எல்லோராவின் கின்னர சிவன்

kinnara

     கீழ்க்கண்ட படத்தை ஸ்ரீ. அரவிந்த் வெங்கட்ராமன் அவர்களிடமிருந்து பெற்றேன். இந்தப் படம் எல்லோராவில் 21 ஆம் எண்ணிட்ட கல்மண்டகத்தில் அமைந்துள்ளது. ஈண்டு எந்தை மிகப் பயங்கரமானதோர் வடிவோடு அமைக்கப்பெற்றிருக்கிறார். அவர் அதிபங்க நிலையில் நான்கு கரங்களுடன் அமைக்கப்பெற்றிருக்கிறார். அவர் ஜடாமகுடம் பூண்டு அஞ்சத்தக்கப் பார்வையைக் கொண்டிருக்கிறார். அவர் தம் கோரைப் பற்களோடு புன்முறுவல் பூத்தபடியிருக்கிறார். அவர்தம் காதுகளைக் கர்ண குண்டலமும் பத்ர குண்டலமும் அலங்கரிக்கின்றன. அவர் கழுத்தில் துவங்கி வெறும் எலம்புக்கூடாகத்தான் அமைக்கப்பெற்றிருக்கிறார். அவர்தம் மேற்கரங்களில்…

தொடர்ந்து வாசிப்பு