ராஜஸிம்ஹனின் மல்லைக் கடற்கரைக் கோயில் கல்வெட்டு

sea_shore

கடல் மல்லையில் மிக்கப் புகழ்பெற்ற கடற்கரை கோயிலும் அக்கோயிலைக் கட்டிய ராஜஸிம்ஹனின் கல்வெட்டைக் கொண்டுள்ளது.  இந்தக் கல்வெட்டு அந்தக் கோயிலின் அடிப்பகுதியில் நீளமாகச்செல்கிறது. இந்தக் கல்வெட்டு வடமொழியிலும் க்ரந்த லிபியிலும் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டிலுள்ள வடமொழிச்செய்யுட்கள் அரசனின் குணநலன்களைக் கூறுகின்றன.      இந்தக் கல்வெட்டு 1912 இல் கண்டறியப்பெற்றது. எபிக்ராஃபியா இண்டிகாவின் 19ஆம் தொகுதியில் திரு வி. ரங்காசார்யா அவர்களால் பதிப்பிக்கப்பெற்றது. உண்மையில் இந்தக் கல்வெட்டே இதைக் கட்டியவரை அடையாளம் காண உதவியது. இந்தக் கல்வெட்டிலுள்ள சில…

தொடர்ந்து வாசிப்பு

நிருபதுங்கவர்மனின் சிற்றூர் செப்பேட்டின் வடமொழிப்பகுதி

DSC04248

அரசர்களின் சாஸனங்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பிருந்தே கிடைத்து வருகின்றன. இவற்றுள் வடமொழிச் சாசனங்களைப் பொறுத்தவரை அயோத்தியில் கிடைத்த கல்வெட்டுச்சாசனமும் கோசுண்டிசாசனமும்  ஹாதிபாடா சாசனமும் மிகப் பழமையானவையாகக் கருதப்பெறுகின்றன (Indian Epigraphy by Rechord Solomon, Page 86). இந்தக் கல்வெட்டுக்கள் கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று எழுத்தமைதியைக் கொண்டும் மற்றைய காரணிகளாலும் நிர்ணயிக்கப்பெற்றிருக்கின்றன. அதன் பிறகு கிபி 1-2 நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் மதுரா முதலிய இடங்களில் கிடைத்துள்ளன. தென்னகத்தைப் பொறுத்தவரை நாகார்ஜுனகொண்டாவில் கிடைத்த கிபி மூன்றாம்…

தொடர்ந்து வாசிப்பு