பத்ம மாளிகை

kanchipuram

விமானத்தைச் சுற்றியமையும் பிராகாரம் போன்ற கட்டிட அமைப்பே மாளிகை(வடமொழியில் மாலிகா) அல்லது திருச்சுற்று மாளிகை என்று நூல்களில் குறிப்பிடப்பெற்றிருக்கிறது. காமிகாமம் மாளிகை என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது.      शालायामपि शालाङ्गा निष्क्रान्ताननशोभिता। सा शाला मालिका ज्ञेया शास्त्रेस्मिन् कामिकाह्वये।। சாலைக்கு அங்கமாக அமைந்து முற்பகுதியில் நீட்சி பெற்றமையும் அமைப்பே மாளிகை என்று காமிகத்தில் அழைக்கப் பெறுகிறது. இவ்விதம் மாளிகையின் விளக்கம் ஆகமத்தில் கிடைக்கிறது. மாளிகையை ஸபைகளில் ஒன்றாகவும் கருதலாம். மாளிகையை அதன் இடத்தைப் பொறுத்து ப்ராஸாதமாளிகை,…

தொடர்ந்து வாசிப்பு

கல்லூரி – சொல்லாய்வு

     இன்று நமது வழக்கிலுள்ள பல சொற்களும் அவற்றின் துவக்க காலபயன்பாட்டிலிருந்து வேறாக வழங்கிவருவது நாமறிந்ததே. அத்தகையதோர் சொல் கல்லூரி என்பதாகும். தற்போது உயர்கல்விகூடத்திற்கு கல்லூரி என்னும் சொல் புழங்கி வருகிறது. ஆனால் இதன் துவக்ககால பயன்பாட்டையும் வடநூல் பயன்பாட்டையும் காண்போமா. தமிழ்நூல்களில் கல்லூரி      தமிழ்நூல்களைப் பொறுத்தவரை கல்லூரி என்னும் சொல் ஆயுதப்பயிற்சிகூடம் என்னும் பொருளில் பயன்பட்டு வந்ததைச் சீவகசிந்தாமணியின் குணமாலையார் இலம்பகம் உணர்த்திநிற்கின்றது. கலத்தற் காலங்கல் லூரிநற் கொட்டிலா முலைத்த டத்திடை மொய்யெருக் குப்பையா…

தொடர்ந்து வாசிப்பு

கதிரவனின் கணைப்போர்

கதிரவனின் கணைப்போர் ஒப்புவமையின்றி ஒளிவீசும் கலாச்சாரத்தைப் படைத்த நமது பாரதமண்ணில் எல்லாக் கூறுகளிலும் தெய்வத்தன்மையைக் கண்டு போற்றும் பண்பு இன்றளவும் எழில்வாய்ந்ததொன்றாக போற்றப்பெறுகிறது. சிற்பங்களும் கட்டிடக்கலையும் தெய்வீகத்தன்மையின் வெளிப்பாடுகளாக ஏற்றம் பெற்றுத் திகழ்கின்றன. அந்தச் சிற்பங்களிலும் வேத, புராணச் செய்திகளின் நுட்பமான வெளிப்பாடு இருபுலத்தையும் உணர்ந்தவர் மனதில் இறும்பூதெய்தச் செய்கிறது. பல்லவர் காலத்திய ஆலய சிற்பங்களில் வேதபுராணச் செய்திகள் திறம்பட எடுத்தாளப் பெற்றிருக்கின்றன. அதைத்தொடர்ந்து சோழர்கால சிற்பங்களிலும் வேதபுராணச் செய்திகள் திறனுற கையாளப்பெற்றிருப்பதைக் காணும்போது அவர்தம் அறிவுத்திறத்தை…

தொடர்ந்து வாசிப்பு

கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்

கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல் அர்த்தம் என்றால் வ்ருத்தி – தொழில் என்று பொருள். ஒரு மனிதன் வாழ்வதற்குத் தேவையான தொழிற்கருவிகளைப் பற்றிக் கூறுவதால் அர்த்த சாஸ்த்ரம் எனப்படுகிறது. அவற்றில் மிக முக்கியமானது பூமி. (मनुष्यवती पृथ्वी) மனுஷ்யவதி ப்ருத்வீ என்று மனிதர்களுக்கு மிக முக்கியமான கருவி பூமியே என்று கௌடல்யரே குறிப்பிடுகிறார். அர்த்த சாஸ்த்ரத்தின் துவக்கத்தில் பூமியை அடைவதற்கும் அதனைக் காப்பதற்கும் இதுவரை எழுதப் பெற்ற அனைத்து அர்த்தசாஸ்த்ரங்களையும் தொகுத்து இந்த ஒரு அர்த்தசாஸ்த்ரத்தை எழுதுகிறேன் என்றும்…

தொடர்ந்து வாசிப்பு

தசரூபகத்தில் நாட்டியம்

தசரூபகத்தில் நாட்டியம் விலங்கினத்தைக் காட்டிலும் பகுத்தறிவால் தனித்துச் சிறந்த மாந்தரினம் மனத்தின் வளமையால் கலை பல வளர்த்தது. எண்ணத்தை வெளிக்கொணர மொழியென்னும் ஊடகம் உருவாகிய பின்னர் அதனை ஆதாரமாகக் கொண்டு எத்துணையோ கலைப் பண்பாட்டுச் சின்னங்கள் உருவாயின. அத்தகைய கலைகளில் ஒன்றாகத் திகழ்வது கூத்துக் கலை. குறிப்பாக நமது நாட்டில் பண்டைய காலம் தொட்டே மிகச் சிறப்பான கலையாகத் திகழ்வது இக்கலை. பயன்பாடுகள் பிறந்த பின்னர் அவற்றிற்கான இலக்கணம் எழுதும் முறை பொதுவாக எல்லாத் துறைகளிலும் காணப்படுவதே….

தொடர்ந்து வாசிப்பு

தமிழ் நூல் விளக்கங்களில் வடமொழியின் பங்கு

தமிழ் நூல் விளக்கங்களில் வடமொழியின் பங்கு             பாரதபூமியில் தோற்றம் நிகழ்ந்ததென்றென்று அறியமுடியாது சிறந்து விளங்கும் மொழிகள் இரண்டு. ஒன்று வடமொழி, மற்றொன்று தென்மொழியாம் செந்தமிழ். இவ்விரு மொழிகளும் பண்டைநாள் முதல் வழங்கிவரும் பேறுடையவை. தரத்திலும் சுவையிலும் நிகரானவை. இரு மொழிகளும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டவை என்பது மரபுவழி வந்த நம்பிக்கை. வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியைக் குடமுனிக்கு வகுத்தருளும் கொல்லேற்றுப்பாகர் என்பது காஞ்சிபுராணச்செய்தி  இவ்விருமொழிகளிலும் கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்துள்ளது என்பது இருமொழியறிந்த நடுநிலையான அறிஞர்கள்…

தொடர்ந்து வாசிப்பு

மூலபுராணங்களில் முடியுடை மூவேந்தர்கள்

மூலபுராணங்களில் முடியுடை மூவேந்தர்கள்       இந்திய கலாச்சாரம் சார்ந்த இலக்கியங்களில் இதிகாஸங்களும் புராணங்களும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. வேதத்தின் கருத்துக்களை விளக்க நண்பனைப்  போலக்  கதைகளைக் கூறி கருத்துக்களை எடுத்துச் சொல்ல புராணங்கள் தோன்றின என்பர். இத்தகைய புராணங்களில் மூல புராணங்களாகப் பதினெண் புராணங்கள் கூறப் படுகின்றன. இவற்றை வேதவியாசரே இயற்றியதாக மரபு வழி சார்ந்த நம்பிக்கைகள் கூறுகின்றன. ஆயினும் ஆய்வியலார் இவை பல காலகட்டங்களில் இயற்றப் பட்டக் கதைகளின் தொகுப்பு என்று கருதுகின்றனர். கி.மு…

தொடர்ந்து வாசிப்பு

ஆசார்ய சுந்தரபாண்டியன்

ஆசார்ய சுந்தரபாண்டியன்   ஆசார்ய என்று ஒரு பாண்டிய மன்னனுக்குப் பட்டம் கொடுத்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்தப் பட்டம் நான் கொடுத்ததில்லை. ஒரு வேதாந்த நூலுக்கு கல்பதரு என்னும் உரையெழுதும் போது அமலானந்தர் என்னும் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவி கொடுத்த பட்டமிது. வேதாந்தத் துறவி பாண்டிய மன்னனை ஆசார்யர் என்று குறிப்பிடுவதற்கு என்ன காரணம்?  இதனை ஆய்வதற்கு முன்பு ஆதிசங்கரர் இயற்றிய பிரம்ம சூத்திர உரையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். வேதங்களின் இறுதிப்பகுதியாகத்…

தொடர்ந்து வாசிப்பு

ஆடற்கரணங்களும் அரசன் முகமது ஷாவும்

ஆடற்கரணங்களும் அரசன் முகமது ஷாவும்   தலைப்பைக் கண்டவுடன் ஏதோ அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தத்தைப் போலத் தோன்றுகிறதா? சம்பந்தமில்லாதது சபைக்கு வருவானேன்?  சம்பந்தம் இருக்கிறது. அதற்கு முன் கரணங்கள் என்றால் என்னவென்று அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? கரணம்             கூத்துக் கலையின் இலக்கணமாகப் பரதர் என்பவர் இயற்றிய நூல் நாட்டியசாஸ்திரம். இந்த நூலின் நான்காம் அத்தியாயத்திற்கு தாண்டவ இலக்கணம் என்று பெயர். இந்த அத்தியாயத்தில் கரணம் எனப்படும் ஆடல்நிலையைப் பற்றி விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. ஹஸ்தபாதஸமாயோக:…

தொடர்ந்து வாசிப்பு

வடமொழிக் கவிஞன் வான்புகழ் இரகீம்

நமது நாட்டின் இரு தொன்மொழிகள் தென்மொழியும் வடமொழியும் ஆகும். இவற்றுள் தென்மொழியான தமிழ் எல்லா இனத்திற்கும் பொதுவாய் நிற்கிறது. ஆதலின் இன்றளவும்  இலக்கிய உலகில் கோலோச்சி வருகிறது. ஆனால் வடமொழியைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது இனத்தைச் சார்ந்ததாகத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு வருகிறது. உண்மையில் வடமொழியும் தமிழைப் போல எல்லாத் தரப்பு மக்களுக்கும் இயைந்த மொழியே ஆகும். இந்த உண்மையை வடமொழியில் வெளிவந்திருக்கும் பிற தரப்பு இலக்கியங்கள் நிறுவுவன ஆகும். இன்று பகுத்தறிவு என்னும்…

தொடர்ந்து வாசிப்பு