ராஜஸிம்ஹ பல்லவனின் பனைமலைக் கல்வெட்டு

இந்தக் கல்வெட்டு பனைமலையிலுள்ள தாளகிரீச்வரர் கோயிலின் பட்டிகையில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு வடமொழியிலும் க்ரந்த லிபியிலும் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு இரண்டாம் நரஸிம்ஹ வர்மனான ராஜஸிம்ஹ பல்லவனின் காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு பல்லவ குலத்தின் முதல்வனும் த்ரோணரின் மகனுமான அச்வத்தாமனைக் குறிப்பிடுகிறது. அதன் பிறகு, பல்லவன், ஏகமல்லனான பரமேச்வர வர்மன் ஆகியோரோடு ராஜஸிம்ஹனிடம் முடிவடைகிறது. அதன் பிறகு ராஜஸிம்ஹன் ஈசனின் மீதுகொண்ட பக்தியையும் அவனது ஆட்சிச் சிறப்பையும் கூறாநிற்கிறது.

Line 1: ………….. नोदपादि प्रथितभुजबलो द्रोणिरंशः पुरारेः। (1) अश्वत्था
Line 2: म्नोथ तस्मान्निचितगुरुतपोनिर्म्म
Line 3: लादाविरासीदाम्नायादंगविद्याविसर इव महीवल्लभः पल्लवाख्यः।
Line 4: यस्मादेषः …. पथि विहितपदात्पावने माननीयो मन्दाकिन्याः प्रवा
Line 5: ह शशिन इव महानन्वयः पल्लवानाम्। (2) सम्राजामश्वमेधावभृ
Line 6: थविरजसां भूभुजां पल्लवानामस्पृ
Line 7: ष्टापल्लवानां विमलतरभरद्वाजवंशोद्भवानाम्। केतो
Line 8: रक्षीणबाहुद्रविणहृतमहीचक्रविख्यातकीर्त्तेर्य्यो देवा
Line 9: देकमल्लाद्गुह इव परमादीश्वरादात्तजन्मा (3)
Line 10: ………..भुजद्रविणावभासी सत्त्वो
Line 11: र्ज्जितः समरदृष्टमहाप्रभावः। यो राजसिंह इति विश्रु
Line 12: तपुण्यकीर्त्तिरुद्वृत्तनृपकुजरराजसिंहः। (4) हर्त्ता द्वि
Line 13: षद्वर्ग्गसमुच्छ्रयाणां कर्त्ता च कल्याणपरम्पराणाम्।
Line 14: चित्ते सदा संभृ
Line 15: तभक्तिपूते धत्ते पदं यस्य मृगांकमौलिः। (5) संरूढाम्नाय
Line 16: ………. मयानेकशाखासमयः (श्री)
Line 17: ……..तेः फलकुसुमकृताकान्तिमालम्ब
Line 18: मानाः। सद्वृत्ताम्भोनिषेकैर्द्रुम इव सततन्तस्य ……….. श्छायासमुद्दाम. जयति कलियुगग्रीष्मतप्तोपि धर्म्मः।(6)

பாவகை – ஸ்ரக்தரா

………….. नोदपादि प्रथितभुजबलो द्रोणिरंशः पुरारेः। (1)

[அவருக்கு] புரமெரித்த பரமனின் அம்சமானவனும் புகழ்பெற்ற தோள்வலி கொண்டவனுமான த்ரௌணி – அச்வத்தாமன் தோன்றினான்.

 பாவகை – ஸ்ரக்தரா

अश्वत्थाम्नोथ तस्मान्निचितगुरुतपोनिर्म्मलादाविरासी

दाम्नायादंगविद्याविसर इव महीवल्लभः पल्लवाख्यः।

यस्मादेषः …. पथि विहितपदात्पावने माननीयो

मन्दाकिन्याः प्रवाह शशिन इव महानन्वयः पल्लवानाम्। (2)

சேர்த்துவைத்த தவத்தொகுதியால் களங்கமற்ற அத்தகைய அச்வத்தாமனிடமிருந்து வேதங்களிலிருந்து அங்கவித்யையான பலவிதமான சாஸ்த்ரங்கள் பெருகியதைப் போலவும் நிலவிலிருந்து மந்தாகினியான கங்கையின் பெருக்கைப் போலவும் அந்த பல்லவனிடமிருந்து பல்லவர்களின் பெரும் குலம் தழைத்துப் பெருகியது.

பாவகை – ஸ்ரக்தரா

सम्राजामश्वमेधावभृथविरजसां भूभुजां पल्लवाना

मस्पृष्टापल्लवानां विमलतरभरद्वाजवंशोद्भवानाम्।

केतोरक्षीणबाहुद्रविणहृतमहीचक्रविख्यातकीर्त्तेर्य्यो

देवादेकमल्लाद्गुह इव परमादीश्वरादात्तजन्मा (3)

சக்ரவர்த்திகளும் அச்வமேதயாகத்தின் நீராடலால் புனிதமடைந்தவர்களும் ஆபத்தின் துளியைக் கூட உணராதவர்களும் மிகத்தூய பரத்வாஜ வம்சத்தில் தோன்றியவர்களுமான பல்லவர்களின் வம்சத்தின் கொடி போன்றவனும் தேயாத தோள்வலியால் உலகின் ஆட்சியைக் கொண்டு புகழ்பெற்றவனுமான ஏகமல்லனிடமிருந்து பரமேச்வரனிடமிருந்து குமரக்கடவுள் தோன்றியதைப் போல (ராஜஸிம்ஹன்) தோன்றினான்.

பாவகை – வஸந்ததிலகா

………..भुजद्रविणावभासी सत्त्वोर्ज्जितः समरदृष्टमहाप्रभावः।

यो राजसिंह इति विश्रुतपुण्यकीर्त्तिरुद्वृत्तनृपकुंजरराजसिंहः। (4)

தன் தோள்வலியாகிய செல்வத்தால் திகழ்பவனும் வலிமையில் நிலைகொண்டவனும் போரில் பெருவலியைக் காட்டியவனும் புகழ்பெற்ற புண்ணியப் புகழை உடையவனும் ராஜஸிம்ஹன் எனப் பெயர்பெற்றவனுமானவன் எதிரியரசர்களாகிய யானைகளுக்கு ராஜஸிம்ஹமாகத் திகழ்ந்தான்.

பாவகை – இந்த்ரவஜ்ரா

हर्त्ता द्विषद्वर्ग्गसमुच्छ्रयाणां कर्त्ता च कल्याणपरम्पराणाम्।

चित्ते सदा संभृतभक्तिपूते धत्ते पदं यस्य मृगांकमौलिः। (5)

          எதிரிகளின் குழுவின் வளர்ச்சியைக் கவர்ந்தவனும் மங்கலத் தொடரை உருவாக்கியவனும் சித்த்த்தில் எப்போதும் தாங்கிய பக்தியினால் தூயவனுமான அவனிடத்தில் பிறைசூடிய பெருமான் நிலைகொண்டார்.

பாவகை – ஸ்ரக்தரா

संरूढाम्नाय………. मयानेकशाखासमयः

(श्री)……..तेः फलकुसुमकृताकान्तिमालम्बमानाः।

सद्वृत्ताम्भोनिषेकैर्द्रुम इव सततन्तस्य ………..

श्छायासमुद्दाम. जयति कलियुगग्रीष्मतप्तोपि धर्म्मः।(6)

தர்மமாகிய மரம் வேதங்களாகிய வேர்களைக் கொண்டும், … ஆகிய பல விதக் கிளைகளைக் கொண்டும் பழம், பூ ஆகியவற்றின் ஒளியை அடைந்தவர்களாய் .. நன்னடத்தையாகிய நீரால் வளர்க்கப்பெற்று எப்போதும் நீழலொடு திகழ்வதாய் கலியுகமாகிய கோடைக்காலத்தால் வெம்மையுற்றாலும் வெற்றி பெறுகிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *