முதலாம் ராஜராஜனின் கர்ணாடகத்து மாலம்பிக் கல்வெட்டு

malambi_inscription

இந்தக் கல்வெட்டு கர்ணாடக மாநிலத்தின் ஹூப்ளி அருகிலுள்ள மாலம்பி என்னும் சிற்றூரில் உள்ள ஒரு கல்லிலிருந்து கண்டறியப்பெற்றது. இந்தக் கல்வெட்டு ஹளெ கன்னடத்தில் அமைந்தது. இது முதலாம் ராஜராஜசோழனின் காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு மனீஜா என்பானுக்கு அந்தப் பகுதியைக் க்ஷத்ரிய சிகாமணி கொங்காள்வான் என்னும் பட்டப்பெயரளித்து அரசையும் அளிக்குமாறு ராஜராஜனின் ஆணைப்படி பஞ்சவன் மாராயன் அளித்த செய்தி இடம்பெற்றுள்ளது. பஞ்சவன் மாராயன் ராஜேந்த்ர சோழனே என்பது குறிப்பிடத்தக்கது. ஈண்டு ராஜராஜசோழன் சோழகுலமாகிய கற்பகமரத்தின் தண்டானவன் என்றும்…

தொடர்ந்து வாசிப்பு