வ்ருத்த ஸ்புடிதம்

vritta_punjai

வாஸ்து நூல்களில் விமானங்களை அழகு செய்ய பல்வேறு உறுப்புக்கள் கூறப்பெற்றுள்ளன. அத்தகைய உறுப்புக்களில் வ்ருத்த ஸ்புடிதமும் ஒன்று. இதன் இலக்கணம் காமிகாகமத்தில் பின்வருமாறு கூறப்பெற்றுள்ளது. एवं कुम्भलता प्रोक्ता वृत्तस्फुटितमुच्यते षडष्टदशभिर्भानुमनुवैकारमात्रकैः  ११९ व्यासतारार्धनिष्क्रान्ता द्वित्र्यंशं वा द्विभागिकम् वृत्ताकारं समं चेत्तु तोरणाङ्घ्रिवदायतम्  १२० सकन्धरं तदूर्ध्वे तु शुकनास्या विभूषितम् वृत्तस्फुटितमत्रोक्तं द्युस्थसद्मविभूषितम्  १२१      ஆறு, எட்டு, பத்து, பதினொன்று மற்றும் பதினான்கு மாத்ரைகளில் தன்னுடைய அகலத்தில் பாதியளவிற்கோ அல்லது மூன்றில் இரண்டு…

தொடர்ந்து வாசிப்பு

தாதாபுரத்தின் கபோதபஞ்ஜரம்

kapota1

காமிகாகமம் பஞ்ஜரங்களின் வகைகளை விளக்கும்போது கீழ்க்கண்டவற்றை விளக்குகிறது. तस्यादौ सिंहसंज्ञकम् सार्धपञ्जरमन्यत्स्यात्तृतीयं पञ्जरं मतम्  १३२      निर्यूहपञ्जरं पश्चात्पञ्चमं लम्बनासिकम् सिंहश्रोत्रं तु षष्ठं स्यात्खण्डनिर्यूहकं ततः  १३३ झषपञ्जरमन्यत्स्यात्तासां लक्षणमुच्यते பஞ்ஜரங்கள் எண்வகைப்படும், அவை ஸிம்ஹ பஞ்ஜரம், ஸார்தபஞ்ஜரம், பஞ்ஜரம், நிர்வ்யூஹபஞ்ஜரம், லம்பநாஸிகம், ஸிம்ஹச்ரோத்ரம், கண்டநிர்வ்யூஹகம் மற்றும் ஜஷபஞ்ஜரம் ஆகியவையாம். இவற்றின் இலக்கணங்களை வரையறுத்த பின்னர் ஒன்பதாவதாக கபோத பஞ்ஜரம் என்னும் பஞ்ஜர வகையை வரையறுக்கிறது இந்த ஆகமம். पञ्जाराकृतिसंयुक्तं कपोतात्तु विनिर्गतम्  १५२…

தொடர்ந்து வாசிப்பு

எல்லோரா குடைவரையின் மத்தவாரணீ

matta2

ஒரு கோயிற் கட்டிடத்தில் தூணுக்கு மேலே உள்ள அங்கங்கள் உத்தரம், வாஜனம், வலபி மற்றும் கபோதம் என்று நாம் அறிவோம். இந்த உறுப்புக்கள் இணைந்த தொகுதிக்கே ப்ரஸ்தர வர்க்கம் என்று பெயர். இவற்றுள் வலபி என்பது மிக இன்றியமையாத பகுதியாகும். இந்தப் பகுதியில்தான் பூதவரி, அன்னவரி. சிங்கவரி முதலியவை இடம்பெறும். இதன் மறுபெயர்களை மானஸாரம் பின்வருமாறு தருகிறது.      गोपानं च वितानं च वलभी मत्तवारणम् विधानं च लुपं चैवमेते पर्यायवाचकाः ।। मानसारः…

தொடர்ந்து வாசிப்பு

பத்ம மாளிகை

kanchipuram

விமானத்தைச் சுற்றியமையும் பிராகாரம் போன்ற கட்டிட அமைப்பே மாளிகை(வடமொழியில் மாலிகா) அல்லது திருச்சுற்று மாளிகை என்று நூல்களில் குறிப்பிடப்பெற்றிருக்கிறது. காமிகாமம் மாளிகை என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது.      शालायामपि शालाङ्गा निष्क्रान्ताननशोभिता। सा शाला मालिका ज्ञेया शास्त्रेस्मिन् कामिकाह्वये।। சாலைக்கு அங்கமாக அமைந்து முற்பகுதியில் நீட்சி பெற்றமையும் அமைப்பே மாளிகை என்று காமிகத்தில் அழைக்கப் பெறுகிறது. இவ்விதம் மாளிகையின் விளக்கம் ஆகமத்தில் கிடைக்கிறது. மாளிகையை ஸபைகளில் ஒன்றாகவும் கருதலாம். மாளிகையை அதன் இடத்தைப் பொறுத்து ப்ராஸாதமாளிகை,…

தொடர்ந்து வாசிப்பு

ராஜஸிம்ஹனின் கண்டஹர்ம்யங்கள்

khanda_3 copy

     ஒப்புவமையற்ற வேந்தனான ராஜஸிம்ஹனென்னும் புரவலனால் புரக்கப்பெற்ற சிற்பிகள் கல்லில் கலைவண்ணம் கண்டனர். காஞ்சி கைலாஸநாதர் கோயிலும் பனமலையிலுள்ள தாளகிரீச்வரர் கோயிலும் இத்தகைய கற்கோயில் வண்ணத்தின் ஈடற்ற எடுத்துக்காட்டுக்களாய்த் திகழ்கின்றன. இந்தக் கோயில்களில் காணப்பெறும கண்டஹர்ம்யம் என்னும் சிற்பக்கலைக்கூறு வேறு கோயில்களிலும் காணப்பெறாத ஒப்புவமையற்ற ஒன்றாகும்.      காஞ்சிக் கைலாஸநாதர் கோயில் மிச்ர விஷ்ணு சந்த அமைப்பில் அமைந்த நான்கு தளக் கோயிலாகும். இந்த விமானத்தின் நான்கு புறமும் நான்கு பத்ரசாலைகளும் மூலைகளில் நான்கு கர்ணசாலைகளும் இடம்…

தொடர்ந்து வாசிப்பு

கௌசிகீச்வரர் கோயில், காஞ்சிபுரம்

KAUŚIKĪŚVARA TEMPLE

கோயிலின் தற்போதைய பெயர் : கௌசிகீச்வரர், சொ(தொ)க்கீச்வரர் கல்வெட்டிலுள்ள பெயர் : தெற்கிருந்த நக்கர் கோயிலின் அமைவிடம் : நகரத்திற்கு நடுவில் காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு தென் மேற்கில்அமைந்துள்ளது. கோயிலின் காலம் : இந்தக் கோயிலில் அமைந்துள்ள பரகேஸரிவர்மனின் கல்வெட்டு பண்டைய அறிஞர்கள் உத்தமசோழனுடையதாகக் கணித்தனர். அதனையொட்டி கோயிலின் காலத்தை திரு. எஸ்.ஆர்.பாலஸுப்ரமண்யம் அவர்கள் முதலாம் பராந்தகனுடைய காலமாகவும் கணித்தார். ஆனால் பிறகு திரு.கே.ஆர்.ஸ்ரீனிவாஸன் அவர்கள் இந்தக் கோயில் சோழர்கட்டிடக்கலையின் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்ததாகவும் பரகேஸரிவர்மன் முதலாம்…

தொடர்ந்து வாசிப்பு