சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – கல்

bhoja_ins

கல் எழுதுபடு பொருளாக மிகப்பழங்காலத்திலிருந்தே பயன்பட்டுவருகிறது. சில கல்வெட்டுக்கள் இலக்கிய சுவை பொங்கும் வண்ணமாக அமைந்துள்ளன. ஆனால் சுவடியியற்பார்வையிலிருந்து பார்த்தால் அவற்றுள் ஒரு சில கல்வெட்டுக்கள் மட்டுமே இலக்கியப் படைப்புக்களைக் கொண்டிருக்கின்றன. அசோகனின் கல்வெட்டுக்கள், தாள்ளகுண்டா தூண் கல்வெட்டு, ஹாதிகும்பா கல்வெட்டு மற்றும் கன்யாகுமரி கல்வெட்டு ஆகியவை இலக்கியச்சுவைக்காகப் பெயர் பெற்றவை. ஆயினும் அவை கூட தானமளிக்கப்பெற்றவற்றிற்கு ஆவணமாகவே திகழ்கின்றன. இலக்கியப்படைப்புக்களாகத் திகழும் கல்வெட்டுக்களாவன. குடுமியாமலையிலுள்ள பல்லவ க்ரந்த லிபியில் அமைந்த இசைக்கல்வெட்டு. 2.குவாலியரிலுள்ள பத்மநாதர் கோயிலில்…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – வெண்கலம், இரும்பு மற்றும் ஈயம்

pillar1

இதுகாறும் தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் பித்தளை ஆகிய உலோஹங்கள் எழுதுபடு பொருட்களாக எவ்வாறு பயன்பட்டனவென்று கண்டோம். இனி மீதமிருக்கும் உலோஹங்கள் வெண்கலம், இரும்பு மற்றும் ஈயமாகும்.   வெண்கலம் மணி தயாரிக்கப் பயன்படும் இந்த உலோஹம் அரிதாக கருவிகள் செய்யவும் பயன்படுகிறது. இதனால் உருவாக்கப்பெற்ற மணிகளில் சில அதைக் கொடுத்தவரின் பெயரோடு காணப்பெறுகின்றன. பெஷாவரில் கிடைத்த வெண்கலத்தாலான மனிதத் தலையில் சுற்றிலும் எழுத்துக்கள் காணப்பெறுகின்றன.   இரும்பு இந்த உலோஹம் பொதுப்பயன்பாட்டிலும் விலைகுறைவாகவும் இருந்தாலும் கூட…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடுபொருட்கள் – வெள்ளி மற்றும் பித்தளை

இதுவரை தங்கம் மற்றும் தாமிரத்தை எழுதுபடுபொருளாகப் பயன்படுத்தவதைப் பார்த்தோம். வெள்ளி தங்கத்தை விட விலைகுறைவானதாயினும் என்ன காரணத்தாலோ வெள்ளியில் எழுதப்பெற்ற பொ   ருட்கள் அரிதாகவே உள்ளன. இதுவரை சில எழுதப்பெற்ற பொருட்களே கிடைத்துள்ளன. சில நாணயங்களும் வெள்ளி ஆவணங்களும் பட்டிப்ரோலு மற்றும் தக்ஷசீலத்தில் கிடைத்த ஸ்தூபங்களில் கிடைத்துள்ளன. தாந்த்ரிக யந்த்ரங்களும் சில சக்ரங்களும் வெள்ளியில் எழுதப்பெற்றுள்ளன. ஜைனர்களும் கூட புனிதமான யந்த்ரங்களை எழுத வெள்ளியைப் பயன்படுத்தியுள்ளனர். பித்தளை      இந்த உலோஹம் மிகவும் உருகுந்தன்மையுடையது. ஆகவே இது…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – தங்கம்

Antique-Burmese-Kammavaca-Manuscript-315

     இதுவரை சுவடிகளுக்கான முக்கியமான எழுதுபடுபொருட்களான பனையோலை. பூர்ஜபத்ரம், காகிதம் மற்றும் ஸாஞ்சிபாத்தைப் பற்றிப் பார்த்தோம். இப்போது நாம் முக்கிய மற்ற பொருட்களைப் பார்ப்போம். முக்கியமற்ற பொருட்கள் இரு பிரிவுகளாக உள்ளன. உலோஹங்கள் உலோஹமற்ற பொருட்கள் உலோஹங்களில் இப்போது நாம் அரச உலோஹமான தங்கத்தைப் பயன்பாடு சுவடித்துறையில் எவ்விதம் அமைந்துள்ளது என்று காண்போம். தங்கமும் தாமரத்தைப் போல எளிதில் உருகும் தன்மையுடையது என்பதாலும் அதனையும் அடித்து ஏடுகளாக்கி எழுதவியலும். ஆயினும் அதன் அருமையையும் விலையையும் கருத்திற்கொண்டு அது…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – ஸாஞ்சிபாத் மற்றும் தூலிபாத்

tula

இதுவரையில் பனையோலை, காகிதம் மற்றும் பூர்ஜபத்ரம் என்னும் மூன்று முக்கிய எழுதுபடுபொருட்களைக் கண்டோம். இன்னும் இரு எழுதுபடு பொருட்கள் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. ஸாஞ்சிபாத் மற்றும் தூலிபாத் என்பவையே அவை. ஸாஞ்சிபாத்       அகில் மரமே அஸ்ஸாமில் ஸாஞ்சி என்றழைக்கப் படுகிறது. அதன் மரப்பட்டை ஸாஞ்சிபாத் என வழங்கப்பெறுகிறது. இது வடகிழக்குப் பகுதியில் மட்டுமே வழக்கிலிருந்தது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணபட்டர் தமது ஹர்ஷசரிதத்தில் இதைப் பற்றிய குறிப்பைத் தருகிறார்.           अगरुवल्कलकल्पितसञ्चयानि…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – காகிதம்

paper_manus1

பாரதத்தில் பயன்படுத்தப்பெற்ற சுவடிகளுக்கான மூன்றாவது முக்கியமான எழுதுபடு பொருள் காகிதமாகும். பொதுவாகக் காகிதத்தைச் சீனத்தைச் சேர்ந்த சாய் லுன் என்பவர் பொயு 105 இல் கண்டறிந்ததாகவும் அதன் பிறகு முகலாய அரசர்களால் இந்தியாவில் அறிமுகப் படுத்தப் பெற்றதாகவும் கருத்துண்டு. ஆனால் காகிதம் இந்தியாவிலேயே கண்டு பிடிக்கப்பெற்றதென்று கருதவும் சில சான்றுகள் உள்ளன. அலெக்ஸாண்டரின் தளபதியான நியர்கோஸ் தனது குறிப்பில் இந்தியர்கள் எழுதுவதற்காக பஞ்சினாலான காகிதத்தைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளான். இந்தக் குறிப்பு சரியாயின் சீனர்களுக்கு முன்னமேயே இந்தியர்கள் காகிதத்தைக்…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுது படு பொருட்கள் – பூர்ஜபத்ரம்

kharosthi_script

இதுவரை சுவடிகளுக்கான எழுதுபடு பொருளாக பனையோலை பயன்பட்டதைப் பார்த்தோம். இரண்டாவது முக்கியமான எழுதுபடுபொருள் பூர்ஜபத்ரமாகும். இது ஆங்கிலத்தில் Birch bark என்று வழங்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Baetula utiles அல்லது Baetula bhoj-patra. இந்த மரம் ஹிமாலயச்சாரலில் 30000 அடி உயரத்தில் வளரும். இந்த மரம் வடநாட்டில் லேகன் என்றும் வழங்கப்பெறுகிறது. தயாரிப்பு முறை      இந்த மரப்பட்டையின் உட்பகுதி பலவிதமான ஏடுகளைக் கொண்டிருக்கும், அத்தகைய வெண்மை அல்லது செந்நிறமுள்ள ஏடுகள் தனித்தனியாகக் கவனமாகப் பிரித்து…

தொடர்ந்து வாசிப்பு

எழுதுபடு பொருட்கள் – பனையோலை

turfan

     பண்டைய இந்தியாவில் எழுதப்பயன்படுத்தப்பெற்ற பொருட்களில் மிகப் பழமையான பொருளாக பனையோலையே அறியப்பெறுகிறது. பத்ரம் என்னும் சொல் தாளபத்ரம் எனப்பெறும் பனையோலையையே குறிப்பதாகவே அறிஞர் கருதுவர். பத்ரம் என்னும் சொல் பூர்ஜபத்ரம் என்னும் சொல்லில் பயன்பட்டு வந்தாலும் கூட பூர்ஜமரத்தின் பட்டையே பயன்படுத்தப் பெறுவதால் பனையோலைக்கே பழமையான பயன்பாடு இருப்பது தெரியவருகிறது. பௌத்தநூல்களும் பர்ணம் என்னும் இலையைக் குறிக்கும் சொல்லின் பாகத வடிவான பன்னம் என்னும் சொல்லையே பயன்படுத்தியுள்ளன. அதன் பிறகு பத்ரம் என்னும் சொல் மற்றைய…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள்

palm

     சுவடியியலைப் பயிலும்போது சுவடிகளை எழுதப்பயன்படும் பொருட்களும் கூட முக்கியமான இடத்தை வகிக்கின்றன. சுவடிகளுக்கான எழுதுபடுபொருட்களைத் தேர்ந்தெடுப்பது அதன் பயனைப் பொறுத்தே அமைகிறது. இன்றும் கூட நாம் தரமுயர்ந்த தாளில் தினசரிகளை அச்சிடுவதில்லை. தரமுயர்ந்த நூல்களை சாணித்தாள்களில் அச்சிடுவதுமில்லை. எழுதப்போகும் நூலுக்கான நோக்கமும் இயல்புமே சுவடிக்கான எழுதுபடு பொருளைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றன.      பண்டைய காலத்திலும் அவர்களுக்கு எளிமையாக கிடைத்த கையாளத்தக்கபடியான பொருட்களையே பயன்படுத்தினர். சிலநேரங்களில் அதிசயமாக நாம் எதிர்பாராத சில பொருட்களிலும் சுவடிகளுக்கான…

தொடர்ந்து வாசிப்பு

பண்டைய பாரதத்தின் எழுத்தியல் – வெளிநாட்டார் குறிப்புகள்

     பாரதத்தின் எழுத்தியலின் பழமைக்கான சான்றுகளை வேத, வேதாங்க, இதிஹாஸ, புராண, தர்ம, அர்த்த, காம சாஸ்த்ரங்களினின்றும் வடமொழிக்காப்பியங்களிலிருந்தும் இதுகாறும் பார்த்தோம். பொதுயுகத்தின் முந்தைய நூற்றாண்டுகளிலிருந்து நம்நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டாரும் கூட தத்தம் குறிப்புக்களில் பண்டைய எழுத்தியலைப் பதிவு செய்துள்ளனர். அதுபற்றி காண்போம். கிரேக்க எழுத்தர்கள்      கிரேக்க எழுத்தர்களான நியர்கோஸ், மெகஸ்தனிஸ் மற்றும் கர்டியஸ் ஆகியோரின் குறிப்புக்கள் பொயுமு 326-லிருந்தே கிடைக்கின்றன. இந்த ஆவணங்கள் பண்டைய காலத்தில் பாரதத்தில் இருந்த நூல்களைப் பற்றியும் நூல்களை…

தொடர்ந்து வாசிப்பு