ராஜஸிம்ஹனின் மல்லைக் கடற்கரைக் கோயில் கல்வெட்டு

கடல் மல்லையில் மிக்கப் புகழ்பெற்ற கடற்கரை கோயிலும் அக்கோயிலைக் கட்டிய ராஜஸிம்ஹனின் கல்வெட்டைக் கொண்டுள்ளது.  இந்தக் கல்வெட்டு அந்தக் கோயிலின் அடிப்பகுதியில் நீளமாகச்செல்கிறது. இந்தக் கல்வெட்டு வடமொழியிலும் க்ரந்த லிபியிலும் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டிலுள்ள வடமொழிச்செய்யுட்கள் அரசனின் குணநலன்களைக் கூறுகின்றன.

     இந்தக் கல்வெட்டு 1912 இல் கண்டறியப்பெற்றது. எபிக்ராஃபியா இண்டிகாவின் 19ஆம் தொகுதியில் திரு வி. ரங்காசார்யா அவர்களால் பதிப்பிக்கப்பெற்றது. உண்மையில் இந்தக் கல்வெட்டே இதைக் கட்டியவரை அடையாளம் காண உதவியது. இந்தக் கல்வெட்டிலுள்ள சில விருதுப் பெயர்கள் மற்றைய கல்வெட்டுக்களில் காணப்பெறவில்லை.

வரிகள்

முதல் அதிஷ்டானம்

sea_shore

மேற்குப்பகுதி

          श्रीः। अप्रतिममवनिभूषणमकलंकन्धरणिचन्द्रमवनीन्द्राः। अरिमर्द्दनमतुल

தெற்குப்பகுதி

          बलं कुलतिलकं ये नमन्ति ते ……….. (सुखिनः।।) ……(छल) रहितो बहुनयः

கிழக்குப்பகுதி

      अत्यन्तकाममपराजितमेकराजञ्चन्द्रार्द्धशेखरशिखामणिमद्भुतं यम्। चण्डाश

வடக்குப்பகுதி

      निं क्षितिभृतां महतामसह्यं सम्प्राप्य काममिव नन्दति जीवलोकः।।(2) श्रीः। उदयचन्द्रः

இரண்டாம் அதிஷ்டானம்

sea_shore1

மேற்குப்பகுதி

श्रीराजसिंहो रणजयः श्रीभरश्चित्रकार्म्मुकः। एकवीरश्चिरम्पातु शिवचूडामणिर्म्महीम्।।(3) श्रीकार्मुकः

தெற்குப்பகுதி

          कालकालः काला..(न्तकपदार्च्चकः)… । अभिरामो विजयते रणभीमो गुणालयः। (4) श्रीवल्लभमति

கிழக்குப்பகுதி

मानं रणवीरं कुल(प्रकाशकरं) ऊर्ज्जितमुन्नरामम्प्रणमत युद्धार्ज्जुन(न्धराधीशाः)। (5)

வடக்குப்பகுதி

      यमर्त्थदृष्टो शत्रूणाम्मल्ल महामल्लम्। त्रिनयनभक्तं मित्रं ……….. नरेन्द्रसिंहन्नमन्ति नृपाः।। (6)

பாவகை – ஆர்யா

श्रीः। अप्रतिममवनिभूषणमकलंकन्धरणिचन्द्रमवनीन्द्राः।

अरिमर्द्दनमतुलबलं कुलतिलकं ये नमन्ति ते ……….. (सुखिनः।।)

          திருவுண்டாகட்டும். இணையற்றவனும், உலகிற்கே அணியானவனும் களங்கமற்றவனும், உலகில் நிலவைப் போன்றவனும், எதிரிகளை கசக்கியவனும்,  இணையற்ற வலிமையுடையவனும் குலத்திற்கே திலகத்தைப் போன்றவனுமானவனை எந்த மன்னர்கள் வணங்குகிறார்களோ அவர்கள் இன்பமுடையோர்.

……(छल)रहितो बहुनयः

கபடமற்றவன், பலவித நீதியுடையவன்

பாவகை – வஸந்ததிலகா

अत्यन्तकाममपराजितमेकराजञ्चन्द्रार्द्धशेखरशिखामणिमद्भुतं यम्।

चण्डाशनिं क्षितिभृतां महतामसह्यं सम्प्राप्य काममिव नन्दति जीवलोकः।।(2)

பிறரால் வெல்லப்பெறாதவனும், ஒரே அரசனும், பிறைசூடிய பெருமானைத் தலையணியாகச் சூடியவனும் வியக்கத்தக்கவனும், பேரிடியும், பேரரசர்களாலும் தாங்கவொண்ணாதவனுமான அந்த அத்யந்தகாமனை அண்டிய உலகோர் தமது விருப்பம் நிறைவேறியதைப் போல மகிழ்வர்.

श्रीः। उदयचन्द्रः

திரு. உதய சந்திரன்.

श्रीराजसिंहो रणजयः श्रीभरश्चित्रकार्म्मुकः।

एकवीरश्चिरम्पातु शिवचूडामणिर्म्महीम्।।(3)

திருவுடைய ராஜஸிம்ஹன் போரில் வெல்பவன். திருவைத் தாங்கியவன். பலவித விற்களை உடையவன். ஒரே வீரன். சிவனைத் தலையணியாகப் பூண்டவன். அவன் உலகை வெகுகாலம் காக்கட்டும்.

श्रीकार्मुकः कालकालः काला..(न्तकपदार्च्चकः)… ।

अभिरामो विजयते रणभीमो गुणालयः। (4)

திருவுடைய வில்லை உடையவனும் கூற்றுக்கே கூற்றானவனும் கூற்றை அழித்தவனின் திருவடி போற்றுபவனும், அழகனும் போரில் பீமனையொத்தவனும் நற்பண்புகளுக்கு இருப்பிடமானவனுமானவன் வெல்கிறான்.

श्रीवल्लभमतिमानं रणवीरं कुल(प्रकाशकरं)

ऊर्ज्जितमुन्नरामम्प्रणमत युद्धार्ज्जुन(न्धराधीशाः)। (5)

(மன்னர்களே), திருவின் கொழுநனும், பெருஞ்சினமுடையோனும் போரில் வீரனும், குலத்தை விளங்கச்செய்பவனும், நிலையானவனும், உயர்ந்த ராமனையொத்தவனும், போரில் அர்ஜுனனுமானவனை வணங்குங்கள்.

      यमर्त्थदृष्टो शत्रूणाम्मल्ल महामल्लम्।

त्रिनयनभक्तं मित्रं ……….. नरेन्द्रसिंहन्नमन्ति नृपाः।। (6)

பொருட்களை உள்ளபடி காண்பவனும் எதிரிகளுக்கு மல்லனும், மாமல்லனும், முக்கண்ணனின் பக்தனும், நண்பனும் அரசர்களின் சிங்கமானவனுமானவனை மன்னர்கள் வணங்குகின்றனர்.

இங்கு ராஜஸிம்ஹனுக்குத் தரப்பெற்ற பெயர்களில் சந்த்ரார்த்தசேகர சிகாமணி மற்றும் சிவசூடாமணி ஆகிய பெயர்கள் ஈசனின் உருவத்தை அவன் தலையால் தாங்கியிருக்கவேண்டும் என்கிற கருத்தைத் தருகின்றன. மல்லையில் உள்ள மற்றொரு கல்வெட்டும் சிரஸ்ஸரஸி சங்கர: என்று குறிப்பிடுவதும் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது.

Please follow and like us:

One thought on “ராஜஸிம்ஹனின் மல்லைக் கடற்கரைக் கோயில் கல்வெட்டு

  1. என்னே ராசசிம்மனின் பக்தி!கீர்த்தி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *