ஸிம்ஹவர்மனின் மஞ்சிக்கல்லு சாஸனம் – பல்லவர்களின் முதற்கல்வெட்டு

manchikkallu

     ஆந்திரமாநிலம் குண்டூர் மாவட்டத்திலுள்ள மஞ்சிக்கல்லு என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டே பல்லவர்களின் மிகப்பழமையான கல்வெட்டாகக் கருதப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு ஐந்து வரிகளைக் கொண்டது. இதன் சில பகுதிகள் சிதைந்திருக்கின்றன. இதில் தெலுகு – கன்னட வரிவடிவத்திற்கு மூலமான தென்னிந்திய ப்ராஹ்மியில் எழுத்துக்கள் அமைந்துள்ளன. ப்ராக்ருத மொழியில் இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு பல்லவர்குலத்தின் மிக மூத்த மன்னவனான ஸிம்ஹவர்மனின் காலத்தியது. இந்தக் கல்வெட்டின் காலம் பொயு 320 என நிர்ணயிக்கப்பெற்றுள்ளது.      இந்தக் கல்வெட்டின் நோக்கம்…

தொடர்ந்து வாசிப்பு

ஸிம்ஹவர்மனின் சிவன்வாசல் கல்வெட்டு – க்ரந்த லிபியில் முதன் முதல் கல்வெட்டு

sivanvasal

     இந்தக் கல்வெட்டு திருவள்ளூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள சிவன்வாசல் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு வைகுண்டநாதருக்கான ஒரு பழைய கோயிலில் படிக்கட்டாக இருந்த கல்லிலிலிருந்து கண்டெடுக்கப்பெற்றது.      இந்தக் கல்வெட்டு வடமொழியிலும் மிகப்பழைய க்ரந்த லிபியிலும் அமைந்தது. இந்தக் கல்வெட்டு எபிக்ராஃபியா இண்டிகாவின் இருபத்தேழாம் தொகுதியில் திரு. என்.வெங்கட ரமணையா என்பவரால் பதிப்பிக்கப்பெற்றது. அவர் இதை ஏழாம் நூற்றாண்டின் இரண்டாம் காற்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதினார். இந்தக் கல்வெட்டு பல்லவகுலத்தைச் சேர்ந்த ஸிம்ஹவர்மனை வர்ணிக்கிறது. அவன்…

தொடர்ந்து வாசிப்பு