இந்தக் கல்வெட்டு பாதாமியிலுள்ள குடவரையின் முன்பு காணப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு 25 அங்குல நீளமும் 45 அங்குல உயரமும் உடையது. எழுத்துக்கள் சிறிது சிதைவடைந்திருக்கின்றன. இந்தக் கல்வெட்டு பேராசிரியர் எக்லிங்கால் இண்டியன் ஆண்டிகுவரியின் மூன்றாந் தொகுதியில் 305 ஆம் பக்கத்தில் பதிப்பிக்கப்பெற்றது. இந்தக் கல்வெட்டு முதலாம் கீர்த்திவர்மனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் அவனுடைய இளவலான மங்களேச்வரன் திருமாலுக்கான கோயிலை எடுப்பித்து அதற்கு மதிலையும் கட்டிய குறிப்பைத் தருகிறது. மேலும் அந்தக் கோயிலில் இறைவனின் உருவத்தை நிறுவும் தறுவாயில் அந்தணர்களுக்கு அன்றாம் செய்ய வேண்டியதற்கான அறக்கட்டளையையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு சக ஆண்டு 500 இல் கார்த்தீக மாதப் பௌர்ணமியைக் குறிப்பதால் இதன் காலம் பொயு 578 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி ஆகும். இந்தக் கல்வெட்டே கீர்த்திவர்மன் ஆட்சிக்கட்டிலேறிய காலத்தைக் கணக்கிட உதவுகிறது.
கல்வெட்டு வரிகள்
வரி 1. | श्रीस्वामिपादानुध्यातानां मानव्यसगोत्राणां हारितीपुत्राणां |
வரி 2. | अग्निष्टोमाग्निचयनवाजपेयपौण्डरीकबहुसुवर्णाश्वमेधाव |
வரி 3. | भृतस्नानपवित्रीकृतशिरसां चाल्क्यानां वंशे सम्भूतः शक्तित्रयसम् |
வரி 4. | पन्नः चालुक्यवंशाम्बरपूर्ण्णचन्द्रः अनेकगुणगणालङ्कृतशरीरस्स |
வரி 5. | र्व्वशास्त्रार्तथतत्त्वनिविष्टबुद्धिरतिपराक्रमोत्साहसम्पन्नः श्रीमङ्गलीश्वरो रणवि |
வரி 6. | क्रान्तः प्रवर्द्धमानराज्यसंवत्सरे द्वादशे शकनृपतिराज्याभिषेकसंव्वत्सरे |
வரி 7. | ष्वतिक्रान्तेषु पञ्चसु शतेषु निजभुजावलम्बितखड्गधारानमितनृपतिशिरोम |
வரி 8. | कुटमणिप्रभाञ्जितपादयुगलश्चतुस्सागरपर्यन्तावनिविजयमङ्गलिका |
வரி 9. | ग्रहारः परमभागवतो लयने महाविष्णुगृहम् अतिद्वैमानुष्यकम् अत्यद्भुतक |
வரி 10. | र्म्मविरचित(म्) भूमिभागोपभागोपरिपर्यन्तातिशयदर्शनीयतमं कृत्वा |
வரி 11. | तस्मिन् महाकार्त्तिकपौर्ण्णमास्यां ब्राह्मणेभ्यो महाप्रदानं दत्वा भगवतः प्रल |
வரி 12. | योदितार्क्कमण्डलाकारचक्रक्षपितापकारिपक्षस्य विष्णोः प्रतिमाप्रतिष्ठाप |
வரி 13. | नाभ्युदये निपन्मलिङ्गेश्वरन्नाम ग्रामन्नारायणबल्युपहारार्थं षोडशसंख्येभ्यो |
வரி 14. | ब्राह्मणेभ्यश्च सत्रनिबन्धं प्रतिदिनम् अनुविधानं कृत्वा शेषं च परिव्राजकभो |
வரி 15. | ज्यन्दत्तवान् सकलजगन्मण्डलावनसमर्थाय रथहस्त्यश्वपदातसङ्कुला |
வரி 16. | नेकयुद्धलब्धजयपताकावलम्बितचतुस्समुद्रोर्म्मिनिवारितयशःप्रता |
வரி 17. | नोपशोभिताय देवद्विजगुरुपूजिताय ज्येष्ठायास्मद्भ्रात्रे कीर्त्तिवर्म्मणे |
வரி 18. | पराक्रमेश्वराय तत्पुण्योपचयफलम् आदित्याग्निमहाजनसमक्ष |
வரி 19. | मुदकपूर्व्वं विश्रान्तमस्मद्भ्रातृशुश्रू(ष)णे यत्फलं तन्मह्यं स्यादिति न कश्चित् |
வரி 20. | परिहापयितव्यः। बहुभिर्व्वसुधा दत्ता बहुभिश्चानुपालिता। यस्य |
வரி 21. | यस्य यदा भूमिः तस्य तस्य तदा फलम्। स्वदत्तां परदत्तां वा य |
வரி 22. | त्नाद्रक्ष युधिष्ठिर। महीर्महीक्षितां श्रेष्ठं दानाच्छ्रेयोनुपालनम्। |
வரி 23. | स्वदत्तां परदत्तां वा यो हरेत वसुन्धराम्। श्वविष्ठायां |
வரி 24. | कृमिर्भूत्वा पितृभिस्सह मज्जति। व्यासगीताः श्लोकाः। |
பொருள்
ஶ்ரீஸ்வாமிபாதா³னுத்⁴யாதானாம்ʼ மானவ்யஸகோ³த்ராணாம்ʼ ஹாரிதீபுத்ராணாம்ʼ அக்³னிஷ்டோமாக்³னிசயனவாஜபேயபௌண்ட³ரீகப³ஹுஸுவர்ணாஶ்வமேதா⁴வப்⁴ருʼதஸ்னானபவித்ரீக்ருʼதஶிரஸாம்ʼ சால்க்யானாம்ʼ வம்ʼஶே ஸம்பூ⁴த: ஶக்தித்ரயஸம்பன்ன: சாலுக்ய வம்ʼஶாம்ப³ரபூர்ண்ணசந்த்³ர: அனேககு³ணக³ணாலங்க்ருʼதஶரீரஸ்ஸர்வ்வ ஶாஸ்த்ரார்தத² தத்த்வனிவிஷ்டபு³த்³தி⁴ரதிபராக்ரமோத்ஸாஹஸம்பன்ன: ஶ்ரீமங்க³லீஶ்வரோ ரணவிக்ராந்த: ப்ரவர்த்³த⁴மானராஜ்யஸம்ʼவத்ஸரே த்³வாத³ஶே ஶகன்ருʼபதிராஜ்யாபி⁴ஷேக ஸம்ʼவ்வத்ஸரேஷ்வதிக்ராந்தேஷு பஞ்சஸு ஶதேஷு நிஜபு⁴ஜாவலம்பி³தக²ட்³க³தா⁴ரானமித ன்ருʼபதிஶிரோமகுடமணிப்ரபா⁴ஞ்ஜிதபாத³யுக³லஶ் சதுஸ்ஸாக³ரபர்யந்தாவனிவிஜயமங்க³லிகாக்³ரஹார: பரமபா⁴க³வதோ லயனே மஹாவிஷ்ணுக்³ருʼஹம் அதித்³வைமானுஷ்யகம் அத்யத்³பு⁴தகர்ம்மவிரசித(ம்) பூ⁴மிபா⁴கோ³பபா⁴கோ³பரிபர்யந்தாதிஶயத³ர்ஶனீயதமம்ʼ க்ருʼத்வா தஸ்மின் மஹாகார்த்திகபௌர்ண்ணமாஸ்யாம்ʼ ப்³ராஹ்மணேப்⁴யோ மஹாப்ரதா³னம்ʼ த³த்வா ப⁴க³வத: ப்ரலயோதி³தார்க்கமண்ட³லாகாரசக்ரக்ஷபிதாபகாரிபக்ஷஸ்ய விஷ்ணோ: ப்ரதிமாப்ரதிஷ்டா²பனாப்⁴யுத³யே நிபன்மலிங்கே³ஶ்வரன்னாம க்³ராமன்னாராயணப³ல் யுபஹாரார்த²ம்ʼ ஷோட³ஶஸங்க்²யேப்⁴யோ ப்³ராஹ்மணேப்⁴யஶ்ச ஸத்ரனிப³ந்த⁴ம்ʼ ப்ரதிதி³னம் அனுவிதா⁴னம்ʼ க்ருʼத்வா ஶேஷம்ʼ ச பரிவ்ராஜகபோ⁴ஜ்யந்த³த்தவான் ஸகலஜக³ன்மண்ட³லாவனஸமர்தா²ய ரத²ஹஸ்த்யஶ்வபதா³தஸங்குலானேகயுத்³த⁴ லப்³த⁴ ஜயபதாகாவலம்பி³தசதுஸ்ஸமுத்³ரோர்ம்மினிவாரிதயஶ:ப்ரதானோபஶோபி⁴தாய தே³வ த்³விஜகு³ருபூஜிதாய ஜ்யேஷ்டா²யாஸ்மத்³ப்⁴ராத்ரே கீர்த்திவர்ம்மணே பராக்ரமேஶ்வராய தத்புண்யோபசயப²லம் ஆதி³த்யாக்³னிமஹாஜனஸமக்ஷமுத³க பூர்வ்வம்ʼ விஶ்ராந்தமஸ்மத்³ ப்⁴ராத்ருʼஶுஶ்ரூ(ஷ)ணே யத்ப²லம்ʼ தன்மஹ்யம்ʼ ஸ்யாதி³தி ந கஶ்சித் பரிஹாபயிதவ்ய:|
முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழுபவர்களும் மானவ்யஸ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களும் ஹாரீதி புத்ரர்களும் அக்னிஷ்டோமம், அக்னிசயனம், வாஜபேயம், பௌண்டரீகம் பஹுஸுவர்ணம், அச்வமேதம் ஆகிய யாகங்களின் அவப்ருத ஸ்னானத்தால் புனிதமான தலையை உடையவர்களுமான சாள்க்யர்களின வம்சத்தில் உதித்தவனும் மூன்றுவித சக்திகளை உடையவனும் சாளுக்ய வம்சமாகிய ஆகாயத்திற்கு முழுநிலவைப் போன்றவனும் எல்லாகுணங்களின் தொகுதியாலும் அலங்கரிக்கப்பெற்ற உடலையுடையவனும் எல்லா சாஸ்த்ரங்களின் பொருளாலும் நிறைந்த அறிவையுடையவனும் வெகு பராக்ரமமும் உற்சாகமும் நிறைந்தவனுமான மங்களீச்வரனாகிய ரணவிக்ராந்தன் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் சகமன்னன் அரசுதுவங்கிய வருடமான சக வருடம் ஐந்நூறில் தன் தோளால் எடுத்த வாளின் முனையால் வணங்கிய மன்னர்களின் திருமுடிகளில் பதிக்கப்பெற்ற மணிகளின் ஒளியால் திகழும் திருவடிகளை உடையவனும் நான்குகடல் வரையிலான புவியை வென்ற மங்களத்தை உடையவனும் திருமாலின் அடியவனுமான அவன் மானிடர்களுக்கப்பாற்பட்டதும் மிக ஆச்சர்யமான செயல்களோடுமான திருமாலுக்கான ஆலயத்தை எடுப்பித்தான். புவியின் மீதிருக்கும் பாகங்களிலும் அதன் துணைக்கண்டங்களிலும் அதிசயமாகக் காணத்தக்கதாகவும் செய்து அதில் ஊழிக்காலத்தெழும் கதிரவனையொத்த ஆழியால் எதிரிகளை அழித்தவரும் இறைவனுமான திருமாலை நிலைநிறுத்துந் தறுவாயில் நிபன்மலிங்கேச்வரம் என்னும் க்ராமத்தை நாராயணபலிக்காகவும் பதினாறு அந்தணர்களுக்குத் தினந்தோறும் நிவந்தமாய் கொடுத்து மீதிப்பங்கை துறவியருக்குப் போகமாகவும் அளித்தான். எல்லா உலகையும் காப்பதில் திறனுடையவனும் தேர், யானை, குதிரை, காலாள் நிறைந்த பல போர்களில் பெற்ற வெற்றிக் கொடி திகழும் நாற்கடலின் அலைகளால் தடுக்கப்பெறும் புகழாகிய விதானத்தை உடையவனும் தேவர்கள், அந்தணர்கள், குருமார்கள் இவர்களைப் போற்றுபவனும் தன்னுடைய மூத்த தமையனும் வலிமையின் தலைவனான கீர்த்தவர்மனுக்கு இதனால் உண்டும் புண்ணிய பலன் சேரவும் தமையனுக்குப் பணிவிடை செய்த பலன் தனக்கு நேரவும் கோருகிறான்.
ப³ஹுபி⁴ர்வ்வஸுதா⁴ த³த்தா ப³ஹுபி⁴ஶ்சானுபாலிதா|
யஸ்ய யஸ்ய யதா³ பூ⁴மி: தஸ்ய தஸ்ய ததா³ ப²லம்|
பலரால் பூமி தானமாகத் தரப்பெற்றிருக்கிறது. பலரால் பாதுகாக்கப் பெற்றிருக்கிறது. எவ்வெப்போது எவருக்கு பூமியோ அவ்வப்போது அவருக்கு பலன்.
ஸ்வத³த்தாம்ʼ பரத³த்தாம்ʼ வா யத்னாத்³ரக்ஷ யுதி⁴ஷ்டி²ர|
மஹீர்மஹீக்ஷிதாம்ʼ ஶ்ரேஷ்ட²ம்ʼ தா³னாச்ச்²ரேயோனுபாலனம்|
யுதிஷ்டிரா தான் கொடுத்ததையோ பிறன் கொடுத்ததையோ முயற்சியால் பாதுகாக்க வேண்டும். அரசர்களுக்கு தானம் கொடுப்பதை விட கொடுத்ததைப் பாதுகாப்பது மிகவும் உயர்வானது.
ஸ்வத³த்தாம்ʼ பரத³த்தாம்ʼ வா யோ ஹரேத வஸுந்த⁴ராம்|
ஶ்வவிஷ்டா²யாம்ʼ க்ருʼமிர்பூ⁴த்வா பித்ருʼபி⁴ஸ்ஸஹ மஜ்ஜதி|
தான் கொடுத்ததையோ பிறன் கொடுத்ததையோ பூமியை எவனாவது கவர்ந்தால் அவன் தன் முன்னோர்களோடு நாய் விட்டையில் கிருமியாகப் பிறந்து படுவான்.
வ்யாஸகீ³தா: ஶ்லோகா:|
மேற்கூறிய ச்லோகங்கள் வியாஸரால் கூறப்பெற்றவையாம்.