சுவடிகளின் ஏடுகள் பொதுவாக தைக்கப்பெற்றோ தைக்கப்பெறாமலோ இருக்கும். ஓலைச்சுவடிகளும் பூர்ஜ பத்ரங்களும் தைக்கப்பெறாமலும் இருக்கும். கையினால் உருவாக்கப் பெற்ற காகிதங்களும் கூட தைக்கப்பெறாமல் இருக்கும்.
தச வைகாலிக ஸூத்ரம் என்னும் நூல் சுவடிகளின் பின்வரும் வகைகளைக் குறிப்பிடுகிறது.
- கண்டீ
- கச்சபீ
- ஸம்புட பலகம் மற்றும்
- முஷ்டி
கண்டி வகைச் சுவடிகளின் நீள அகலங்கள் ஒத்தமைந்து ஒரு பலகையைப் போலிருக்கும். கச்சபீ வகைச் சுவடிகள் நடுவில் அகன்றும் ஓரங்களில் சுருங்கியும் இருக்கும். ஸம்புட பலகமான சுவடி இருபுறமும் பலகைகளைக் கொண்டிருக்கும். முஷ்டி வகைச் சுவடிகள் ஒருவரின் கைத்தளத்தில் அடங்கும் வகையிருக்கும்.
வடவிந்தியாவில் கையினால் உருவாக்கப்பெற்ற காகிதச் சுவடிகள் போதீ, போதோ, குட்கம் மற்றும் பானாவலி என்று வகைப்படுத்தப் பெற்றுள்ளன.
Please follow and like us: