவங்கி பல நாடங்களையும் இயற்றியவன் என்பதுதான். இவனுடைய ஒரு நாடகம் வால்மீகி வர்ணித்தபடி பரதனை நாயகனாகக் கொண்டது. மற்றொன்று அவையில் பாஞ்சாலியின் ஆடைகளைவதைக் கருவாகக் கொண்டது. ஊர்வசியின் கதையை மையமாக வைத்து மற்றொரு நாடகத்தையும் இயற்றியிருக்க வேண்டும் என்பதும் அறியக்கிடக்கிறது. தக்ஷிணசித்ரம் என்னும் நூலும் இவனால் இயற்றப்பெற்றிருக்க வேண்டும். இசைக் கருவிகளிலும் தேர்ந்தவனாதல் வேண்டும். ஈண்டு மஹேந்த்ர வர்மனைப் பற்றிய நேரடிக் குறிப்பு இல்லாவிடினும் நித்யவினீதம், ஸத்யஸந்தன் மற்றும் சத்ருமல்லன் ஆகிய விருதுப்பெயர்கள் இந்தக் கல்வெட்டு மஹேந்த்ரனுடையதே என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளன.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *