சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – ஸாஞ்சிபாத் மற்றும் தூலிபாத்

tula

இதுவரையில் பனையோலை, காகிதம் மற்றும் பூர்ஜபத்ரம் என்னும் மூன்று முக்கிய எழுதுபடுபொருட்களைக் கண்டோம். இன்னும் இரு எழுதுபடு பொருட்கள் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. ஸாஞ்சிபாத் மற்றும் தூலிபாத் என்பவையே அவை. ஸாஞ்சிபாத்       அகில் மரமே அஸ்ஸாமில் ஸாஞ்சி என்றழைக்கப் படுகிறது. அதன் மரப்பட்டை ஸாஞ்சிபாத் என வழங்கப்பெறுகிறது. இது வடகிழக்குப் பகுதியில் மட்டுமே வழக்கிலிருந்தது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணபட்டர் தமது ஹர்ஷசரிதத்தில் இதைப் பற்றிய குறிப்பைத் தருகிறார்.           अगरुवल्कलकल्पितसञ्चयानि…

தொடர்ந்து வாசிப்பு