சுவடிகளில் எழுத்தொழுங்கும் சுருக்கச் சொற்களும்

Manus

எழுத்தொழுங்கு      பதிப்பிக்கப்பெற்ற நூல்களில் காண்பதைப் போலவே சுவடிகளிலும் கூட எழுத்தொழுங்கு இடம் பெற்றுள்ளது. வடமொழிச் சுவடிகளில் தண்டம் எனப்பெறும் செங்குத்துக் கோடு (।) செய்யுட்களில் இடம்பெற்றுள்ளது. செய்யுட்களில் ஒரு கோடும் இரு கோடுகளும் கூட இடம்பெற்றுள்ளன. உரைநடையிலும் கூட சொற்றொடர் முடிவில் ஒரு கோடும், பத்தியின் இறுதியில் இரு கோடுகளும் இடம்பெற்றுள்ளன. சில இடங்களில் இரு கோடுகள் கோடு இரு கோடுகள் (।।-।।) போன்றதொரு அமைப்பு ஒரு பகுதியின் இறுதியில் காணப்பெறுகிறது. சில சுவடிகளில் இதனைக்…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிக் குறிப்பு

Manus

பொதுவாகச் சுவடிகளின் இறுதிப் பகுதியில் சுவடியைப் பற்றிய குறிப்புக்கள் காணப்பெறும். இதனைச் சுவடிக்குறிப்பு என்பர். சிலநேரம் சுவடிக் குறிப்பு இல்லாமலும் சுவடிகள் கிடைத்துள்ளன. சுவடிக் குறிப்புக்கள் வெறும் நூலின் பெயரை மட்டும் தருமளவிற்கு மிக எளிமையாகவும், இயற்றியவர், அவரைப் புரந்தார் ஆகிய பல குறிப்புக்களைத் தருவதாகவும் அமையும். ஒவ்வொரு அத்யாயம் அல்லது சருக்கத்தின் இறுதியிலும் கூட சுவடிக் குறிப்புக்கள் அமையும். இந்த நடுச் சுவடிக் குறிப்புக்கள் மிக எளிமையாக நூலின் பெயரையும் அத்யாயப் பெயரை மட்டும் தரும்…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளின் வடிவங்கள்

Manus

     சுவடிகளின் ஏடுகள் பொதுவாக தைக்கப்பெற்றோ தைக்கப்பெறாமலோ இருக்கும். ஓலைச்சுவடிகளும் பூர்ஜ பத்ரங்களும் தைக்கப்பெறாமலும் இருக்கும். கையினால் உருவாக்கப் பெற்ற காகிதங்களும் கூட தைக்கப்பெறாமல் இருக்கும்.      தச வைகாலிக ஸூத்ரம் என்னும் நூல் சுவடிகளின் பின்வரும் வகைகளைக் குறிப்பிடுகிறது. கண்டீ கச்சபீ ஸம்புட பலகம் மற்றும் முஷ்டி      கண்டி வகைச் சுவடிகளின் நீள அகலங்கள் ஒத்தமைந்து ஒரு பலகையைப் போலிருக்கும். கச்சபீ வகைச் சுவடிகள் நடுவில் அகன்றும் ஓரங்களில் சுருங்கியும் இருக்கும். ஸம்புட பலகமான…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளின் எழுத்தர்

scribe

     எழுத்தர் என்பவர் சுவடிகள் ஆவணங்கள் இவற்றைப் படியெடுப்பவர் ஆவார். எழுத்தருக்கும் நூல்களை யாத்தவருக்கும் வேறுபாடறியாமல் சிலர் மயங்குவதுண்டு. லிபிகரன், லிபிகாரன், லேககன் ஆகியவை எழுத்தருக்கான வடமொழிச் சொற்களாம். பண்டைய காலத்தில் அரசாங்க எழுத்தரும் இருந்தனர். அவர்கள் கரணிகர், காயஸ்தர், ராஜலேககர், ராஜலிபிகரர் என்று வழங்கப்பெற்றனர். ஆவணங்களைப் பாதுகாப்பவர் அக்ஷபாடலிகர் என்று வழங்கப்பெற்றார். கௌடல்யரும் எழுத்தரின் இலக்கணத்தைப் பின்வருமாறு தருகிறார்.      अमात्यसम्पदोपेतः सर्वसमयवित्, आशुग्रन्थः चार्वक्षरः लेखनवाचनसमर्थः लेखकः स्यात्।       அமைச்சருக்குண்டான பண்புகளோடியைந்தவர், எல்லா…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான மற்றைய பொருட்கள் – மை

inkpot3

காகிதம் மற்றும் பூர்ஜபத்ரம் ஆகிய சுவடிகளில் எழுதுதற்கும் ஓலைச்சுவடியில் எழுதிய எழுத்துக்களைத் தெளிவாகக் காணப் பூசவும் மை பயன்படுத்தப்பெறுகிறது. வடமொழி நிகண்டுகளில் மேலம், மஷீஜலம், பத்ராஞ்ஜனம் ஆகிய சொற்கள் மைக்குக் காணப்பெறுகின்றன. இவற்றுள் பத்ராஞ்ஜனம் என்பது ஓலைச்சுவடியில் பூச பயன்படுத்தப்பெறும் மையாகும். மைக்கூடுகளும் வடமொழியில் மஷீபாத்ரம், மஷீபாண்டம், மஷீகூபிகா மற்றும் மேலந்து ஆகிய சொற்களால் குறிப்பிடப்பெறுகின்றன. சில அறிஞர்கள் மேலம் என்னும் சொல் கிரேக்க மூலத்தைக் கொண்டதாகக் கருதினர். மேற்கொண்ட செய்த ஆய்வுகளில் இந்தச் சொல் வடமொழிமூலத்ததே…

தொடர்ந்து வாசிப்பு

சுவடியியலில் பயன்படும் ஏனைய கருவிகள்

vyasa

     மற்றைய சில கருவிகளும் சுவடிகளை எழுதுங்கால் பயன்படுத்தப் பெறுகின்றன. வட்டங்களும் கோடுகளும் வரைய சுழற்கருவிகளும் அளவிகளும் கூட பயன்படுத்தப்பெறுகின்றன. ராயபஸேணிய ஸுத்தம் என்னும் ஜைன நூல் சுவடிகளோடு தொடர்புடைய பலவிதமான கருவிகளைக் குறிப்பிடுகிறது. கூழாங்கற்களும் சங்கும் கூட மென்மையாக்கும் கருவிகளாகப் பயன்படுகின்றன. எழுத்தாணிகளை வைக்கும் பெட்டிகளும் கூட பயன்படுத்தப்பெறுகின்றன. சிலவேளை மைக்கூடுகள் இத்தகைய எழுத்தாணிப்பெட்டகத்தோடு இணைக்கப்பட்டதாய் கிடைத்துள்ளன. மற்றைய சில கருவிகள் கீழே குறிப்பிடப்பெற்றுள்ளன. ரேகாபடீ      பூர்ஜபத்ரம் அல்லது காகிதத்தில் கோடுகளை நேராக வரைவதற்காக…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபொருட்கள்

stylus1

     சுவடிகளில் எழுதவும் பல வகையான பொருட்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. அவற்றின் தன்மையைப் பொறுத்து அவை மூவகையாகப் பிரிக்கப்பெற்றுள்ளன. கூரியமுனையுடைய எழுத்தாணி – ஓலைகளில் எழுத மென்மையான முனையுடைய எழுதுபொருள் – பூர்ஜபத்ரம் முதலியவற்றில் எழுத தூரிகை – வண்ணங்கள் பூச 1. எழுத்தாணியை வடமொழியில் லோஹகண்டகம் அல்லது சலாகா என்று கூறுவர். இரும்பினாலான நீளமான கம்பி 10-30 செமீ அளவில் ஆக்கப்பெற்று எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பெறும். இதற்கு மிகக் கூரிய முனையும் அமைக்கப்பெறும். மற்றொரு முனை தட்டையாக்கப்பெற்று…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடுபொருட்கள் – துணி

kadata

     துணியும் பண்டைக்காலத்தில் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பெற்றது. இது நீடிக்கும் பொருளில்லை என்பதால் நூல்களை எழுதுவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்பெறவில்லை. துணியின் மீது அரிசி அல்லது கோதுமையை அரைத்த மாவைத் தடவி காயவைத்து பின்னர் எழுதப்பயன்படுத்துவர். இத்தகைய துணிபொருட்கள் வடமொழியில் படம், படிகா, கார்பாஸ படம் என்னும் பெயர்களில் அழைக்கப்பெறுகிறது. யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி இத்தகைய படங்களைக் குறிப்பிடுகிறது. पटे वा ताम्रपटे वा स्वमुद्रोपचिह्नितम्।       இத்தகைய துணியில் எழுதும் வழக்கம் மிகப்பழமையாக நாஸிக் கல்வெட்டில் குறிப்பிடப்பெற்றிருக்கிறது. பாணரும் தமது…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுது பொருட்கள் – செங்கல், தந்தம் மற்றும் சங்கு

brick1

     இதுவரை சுவடித்துறையில் தோலின் பயன்பாட்டைக் கண்டோம். இப்போது செங்கல், தந்தம் மற்றும் சங்கின் பயன்பாட்டைக் காண்போம். செங்கல்      சாஸனங்களோடான செங்கல்கள் உத்தர ப்ரதேசமாநிலத்திலிருந்தே பெரும்பாலும் கிடைத்துள்ளன. அவை மதுராவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பெற்றுள்ளன. கோரக்புர் மாவட்டத்திலுள்ள கோபாலபுரத்தில் கிடைத்த பொயு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த செங்கற்களில் புத்த மத ஸூத்ரங்கள் எழுதப்பெற்றுள்ளன.      காஸிபுர் மாவட்டத்திலுள்ள பிதாரியில் கிடைத்த செங்கலொன்றில் “ஸ்ரீகுமாரகுப்தஸ்ய” என்று எழுதப்பெற்றுள்ளது.      தேஹ்ராதுனிலிருந்து சீலவர்மன் என்னும் அரசனின் அச்வமேத செங்கற்கள்…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – தோல்

     பாரதநாட்டில் புலித்தோல் மற்றும் மான்தோலைத்தவிர மற்றைய தோல்கள் புனிதமற்றவை என்று கருதப்பெற்றதால் எகிப்து போன்ற தேசங்களைப் போன்று அவற்றின் பயன்பாடு நம் நாட்டில் இன்றி மிகவும் அரிதாகவே கிடைக்கிறது.      கரும்பலகையைப் போல வரைபடங்களுக்கும் நகல் எழுதுதற்கும் தோல் பயன்பட்டு வந்திருக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வடமொழிப்புலவரும் வாஸவதத்தம் என்னும் உரைநடைக் காப்பிய நூலை யாத்தவருமான ஸுபந்து என்பார் எழுதும் முறையில் தோலின் பயன்பாட்டைக் குறிப்பிடுகிறார். विश्वं गणयतो धातुः शशिखठिनीखण्डेन तमोमषीयामे अजिन इव…

தொடர்ந்து வாசிப்பு