காஞ்சி காமகோடி பீடச்செப்பேடுகள் – 2

வீரநரஸிம்ஹனின் செப்பேடு

     காஞ்சி காமகோடி பீடத்தில் விஜயநகர காலத்தைச் சேர்ந்த நான்கு செப்பேடுகள் உள்ளன. இவற்றுள் மிகப் பழமையானது துளுவ வம்சத்தை சேர்ந்தவனும் புகழ்பெற்ற க்ருஷ்ண தேவராயனின் தமையனுமான வீரநரஸிம்ஹனுடையதாகும். இவன் பொயு 1505 முதல் 1509 வரை ஆண்டவனாவான்.

     இந்தச் செப்பேடு வடமொழியிலும் பதினாறு நூற்றாண்டைய நந்தி நாகரி எழுத்துக்களிலும் எழுதப்பெற்றது. இந்தச் செப்பேடு மற்றைய விஜயநகர சாஸனங்களில் காணப்பெறும் வழக்கமான காப்புச் செய்யுளைக் கொண்டுள்ளது. புராண அரசர்களுக்குப் பிறகு செப்பேட்டை வழங்கிய மன்னவனின் தந்தையான நரஸரின் புகழ் பாடப்பெற்றுள்ளது. அவர் சேர சோழ பாண்டிய துலுக்க கஜபதி மன்னர்களை வென்று ராமேச்வரம் முதலிய இடங்களில் பதினாறு தானங்களையும் மேற்கொண்டமை கூறப்பெற்றுள்ளது.

     இந்தச் செப்பேட்டின் நோக்கம் பரமஹம்ஸ பரிவ்ராஜகரும் ஸதாசிவ ஸரஸ்வதியின் சீடருமான மஹாதேவ ஸரஸ்வதிக்கு எழிச்சூர் மற்றும் வெண்பாக்கம் ஆகிய சிற்றூர்களை மஹோதய புண்ய காலத்தில் தானம் அளித்தமையேயாம். இந்த சிற்றூர்கள் ஜயசோழ மண்டலத்தில் சந்த்ரகிரி ராஜ்யத்தில் செங்காட்டுக் கோட்டத்தில் செங்கல்பட்டிற்கருகாமையில் அமைந்தவையாம். இங்கே மடாதிபதிக்குக் கொடுக்கப்பெற்ற சிறப்புக்களாவன – பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யரும் மோக்ஷத்தில் விழைந்தவரும், திருநீறு துலங்கும் உடலுடையவரும், ருத்ராக்ஷங்களைத் தரித்தவரும், குளிர், வெப்பம் ஆகிய இரட்டையும் துன்பத்தையும் கடந்தவரும் பெரியவரும், எல்லா சாஸ்த்ரங்களாகிய கடலின் கரைகண்டவரும் தவத்தில் சிறந்தவரும் அஷ்டாங்க யோகத்தில் திளைத்தவரும் கருணை வடிவானரும், அறிவில் சிறந்தவரும் ஸதாசிவ ஸரஸ்வதியின் சிஷ்யரும் இணையற்ற ஒளியுடையவரும் சிவவடிவானவருமான மஹாதேவ ஸரஸ்வதிக்கு..

இந்தச் செப்பேட்டின் காலம் இதில் சகவர்ஷம் 1429 எனவும் சுக்ல வருடம் மஹோதய புண்ய காலத்தில் என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. இதற்கான தேதியைச் சரியாகக் கணிக்க வில்லை. காரணம் சக வருடமும் சுக்ல என்னும் வருடப்பெயரும் பொருந்த வில்லை. இந்தத் தவறு சாஸனங்களில் பொதுவானது என்பதனால் இதனை விடலாம். இதற்கான சற்றே பொருத்தமான தேதி பொயு 1508 ஆம் ஆண்டு ஜனவரி முப்பத்தொன்றாகலாம். இந்தத் தேதி மஹோதய புண்ய காலத்திற்குத் தேவையான அமாவாஸ்யை, திங்கட்கிழமை, ச்ரவண நக்ஷத்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Virasimha Virasimha1 Virasimha2 Virasimha3

First Plate – Second Side

 • श्रीगणाधिपतये नमः।। नमस्तुंगशिर-
 • श्चुंबिचन्द्रचामरचारवे। त्रैलोक्यनगराकार-
 • मूलस्तंभाय शंभवे।(।१) हरेर्ल्लीलावतारस्य दं-
 • ष्ट्रादण्डस्स पातु वः। हेमाद्रिकलशा यत्र धा-
 • त्री च्छत्रश्रियं दधौ।(।२) कल्याणायास्तु तद्धाम-
 • प्रत्यूहतिमिरापहम्। यद्गजोप्यगजोद्भूतं
 • हिरणापि (य)दीड्यते।(।३) तेजक्षीरम-
 • द्देवैर्मथ्यमानान्महांबुधेः। नवनीतमि
 • वोद्भूतमहर(द्य)त्तमो महः।(।४) तस्यासीत्तन-
 • यस्तपोभिरतुलैरन्वर्थनामा बुधः, पु-
 • ण्यैरस्य पुरूरवा भुजबलैरायुर्द्विषां
 • (नि)घ्नतः। तस्यायुर्नहुषोऽस्य तस्य परु-
 • षो बुधेर्ययातिः क्षितौ ख्यातस्त(स्य)
 • तु भूमिवासवनिभः श्रीदेवयानीपतैः।(।५)
 • तदंशो देवकीजानीर्महतीपतिरभू(त्प)
 • (तिः) यशसी (तु) ळुवेंद्रेषु तश कृष्णादि
 • वान्वये।(।६)
 • ततो भूद्बुक्कमाजानिरीश्वर क्षितिपालकः। तत्राष्टमगुणभ्रंश-
 • रत्नं महीभुजां(।।७) स च स्वादुदभूत्तस्मान्नरसा वनिपालकः।
 • देवकिनंदनात्कामो देवकिनंदनादिव(।८) विविधसुकृतस्था
 • ने रामेश्वरप्रमुखे मुहुमुदितहृदयस्थाने स्थाने त्वदधत्त य-
 • थाविधि। बुधपरिवृतो नानादानानि यो भुवि षोडशत्रिभुवन
 • जनोद्गिनसौवर्णवानु स यथा(वि)धिः।। (९) कावेरीमाशुबध्वा
 • बहलझलभरां यो विलंघ्यैव शत्रूञ्जीवग्राहं गृही-
 • त्वा प्रथितभुजबलात्तंच रा(ज्यं) प्रदिश्य। (कृ)त्वा श्रीरङ्ग-
 • पूर्वं तदपि निजवशे पट्टणं यो बभासे कीर्तिस्तम्भं-
 • निखा (तं) (य) त्रिभुवनभवनस्तूयमानापदानः ।(।१०) चेरं
 • चोलं च पा(ण्ड्यं) तमपि च मधुरावल्लभं मानभूषं वी-
 • र्योदग्रं तुरुष्कं गजपतिनृपतिं चापि जित्वा तदन्यान्
 • आगंगातीरलङ्काप्रथमचरमभूभृत्तटान्तं नितान्तं ख्यातः क्षो-
 • णीपतीनां स्रजमिव शिरसां शासनं यो व्यतानीत्(।।११।।)  तिप्पाजीना-
 • गलादेव्योः कौसल्यश्रीसुमित्रयोः। देव्योरिव नृसिंहेंद्रात्त-
 • स्माप्पङ्क्ति र(था)दिव।(।१२) वीरौ निजघना रामलक्षणाविव नं-
 • दनाजाता विरनसिंहेन्द्रकृष्णरायमहिपति(।।१३।।) वीरश्री
 • नारसिंहः स विजयनगरे राजसिंहासनस्थ की-
 • र्त्या नीत्य निरस्यन्नृगनळनहुषावनाः प्रदता(।)
 • आसेतारासुमेरोरवनिसुरनुत स्वैरमाचोद-
 • याद्रेरापाचात्या चलांतादखिलहृदयमावर्ज्य
 • राज्यं शशास(।।१४) नानादानन्यकार्षीत्कनकसदसि यश्श्री
 • विरूपाक्षदेवस्थाने श्रीकालहस्तीशितुरपि नग –
 • रे वेङ्कटाद्रौ काञ्च्यां श्रीशैले शाणशैले महति-
 • हरे त्वौभळाख्ये गिरौ च श्रीरङ्गे कुम्भघो-
 • णे हततमसी महानन्दितीर्थे निवृत्तौ।। गोक(र्णे)
 • रामसेतौ जगति तदितरेष्वप्यशेषेषु (पु)ण्यग्रामे-
 • ष्वार(ब्ध) नानाविधबहलमहादानवारिप्रवा-
 • हैः। यस्योदंचतुरंगप्रकर(खुरर) जश्शुष्यदंभोधि-

Second Plate – Second Side

 • मग्नक्ष्माभृत्पक्षच्छिदोद्यत्तरकुलिशधरोत्कण्ठिता-
 • कुण्ठितासीत्।(।१७) ब्रह्माण्डं विश्वचक्रं घटमुदिमहाभूत(कं)
 • रत्नधेनुः सप्ताभोधीन्हिरण्याश्वरथमपि तुलापू-
 • रुषं गोसहस्रं। हेमाश्वं हेमगर्भं कनककरिर(थं)
 • पंचलाङ्गल्यतानीत्। धर्म्यैकच्छत्रवृत्तिः प्रतिनृपतिशि-
 • रो रत्नकीर्तिप्रतापः।(।१७) राजाधिराजइत्युक्तः यो राजपर-
 • मेश्वरः। मूरुरायलगंजश्च पररायभयङ्करः। (।१८) हि
 • दुरायसुरत्राणो दुष्टशार्दूलमर्दनः। वीरप्रताप इत्या-
 • दिविशेषैरुचितैर्युतः।(१९) वीरदेव महाराज जयजीवे-
 • ति वादिभि अंगवंगकळिंगाद्यै राजभिस्सेव्यते च यः।(।२०)
 • विजयनगरमध्ये रत्नसिंहासनस्थस्स जयति भुवि-
 • रश्रीनृसिंहक्षितीन्द्रः। नृगनहुषययातिनत्ययन्भू-
 • सुराणां सुरतरुरिव धीरः पुण्यकीर्तिप्रतापः।(।२०)
 • शकाब्दे शालिवाहस्य सहस्रेण चतुश्शतैः। एकोन-
 • (त्रिं)शता गण्ये शुक्लनामनि वत्सरे(।।२०) विख्याते मासि(मा)
 • धाख्ये पुण्यकाले महोदये। तुंगभद्रानदीतीरे श्रीवि-
 • रूपाक्षसन्निधौ।(२३) परहंसपरिव्राजकाचार्याय मुमु-
 • क्षवे(।) भस्मोद्धूलितगात्राय रुद्राक्षावलिधारिणे(।।२४) शीतो-
 • ष्णादिद्वंद्वदुःखव्यतीताय महात्मने(।) समस्तशास्त्र-
 • पाथोधिपारगाय तपस्विने(।।२५) अष्टङ्गयोगयुक्त-
 • य दयाशीलाय धीमते(।) सदाशिवसरस्वत्याश्शि-
 • ष्यायामिततेजसे(।।२६) महादेवसरस्वत्यै गुरवे शि-
 • वरूपिणे(।) मण्डले जयचोळस्य चन्द्रगिर्याख्यरा-
 • ज्यके(।।२७) चेंगाट्टुकोष्ठसंयुक्तं चंगलिपट्टसीम-
 • नि(।) निवळूर्पत्तुनायुक्तं सर्वसस्यविराजि-
 • तम्(।।२८)

Third Plate – Second Side

 • पनेयूरु महाग्रामात्प्राचीं दिशमुपाश्रितं। वडक्के-
 • पक्कसुग्रामात्प्रतीचीं दिशमाश्रितं(।।२९) पणयुरु(ट्टि)महा-
 • ग्रामद्दक्षिणस्यां दिशिमाश्रितं। पूडिनामा महाग्रामादु-
 • दीचीं दिशमाश्रितम्(।।३०) एलिच्चूरिति विख्यातं ग्रामर(त्नं) प्रद-
 • त्तवान् एतद्ग्रामीय राज्यादिनाड्डुपत्तुसमन्वितम्।(।३१) पण्णि-
 • रुट्टि(म) हाग्रामाद्दक्षिणां दिशमाश्रितं। तोल्ला(वु)रुवरग्रा-
 • मादुदीच्यां दिशि संस्थितम्(।।३२) (वा)रण(वा)शिसुग्रामात्प्राचीं दि-
 • शमाश्रितम्। ….. रुनामसुग्रामात्पश्चिमां दिशमाश्रितम्(।।३३)
 • वेणपोक्कपुर…सर्वसस्यसमृद्धिकं। साष्टाङ्गं प्र-
 • णमन्भक्त्या …..ताम(णिं)शुभं। (३४) दत्तवान्विनयान-
 • (न)म्रः धर्मशीलप्रतापवान्(३४-१/२) इदमहितनृपाणां मौलिरा-
 • जत्किरीटच्छुरित मणिगणानां कान्तिनीराजितांघ्रेः।
 • लिखितमनघपद्यैश्शासनं ताम्रपत्रंजयतु भुवनसी-
 • म्नि श्रि (नृ)….क्षितीन्द्रः(।३५-१/२) मल्लणाशारिपुत्रेण वीरणाशारिसं
 • ना(।) लेख……वि….तदिदं ताम्रशासनं(।३६-१/२) दानपा-
 • लनया….योनुपालनं। दानास्वग्रामावाप्नोति
 • पालनाद्(च्युतं पदं)। (३७-१/२) श्री
 • श्रीविरूपाक्ष


श्रीगणाधिपतये नमः।।

      ஸ்ரீ கணபதிக்கு வணக்கம்..

 

नमस्तुंगशिरश्चुंबिचन्द्रचामरचारवे।

त्रैलोक्यनगराकारमूलस्तंभाय शंभवे।(।१)

     சம்புவிற்கு நமஸ்காரம். அவருடைய உயர்ந்த திருமுடியில் முத்தமிடும் சந்திரனே சாமரமாக அழகாகத் திகழ்கிறார். அவர்தான் மூவுலகாகிய நகரத்தின் துவக்கத்திற்கு மூலஸ்தம்பம்.

 

हरेर्ल्लीलावतारस्य दंष्ट्रादण्डस्स पातु वः।

हेमाद्रिकलशा यत्र धात्री च्छत्रश्रियं दधौ।(।२)

      திருமாலின் லீலையான வராஹாவதாரத்தின் கோரைப்பல் உங்களைக் காக்கட்டும். அதன் மீது பொன்மலையைக் கலசங்களாகக் கொண்ட நிலமகள் ஒரு குடையைப் போன்ற அழகைப் பெறுகிறாள்.

 

कल्याणायास्तु तद्धाम प्रत्यूहतिमिरापहम्।

यद्गजोप्यगजोद्भूतं हरिणापि (य)दीड्यते।(।३)

      தடையாகிய இருளைப் போக்கும் ஒளி உங்களுக்கு மங்கலத்தை வழங்கட்டும். அது மலைமகளுக்குப் பிறந்தும் யானையாக இருந்தும் ஹரியினால் வணங்கத் தக்கதாகத் திகழ்கிறது.

 

तेजःक्षीरमद्देवैर्मथ्यमानान्महांबुधेः।

नवनीतमिवोद्भूतमहर(द्य)त्तमो महः।(।४)

     ஒளிகொண்ட பாற்கடலைத் தேவர்கள் கடையும்போது அந்தப் பெருங்கடலிலிருந்து வெண்ணையைப் போல் தோன்றிய நிலவென்னும் ஒளி இருளைப் போக்கியது.

 

तस्यासीत्तनयस्तपोभिरतुलैरन्वर्थनामा बुधः,

पुण्यैरस्य पुरूरवा भुजबलैरायुर्द्विषां(नि)घ्नतः।

तस्यायुर्नहुषोऽस्य तस्य परुषो बुधेर्ययातिः क्षितौ

ख्यातस्त(स्य)तु भूमिवासवनिभः श्रीदेवयानीपतैः।(।५)

      அந்த நிலவுக்குத் தன் ஒப்பரிய தவத்தினால் தகுந்த பெயர் கொண்ட புதன் மகனானான். அவனுடைய நல்லூழால் புரூரவன் மகனானான். அவன் தனது தோள்வலிமையால் எதிரிகளின் ஆயுளை அழித்தவன். அவனுக்கு ஆயுவும் அவனுக்கு நஹுஷனும் அவனுக்கு யயாதியும் தோன்றினர். அவன் பூவுலகில் இந்திரனுக்கொப்பானவன். தேவயானியின் கணவன்.

 

तदंशो देवकीजानीर्महतीपतिरभू(त्प)(तिः)

यशसि (तु) ळुवेंद्रेषु तश कृष्णादिवान्वये।(।६)

      அவனுடைய அம்சமாகத் தேவகியின் கொழுநன் தோன்றினான். அவன் துளுவமன்னர்களின் குலத்தில் புகழோடு கண்ணனைப் போலத் திகழ்ந்தான்.

 

ततोभूद्बुक्कमाजानिरीश्वरः क्षितिपालकः।

तत्राष्टमगुणभ्रंशरत्नं महीभुजां(।।७)

      அவனுக்குப் புக்கமாவின் கணவனானவன் தோன்றினான். அவன் மன்னர்களின் விழுமிய மணியாகத் திகழ்ந்தவன்.

स च स्वादुदभूत्तस्मान्नरसावनिपालकः।

देवकिनंदनात्कामो देवकिनंदनादिव(।८)

      பிறகு தேவகியின் மகனுக்கு புராண தேவகியின் மகனான கண்ணனுக்குக் காமதேவன் பிறந்தாற்போல நரஸன் தோன்றினான்.

 

विविधसुकृतस्थाने रामेश्वरप्रमुखे

मुहुमुदितहृदयस्थाने स्थाने त्वदधत्त यथाविधि।

बुधपरिवृतो नानादानानि यो भुवि षोडश

त्रिभुवनजनोद्गिनसौवर्णवानु स यथा(वि)धिः।। (९)

      அறிஞர் குழாமால் சூழப்பெற்ற அவன் ராமேச்வரம் முதலிய பல புண்ய ஸ்தலங்களில் வெகு மகிழ்வோடு விதிப்படி பலவிதமான தானங்களையும் ஷோடச தானங்களையும் மூவுலகு மக்களுக்கும் தானங்களை வழங்கினான்..

 

कावेरीमाशुबध्वाबहलजलभरां यो विलंघ्यैव शत्रू

ञ्जीवग्राहं गृहीत्वा प्रथितभुजबलात्तंच रा(ज्यं) प्रदिश्य।

(कृ)त्वा श्रीरङ्गपूर्वं तदपि निजवशे पट्टणं यो बभासे

कीर्तिस्तम्भंनिखा(तं) (य) त्रिभुवनभवनस्तूयमानापदानः ।(।१०)

      அவன் நீர்பொங்கும் காவேரியைத் தடுத்து அதனைத் தாண்டி தனது எதிரிகளைக் கைப்பற்றி அதன் அப்பாலுள்ள அரசுகளையும் நுழைந்து ஸ்ரீரங்கபட்டணத்தில் மூவலகும் புகழும் வண்ணம் தனது வெற்றித் தூணை நிறுவினான்.

चेरं चोलं च पा(ण्ड्यं) तमपि च मधुरावल्लभं मानभूषं

वीर्योदग्रं तुरुष्कं गजपतिनृपतिं चापि जित्वा तदन्यान्

आगंगातीरलङ्काप्रथमचरमभूभृत्तटान्तं नितान्तं ख्यातः

क्षोणीपतीनां स्रजमिव शिरसां शासनं यो व्यतानीत्(।।११।।) 

      அவன் சேரனையும், சோழனையும் மதுரையின் தலைவனான பாண்டியனையும் வீரத்தால் செருக்குற்ற துலுக்கரையும் கஜபதியையும் வென்று கங்கையின் கரைமுதல் இலங்கைவரை புகழப்பெற்றவனாய் மன்னவர்களின் தலையில் மாலையாகத் திகழும் ஆணைச்சக்கரம் உடையவனாய்த் திகழ்ந்தான்.

तिप्पाजीनागलादेव्योः कौसल्यश्रीसुमित्रयोः।

देव्योरिव नृसिंहेंद्रात्तस्माप्पङ्क्ति र(था)दिव।(।१२)

वीरौ निजघना रामलक्षणाविव नंदनाजाता

विरनरसिंहेन्द्रकृष्णरायमहिपति(।।१३।।)

     அவனுக்குக் கௌஸல்யையும் ஸுமித்ரையையும் போல இரு தேவிகள் திப்பாஜி, நாகலா என்னும் பெயரோடு திகழ்ந்தனர். அந்த இரு தேவியரிடமிருந்து இரு வீரர்களாக ராமலக்ஷ்மணர்களைப் போல நரஸிம்ஹ க்ருஷதேவராய மன்னர்கள் தோன்றினர்.

 

वीरश्रीनारसिंहः स विजयनगरे राजसिंहासनस्थ

कीर्त्या नीत्या निरस्यन्नृगनळनहुषावनाः प्रदता(।)

आसेतारासुमेरोरवनिसुरनुत स्वैरमाचोदयाद्रे

रापाचात्या चलांतादखिलहृदयमावर्ज्य राज्यं शशास(।।१४)

      வீரநரஸிம்ஹன் விஜயநகரத்தில் ராஜஸிம்ஹாஸனத்தில் வீற்றிருந்து புகழிலும் நீதியிலும் ந்ருகன், நளன், நஹுஷன் ஆகியோருக்கு இணையானான். அவன் ஸேதுவில் துவங்கி மேருவரையிலானதும் உதயாத்ரி முதல் மேற்குமலை வரையிலான நிலத்தை எல்லோரின் இதயத்தையும் கவர்ந்து அரசை ஆண்டான்.

नानादानान्यकार्षीत्कनकसदसि यश्श्रीविरूपाक्ष

देवस्थाने श्रीकालहस्तीशितुरपि नगरे वेङ्कटाद्रौ

काञ्च्यां श्रीशैले शाणशैले महति हरे त्वौभळाख्ये गिरौ च

श्रीरङ्गे कुम्भघोणे हततमसी महानन्दितीर्थे निवृत्तौ।।

      அவன் பலவிதமான தானங்களையும் சிதம்பரம், ஸ்ரீவிரூபாக்ஷரின் ஸன்னிதி, ஸ்ரீகாளஹஸ்தி ஸன்னிதி, வேங்கட மலை, காஞ்சி, ஸ்ரீசைலம், அண்ணாமலை, ஓபல மலை, ஸ்ரீரங்கம், கும்பகோணம் மற்றும் திரும்பும்போது மஹாநந்திதீர்த்த்த்திலும் செய்தான்.

गोक(र्णे) रामसेतौ जगति तदितरेष्वप्यशेषेषु (पु)ण्य

ग्रामेष्वार(ब्ध) नानाविधबहलमहादानवारिप्रवाहैः।

यस्योदंचतुरंगप्रकर(खुरर) जश्शुष्यदंभोधिमग्न

क्ष्माभृत्पक्षच्छिदोद्यत्तरकुलिशधरोत्कण्ठिताकुण्ठितासीत्।(।१७)

      அவன் கோகர்ணம், ராமஸேது மற்றும் உலகில் புகழ்பெற்ற பல புண்ய ஸ்தலங்களிலும் செய் பலவிதமான தானங்களில் விட்ட நீரின் பெருக்காலும் அவனுடைய குதிரைப் படையால் எழுந்த தூளியாலும் காய்ந்த நிலமானது எதிரிகளாகிய மலைகளைப் பிளந்த இந்திரனைப் போன்ற அவனை எதிர்நோக்கி நின்றது.

ब्रह्माण्डं विश्वचक्रं घटमुदिमहाभूत(कं)रत्नधेनुः

सप्ताभोधीन्हिरण्याश्वरथमपि तुलापूरुषं गोसहस्रं।

हेमाश्वं हेमगर्भं कनककरिर(थं) पंचलाङ्गल्यतानीत्।

धर्म्यैकच्छत्रवृत्तिः प्रतिनृपतिशिरो रत्नकीर्तिप्रतापः।(।१७)

      அவன் ப்ரஹ்மாணடம், விச்வசக்ரம், மஹாபூத கடம், ரத்னதேனு, ஸப்த ஸாகரம், ஹிரண்ய அச்வம், ரதம், துலாபாரம், ஆயிரம் பசுக்கள், தங்கக் குதிரை, ஹேமகர்ப்பம், பொன்னாலான யானை, தேர், ஐந்து ஏர் ஆகிய தானங்களை வழங்கினான். தர்மத்தையே குடையாக உடைய அவனுடைய புகழ் எதிரியரசர்களின் தலையணியானது.

 

राजाधिराजइत्युक्तः यो राजपरमेश्वरः।

मूरुरायलगंजश्च पररायभयङ्करः। (।१८)

हिदुरायसुरत्राणो दुष्टशार्दूलमर्दनः।

वीरप्रताप इत्यादिविशेषैरुचितैर्युतः।(१९)

அவன் ராஜாதிராஜன், ராஜபரமேச்வரன், முராயலகஞ்ஜன், பரராய பயங்கரன், ஹிந்துராய ஸுரத்ராணன், துஷ்ட சார்தூல மர்தனன், வீரப்ரதாபன் ஆகிய சிறப்புப் பட்டங்களைத் தாங்கினான்.       

 

वीरदेव महाराज जयजीवेति वादिभिः

अंगवंगकळिंगाद्यै राजभिस्सेव्यते च यः।(।२०)

                அவன் அங்க வங்க கலிங்க அரசர்களால் வீரதேவா பேரரசா வாழ்க வாழ்க வென்று வாழ்த்தி வணங்கப்பெற்றான்.

 

विजयनगरमध्ये रत्नसिंहासनस्थस्स

जयति भुविरश्रीनृसिंहक्षितीन्द्रः।

नृगनहुषययातिनत्ययन्भूसुराणां

सुरतरुरिव धीरः पुण्यकीर्तिप्रतापः।(।२०)

விஜயநகரத்தின் நடுவே ரத்ன ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருந்த ஸ்ரீநரஸிம்ஹ மன்னன் விஜயநகரத்தில் வீற்றிருந்த ந்ருக, நஹுஷ, யயாதி ஆகியோருக்கொப்பனாய் அந்தணர்களுக்கு தேவமரத்தைப் போல புண்ய கீர்த்தியோடு திகழ்ந்தான்.

 

शकाब्दे शालिवाहस्य सहस्रेण चतुश्शतैः।

एकोन(त्रिं)शता गण्ये शुक्लनामनि वत्सरे(।।२०)

      சாலிவாஹன சகத்தில் ஆயிரத்து நானூற்று இருபத்தொன்பதாம் ஆண்டு சுக்ல வருடத்தில்

विख्याते मासि(मा)घाख्ये पुण्यकाले महोदये।

तुंगभद्रानदीतीरे श्रीविरूपाक्षसन्निधौ।(२३)

      புகழ்பெற்ற மாக மாதத்தில் புண்ணியமான மஹோதய புண்யகாலத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் ஸ்ரீவிரூபாக்ஷரின் ஸன்னிதியில்

परहंसपरिव्राजकाचार्याय मुमुक्षवे(।)

भस्मोद्धूलितगात्राय रुद्राक्षावलिधारिणे(।।२४)

शीतोष्णादिद्वंद्वदुःखव्यतीताय महात्मने(।)

समस्तशास्त्रपाथोधिपारगाय तपस्विने(।।२५)

अष्टङ्गयोगयुक्ताय दयाशीलाय धीमते(।)

सदाशिवसरस्वत्याश्शिष्यायामिततेजसे(।।२६)

महादेवसरस्वत्यै गुरवे शिवरूपिणे(।)

     பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யரும் மோக்ஷத்தில் விழைந்தவரும், திருநீறு துலங்கும் உடலுடையவரும், ருத்ராக்ஷங்களைத் தரித்தவரும், குளிர், வெப்பம் ஆகிய இரட்டையும் துன்பத்தையும் கடந்தவரும் பெரியவரும், எல்லா சாஸ்த்ரங்களாகிய கடலின் கரைகண்டவரும் தவத்தில் சிறந்தவரும் அஷ்டாங்க யோகத்தில் திளைத்தவரும் கருணை வடிவானரும், அறிவில் சிறந்தவரும் ஸதாசிவ ஸரஸ்வதியின் சிஷ்யரும் இணையற்ற ஒளியுடையவரும் சிவவடிவானவருமான மஹாதேவ ஸரஸ்வதிக்கு..

 

मण्डले जयचोळस्य चन्द्रगिर्याख्यराज्यके(।।२७)

चेंगाट्टुकोष्ठसंयुक्तं चंगलिपट्टसीमनि(।)

निवळूर्पत्तुनायुक्तं सर्वसस्यविराजितम्(।।२८)

पनेयूरु महाग्रामात्प्राचीं दिशमुपाश्रितं।

वडक्केपक्कसुग्रामात्प्रतीचीं दिशमाश्रितं(।।२९)

पणयुरु(ट्टि)महाग्रामद्दक्षिणस्यां दिशिमाश्रितं।

पूडिनामा महाग्रामादुदीचीं दिशमाश्रितम्(।।३०)

एलिच्चूरिति विख्यातं ग्रामर(त्नं) प्रदत्तवान्

      ஜெயசோழ மண்டலத்தில் சந்த்ர கிரி என்னும் ராஜ்யத்தில் செங்காட்டுக் கோட்டத்தில் சங்கலிப்பட்ட எல்லையில் நிவளூர்பத்துடன் எல்லா தானியங்களுடன் இயைந்ததும் பனையூர் க்ராமத்தின் கிழக்கில் அமைந்ததும் வடக்கேபக்க க்ராமத்தின் மேற்கில் அமைந்ததும் பணயூருட்டி க்ராமத்தின் தெற்கில் அமைந்ததும் பூண்டி என்னும் க்ராமத்தின் வடக்கில் அமைந்த்துமான எழிச்சூர் என்னும் க்ராமத்தை வழங்கினான்.

 

एतद्ग्रामीय राज्यादिनाड्डुपत्तुसमन्वितम्।(।३१)

पण्णिरुट्टि(म) हाग्रामाद्दक्षिणां दिशमाश्रितं।

तोल्ला(वु)रुवरग्रामादुदीच्यां दिशि संस्थितम्(।।३२)

(वा)रण(वा)शिसुग्रामात्प्राचीं दिशमाश्रितम्।

….. रुनामसुग्रामात्पश्चिमां दिशमाश्रितम्(।।३३)

वेणपोक्कपुर…सर्वसस्यसमृद्धिकं।

साष्टाङ्गं प्रणमन्भक्त्या …..ताम(णिं)शुभं। (३४)

दत्तवान्विनयान(न)म्रः धर्मशीलप्रतापवान्(३४-१/२)

      இதனை அவன் அஷ்டாங்க நமஸ்காரம் செய்து வழங்கினான். பண்ணிருட்டி க்ராமத்தின் தெற்கில் அமைந்ததும் தொள்ளாவூரின் வடக்கில் அமைந்ததும் வாரணவாசியின் க்ராமத்தின் கிழக்கில் அமைந்ததும் ..ரு க்ராமத்தின் மேற்கில் அமைந்ததுமான வெண்பாக்கம் என்னும் க்ராமத்தையும் தர்மசீலத்துடன் கூடிய அவன் வழங்கினான்.

इदमहितनृपाणां मौलिराजत्किरीट

च्छुरितमणिगणानां कान्तिनीराजितांघ्रेः।

लिखितमनघपद्यैश्शासनं ताम्रपत्रंजयतु

भुवनसीम्नि श्रि (नृ)….क्षितीन्द्रः(।३५-१/२)

      எதிரி மன்னர்களாயினும் தமது தலையணி திகழும் கிரீடத்தில் திகழும் மணிகளின் ஒளியால் நீராஜனம் செய்ப்பெற்றவனாய் இந்த செப்பேடு நிலைக்கட்டும் என்று மன்னவன் வேண்டுகிறான்.

मल्लणाशारिपुत्रेण वीरणाशारिसं ना(।)

लेख……वि….तदिदं ताम्रशासनं(।३६-१/२)

     இந்தச் செப்பேடு மல்லணாசாரியின் மகனான வீரணாசாரியால் எழுதப்பெற்றது.

दानपा लनया….योनुपालनं।

दानास्वग्रामावाप्नोति पालनाद्(च्युतं पदं)। (३७-१/२)

     Between charity and protection, protection of old charity is of high order. By donation one may get svarga and by protecting it he may get the stable position.

श्रीश्रीविरूपाक्ष

ஸ்ரீஸ்ரீ விரூபாக்ஷர்..

இந்தச் செப்பேட்டில் குறிப்பிடப்பெற்ற சிற்றூர்கள் இன்னும் அதே பெயருடன் திகழ்கின்றன. ஸ்ரீமத் ஆதிசங்கரருடன் தொடர்புடைய மடங்களின் சாஸனங்களில் இரண்டாவது பழைய செப்பேடு இதுவேயென்னும் கருத்தை முன்வைக்கிறேன்.

Please follow and like us:

One thought on “காஞ்சி காமகோடி பீடச்செப்பேடுகள் – 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *