
ஈசனுக்கும் மற்றைய சில தெய்வங்களுக்கு உடனாக சில பூதகணங்களை நாம் சிற்பங்களில் பார்த்திருக்கிறோம் அல்லவா. இவை கோயில்களில் வலபி என்னுமிடத்தில் பூதமாலை என்றே பெயரோடு அமைந்திருக்கும். இவை பலவிதமான வடிவங்களில் பல தலைகளோடு அமைந்திருக்கும். இவற்றின் புராணத்தகவல்களைக் காண்போமா.. உலகின் படைப்பை விளக்கும் தறுவாயில் வாயுபுராணம் இத்தகைய படைப்புகளை விவரிக்கிறது. வாயுபுராணத்தின் உத்தரார்த்தத்தின் எட்டாவது அத்யாயம் இவர்களின் பிறப்பையும் மற்றைய தகவல்களையும் தருகிறது. பூதிர்விஜஜ்ஞே பூதாம்ஶ்ச ருத்ரஸ்யானுசரான் ப்ரபோ:| ஸ்தூலான் க்ருஶாம்ஶ்ச தீர்காம்ஶ்ச…
தொடர்ந்து வாசிப்பு