சுவடிகளுக்கான எழுதுபொருட்கள்

stylus1

     சுவடிகளில் எழுதவும் பல வகையான பொருட்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. அவற்றின் தன்மையைப் பொறுத்து அவை மூவகையாகப் பிரிக்கப்பெற்றுள்ளன. கூரியமுனையுடைய எழுத்தாணி – ஓலைகளில் எழுத மென்மையான முனையுடைய எழுதுபொருள் – பூர்ஜபத்ரம் முதலியவற்றில் எழுத தூரிகை – வண்ணங்கள் பூச 1. எழுத்தாணியை வடமொழியில் லோஹகண்டகம் அல்லது சலாகா என்று கூறுவர். இரும்பினாலான நீளமான கம்பி 10-30 செமீ அளவில் ஆக்கப்பெற்று எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பெறும். இதற்கு மிகக் கூரிய முனையும் அமைக்கப்பெறும். மற்றொரு முனை தட்டையாக்கப்பெற்று…

தொடர்ந்து வாசிப்பு

எழுதுபடு பொருட்கள் – பனையோலை

turfan

     பண்டைய இந்தியாவில் எழுதப்பயன்படுத்தப்பெற்ற பொருட்களில் மிகப் பழமையான பொருளாக பனையோலையே அறியப்பெறுகிறது. பத்ரம் என்னும் சொல் தாளபத்ரம் எனப்பெறும் பனையோலையையே குறிப்பதாகவே அறிஞர் கருதுவர். பத்ரம் என்னும் சொல் பூர்ஜபத்ரம் என்னும் சொல்லில் பயன்பட்டு வந்தாலும் கூட பூர்ஜமரத்தின் பட்டையே பயன்படுத்தப் பெறுவதால் பனையோலைக்கே பழமையான பயன்பாடு இருப்பது தெரியவருகிறது. பௌத்தநூல்களும் பர்ணம் என்னும் இலையைக் குறிக்கும் சொல்லின் பாகத வடிவான பன்னம் என்னும் சொல்லையே பயன்படுத்தியுள்ளன. அதன் பிறகு பத்ரம் என்னும் சொல் மற்றைய…

தொடர்ந்து வாசிப்பு