எல்லோரா குடைவரையின் மத்தவாரணீ

matta2

ஒரு கோயிற் கட்டிடத்தில் தூணுக்கு மேலே உள்ள அங்கங்கள் உத்தரம், வாஜனம், வலபி மற்றும் கபோதம் என்று நாம் அறிவோம். இந்த உறுப்புக்கள் இணைந்த தொகுதிக்கே ப்ரஸ்தர வர்க்கம் என்று பெயர். இவற்றுள் வலபி என்பது மிக இன்றியமையாத பகுதியாகும். இந்தப் பகுதியில்தான் பூதவரி, அன்னவரி. சிங்கவரி முதலியவை இடம்பெறும். இதன் மறுபெயர்களை மானஸாரம் பின்வருமாறு தருகிறது.      गोपानं च वितानं च वलभी मत्तवारणम् विधानं च लुपं चैवमेते पर्यायवाचकाः ।। मानसारः…

தொடர்ந்து வாசிப்பு

எல்லோராவின் கின்னர சிவன்

kinnara

     கீழ்க்கண்ட படத்தை ஸ்ரீ. அரவிந்த் வெங்கட்ராமன் அவர்களிடமிருந்து பெற்றேன். இந்தப் படம் எல்லோராவில் 21 ஆம் எண்ணிட்ட கல்மண்டகத்தில் அமைந்துள்ளது. ஈண்டு எந்தை மிகப் பயங்கரமானதோர் வடிவோடு அமைக்கப்பெற்றிருக்கிறார். அவர் அதிபங்க நிலையில் நான்கு கரங்களுடன் அமைக்கப்பெற்றிருக்கிறார். அவர் ஜடாமகுடம் பூண்டு அஞ்சத்தக்கப் பார்வையைக் கொண்டிருக்கிறார். அவர் தம் கோரைப் பற்களோடு புன்முறுவல் பூத்தபடியிருக்கிறார். அவர்தம் காதுகளைக் கர்ண குண்டலமும் பத்ர குண்டலமும் அலங்கரிக்கின்றன. அவர் கழுத்தில் துவங்கி வெறும் எலம்புக்கூடாகத்தான் அமைக்கப்பெற்றிருக்கிறார். அவர்தம் மேற்கரங்களில்…

தொடர்ந்து வாசிப்பு

மனையாளோடாயினும் சூது விளையாடலாமா

dice play between my father and Parvati

மனையாளோடாயினும் சூது விளையாடலாமா ஸ்காந்தபுராணத்திலுள்ள ஒரு ச்வாரஸ்யமான கதையொன்று ப்ரபஞ்சத்தின் ஆதி தம்பதியர் விளையாடிய சூதாட்டத்தைத் தகவலாகத் தருகிறது. ஸ்காந்தபுராணத்தின் மாஹேச்வர கண்டத்திலுள்ள கேதாரகண்டத்தில் இந்தக் கதை அமைந்துள்ளது. ஒருமுறை நாரதர் கைலாயம் போந்து ஆதிதம்பதியரை வணங்கிநின்றார். எந்தை அவர் வந்த காரணத்தை வினவினார். நாரதரோ ஆதிதம்பதியரைக் கண்டு அவர்தம் விளையாட்டையும் கண்டுசெல்ல வேண்டி வந்ததாகக் கூறினார். அப்போது மலைமகள் குறுக்கிட்டு எந்த விளையாட்டைக் காண விழைவதாக வினவினாள். அப்போது நாரதர் பலவகையான விளையாட்டுக்கள் இருந்த போதும்…

தொடர்ந்து வாசிப்பு