வடமொழியில் பெண்பாற்புலவர்கள்

ubhaya

     நமது பாரதநாட்டில் ஆண்களைப் போல பெண்பாற்புலவர்களும் எல்லா மொழிகளிலும் இருக்கிறார்கள். சங்கத்தமிழ் கொஞ்சிய தங்கக் காலத்திலும் காமக்கண்ணியார், வெள்ளிவீதியார் போன்ற பல பெண்பாற்புலவர்களைக் காணமுடியும். பிற்காலத்திலும் அவ்வையார், ஆண்டாள் போன்ற கவிஞர்களும் தமிழன்னைக்குப் பாமுடி சூட்டினர். இன்றளவும் இத்தகைய பெண்பாற்புலவர்களின் கொடி பட்டொளி வீசத்தான் செய்கிறது.      அதைப்போலவே வடமொழியிலும் பண்டைக்காலந்தொட்டே பல பெண்பாற் கவிஞர்களும் ரிஷிகளும் இருந்தனர். அத்தகைய பெண் ரிஷிகளை ரிஷிகா என்று குறிப்பிடுவர். வேதங்களில் இருபத்தேழு ரிஷிகாக்களைப் பற்றிய குறிப்புள்ளது. விச்வவாரா,…

தொடர்ந்து வாசிப்பு

கண்ணபிரானும் ஜல்லிக்கட்டும் – நப்பின்னை யார்

nila

ஏறுதழுவல் தமிழகத்தின் தொன்று தொட்ட வீரவிளையாட்டுக்களில் ஒன்றென்றும் இதில் வெற்றிபெறுபவருக்கு ஏறுடையார் பெண்ணை ஈந்தளிக்கும் வழக்கமுண்டு என்பதையும் நாமறிவோம். இந்த விளையாட்டு இந்நாளில் ஜல்லிக்கட்டு என வழங்கப்பெறுகிறது. இத்தகையதோர் வீரவிளையாட்டு கண்ணபிரானின் திவ்யசரிதையிலும காணப்பெறுகிறது. ஹரிவம்ச புராணமும் பாகவதபுராணமும் இந்தச் செய்தியைத் தருகின்றன. கும்பகன் என்பான் நந்தகோபனுடைய மைத்துனன். அவன் பெறும் ஆவின் செல்வத்தோடு மிதிலையில் வாழ்ந்து வந்தான். அவன் யசோதைக்கு இளைய தம்பி. அவனுடைய மனைவியின் பெயர் தர்மதா என்பதாகும். அவனுக்கு ஸ்ரீதாமன் என்னும் மகனும்…

தொடர்ந்து வாசிப்பு

சங்க இலக்கியத்தில் சூத, மாகத, வேதாளிகர் – சொல்விளக்கம்

     சங்க இலக்கியங்களில் பலவகையான சொற்கள் பயன்பட்டுள்ளன. அவற்றுள் சில சொற்கள் உரையாசிரியர்தம் உரைகொண்டே அறியற்பாலன. அத்தகையதோர் சொல்லாட்சி வேதாளிகர் என்பதாகும். மதுரைக்காஞ்சி பின்வருமாறு வேதாளிகரைக் குறிப்பிடுகிறது. சூதர் வாழ்த்த மாகதர் நுவல வேதாளிகரொடு நாழிகை இசைப்ப இமிழ்முரசு இரங்க ஏறுமாறு சிலைப்ப (மதுரைக்காஞ்சி : 671-672)      சூதர் வாழ்த்துக்களைக் கூறவும் மாகதர் பாடவும் வேதாளிகரும் நாழிகைக் கணக்கர் எழுப்பவும் பள்ளியெழுப்பும் முரசுகள் ஒலியெழுப்பவும் ஏறுகள் முழங்கவும் காலைப்பொழுது திகழ்ந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.      இங்கு…

தொடர்ந்து வாசிப்பு

கல்வெட்டியில் சிற்பியின் இலக்கணம்

     பின்வரும் கல்வெட்டு அதன் இயல்பினால் மிகவும் முக்யமானதும் அரிதானதுமானது. இந்தக் கல்வெட்டு திருவாரூர் தியாகேசப்பெருமானின் திருக்கோயிலில் முதற் ப்ராகாரத்தில் வடபுறச்சுவரில் செதுக்கப் பெற்றுள்ளது. இது இருமொழிக்கல்வெட்டாகும். இதன் வடமொழிப்பகுதி க்ரந்த எழுத்துக்களிலும் தமிழ்ப்பகுதி தமிழ் எழுத்துக்களிலுமானவை. இந்தக் கல்வெட்டு விச்வகர்மகுலத்தைப் பற்றிய நீண்ட நெடிய விளக்கமான அலசலைத்தருகிறது. பாண்டிகுலாந்தகச்சதுர்வேதி மங்கலத்தைச்சேர்ந்த சில அந்தணர்கள் ஆகம, புராண, சிற்ப நூல்களை ஆராய்ந்து விச்வகர்ம குலத்தினரின் ஸமூஹ நிலை, கடமை மற்றும் உரிமைகளைப் பற்றிய நீண்ட நெடிய விளக்கத்தை…

தொடர்ந்து வாசிப்பு

மொஹம்மது என்னும் பெயரின் வடமொழியாக்கம்

     ஐரோப்பிய மற்றும் அரேபிய நாடுகளைச் சேர்ந்தவர்களை யவனர்கள் என்றழைக்கும் வழக்கம் பண்டைய தமிழ் மற்றும் வடமொழி நூல்களில் காணப்பெறுவது நாமனைவரும் அறிந்ததே. காளிதாஸர் பெர்ஷியர்களை பாரசீகர்கள் என்று வழங்குவது குறிப்பிடத்தக்கது. அவரியற்றிய ரகுவம்ச மஹாகாவ்யத்தில் ரகுவின் திக்விஜயத்தை வர்ணிக்கும் காளிதாஸன் பின்வரும் குறிப்பை வழங்குகிறார். पारशीकांस्ततो जेतुं प्रतस्थे स्थलवर्त्मना।(Raghuvaṃśa 4.59) பாரஸீ²காம்ʼஸ்ததோ ஜேதும்ʼ ப்ரதஸ்தே² ஸ்த²லவர்த்மனா|      இடைக்கால வரலாற்றில் அரபிய நாடுகளுக்கும் பாரதத்திற்கும் மிகத் தெளிவான தொடர்பு இருந்து வந்ததை அறியமுடிகிறது. ராஷ்ட்ரகூடர்கள்…

தொடர்ந்து வாசிப்பு

கடிகையில் தமிழும் கற்பிக்கப்பெற்றதா…

காஞ்சிக் கடிகை காஞ்சியில் நிலைகொண்டிருந்த கடிகாஸ்தானம் என்னும் கல்விநிறுவனம் பொதுயுகம் மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே செயல்பட்டு வந்தது. கடிகாஸ்தானத்தைப் பற்றிய மிகப்பழமையான சாசனச் சான்று கர்ணாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்திலுள்ள தாள்ளகுண்டா என்னுமிடத்திலிருந்து கிடைக்கிறது. அந்தக் கல்வெட்டு கதம்பவம்சத்தைச் சேர்ந்த ககுஸ்தவர்மனுடையது. அந்தக் கல்வெட்டு அவனுக்கு இரு தலைமுறைகள் முந்தைய முன்னோனான மயூரவர்மன் என்னும் அரசன் தன் குருவான வீரசர்மனுடன் கூட காஞ்சியிலுள்ள கடிகாஸ்தானத்தில் எல்லா சாஸ்த்ரங்களையும் கற்கவேண்டி காஞ்சிக்கு வந்ததைக் குறிப்பிடுகிறது. அந்தக் கல்வெட்டிலுள்ள பின்வரும் ச்லோகம்…

தொடர்ந்து வாசிப்பு

கச்சியேகம்பன் கோயிலில் இரு கரண சிற்பங்கள்

Daṇḍapāda Karaṇa

கரணங்கள் எனப்பெறும் ஆடலசைவுகள் பரதமுனிவர் இயற்றிய நாட்ய சாஸ்த்ரத்தின் நான்காம் இயலில் விளக்கப்பெற்றுள்ளன. தாண்டவலக்ஷணம் என்னும் பெயருடைய இந்த இயலில் ந்ருத்தம் மற்றும் வாக்யார்த்த அபியனத்தில் பயன்பெறும் 108 கரணங்கள் விளக்கப்பெற்றிருக்கின்றன. கரணத்தின் இலக்கணம் ஹஸ்தபாதஸமாயோக ந்ருத்தஸ்ய கரணம் பவேத் என்பதாகும். கைகள் மற்றும் கால்களின் ஒருங்கிணைந்த அசைவே கரணம் எனப்பெறும் என்பது இதன் விளக்கமாகும். தமிழகத்தில் கரணசிற்பங்கள் பல கிடைத்துள்ளன. அவற்றுள் சில வரிசையாகவும் சில தனித்தனியாகவும் செதுக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் வரிசையான தொகுதிகளுள் பழமையான சிற்பங்கள்…

தொடர்ந்து வாசிப்பு

கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்

கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல் அர்த்தம் என்றால் வ்ருத்தி – தொழில் என்று பொருள். ஒரு மனிதன் வாழ்வதற்குத் தேவையான தொழிற்கருவிகளைப் பற்றிக் கூறுவதால் அர்த்த சாஸ்த்ரம் எனப்படுகிறது. அவற்றில் மிக முக்கியமானது பூமி. (मनुष्यवती पृथ्वी) மனுஷ்யவதி ப்ருத்வீ என்று மனிதர்களுக்கு மிக முக்கியமான கருவி பூமியே என்று கௌடல்யரே குறிப்பிடுகிறார். அர்த்த சாஸ்த்ரத்தின் துவக்கத்தில் பூமியை அடைவதற்கும் அதனைக் காப்பதற்கும் இதுவரை எழுதப் பெற்ற அனைத்து அர்த்தசாஸ்த்ரங்களையும் தொகுத்து இந்த ஒரு அர்த்தசாஸ்த்ரத்தை எழுதுகிறேன் என்றும்…

தொடர்ந்து வாசிப்பு

தசரூபகத்தில் நாட்டியம்

தசரூபகத்தில் நாட்டியம் விலங்கினத்தைக் காட்டிலும் பகுத்தறிவால் தனித்துச் சிறந்த மாந்தரினம் மனத்தின் வளமையால் கலை பல வளர்த்தது. எண்ணத்தை வெளிக்கொணர மொழியென்னும் ஊடகம் உருவாகிய பின்னர் அதனை ஆதாரமாகக் கொண்டு எத்துணையோ கலைப் பண்பாட்டுச் சின்னங்கள் உருவாயின. அத்தகைய கலைகளில் ஒன்றாகத் திகழ்வது கூத்துக் கலை. குறிப்பாக நமது நாட்டில் பண்டைய காலம் தொட்டே மிகச் சிறப்பான கலையாகத் திகழ்வது இக்கலை. பயன்பாடுகள் பிறந்த பின்னர் அவற்றிற்கான இலக்கணம் எழுதும் முறை பொதுவாக எல்லாத் துறைகளிலும் காணப்படுவதே….

தொடர்ந்து வாசிப்பு

தமிழ் நூல் விளக்கங்களில் வடமொழியின் பங்கு

தமிழ் நூல் விளக்கங்களில் வடமொழியின் பங்கு             பாரதபூமியில் தோற்றம் நிகழ்ந்ததென்றென்று அறியமுடியாது சிறந்து விளங்கும் மொழிகள் இரண்டு. ஒன்று வடமொழி, மற்றொன்று தென்மொழியாம் செந்தமிழ். இவ்விரு மொழிகளும் பண்டைநாள் முதல் வழங்கிவரும் பேறுடையவை. தரத்திலும் சுவையிலும் நிகரானவை. இரு மொழிகளும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டவை என்பது மரபுவழி வந்த நம்பிக்கை. வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியைக் குடமுனிக்கு வகுத்தருளும் கொல்லேற்றுப்பாகர் என்பது காஞ்சிபுராணச்செய்தி  இவ்விருமொழிகளிலும் கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்துள்ளது என்பது இருமொழியறிந்த நடுநிலையான அறிஞர்கள்…

தொடர்ந்து வாசிப்பு