ஏகபாதமூர்த்தியும் பல்லவர் குடவரைகளும்

ekapadamurthy

     இருபத்தைந்து மாஹேச்வர மூர்த்தங்களில் ஏகபாதமூர்த்தியும் ஒன்றாகக் கருதப்பெற்றுள்ளது. உலகனைத்தயும் ஒடுக்குங்காலை நான்முகனையும் மாலையும் தம்முள் ஒடுக்கும்போது காட்டிய வடிவமிது. இந்த வடிவத்தின் இலக்கணமாவது. ரக்தவர்ண​: த்ரிணேத்ரஸ்²ச வரதா³ப⁴யஹஸ்தக​:| க்ருʼஷ்ணாபரஸு²ஸம்ʼயுக்தோ ஜடாமகுடமண்டி³த​:|| ருʼஜ்வாக³தஸ்ததை²கேன பாதே³னாபி ஸமன்வித​:| த³க்ஷிணோத்தரயோஸ்²சைவ பார்ஸ்²வயோருப⁴யோரபி|| கடிப்ரதே³ஸா²தூ³ர்த்⁴வந்து ப்³ரஹ்மவிஷ்ணவர்த⁴காயயுக்| க்ருʼதாஞ்ஜலிபுடௌ ஏகபாத³யுக்தௌ ச வா மதௌ| (உத்தர காமிகாகமம்)      இந்த வடிவம் செந்நிறம் கொண்டு மூன்று விழிகளுடன் இருக்கும். வரதம், அபயம், மான் மழு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியிருப்பார். நேராக நின்றபடி ஒரே…

தொடர்ந்து வாசிப்பு

சிந்து சமவெளி முத்திரைகளில் வேதக் கதைகள்

seal111

     எனது மானஸிக குருவும் இணையற்ற அறிஞருமான முனைவர். எஸ். சங்கரநாராயண சாஸ்த்ரிகள் மொஹஞ்சதாரோவில் கிடைத்த சிந்து சமவெளி முத்திரையொன்றை மிகவும் அற்புதமாக அடையாளம் கண்டார். அவருடைய அடையாளம் “An Indua Seal with Soma sacrificial theme” என்னும் தலைப்பில் வெளியானது. அந்த முத்திரையில் கொம்புள்ள தாய்த்தவதை அல்லது ஒரு மர தேவதை வழக்கமான முறையிலன்றி பொறிக்கப்பெற்றுள்ளார். அவரை மற்றொரு பெண்தெய்வம் வணங்குவதைப் போலுள்ளது. அந்த தெய்வம் முழங்காலிட்டு மற்றொரு ஆடும் மாடும் கலந்ததைப் போன்றதும்…

தொடர்ந்து வாசிப்பு

வைஷ்ணவ ஆகமங்களில் லிங்க வழிபாடு

linga

     லிங்க வழிபாடு என்பது சைவத்துடன் தொடர்புடையது என்பதை நாமறிவோம். லிங்கம் என்னும் சொல் அடையாளம் என்னும் பொருளைத் தருவது. சிவலிங்கம் என்பது எந்தையின் அடையாளம் என்னும் பொருளைக் குறிக்கும். பொதுவாக லிங்கத்தை ஆராயும் ஆய்வாளர்கள் லிங்க வடிவத்தை ஆண்குறியோடு தொடர்புபடுத்தியே ஆராய்வது வழக்கமாக உள்ளது. இத்தகையதோர் ஒரு கருதுகோள் சில இலக்கிய ஆதாரங்களிலிருந்தும் குடிமல்லத்தில் கிடைத்த லிங்கத்தை வைத்தும் உருவாகியிருக்கிறது. ஆனால் லிங்கம் என்னும் வடிவம் வேதவேள்விகளின் அக்னியிலிருந்து உருவானதாகவே தோன்றுகிறது. அக்னி எரியும்போது மூடிய…

தொடர்ந்து வாசிப்பு

நந்தி மஹாகாளர்களின் கதை

தஞ்சை

நாம் ஒரு சிவாலயத்தில் நுழைந்தால் அங்கே மூன்று நந்திகளைக் காணவியலும். சிலாதரின் மகனான அதிகார நந்தி காளை வடிவிலான வாஹன நந்தி மற்றும் மஹாகாளரோடு காட்சியளிக்கும் த்வாரபாலகரான நந்தி முதலிருவரைப் பற்றிய பதிவைப் பிறகு காண்போம். இப்போது த்வாரபாலகர்களான நந்தியைப் பற்றிக் காண்போம். நந்தி மற்றும் மஹாகாளர்கள் மனிதர்களாகப் பிறந்து எந்தை மீது கொண்ட ஒப்புயர்வற்ற பக்தியினால் உயர்நிலை பெற்றவர்கள். அவர்களின் கதையைக் காண்போமா.. இந்தக் கதை ஸ்காந்த புராணத்தில் அமைந்துள்ளது. அந்த புராணத்தின் மாஹேச்வர கண்டத்திலுள்ள…

தொடர்ந்து வாசிப்பு

கருடன் கொண்ட யானையும் ஆமையும்

Garuḍa holds Vibhāvasu and Supratīka

கச்யப ப்ரஜாபதியான மஹர்ஷிக்கு பதின்மூன்று மனைவியர். அவர்கள் தக்ஷனின்  புதல்வர்கள். வினதா மற்றும் கத்ரூ ஆகிய இருவரும் அவர்களில் இருவர். இவர்களுள் கத்ரூ நாகங்களைப் பெற்றெடுத்தாள். வினதை தன் கணவரிடம் கத்ருவின் புதல்வர்களை விட வலிமை கொண்ட புதல்வர்கள் வேண்டுமெனக் கேட்டாள். அவளுக்கு இரு முட்டைகள் பிறந்தன. ஆர்வத்தின் காரணமாக ஒரு முட்டையை அவள் உடைத்துப் பார்த்தாள். கால்களும் தொடையுமில்லாமல் அருணன் அந்த முட்டையிலிருந்து பிறந்தான். தன்னை அப்படி பிறப்பித்ததனால் தன் தாயை அவள் யாரோடு போட்டியிட்டாளோ…

தொடர்ந்து வாசிப்பு

புரவியைச் சேர்ந்த பகலவன்

Sūrya & Saṃjñā

     கதிரவன் விச்வகர்மாவின் மகளான ஸம்ஜ்ஞா தேவியை மணந்திருந்தான். அவனுடைய வெம்மையைத் தாளவொண்ணாத அவள் தனது சாயையை – நிழலை விடுத்து விட்டு தந்தைவீடு சென்றாள். அங்கும் இருக்க முடியாததால் குதிரையின் வடிவெடுத்து உத்தர குருதேசத்திற்குச் சென்று கடுந்தவமியற்றினாள். மாற்றாந்தாய் செயலினால் மனமுடைந்த கூற்றுவன் தாயை இகழ சாயை அவனைச் சபித்தாள். அதன் பிறகு தந்தையிடம் முறையிட்டான் கூற்றுவன். கதிரவனின் மிரட்டலால் உண்மையைக் கூறினாள் சாயா. உண்மையை அறிந்த கதிரவன் தனது மாமனார் வீடு சென்று தேடினான்….

தொடர்ந்து வாசிப்பு

மனையாளோடாயினும் சூது விளையாடலாமா

dice play between my father and Parvati

மனையாளோடாயினும் சூது விளையாடலாமா ஸ்காந்தபுராணத்திலுள்ள ஒரு ச்வாரஸ்யமான கதையொன்று ப்ரபஞ்சத்தின் ஆதி தம்பதியர் விளையாடிய சூதாட்டத்தைத் தகவலாகத் தருகிறது. ஸ்காந்தபுராணத்தின் மாஹேச்வர கண்டத்திலுள்ள கேதாரகண்டத்தில் இந்தக் கதை அமைந்துள்ளது. ஒருமுறை நாரதர் கைலாயம் போந்து ஆதிதம்பதியரை வணங்கிநின்றார். எந்தை அவர் வந்த காரணத்தை வினவினார். நாரதரோ ஆதிதம்பதியரைக் கண்டு அவர்தம் விளையாட்டையும் கண்டுசெல்ல வேண்டி வந்ததாகக் கூறினார். அப்போது மலைமகள் குறுக்கிட்டு எந்த விளையாட்டைக் காண விழைவதாக வினவினாள். அப்போது நாரதர் பலவகையான விளையாட்டுக்கள் இருந்த போதும்…

தொடர்ந்து வாசிப்பு

தேய்ந்து போன தினகரன்

sharpening of the Sun god

நிலவு மாதந்தோறும் தேயும், வளரும். ஆனால் பகலவன் தேய்வதுண்டா. தேய்ந்ததுண்டு என்கின்றன புராணங்கள். அந்தக் கதையைக் கேட்போமா.. கச்யப முனிவருக்குக் கண்ணான புதல்வனானவன் கதிரவன். அவன் உலகுக்கெல்லாம் கண்ணானான். அந்த தூயப்பெருவொளிக்குத் தன் புதல்வியான ஸம்ஜ்ஞா(உஷா) தேவியைத் திருமணம் செய்து கொடுத்தார் விச்வகர்மா. அவர்களுக்கு மூன்று புதல்வர்கள் தோன்றினர். முதலாமவர் வைவஸ்வத மனு. இரண்டாவது புதல்வன் கூற்றுத் தெய்வமான யம தர்மன். அடுத்து யமுனை நதி மகளாகப் பிறந்தாள். ஆயின் ஸம்ஜ்ஞா தேவிக்குக் கதிரவனின் வெப்பத்தைத் தாங்கமுடியவில்லை….

தொடர்ந்து வாசிப்பு

கதிரவனின் கணைப்போர்

கதிரவனின் கணைப்போர் ஒப்புவமையின்றி ஒளிவீசும் கலாச்சாரத்தைப் படைத்த நமது பாரதமண்ணில் எல்லாக் கூறுகளிலும் தெய்வத்தன்மையைக் கண்டு போற்றும் பண்பு இன்றளவும் எழில்வாய்ந்ததொன்றாக போற்றப்பெறுகிறது. சிற்பங்களும் கட்டிடக்கலையும் தெய்வீகத்தன்மையின் வெளிப்பாடுகளாக ஏற்றம் பெற்றுத் திகழ்கின்றன. அந்தச் சிற்பங்களிலும் வேத, புராணச் செய்திகளின் நுட்பமான வெளிப்பாடு இருபுலத்தையும் உணர்ந்தவர் மனதில் இறும்பூதெய்தச் செய்கிறது. பல்லவர் காலத்திய ஆலய சிற்பங்களில் வேதபுராணச் செய்திகள் திறம்பட எடுத்தாளப் பெற்றிருக்கின்றன. அதைத்தொடர்ந்து சோழர்கால சிற்பங்களிலும் வேதபுராணச் செய்திகள் திறனுற கையாளப்பெற்றிருப்பதைக் காணும்போது அவர்தம் அறிவுத்திறத்தை…

தொடர்ந்து வாசிப்பு