ஸிம்ஹவர்மனின் சிவன்வாசல் கல்வெட்டு – க்ரந்த லிபியில் முதன் முதல் கல்வெட்டு

sivanvasal

     இந்தக் கல்வெட்டு திருவள்ளூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள சிவன்வாசல் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு வைகுண்டநாதருக்கான ஒரு பழைய கோயிலில் படிக்கட்டாக இருந்த கல்லிலிலிருந்து கண்டெடுக்கப்பெற்றது.      இந்தக் கல்வெட்டு வடமொழியிலும் மிகப்பழைய க்ரந்த லிபியிலும் அமைந்தது. இந்தக் கல்வெட்டு எபிக்ராஃபியா இண்டிகாவின் இருபத்தேழாம் தொகுதியில் திரு. என்.வெங்கட ரமணையா என்பவரால் பதிப்பிக்கப்பெற்றது. அவர் இதை ஏழாம் நூற்றாண்டின் இரண்டாம் காற்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதினார். இந்தக் கல்வெட்டு பல்லவகுலத்தைச் சேர்ந்த ஸிம்ஹவர்மனை வர்ணிக்கிறது. அவன்…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுது பொருட்கள் – செங்கல், தந்தம் மற்றும் சங்கு

brick1

     இதுவரை சுவடித்துறையில் தோலின் பயன்பாட்டைக் கண்டோம். இப்போது செங்கல், தந்தம் மற்றும் சங்கின் பயன்பாட்டைக் காண்போம். செங்கல்      சாஸனங்களோடான செங்கல்கள் உத்தர ப்ரதேசமாநிலத்திலிருந்தே பெரும்பாலும் கிடைத்துள்ளன. அவை மதுராவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பெற்றுள்ளன. கோரக்புர் மாவட்டத்திலுள்ள கோபாலபுரத்தில் கிடைத்த பொயு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த செங்கற்களில் புத்த மத ஸூத்ரங்கள் எழுதப்பெற்றுள்ளன.      காஸிபுர் மாவட்டத்திலுள்ள பிதாரியில் கிடைத்த செங்கலொன்றில் “ஸ்ரீகுமாரகுப்தஸ்ய” என்று எழுதப்பெற்றுள்ளது.      தேஹ்ராதுனிலிருந்து சீலவர்மன் என்னும் அரசனின் அச்வமேத செங்கற்கள்…

தொடர்ந்து வாசிப்பு

லாவோஸ் கல்வெட்டில் பொற்கைப்பாண்டியன்

champassak

     பொதுவாக ஒரு பகுதியில் அல்லது நாட்டில் வெளியிடப் பெறும் ஆவணங்களான செப்பேடுகள்,கல்வெட்டுக்கள் போன்றவற்றில் இடம்பெறும் ப்ரசஸ்தியில் உவமானங்களாக புராண புருஷர்களோ அல்லது அவர்தம் மூதாதையரோதான் இடம் பெறுவர், இராமபிரான், தர்மர், அர்ஜுனன் போன்றவர்களோடு வெளியிடும் மன்னனையோ அல்லது அவர்தம் மூதாதையரையோ ஒப்பிட்டுத்தான் அரசாங்க கவிகள் யாப்பர். ஆனால் லாவோஸில் கிடைத்த ஒரு கல்வெட்டில் பொற்கைப் பாண்டியன் குறிப்பிடப்பெற்றிருப்பது மிகவும் சிறப்பான தகவலாகும். பொற்கைப் பாண்டியன்      இவன் நீதி வழுவாது செங்கோல் செலுத்தியவன். கீரந்தை என்னும்…

தொடர்ந்து வாசிப்பு

முதலாம் மஹேந்த்ர பல்லவரின் சேஜர்லா கல்வெட்டு

Amvar_Chejerla_Kapoteswara_temple_in_guntur_district_2

     இந்த வடமொழிக் கல்வெட்டு அறிஞர்களால் மிக அரிதாகவே எடுத்தாளப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு ஆந்திரமாநிலம் குண்டூர் மாவட்டம் நரஸராவ் தாலுகாவிலுள்ள சாஸர்லாவிலுள்ள ஸ்ரீகபோதேச்வரர் கோயிலில் முன்னுள்ள நந்தி மண்டபத்தில் உள்ள கற்பலகையில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு பெரும்பாலும் அழிந்திருந்தாலும் சிறு சிறு பகுதிகளோ படிக்கவும் புரிந்து கொள்ளவும்  இயலும் வகையில் அமைந்திருந்தாலும் கூட இந்தக் கல்வெட்டு முக்கியமானதாகும். காரணம் இந்தக் கல்வெட்டு அமைந்திருப்பதால் இந்தப் பகுதியில் பல்லவர்களின் அரசு கோலோச்சியது என்பதை உய்த்துணரவியல்கிறது. ஆகவே இந்தப் பகுதியை…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – தோல்

     பாரதநாட்டில் புலித்தோல் மற்றும் மான்தோலைத்தவிர மற்றைய தோல்கள் புனிதமற்றவை என்று கருதப்பெற்றதால் எகிப்து போன்ற தேசங்களைப் போன்று அவற்றின் பயன்பாடு நம் நாட்டில் இன்றி மிகவும் அரிதாகவே கிடைக்கிறது.      கரும்பலகையைப் போல வரைபடங்களுக்கும் நகல் எழுதுதற்கும் தோல் பயன்பட்டு வந்திருக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வடமொழிப்புலவரும் வாஸவதத்தம் என்னும் உரைநடைக் காப்பிய நூலை யாத்தவருமான ஸுபந்து என்பார் எழுதும் முறையில் தோலின் பயன்பாட்டைக் குறிப்பிடுகிறார். विश्वं गणयतो धातुः शशिखठिनीखण्डेन तमोमषीयामे अजिन इव…

தொடர்ந்து வாசிப்பு

சோமங்கலம் ஏரி மடையடைத்த திருச்சுரக்கண்ணப்பன்

     பொதுவாக பெருமழை பொழிந்து ஏரிகள் நிரம்பிய பின்னர் மடையுடைந்து நீர்பெருகி வெள்ளமாகும். அத்தகைய ஏரிமடைகளை உடனே அடைத்தல் நலம். இப்படி அடைப்பதற்கு அரசாங்கத்தை எதிர்பாராது ஊரிலுள்ள ஊர்ப்பெருமகன்களே முன்னின்று அடைத்தால் விரைவிலும் நடக்கும். பயனும் அளிக்கும். அத்தகையதோர் நிகழ்ச்சி மூன்றாம் குலோத்துங்க சோழனின் பதிநாலாம் ஆட்சியாண்டில் நிகழ்ந்தேறியது. இது காஞ்சிபுர மாவட்டத்திலுள்ள ஸோமங்கலம் என்னுமூரில் நிகழ்ந்தது. அவ்வூரிலுள்ள ஸோமநாதேச்வரர் கோயிலிலுள்ள மண்டபத்தின் கீழைச்சுவரில் அமைந்துள்ள கல்வெட்டு இதற்கு ஆவணமாக அமைந்துள்ளது. இவ்வூரின் மறுபெயர் பஞ்சநதி வாண…

தொடர்ந்து வாசிப்பு