சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – கல்

bhoja_ins

கல் எழுதுபடு பொருளாக மிகப்பழங்காலத்திலிருந்தே பயன்பட்டுவருகிறது. சில கல்வெட்டுக்கள் இலக்கிய சுவை பொங்கும் வண்ணமாக அமைந்துள்ளன. ஆனால் சுவடியியற்பார்வையிலிருந்து பார்த்தால் அவற்றுள் ஒரு சில கல்வெட்டுக்கள் மட்டுமே இலக்கியப் படைப்புக்களைக் கொண்டிருக்கின்றன. அசோகனின் கல்வெட்டுக்கள், தாள்ளகுண்டா தூண் கல்வெட்டு, ஹாதிகும்பா கல்வெட்டு மற்றும் கன்யாகுமரி கல்வெட்டு ஆகியவை இலக்கியச்சுவைக்காகப் பெயர் பெற்றவை. ஆயினும் அவை கூட தானமளிக்கப்பெற்றவற்றிற்கு ஆவணமாகவே திகழ்கின்றன. இலக்கியப்படைப்புக்களாகத் திகழும் கல்வெட்டுக்களாவன. குடுமியாமலையிலுள்ள பல்லவ க்ரந்த லிபியில் அமைந்த இசைக்கல்வெட்டு. 2.குவாலியரிலுள்ள பத்மநாதர் கோயிலில்…

தொடர்ந்து வாசிப்பு

சங்க இலக்கியத்தில் சூத, மாகத, வேதாளிகர் – சொல்விளக்கம்

     சங்க இலக்கியங்களில் பலவகையான சொற்கள் பயன்பட்டுள்ளன. அவற்றுள் சில சொற்கள் உரையாசிரியர்தம் உரைகொண்டே அறியற்பாலன. அத்தகையதோர் சொல்லாட்சி வேதாளிகர் என்பதாகும். மதுரைக்காஞ்சி பின்வருமாறு வேதாளிகரைக் குறிப்பிடுகிறது. சூதர் வாழ்த்த மாகதர் நுவல வேதாளிகரொடு நாழிகை இசைப்ப இமிழ்முரசு இரங்க ஏறுமாறு சிலைப்ப (மதுரைக்காஞ்சி : 671-672)      சூதர் வாழ்த்துக்களைக் கூறவும் மாகதர் பாடவும் வேதாளிகரும் நாழிகைக் கணக்கர் எழுப்பவும் பள்ளியெழுப்பும் முரசுகள் ஒலியெழுப்பவும் ஏறுகள் முழங்கவும் காலைப்பொழுது திகழ்ந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.      இங்கு…

தொடர்ந்து வாசிப்பு