முதலாம் ராஜாதிராஜனின் கர்ணாடகத்து மாதவ மந்த்ரி அணைக்கல்வெட்டு.

     பின்வரும் கல்வெட்டு ஒரு துண்டுக் கல்வெட்டு ஆகும். இது கர்ணாடகத்திலுள்ள பிஸ்கோட்டில் உள்ள மாதவமந்த்ரி அணைக்கட்டில் பதிக்கப்பெற்றுள்ளது. இது தமிழ் மொழியிலும் தமிழ் எழுத்திலும் அமைந்தது. இது தழைக்காட்டிலுள்ள ஒரு கோயிலிலிருந்து பெயர்க்கப்பெற்று நூறு வருடங்களுக்கு முன்பாக அணைக்கட்டு கட்டப்பெறும்போது பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

     இந்தக் கல்வெட்டில் துவக்கப்பகுதியில்லை. இதில் இருக்கும் மெய்க்கீர்த்தித் துண்டை வைத்து இது முதலாம் ராஜாதிராஜனின் காலத்தது என்பதனை அறியமுடிகிறது. இந்தக் கல்வெட்டு தழைக்காடான ராஜராஜபுரத்திலுள்ள தேவர்க்கு கொடுத்த நிவந்தங்களைக் குறிப்பிடுகிறது.

இந்தக் கல்வெட்டு எபிக்ராபியா கர்ணாடிகாவின் மூன்றாம் தொகுதியில் NJ  48 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

Line 1: அட்டியுண்ணத் தயிர் முக்குறுணி ஒரு நாழியும் பெறல் ………….. யுமா ப்ராஹ்மணர்க்கு ஓராட்டைக்கு நெல் 4 மா ………. ல்லு பதக்கும் ஓராட்டைக்குப் பொன் முக்கழஞ்சும் ……….. பெறால் பொன் கழஞ்சரையும் புது காலம் இருகூருவதை
Line 2: ………… சண்டன் மகன் கூத்தன் அங்கைகேகன் உடப்பிறந்த …….. வன் காட்டு நங்கை…. தழைக்காடான ராஜராஜபு……….. வைத்த திருநந்தாவிளக்கு ஒன்றுக்கு பொன் ௩ம் நமரே … செலுசங்குடவோக்கடல்ப் படிதகு இக்கோலெலைக்கும் செலுத்தக் கடவேன்
Line 3: நை ஆனைக்கிடுவித்த சைவிலதந்தாப ……….. ரொடு மடியத்திண்டிறல் விறுதாவிக்கியும் விஜைய…….. ழன் உயர்ந்த பெரும் புகழ் கோவிராஜகேஸரி வர்மரா……….. இம்மண்டலத்துக்கு தண்டநாயகம் சோழமண்டலத்து கழித்தயசிகாயி …….. எண்ணாழி வழுவாத காலரிசி நாழி உரியும் ……… நெய் இத்தேவ………
Line 4: ……. தோபுவனாட…… ஜனவிருத……… ஸ்தான படாரா……. குமுலுட… மாரணி வூ… கொண்ட சோழம………
Line 5: சிளூருள்ளிட பவகர்மிகள் ஒமத்தி தேவர் தேவயானயான வடத்தே வகைப்பேற்கடி அரையன் ராஜராஜன் கைய்யில் யாங்கள் கடவோன்கொண்ட பரிசாத்து யாண்டு முப்பதாவது நாள் இரண்டில் மாலப்படை ஒன்றே நாலு மாவலும் ஆட்டாண்டு தோறுஞ்சந்திர ஸஹிதரேய் எழுந்தருளி இருந்த ராஜராஜவிடங்கதேவர் ஆனிமூலி நாமத்து யதிருள் அரிசி கலத்துக்கு நெல்லு இரு கலனே தூணிப் பங்குவியும் அப்பஞ்சுடுவார் குல்லுயனையும் அடப்புடைக்காய் முதுக….. நியும் நீர்வானம்……….

     உண்பதற்காக முக்குறுணி தயிரும் ஒரு நாழி நெல்லும்……… அந்தணர்களுக்கு ஓராண்டிற்கு நெல் நான்கு மாவும் நெல்லு பதக்கும்… ஓராண்டிற்காக பொன் மூன்று கழஞ்சும் … பொன் ஒன்றரை கழஞ்சும் புதிய காலத்திற்காக…

     சண்டனின் மகனான கூத்தன் அங்கைகேகனின் உடன் பிறந்த………. வன் காட்டு நங்கை.. தழைக்காடான ராஜராஜபுரத்து….. வைத்த திருநந்தா விளக்கிற்காக மூன்று கழஞ்சு பொன்னும்… கடலுள்ளவரை செலுத்தக் கடவதாகவும்…

யானைகளோடு சேர்த்து விக்ரமாதித்யனை வென்று மடியச்செய்த விஜைய …ராஜாதிராஜ.. சோழனான கோவிராஜகேஸரி வர்மன், இந்த மண்டலத்திற்கு மாதண்ட நாயகனாக சோழமண்டலத்து கழித்தயசிகாயி,…. எண்ணாழி குறையாமல் கால் அரிசி நாழி உரியும்… நெய்யும் இந்தத் தேவருக்கு…

……. தோபுவனாட…… ஜனவிருத……… ஸ்தான படாரா……. குமுலுட… மாரணி வூ… கொண்ட சோழம………

…சிளூருள்ளிட்ட பவகர்மியான ஓமத்தி தேவர் அரையன் ராஜராஜனிடத்து பரிசு கொண்டு சோழனின் முப்பதாவது ஆண்டு நாள் இரண்டாவது முதல் நான்கு மா கொண்டு ஒவ்வோராண்டும் சந்திரனோடு கூட எழுந்தருளும் ராஜராஜவிடங்கதேவர் ஆனிமூலத்தில் படைக்க வேண்டிய அரிசிக்கு நெல்லு இரு கலனே தூணிப்பங்கும்.. அப்பம் சுடுவதற்காக… அடைப்பத்திற்காக…

இவ்விதம் ராஜாதிராஜசோழனின் காலத்தில் ஏற்படுத்திய நிவந்தத்தைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதை உடைத்து அணைக்கட்டுக்குப் பயன்படுத்தியதைக் குறித்து சொல்ல என்ன இருக்கிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *