மல்லையின் தவச்சிற்பத் தொகுதி – ஒரு மீளாய்வு

dsc04036

மல்லையிலுள்ள தவச்சிற்பத்தொகுதியை அடையாளம் காண்பதற்கு பல்வேறு அறிஞர்களும் பல்வேறு வாதங்களை முன்வைத்துள்ளனர். அத்தகைய வாதங்கள் யாவும் கீழ்க்கண்ட சொடுக்கியில் அங்கை நெல்லிக்கனியென தொகுக்கப்பெற்றுள்ளன. http://puratattva.in/2016/07/07/mamallapuram-the-great-penance-3718                 இவையன்றி, அங்குள்ள சிற்பத்தொகுதியை அடையாளம் காண மேலும் சில குறிப்புக்களை முன்வைக்க விரும்புகிறேன். பகீரதன் தவமாயினும் அர்ஜுனனின் தவமாயினும் இரு பகுதிகளும் மஹாபாரதத்தின் வனபர்வத்தில் விளக்கப்பெற்றுள்ளன. இதன் செய்யுட்களும் அதன் விளக்கங்களும் கற்போர் உள்ளம் கவரும் வண்ணம் விளக்கப்பெற்றுள்ளன. ஈண்டு அத்தகைய செய்யுட்களின் சில பகுதிகளையும் காஞ்சி கைலாயநாதர் ஆலயத்துச்…

தொடர்ந்து வாசிப்பு

பூதகணங்கள்

bhutas1

     ஈசனுக்கும் மற்றைய சில தெய்வங்களுக்கு உடனாக சில பூதகணங்களை நாம் சிற்பங்களில் பார்த்திருக்கிறோம் அல்லவா. இவை கோயில்களில் வலபி என்னுமிடத்தில் பூதமாலை என்றே பெயரோடு அமைந்திருக்கும். இவை பலவிதமான வடிவங்களில் பல தலைகளோடு அமைந்திருக்கும். இவற்றின் புராணத்தகவல்களைக் காண்போமா..      உலகின் படைப்பை விளக்கும் தறுவாயில் வாயுபுராணம் இத்தகைய படைப்புகளை விவரிக்கிறது. வாயுபுராணத்தின் உத்தரார்த்தத்தின் எட்டாவது அத்யாயம் இவர்களின் பிறப்பையும் மற்றைய தகவல்களையும் தருகிறது.      பூதிர்விஜஜ்ஞே பூதாம்ஶ்ச ருத்ரஸ்யானுசரான் ப்ரபோ​:| ஸ்தூலான் க்ருஶாம்ஶ்ச தீர்காம்ஶ்ச…

தொடர்ந்து வாசிப்பு

தஞ்சாவூர் கரணங்கள் – மீள்பார்வை – பகுதி -3

????????????????????????????

வலிதோருகம்      இது மூன்றாவதான கரணம். நாட்ய சாஸ்த்ரம் பின்வருமாறு இந்தக் கரணத்தை வரையறுக்கிறது. शुकतुण्डौ यदा हस्तौ व्यावृत्तपरिवर्त्तितौ।        ऊरू च वलितौ यस्मिन् वलितोरुकमुच्यते।।        சுகதுண்ட கரம் வ்யாவ்ருத்த பரிவர்த்திதங்களைப் புரிந்து இது துடைகளும் வளைந்திருந்தால் அத்தகைய கரணத்திற்கு வலிதோருகம் என்று பெயர்.       அபிநவகுப்தர் மேலும் வ்யாவ்ருத்த பரிவர்த்திதங்களை ஒரே காலத்தில் மார்பளவில் செய்து அதன் பிறகு ஆக்ஷிப்தா சாரியுடன் கீழே விடவேண்டும். பரிவர்த்தித கரணத்தின் இறுதியில் சுகதுண்ட கரங்கள்…

தொடர்ந்து வாசிப்பு

தஞ்சாவூர் கரணங்கள் – மீள்பார்வை – பகுதி -2

002_vartita

வர்த்திதம்      இந்தக் கரணம் இரண்டாவதாக அமைந்துள்ளது. பரதரின் நாட்ய சாஸ்த்ரம் இந்தக் கரணத்தைப் பின்வருமாறு வரையறுக்கிறது. कुञ्चितौ मणिबन्धे तु व्यावृत्तौ परिवर्त्तितौ।        हस्तौ निपतितौ चोर्वोः वर्तितं करणं तु तत्।।      மணிக்கட்டில் வளைந்த கரங்கள் வ்யாவ்ருத்தமாகவும் பரிவர்த்திதமாகவும் சுழன்று அதன் பிறகு துடையின் மீது வைக்கப்பெற வேண்டும். இத்தகைய கரணத்திற்கு வர்த்திதமென்று பெயர்.      அபிநவபாரதி இதனை விளக்கும் தறுவாயில் – இரு கரங்களையும் மார்பளவில் ஒன்றையொன்று ஒட்டாமல் ஸ்வஸ்திகத்தைப்…

தொடர்ந்து வாசிப்பு

தஞ்சாவூர் கரணங்கள் – மீள்பார்வை – பகுதி -1

001_talapushpaputa

இந்தியக் கூத்தியலைப் பொறுத்தவரை கரணங்கள் மிகவும் கவர்ந்திழுக்கும் தலைப்புக்களாக அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. கரணம் என்பது கை மற்றும் கால்களின் ஒத்திசைந்த அசைவாகும். அத்தகைய கரணங்கள் பரதமுனியின் நாட்ய சாஸ்த்ரத்தின் நான்காம் அத்யாயத்தில் வரிசைப்படுத்தப்பெற்றுள்ளன. இந்த அத்யாயத்திற்கே தாண்டவ லக்ஷணம் என்ற பெயர் தரப்பெற்றுள்ளது. தலபுஷ்பபுடத்தில் துவங்கி கங்காவதரணம் வரையில் நூற்றெட்டு கரணங்கள் இந்த அத்யாயத்தில் விவரிக்கப்பெற்றுள்ளன. கரணங்களை காலியக்கங்களான சாரிகளைக் கொண்டும் ஆடற்கைகளை உள்ளடக்கிய கைகளைக் கொண்டும் ஒத்திசைந்து செய்யப்பெறுகின்றன.      இதே வரிசையில் அமைந்த…

தொடர்ந்து வாசிப்பு

ராஜஸிம்ஹ பல்லவன் சிற்பத்தில் தைவிக லிங்கம்

daivika1

     நம்முடைய பண்டைய நூல்களில் சிவலிங்கங்கள் கீழ்வருமாறு பிரிக்கப்பெற்றுள்ளன. उद्भूतं दैविकं चैव मानुषं गाणवं तथा । एवं चतुर्विधं लिङ्गं स्वयम्भुरिति कीर्तितम्।। (मानसारः)      உத்பூதம் – ஸ்வயம்பூ, தைவிகம், மானுஷம் மற்றும் காணவம் என்னும் நான்கு பிரிவுகள் உள்ளன. இவற்றின் விளக்கமும் தரப்பெற்றுள்ளது. तत्स्थाप्य स्वयमुद्भूतं स्वयम्भूरिति कीर्तितः  १०२ देवैश्च स्थापितं लिङ्गं दैविकं लिङ्गमुच्यते मानुषैः रचितं लिङ्गं मानुषं चेति कथ्यते  १०३ अन्येषु रचितं लिङ्गं…

தொடர்ந்து வாசிப்பு

வஜ்ரமும் சக்தியும்

ed4261a93ed77fa9858a5899cbb9f51e

இந்திய படிமவியலில் இறைவனின் திருவுருவங்களின் கைகளை அலங்கரிக்கும் ஆயுதங்கள் அந்தந்த இறையுருவத்தின் குணத்தின் அடையாளமே என்பதை அறிவோம். அவ்விதம் குமரக்கடவுளுக்கும் இந்த்ரனுக்கும் அமைக்கப்படும் இரு ஆயுதங்கள் வஜ்ரமும் சக்தியும். இவ்விரு ஆயுதங்களின் வடிவத்தைப் பொறுத்தவரை சிறு குழப்பம் காணப்பெறுகிறது. சக்தி என்னும் சொல்லைக் கேட்டவுடன் நம் மனது சூலத்தைப் போன்ற ஆயுதத்தை உருவகம் செய்கிறது. வஜ்ரம் என்னும் சொல்லைக் கேட்டவுடன் தண்டாயுதத்தைப் போன்ற கற்பனை எழுகிறது. ஆனால் நூல்களும் கிடைக்கும் படிமங்களும் மேற்கண்ட கற்பனைக்கு முற்றிலும் மாறுபாடாக…

தொடர்ந்து வாசிப்பு

நந்திகேச்வரர் – கதைகளும் இலக்கணமும்

12033201_10153793858397176_2890527506264374538_n

     நாம் ஏற்கனவே எந்தையின் ஆலயத்தில் மூன்று நந்திகள் இருப்பதைக் கண்டோம். மஹாகாளனோடு சேர்ந்த த்வாரபாலகனான நந்தி அதிகார நந்தி காளை நந்தி நந்தி மற்றும் மஹாகாளனின் கதைகளையும் படிமங்களையும் பார்த்தோம். இப்போது அதிகார நந்தியின் கதைகளையும் இலக்கணத்தையும் பார்ப்போம். கதைகள் 1.1. முற்பிறவி      கைலாயத்துக் கணங்களில் முக்யமாகத் திகழ்ந்தவன் வீரகன். அவன் மிகவும் ஆற்றலோடு எந்தையுடன் பார்வதியுடனான திருமணத்திற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டான். திருமணத்திற்குப் பிறகு பார்வதி எந்தையிடம் பல்வேறு வடிவங்களையுடைய பூதங்களைப் பற்றிக் கேட்டாள்….

தொடர்ந்து வாசிப்பு

எல்லோராவின் கின்னர சிவன்

kinnara

     கீழ்க்கண்ட படத்தை ஸ்ரீ. அரவிந்த் வெங்கட்ராமன் அவர்களிடமிருந்து பெற்றேன். இந்தப் படம் எல்லோராவில் 21 ஆம் எண்ணிட்ட கல்மண்டகத்தில் அமைந்துள்ளது. ஈண்டு எந்தை மிகப் பயங்கரமானதோர் வடிவோடு அமைக்கப்பெற்றிருக்கிறார். அவர் அதிபங்க நிலையில் நான்கு கரங்களுடன் அமைக்கப்பெற்றிருக்கிறார். அவர் ஜடாமகுடம் பூண்டு அஞ்சத்தக்கப் பார்வையைக் கொண்டிருக்கிறார். அவர் தம் கோரைப் பற்களோடு புன்முறுவல் பூத்தபடியிருக்கிறார். அவர்தம் காதுகளைக் கர்ண குண்டலமும் பத்ர குண்டலமும் அலங்கரிக்கின்றன. அவர் கழுத்தில் துவங்கி வெறும் எலம்புக்கூடாகத்தான் அமைக்கப்பெற்றிருக்கிறார். அவர்தம் மேற்கரங்களில்…

தொடர்ந்து வாசிப்பு

லால்குடி மஹாகாள மூர்த்தி

Mahakala Siva

பின்வரும் அரிய சிற்பத்தை இணையத்தில் காணநேர்ந்தது. இந்தச் சிற்பம் லால்குடி ஸப்தரிஷீச்வரர் கோயிலில் அமைந்துள்ளது. இந்தச் சிற்பம் ஜடாபாரத்தைக் கொண்டுள்ளது. அதன் நடுவே ஒரு கபாலமும் அமைந்துள்ளது. தலையில் லலாடபட்டம் அழகுற அமைந்துள்ளது. சிறு கோரைப்பற்கள் அமைந்திருந்தாலும் கூட இதன் புன்னகை மயக்குகிறது. ஒரு சிறிய கண்டிகையும் அதனையொட்டி ருத்ராக்ஷமாலையும் மார்பை அலங்கரிக்கின்றன. முப்புரிநூல் உபவீதமாக குறுக்கே அமைந்துள்ளது. நெற்றிக்கண் அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் சந்தனத்தால் மறைந்துள்ளது. நாகவடிவிலான கேயூரம் புயங்களை அலங்கரிக்கிறது. மேலிரு கைகளிலும முத்தலைச்…

தொடர்ந்து வாசிப்பு